இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 04, 2022

சாத்தூர், சாத்தான் சாத்தப்பன்


நாராயணா நல்லாயிருக்கியா ?
வாங்க தண்டபாணி அண்ணே நல்லாயிருக்கேன் நம்ம சாத்தப்பனை எல்லோரும் சாத்தான் சாத்தப்பன்னு சொல்லுறாங்களே... ஏண்ணே ?

அவன் அடி கொடுத்தான்னா... சாத்தான் சாத்துறது மாதிரியே இருக்கும்.
இது உங்களுக்கு எப்படிண்ணே தெரியும் ?
 
எல்லாம் அனுபவம்தான்.
உங்களை எதுக்கு அடிச்சான் ?
 
ஒரு தடவை தாசில்தார் ஆபீஸுக்கு போயிருந்தேன் சாத்தப்பன் உள்ளே வந்தவன் கதவைத்திறந்து போட்டு வந்தான் தாசில்தார் அப்படியே சாத்திட்டு வாப்பான்னு சொன்னாரு கதவு பக்கத்துல உட்கார்ந்திருந்த என்னைப் போட்டு சாத்திட்டான்.
அய்யய்யோ அப்புறம் என்னாச்சு ?
 
என்னை எதுக்குடா அடிக்கிறேன்னு ? கேட்டதுக்கு தாசில்தார்தானே சாத்தச் சொன்னாரு அப்படின்னு சொன்னான் அடமுண்டமே அவரு கதவைதான்டா சாத்தச் சொன்னாருன்னு சொன்னதுக்கு என்னை முண்டம்னு சொல்றியான்னு மறுபடியும் சாத்துல விட்டுட்டான்.
ஆக மொத்தம் உங்களுக்கு தண்டமா அடி விழுந்துருக்கு...
 
என்ன செய்யிறது... எனக்கு பெயர் ராசி அப்படி...
உங்களோட பெயரை மாத்தினா சரியா வரும்னு நினைக்கிறேன்...
 
என்ன பெயர் வைக்கலாம் நீயே சொல்லு ஆனால் எங்க குலதெய்வ வழக்கப்படி முதல் எழுத்துவரணும்.
தங்கராசு
 
அது வேண்டாம் குடிக்கி கஞ்சி இல்லை பேரு தங்கத்தை வச்சுக்கிட்டு...
தனபாலன்.
 
அதுவும் வேண்டாம் தினம் பாலு வாங்க காசு இல்லை அதை வச்சுக்கிட்டு.
தவசி
 
தவம் செய்யிற அளவுக்கு நமக்கு பக்குவம் இல்லை வேற சொல்லு.
தமிழ் வாணன்
 
சில பேரு இங்கிலீஷ் வாணன்னு சொல்லுவாங்களே...
தணிகாச்சலம்
 
நீ என்ன தணிக்கை அதிகாரியான்னு கேட்பாங்கே...
தருமி புதுமையா இருக்கும்ல..
 
அது வேண்டாம் எல்லாரும் கருமின்னு சொல்லுவாங்கே...
தர்மராஜன் நீங்கதான் தர்மம் செய்யிறதுல விருப்பமானவர்தானே...
 
ஆமாடா சரியாச்சொன்னே... தர்மராஜா ஸூப்பரா இருக்குடா இனிமேல் எல்லோரையும் தர்மராஜா அப்படின்னு கூப்பிடச் சொல்லணும் நீ ஒருமுறை கூப்பிடு பார்க்கலாம்.
தர்மராஜா அண்ணே
 
ஆஹா ஸூப்பர் ரொம்ப நன்றிடா...
 
நாராயணனும், தண்டபாணி மன்னிக்கவும் தர்மராஜாவும் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது வேகமாக ஓடி வந்த ஒருவன் நாராயணனிடம் கேட்டான்.
இந்தப்பக்கம் ஒருத்தன் கைப்பயை பறிச்சுக்கிட்டு ஓடுனானே... பார்த்தீங்களா ?
எல்லாம் தர்மராஜா அண்ணனுக்குத்தான் தெரியும்.
 
தர்மராஜா யாருடா ?
இதோ அண்ணன்தான்.
 
சொல்லு எங்கிட்டுப் போனான் ?
எனக்குத் தெரியாது...
 
