இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மார்ச் 30, 2022

மதுரா நகர்தனில் தமிழ் வாழ்க !

ன்று 29-வது பிறந்தநாள் காணும் அன்பு மகன் தமிழ்வாணனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் என்னைப் பார்க்க விருப்பமில்லை என்பதால் எனது வாழ்த்துகளை சொல்லாமல் இருக்க முடியாது.

சனி, மார்ச் 26, 2022

உதையல்

ணக்கம் நண்பர்களே... ‘’விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’’ என்ற கவிஞர் ஆத்மநாதனின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 

செவ்வாய், மார்ச் 22, 2022

சித்து விளையாட்டு

வசந்த்-வசந்தா இந்த தம்பதிகள் வாழ்க்கையில் மட்டும் வசந்தமில்லை காரணம் விருப்பமற்ற விவாஹம் விருத்திக்கு வராது, கட்டாய கல்யாணம் களத்தில் நிற்காது, திடீர் திருமணம் திருப்தி தராது. எல்லா மானிடர்களுக்கும் நடக்கும் திருமணம் என்ற சவகிடங்கு வசந்துக்கும் வசந்தாவுக்கும் நடந்தது.

வெள்ளி, மார்ச் 18, 2022

நூலுக்கு மரியாதை

இதம்பாடல் அழகிய கிராமம் எனது ஐயா ஞானி ஸ்ரீபூவு அவர்கள் வாழ்ந்து மறைந்த கிராமம். ஆம் கிராமிய மணம் கமலும் இங்குதான் கிராமத்தின் வஞ்சனையற்ற மனிதர்களையும், வாஞ்சையோடு பழகும் நல் உள்ளங்களையும், இதமான கிராமிய பாடல்களையும் நஞ்சற்ற சுவாசக்காற்றையும் சுவாசித்து வளர்ந்தேன். இங்குதான் எனது பள்ளி வகுப்பை ஒன்றில் தொடங்கி நான்காவதில் முடித்தேன். இத்தோடு எனது பள்ளி வாழ்க்கையும் அஸ்தமனம் ஆகியது. எஸ்தர் டீச்சர் எனக்கு முதலாம் வகுப்பில் படிக்க, எழுத கற்றுக் கொடுத்த முதல் தெய்வம்.

திங்கள், மார்ச் 14, 2022

நாரமங்கலம், நாரவாய் நாராயணமூர்த்தி


ணக்கம் ஐயா அரசியல் விமர்சகர் திரு. நாராயணமூர்த்தி அவர்களே... எங்களது கோணங்கி பத்திரிக்கையிலிருந்து தங்களை பேட்டி காண்பதில் பெருமை கொள்கிறோம். பேட்டியை தொடங்கலாமா ?

மங்கலமாய் ரம்பிக்க சைந்துள்ளேன் சன் துணையோடு நாராயணா...

வியாழன், மார்ச் 10, 2022

நினைத்தேன்...

 
விஞ்ஞானம் படித்து விஞ்ஞானி ஆக நினைத்தேன்.
கலைஞனாகி திரைப்பட நாயகனாக நினைத்தேன்.

வெள்ளி, மார்ச் 04, 2022

மாட்டுத்தாவணியும், ஆட்டுப்பாவாடையும்


மதுரை பேருந்தில்... ‘’குடி’’மகனோடு நடத்துனர்...
யோவ் படியில் நிற்காம மேலே வா, எங்கே போகணும் ?
எனக்கு ஆட்டுப்பாவாடைக்கு ஒரு டிக்கெட் கொடு
ஆட்டுப்பாவாடையா.... ? அங்கே எல்லாம் பஸ் போகாது...
ஏன் அந்தப்புள்ளைக்கு மாட்டுத்தாவணிக்கு டிக்கெட் கொடுக்குறே... எனக்கு மட்டும் பஸ் போகாதோ ?
? ? ?