இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், நவம்பர் 23, 2022

நீக்கு தெலுகு இஷ்டமா ?


மீபத்தில் யூட்டியூப்பில் ஒரு சிறிய காணொளி கண்டேன், அதில் திரைப்படக் கூத்தாடன் கார்த்தி ஆந்திராவில் நிகழும் ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது ஒரு பெண்மணி கேட்கிறார், உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் தமிழ் ரசிகர்களா ? தெலுகு ரசிகர்களா ? என்று கேட்டதற்கு இந்தக் கூத்தாடன் சொன்ன பதில் என்ன தெரியுமா ? உறுதியாக தெலுகு ரசிகர்கள் என்று சொல்கின்றான் (ர்) அவசியமில்லை என்பது எமது உறுதி செய்யப்பட்ட இறுதியான கருத்து.
 
காட்சிக்கு காட்சி தெலுகு ரசிகன் கை தட்டுறானாம், தமிழனுக்கு இது தெரியாதாம். பணத்துக்காக தமிழனை வேண்டாமென்று சொல்லும் இவனுக்கெல்லாம் ரசிகர் மன்றம் வைத்திருக்கும் மூடர்களை என்ன சொல்வது ? ஆந்திராவில் போய் தெலுகுவில் பேசினால் தமிழ் நாட்டுக்கு தெரியாது என்று நினைக்கும் இந்த மடையன் எல்லாம் ஒரு மனிதனா ? நடிகர் சிவகுமார் ஓர் நல்ல மாமனிதர் இவர்கள் நடத்தும் அகரம் பள்ளி விடயங்கள் அறிந்து இவர்கள் குடும்பத்தின் மீது எனக்கொரு உயர்வான மதிப்பு இருந்தது.
 
முன்பொருமுறை கிருஷ்ணா நதி விசயத்தில் தமிழகத்துக்கு சிறிய அளவில் ஆதரவாக பேசியதற்காக திரைப்படக் கூத்தாடன் ரஜினியின் திரைப்படங்களை கர்நாடகாவில் ஓட விடமாட்டோம் என்றதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி, தூத்துக்குடியில் பொதுமக்களை சமூக விரோதிகள் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னது... இந்தக் கன்னடனுக்கு தெரிகிறது தமிழனின் லட்சணம், இதேபோல் கார்த்தியும் தமிழனை அறிந்து வைத்து இருக்கின்றான்.
 
இப்படி தமிழனை பிற மாநிலத்தில் சென்று இழிவு படுத்தும் இவனை எல்லாம் படம் பார்த்து இவனுகளுக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தை கூட்டி கொடுக்கிறோம். ஆம் கூட்டித்தான் கொடுக்கிறோம். இவன் எல்லாம் அமெரிக்காவில் படித்தவனாம். தமிழினத்துக்கு துரோகம் செய்யும் இதைத்தான் படித்தானா ? ஒரேநாளில் இவனை எல்லாம் தூக்கி எறிந்து விடவேண்டும். திரைப்படக் கூத்தாடன் பிரகாஷ்ராஜ் சொன்னானே... கன்னடத்தை கன்னடன்தான் ஆளவேண்டும் என்று... தமிழகத்தை மட்டும் யார் வேண்டுமானாலும் ஆளலாம். இனிமேல் இவனுடைய திரைப்படங்களை பார்ப்பதில்லை என்ற முடிவை எடுத்து விட்டேன். ரசிகன் என்ற அறியாமைவாதிகள் வாழும்வரை இவனுகள் இதுவும் பேசுவானுங்க... இன்னமும் பேசுவானுங்க...
 

இதோ அந்தக் காணொளியின் இணைப்பு.
https://www.youtube.com/shorts/scMymC-wEhE
 
தமிழன் எல்லாவற்றுக்கும் கை தட்டுவான் என்பதற்கு உதாரணம் இதோ
https://youtube.com/shorts/xjX1BbxFuyQ?feature=share
 
கில்லர்ஜி தேவகோட்டை
 

சிவாதாமஸ்அலி-
இதுவரைக்கும் இவரு பருத்தி வீரன் கூட  பார்த்ததில்லையே...
 
Chivas Regal சிவசம்போ-
சமீபத்தில் நெல்லைத்தமிழருக்காக, தி லெஜண்ட் படம் பார்த்து இருக்காரே...

Share this post with your FRIENDS…

36 கருத்துகள்:

  1. ஆ...   கார்த்தி அப்படியா சொல்லிட்டாரு...?   இவர் சொல்லிட்டா சரியாமா?  அவர் பெரிய இவரா.....  விடுங்க ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவனுகளை ஓரங்கட்டணும் ஜி அப்பத்தான் மற்றவன் பேசமாட்டான்.

      நீக்கு
  2. பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு..

    என்றொரு பழைய பாடல் ..

    அந்தப் படத்தில்
    அவளை அழகி என்பான்..

    இந்தப் படத்தில்
    இவளை அழகி என்பான்..

    அதுபோலத் தான் இதுவும்..