சட்டீர்’’ என்று ஒரு அறை விட்டான் வந்தவன், தண்டபாணி மன்னிக்கவும் தர்மராஜாவை.... சொல்லுடா... சொல்லுடா... என்று கேட்டு தர்மராஜாவை புரட்டி எடுத்தான். உனக்கும், அவனுக்கும் என்னடா பந்தம் ? ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிகளா ?
அய்யோ எனக்கு சத்தியமாத் தெரியாது... என்னை விட்ருங்க....
நிலைமைக் கண்ட கடைகார பெரியவர் அடித்தவனை அழைத்து சொன்னார்.
 
தம்பி கைப்பையை பறிச்சவன் எட்டாம் நம்பர் சிட்டி பஸ்ல ஏறிப்போனான் இவன் அப்பாவி விட்ருங்க பாவம்.
பெரியவர் சொன்னதால் சட்டென ஒரு ஆட்டோவை அழைத்து ஏறிப் போனான் எட்டாம் நம்பர் சிட்டி பஸ்ஸை பிடிக்க.... அதுவரை பக்கத்து கடைக்குள் புகுந்து பார்த்துக் கொண்டு நின்ற நாராயணன் வெளியில் வந்து..
 
தர்மராஜா அண்ணே... அவன் உங்களை எதுக்குணே.... அடிச்சான் ?
ஏண்டா.. சும்மா நின்றவனை எனக்குத் தெரியும்னு கோர்த்து விட்டுப்புட்டு இப்ப எதுக்கு அடிச்சான்னு கேட்கிறியா ?
 
உங்களுக்கு பெயர் வைச்ச ராசி சரியில்லண்ணே.. வேற பெயர் வைப்போமா ?
வேண்டாம்டா தண்டபாணியே... இருக்கட்டும் தர்மராஜான்னு சொன்னே, ரோட்ல போறவன் எல்லாம் தர்மத்துக்கு அடிச்சிட்டுப் போறான் ஆளை விடுறா சாமி இனிமேல் எம் மூஞ்சியில முழிக்காதே....
 
என்று சொல்லி விட்டு போன தர்மராஜா மன்னிக்கவும் தண்டபாணியை பார்த்துக் கொண்டு நின்றான் நாரதர் மன்னிக்கவும் நாராயணன்.
 
Chivas Regal சிவசம்போ-
நாரதர்கிட்டே யோசனை கேட்டால்... அவன் 7 ½ தான் இழுத்து விடுவான்.

22 கருத்துகள்:

  1. நல்ல ரசனையான கற்பனை.

    பதிலளிநீக்கு
  2. பாவம் தான் போங்க நண்பரே. வேறு நல்ல பேரை சீக்கிரம் சூட்டுஙகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீங்களே ஒன்று சூட்டுங்களேன்...

      நீக்கு
  3. ஹாஹாஹாஹாஹா சிப்புச் சிப்பாய் வருதே!

    பதிலளிநீக்கு
  4. நல்ல கற்பனை.... இந்த நாராயணன் எதை வைச்சாலும் பிரச்சனை வருதே... பேசாம இவர் பேரைத்தான் மாத்தணும் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இவர் ஆதி தொட்டு பிரச்சனைதான்...

      நீக்கு
  5. நல்ல கற்பனை.
    நகைச்சுவை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. என்ன இவ்வளவு கலவரமா இருக்கு நாட்ல!..

    பதிலளிநீக்கு
  7. சிரித்து ரசித்தேன் கில்லர்ஜி. நல்ல நகைச்சுவை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. ஹாஹாஹா கில்லர்ஜி கற்பனை தட்டிவிட்டிருக்கீங்களே...ஏழரை ய இழுக்க எல்லாம் வேண்டாம் ஏற்கனவே தண்டபாணிக்கு 7 அறைதான் போல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் தண்டபாணிக்கு பெயர்ராசி சரியில்லை.

      நீக்கு
  9. தண்டபாணியை.... தண்டாயுதபாணியாக்காமல் தர்மராஜாவாக்கினால்்்் இப்படித்தானோ...!!!!!செம...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே உள்ள பெயரை வைத்து காலத்தை ஓட்டணும்.

      நீக்கு
  10. ஹாஹா...... நல்ல கற்பனை! பாவம் தர்மராஜா எனும் தண்டபாணி!

    பதிலளிநீக்கு