01.
வாழும்போது எட்டிப்பார்த்து நலம் விசாரிக்காத உறவுகள்
இறந்தவுடன் மாலையோடு வந்து நிற்பது ஏன் ?
02.
மனதுள் சபித்துக் கொண்டு இருந்தவன் மரண வீட்டுக்கு
வந்ததும் சோகமாக முகம் காட்டுவது ஏன் ?
03.
பணக்கார வீட்டின் கிரஹப் பிரவேசகத்துக்கு வந்தவன்
முகத்தை மட்டும் மகிழ்ச்சியாக காட்டுவது ஏன் ?
04.
நாத்தனார் வந்தால் பிரகாசிக்காத முகம் தங்கை வந்தால்
மட்டும் சந்தோஷக்களை கட்டுவது ஏன் ?
05.
காதலியாக இருந்தபோது தந்த முத்தம் இனித்தபோது,
திருமணமாகி மனைவியாக தரும்போது கசப்பது ஏன் ?
06.
அப்பா சொல்லும் அறிவுரையை கேட்காத மாணவன் தனது அபிமான
நடிகன் சொல்வதை கேட்பது ஏன் ?
07.
தங்கை என்ன சொன்னாலும் எரிந்து விழும் அண்ணன், அவளது
தோழிகளிடம் மட்டும் வழிவது ஏன் ?
08.
விலைவாசி உயர்வைக் கண்டிக்க சேராத மக்கள், சாதி,
மதப்பிரச்சனை வந்தால் மட்டும் முன் வருவது ஏன் ?
09.
இருப்பவனை விருந்துக்கு அழைக்கும் மனிதன் தர்மம்
கேட்போருக்கு கஞ்சி கொடுக்காதது ஏன் ?
10.
கடவுளுக்கு தலை வணங்காதவன்கூட தனது அரசியல்
தலைவன்-தலைவி காலில் விழுவது ஏன் ?
11.
தகப்பனின் பிறந்தநாள் தெரியாதவன் தனது அபிமான
நடிகனின் பிறந்தநாள் மறக்காமல் இருப்பது ஏன் ?
12.
உள்நாட்டில் நான்கு மணி நேரம்கூட உழைக்காதவன்,
வெளிநாட்டில் பதினாறு மணி நேரம் உழைக்கிறானே ஏன் ?
கில்லர்ஜி தேவகோட்டை
ChavasRegal சிவசம்போ-
ஒரு குவாட்டர் இறக்குனா விடை வரும் நமக்கு...
ஒரு குவாட்டர் இறக்குனா விடை வரும் நமக்கு...
எல்லா ஏன்களுமே மதிப்பு வாய்ந்த கேள்விகள். அர்த்தம் வாய்ந்தவை. இதற்கெல்லாம் எல்லோருக்கும் பதில் தெரியும், ஆனால் வெளியில் சொல்ல முடியாது!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி வருகைக்கு நன்றி
நீக்குஏன்?.. ஏன்?.. ஏன்?..
பதிலளிநீக்குஎல்லாம் தெரிந்திருந்தும் ஏதும் தெரியாதவர் போல நடிப்பது ஏன்?..
வாங்க ஜி எனக்கு தெரிந்தால் நான் எதுக்கு கேட்கப் போறேன்...
நீக்குரசித்துப் படித்தேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குஇந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாதிருப்பது ஏன்?
பதிலளிநீக்குஅதுதான் ஏன் ?
நீக்குபடம் அழகாகச் செய்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி தமிழரே...
நீக்குஇவற்றுக்கு எல்லாம் என்ன பதில் சொல்வது? பதில் தெரிந்த கேள்விகள்!
பதிலளிநீக்குதெரிந்தால் சொல்லுங்கள்.
நீக்குஇந்தக் கேள்விகளை எ பி க்கு புதன் கேள்வி களாக அனுப்பி வைக்கலாம். பதில் கிடைக்கும்.
பதிலளிநீக்குJayakumar
ஹா.. ஹா.. அப்படியும் செய்யலாமோ...
நீக்குசமீப காலமாக உங்கள் பதிவுகளில் விளம்பரங்கள் தெரிகின்றன. இவற்றை நீங்கள் சேர்த்தீர்களா? அல்லது பிளாகர் சேர்க்கிறதா?
பதிலளிநீக்குசில அனுமதிக்காததும் சேர்கிறது விரைவில் சரி செய்கிறேன்.
நீக்குஇன்றைய பதிவில் jockey ஜட்டி விளம்பரங்களாக எனக்கு வருகின்றன.
பதிலளிநீக்குமன்னிக்கவும் ஐயா சரி செய்கிறேன்.
நீக்குஇதுக்குக் காரணம் நம் கணிணியில் நாம் ஏதேனும் தேடினால், அதனைத் தொடர்ந்த தீம்களே விளம்பரங்களாக வரும். நான் சமீபத்தில் குருவாயூரில் தங்குமிடம் தேடினேன், ஜியோமார்ட் ஆஃபர்கள் பார்த்தேன். அவைகள்தாம் விளம்பரங்களாக இங்கு வருகின்றன. அதனால் ஜெயகுமார் சார் நீங்க உங்க கணிணில ஒருவேளை ஃபேஷன் அல்லது அது சம்பந்தமானவற்றைத் தேடியிருப்பீர்கள்.
நீக்குஉண்மை. நான் ஆன்லைனில் கைலி, மற்றும், ஜட்டி வாங்கினேன்.
நீக்குதங்களது மீள் வருகைகளுக்கு நன்றி.
நீக்குதொடர்பதிவு ஆக்கி விடலாமா ஜி...?
பதிலளிநீக்குவாங்க ஜி ஆரம்பித்து வையுங்கள்.
நீக்குகேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்திருக்கும் இவற்றுக்கெல்லாம் மனம் (முகம் கொடுக்க தயங்குவதுதான் ) காரணமாக இருக்கலாம்.
பதிலளிநீக்குஆம் இருக்கலாம் சகோ
நீக்குசார்... உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டுமென்றால் அதற்கு முன்னால் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.... உங்கள் திருமுகம் தெரியும் அந்த புகைப்படம் உங்கள் கை வண்ணமா? அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மாயாஜாலமா?
பதிலளிநீக்குவருக நண்பரே எனது கைவண்ணத்தில் டிஜிட்டல் செய்த மாயம்.
நீக்குகில்லர்ஜி, உங்கள் படம் மிக அருமை. கேள்விகள் கேட்பது எளிது. பதில்தான் கஷ்டம். அத்தனையும் சரியான கேள்விகள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
நீக்குகில்லர்ஜி எனக்கு மிகவும் பிடித்த கேள்விகள் 1, 8,9,10 ....
பதிலளிநீக்குஅதிலும் 1
எல்லாக் கேள்விகளுமே எல்லார் மனதிலும் எழுபவைதான். விடைகளும் உண்டு. சுய சிந்தனை இல்லாததால்....சில ஆட்டு மந்தையாக மனிதக் கூட்டம் இருப்பதால்,
கீதா
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குகேள்விகள் அருமை.
பதிலளிநீக்குஇப்படி நடப்பது உண்டு.
விதி விலக்கும் உண்டு.என் மறைந்த நாத்தனார் வருகை கண்டு எப்போதும் மகிழ்வேன்.
அவள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விடுவாள்.
உங்கள் கை வண்ணத்தில் உங்கள் முகம் அருமை.
வருக சகோ தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
நீக்கு