    பதிலளிநீக்கு
  3. இதப் பத்தி அவனோட ரசிகனுங்க தான் கவலப்படணும்.. உங்களுக்கு என்ன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவுள்ளவன் தன்னை, ரசிகன், தொண்டன் என்று சொல்லமாட்டான் ஜி

      நீக்கு
  4. மொழி ஒரு கருவி அவளவுதான்
    வரலாற்றில் தமிழர்கள் கிழித்தது என்ன
    இப்பொழுது உண்மையான தமிழர்கள் யார் ?
    தமிழ் நாட்டில் பாதி பேர் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள்
    தமிழ் பேசும் பெரும்பாலானவர்களிடம் ஜாதி வெறி இருக்கு . ஊழல் இருக்கு . அநாகரிகம் நிரம்பி இருக்கு
    பெரும்பாலான தமிழர்கள் அடுத்த தமிழன் காலை வருவதையே குறிக்கோளாக இருக்கிறார்கள்
    அப்புறம் எதற்கு தமிழன் கிமிழன் என்று சொல்லி கொண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்றைய உண்மை நிலையை அழகாக சொல்லி விட்டீர்கள்.

      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு...(!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இப்படித்தான் காலம்
      முழுவதும் ஏமாறுகிறோம் ஜி

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருக நண்பரே கண்டனங்கள் யாருக்கு கார்த்தி அல்லது கில்லர்ஜி ?
      இன்று நல்லது சொல்வதுகூட தவறாகிறதே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    தங்கள் ஆதங்கம் புரிகிறது. இதில் நாமொன்றும் செய்ய இயலாது. எந்த ஒரு மொழியும், அதன்பால் ஈடுபாடும் அவரவர்கள் விருப்பந்தானே..! பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தும் உண்மையே வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. கில்லர்ஜி சினிமாக்காரர்கள் பற்றித் தெரிந்ததுதானே. விடுங்க...அந்த தேசத்திற்கு ஏற்ற பதில்...இங்க பேசுறப்ப இந்த தேசத்துக்கு ஏற்ற பதில்.....பேசத் தெரியவில்லை....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. நான் இவரோட படமெல்லாம் பார்த்ததே இல்லை/ இனி பார்க்கப் போவதும் இல்லை.. ஆகவே இவர் படங்களைப் பற்றியோ இவர் கருத்தோ எனக்குப் பாதிப்பை ஏற்படுத்தது. இவர் ஒருத்தர் சொல்லிவிட்டால் எல்லாம் சரினு அர்த்தமா என்ன?

    பதிலளிநீக்கு
  10. கூத்தாடன் சரியான பெயர்தான் ப்ரோ தகப்பன் நடிப்பு ஒழுக்கம் அவர் நடத்தும் அகரம் இவற்றின் மூலம் பேறு பெற்றார் இவைகளை எல்லாம் தரம்தாழ்த்தப் பிறந்தவனாய் இருக்கிறான் என்னத்த சொல்ல

    பதிலளிநீக்கு
  11. பிழைக்க தெரிந்தவர். அங்கு கேட்கும் போது உங்களை மாதிரி உண்டா என்றால்தான் பிழைப்பு நடக்கும்.
    இங்கு கேட்டு இருந்தால் தமிழ் ரசிகர்கள் மாதிரி யாரும் கிடையாது என்று சொல்லி இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ பிழைக்க தெரிந்தவன் நம்மை ஏமாற்றுகிறான்.

      நீக்கு
  12. நாமதான் இவன், இவன் அண்ணன், அவனோட மனைவி சொல்றதையெல்லாம் மதிப்பதுபோல நடந்துக்கறோம்... கூத்தாடிப் பயலுவளுக்கு என்ன தெரியும்? சரவணன் சாதாரண கடையில் வேலை பார்த்துக்கிட்டிருந்தவன்..என்னத்தப் படிச்சிருக்கான்? ஆனா நடிச்சு காசு வந்த உடனே எல்லாம் தெரிஞ்சவன் மாதிரிப் பேசறான். அவன் மனைவி, அடுத்த நடிகை. சிவகுமாரை மிரட்டி திருமணம் செஞ்சுக்கிட்டவங்கதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  13. நடிகரை நடிகராக மட்டுமே பார்க்க இன்றைய இளைஞர்கள் தவறிவிட்டார்கள்

    பதிலளிநீக்கு
  14. தங்களின் ஆதங்கம் புரிகிறது நண்பரே. என்ன செய்வது. தெரிந்த விஷயம் தானே நண்பரே.

    பதிலளிநீக்கு
  15. இந்த தங்கத்தின் மீது உங்களுக்கு ஏன் இத்தனை ஆதங்கம்... காதலுக்கு விழி இல்லை... கலைகளுக்கு மொழி இல்லை என்பது உங்களுக்கு தெரியாததா?... விடுங்க பாஸ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இப்படியொன்று இருக்கிறதா ?

      கண் இல்லாமலா பெண் என்று பார்த்து காதல் சொன்னது மனது ?

      நீக்கு
  16. பல் இருக்கிறவன் பக்கோடா தின்னுறவன் மாதிரி, வாய் இருக்கிறவன் பேசிட்டு போறான் தலைவரே.!!! கல்லு மண்ணு தோன்றுவதற்கு முன் தோன்றிய மூத்த குடியாச்சசே... அதான் கெட்டிதட்டிபோச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. சினிமாக்காரர்கள் தெரிந்த விடயம்தானே அந்தந்த வேளைக்கு ஏற்ப பேசிக்கொள்வார்கள் . இவற்றை கண்டு கொள்ளவே வேண்டாம்.

    பதிலளிநீக்கு