இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஏப்ரல் 20, 2022

வேண்டும் உங்கள் உறவு


ணக்கம் நண்பர்களே... வேண்டும் வேண்டும் உங்கள் உறவு’’ என்ற கவிஞர் வாலியின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 
 
இதோ எனது பாடல்...
 
பெண்
ஆஹா... ஆஹா....
ஆஆஆ... ஆஆஆ
 
மீண்டும் மீண்டும் தங்கள் இரவு
மீண்டும் மீண்டும் தங்கள் இரவு
மண் சாணி தோண்டல் உள்ள தரையில்
மண் சாணி தோண்டல் உள்ள தரையில்
 
தோண்டும் முதுமை முடிந்திட மீண்டும்
படரும் காலை தளர்ந்திட மீண்டும்
நன்கு இதயங்கள் கலைந்திட மீண்டும்
வேலை என்பதை மறைந்திட மீண்டும்
 
ஆண்
மீண்டும் மீண்டும் உந்தன் அழுக்கு
மண் சாணி தோண்டல் உள்ள தரையில்
மண் சாணி தோண்டல் உள்ள தரையில்
 
நஞ்சில் நாயே மறைந்திட மீண்டும
மீண்ட உறவுகள் நீ தர மீண்டும்
நஞ்சும் விழிகள் தீ கொல்ல மீண்டும்
பாடை இலையில் நீ கிடந்திட மீண்டும்
மீண்டும் மீண்டும் உந்தன் அழுக்கு
மண் சாணி தோண்டல் உள்ள தரையில்
மண் சாணி தோண்டல் உள்ள தரையில்
 
பெண்
கழகம் உன்னை துறத்திட மீண்டும்
எங்கள் காவடி படர்ந்திட மீண்டும்
ஆண்
எனை அணைத்தே தான் வீழ்ந்திட மீண்டும்
வெவ்வேறு இறப்பிலும் பிணைத்திட மீண்டும்
 
பெண்
மீண்டும் மீண்டும் தங்கள் இரவு
மண் சாணி தோண்டல் உள்ள தரையில்
மண் சாணி தோண்டல் உள்ள தரையில்
ஆண்
ஆஹா... ஆஹா....
ஆஆஆ... ஆஆஆ
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1982
படம்: வசந்தத்தில் ஓர்நாள்
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – வாணி ஜெயராம்
 
இதோ கவிஞர் வாலியின் பாடல் வரிகள்
 
ஆஹா... ஆஹா....
ஆஆஆ... ஆஆஆ
 
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனித் தென்றல் உள்ள வரையில்
வெண் பனித் தென்றல் உள்ள வரையில்
 
தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்
 
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வெண் பனித் தென்றல் உள்ள வரையில்
வெண் பனித் தென்றல் உள்ள வரையில்
 
நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வெண் பனித் தென்றல் உள்ள வரையில்
வெண் பனித் தென்றல் உள்ள வரையில்
 
உலகம் என்னைப் புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும்
உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்
 
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனித் தென்றல் உள்ள வரையில்
வெண் பனித் தென்றல் உள்ள வரையில்
ஆஹா... ஆஹா....
ஆஆஆ... ஆஆஆ
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=mz0MoKIvgCI
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

36 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருக தமிழரே நன்றி

      நீக்கு
    2. நெல்லை என்னாது? கில்லர்ஜியின் புது முயற்சியா?

      ஏற்கனவே நிறைய உல்டா பண்ணிருக்கிராரே!!

      கீதா

      நீக்கு
    3. திரு.நெல்லையார் தொடர்ந்து வருவதில்லை ஆகவே இப்படி...

      நீக்கு
  2. தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும்.. அரிய கருத்துகளை அள்ளித் தர வேண்டும்..

    பதிலளிநீக்கு
  3. ஒரிஜினல் பாடல் எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  4. கொஞ்சம் இல்லை, நிறையப் புரியலை. என்றாலும் உங்கள் திறமை வியக்க வைக்கிறது. மேன்மேலும் திறமை வளரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      அதாவது உண்மையான பாடல் வரிகளை மாற்றி எழுதுகிறேன் இருப்பினும் ஏதேவொரு விடயம் வரும். அது சந்தோஷத்துக்கு எதிர் பதமாக இருக்கலாம்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. இப்படி ஒவ்வொரு பாடலுக்கும் வரிகள் மாற்றும் உங்கள் திறமை கண்டு வியக்கிறேன். இனிதான பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பாராட்டுக்கு நன்றி

      நீக்கு
  6. அருமையான பாடல் கில்லர்ஜி! ஒரிஜினல்.

    உல்டா அதுக்கு அப்படியே நேரெதிர்! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் வரிகளை மட்டும் ரசித்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. தலைப்பு பார்த்ததுமெ இந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது~!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. உங்கள் பாட்டெழுதும் திறமையும், ஏற்கனவே உள்ள பாடல்களை மாற்றி எழுதும் திறமையும் வியப்பு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. என்னாச்சு! ஏன் இப்படி பாடல்களை வழங்கி வருகிறீர்கள்?

    சோகத்தை மனதிலிருந்து மாற்ற வேறு இருக்கிறது ஜி.
    உங்களுக்கு திறமைகள் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      எனது கவலைகளுக்கும் இந்தப்பாடல் வரிகளுக்கும் பந்தமில்லை.

      பாடல் வரிகளை எதிர் பதமாக (உல்டா) எழுதுகிறேன் அவ்வளவுதான்.
      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. புது முயற்சி நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புது முயற்சி ??

      இதுவரை ஐம்பது பாடல்கள் எழுதி விட்டேன். தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. நல்ல பாடல். ரசித்தேன். இப்போது உங்கள் நடையிலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  12. தொடரட்டும் கவிஞரின் பணி....

    பதிலளிநீக்கு
  13. அன்பின் தேவகோட்டைஜி,
    அறிந்த பாடலுக்கு எதிர் மறையை
    அசாத்தியமாகப் பதிகிறீர்கள்.
    யாரை நம்பி நான் பொறந்தேனை உல்டா செய்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா ஏற்கனவே "தங்கப்பதுமை" படப்பாடல் எழுத சொன்னீர்கள். எழுதி வைத்து இருக்கிறேன்.

      நீக்கு
  14. நல்ல பாடல்...... தங்களது பாடல் இயக்கங்கள் தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு