இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 03, 2023

விவாஹ(M)ரத்து (1)


ரேபியர்கள் ஒன்று முதல் மூன்று வரை திருமணம் செய்து கொள்கிறார்கள் இது சரியா ? தவறா ? என்ற உள் விபரங்களுக்குள் தயவு செய்து போக வேண்டாம் என்பதை முன் கூட்டியே நண்பர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் காரணம் அது வேறு விதமான பிரச்சனைக்கு வழி வகுத்து விடும் பிறகு இந்த பதிவு எதற்கு ? எமது எமராத் வாழ்வில் தெரிந்து கொண்ட அனுபவத்தை தங்களுடன் பகிர்கின்றேன் என்பதே குறிக்கோள்.
 
எப்படியும் 40% பேர் மூன்றுக்கும் மேலும் திருமணம் செய்கின்றனர் என்பதையும் அறியத் தருகிறேன் அந்தக் கடைசி திருமணம் குறித்தே நான் சொல்ல வருகிறேன் ஆம் எமது சமூகத்தின் வேதனையை சொல்ல வருகிறேன் கடைசி மனைவி பெரும்பாலும் 50% இந்தியப் பெண்களாக இருக்கும், 20% எஜிப்த் பெண்களாக இருக்கும், 20% பாலஸ்தீனியப் பெண்களாக இருக்கும், மீதி10% எமராத் பெண்களாக இருக்கலாம் ?
 
முதலில் நாம் இந்த சதவீதத்தின் காரணத்தை ஆராய்வோம் ஏனிந்த முரண்பாடு ? தங்களின் மனதில் தோன்றுகிறதல்லவா ? ஆம் நண்பர்களே எமராத் பெண்கள் ஆண்களை மதிப்பதில்லை குறிப்பாக கணவர்களை.
 
இனிய நண்பர்களே இந்த இடத்தில் நாம் நமது இந்தியப் பெண்களை நினைத்து பெருமைப்படுவோம் குறிப்பாக நம் இனதமிழச்சிகளுக்காக ஜோராக ஒருமுறை கை தட்டி விட்டு தொடருங்கள் பதிவை...
 
காரணம் நீ இல்லாட்டி இன்னொருவன் அதற்கு மற்றொருவன் தயார் வாழ்க பணநாயகம் ஜனநாயகம் அல்ல பணநாயகமே ஆம் பணநாயகமே அரேபியர்களிடம் பணம் கொட்டிக் கிடக்கின்றது தரையில் அல்ல வங்கிகளில் (இதெல்லாம் உனக்கெப்படி தெரியும் ? சொல்கிறேன்) வங்கிகளில் இவர்களுக்கு இருக்கும் பணத்தைப் பார்த்து மிரண்டு இருக்கிறேன் எட்டு இலக்கம் என்று சொல்வோமே அதையும் தாண்டி இனிமையானது ஆம் இவர்களது வங்கி கணக்குகளை பார்ப்பது எனக்கு இனிமையானதே
 
எமராத்தில் தலாஹ் (விவாகம்ரத்து) என்பது மிகவும் சாதாரணம் நம் நாட்டில் விவாகரத்து என்றால் ஆண்களுக்கு பிரச்சனையில்லை பெண்களை வேறு கோணத்தில் காணும் ஆண் சமூகம் ஏன் ? இரக்கப்படவேண்டிய விதவைப் பெண்களையே சமூகம் அப்படித்தானே பார்க்கிறது.
 
முதலில் திருமணத்திற்கு இஸ்லாம் சட்டப்படி மஹர் என்று அதாவது திருமணம் செய்யும் ஆண் திருமணம் செய்யப் போகும் பெண்ணுக்கு பொன்னும், பொருளும், பணமும், வீடுகளும், கார்களும், ஒட்டகங்களும் கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் ஆனால் நம்மூரில் நேரெதிர் அதாவது இந்தியாவில் அவள் நமது வீட்டுக்குள் வர, தட்சிணை கொடுக்க வேண்டும்.
 
அரபு நாட்டில் அவள் வர, தட்சிணை வைக்க வேண்டும் இதுதான் அந்த ஆறு வித்தியாசங்கள் அங்கு இவ்வளவும் பெற்றுக் கொண்ட பெண்கள் கணவனை பிடிக்கவில்லை என்றால் போடா டுபுக்கு என்று சொல்லி போய் விடுவார்கள்
(அரபு மொழியில் டுபுக்கு என்பதற்கு சரியான அரபு வார்த்தை இல்லை வேண்டுமானால் ‘’ரோஹ் மாவொக்க’’ என்று சொல்லலாம் இதன் மிகச்சரியான அர்த்தம் போடா கேனப்பயலே)
 
நம் நாட்டில் இவ்வளவும் கொடுத்தும் அதையெல்லாம் டாஸ்மாக்கில் கொடுத்து முடிந்து விட்டதால் மேலும் கொடுப்பதற்கு தாய் வீட்டிலிருந்து வாங்கி வரவேண்டும் இல்லையெனில் ஓங்கி அறை விடுவான் இவையெல்லாம் தாங்கி கொண்டு வாழவேண்டும். எமராத்தில், இது அறவே கிடையாது ஒருக்கால் ஏதோவொரு காரணத்திற்காக அவன் அவளை அறைந்து விட்டால் நடப்பது என்ன ?
 
தொடரும்...

Share this post with your FRIENDS…

31 கருத்துகள்:

  1. அன்பு.தேவகோட்டை ஜி.நலமுடன் இருங்கள். எமராத் மகளிரின் சுதந்திரம் அசர வைக்கிறது. வரதட்சனை இல்லாவிடில் நம் ஊர் வாழ்க்கையே சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பதிவை நன்றாக எழுதி உள்ளீர்கள். பெண்களில்தான் நாட்டுக்கு நாடு எத்தனை வித்தியாசங்கள்..கல், புல் ஆனாலும் கணவன் என வாழும் இந்தியப் பெண்களை நினைத்தால் மனம் சந்தோஷமடைகிறது. ஆனாலும் இப்போது மனங்கள் இணையாவிட்டால், திருமணங்களுக்கு என்றும் மதிப்பில்லைதான். மேலும் தங்களின் பதிவின் அலசலை தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனங்கள்... இருமனங்கள் என திருத்தி படிக்கவும்.

      நீக்கு
    2. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      தொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி

      நீக்கு
  3. சரி, 'போடா டுபுக்கு' என்று கிளம்பி விட்டால் வாங்கிய மஹர்களை திருப்பிக் கொடுப்பார்களா?  எடுத்துக் கொண்டு போய்விடுவார்களா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு வழிப் பாதை கேட்டு வாங்கினால் இவனுக்குதான் அவமானம்.

      நீக்கு
  4. இந்திய பெண்களில் ஏழைப்பெண்களை விலைக்கு வாங்கி மூன்றாம் தாரமாக வயதான கிழங்கள் கட்டிக்கொள்வார்கள் இல்லையா?  சம்பளமில்லாத வேலைக்காரி வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி ஓரளவு வந்து விட்டீர்கள், அதன் அகமும், புறமும், இடமும் அலசுவோம்.

      நீக்கு
  5. எமராத் பெண்கள் சுதந்திரம் ஆண்களுக்கு பிடிக்கமல் இந்திய ஏழை பெண்களை திருமணம் செய்கிறார்களா? அப்படி செய்தால் சிறுமிகளை செய்து கொள்ளாமல் வரதட்சணை கொடுக்கமுடியாமல் திருமணத்திற்கு காத்து இருக்கும் முதிர்கன்னிகளை திருமணம் செய்யலாமே!

    முன் காலத்தில் கணவன் என்ன கொடுமை படுத்தினாலும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்கள். பெண்கள் எத்தனை கொடுமைக்காரியாக இருந்தாலும் பொறுமையுடன் அதை எதிர் கொண்ட ஆண்களும் இருந்தார்கள்.
    ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. தனித்து வாழும் ஆண்களும், தனித்து வாழும் பெண்களும் இருக்கிறார்கள்.
    வேறு பொருத்தமான துணையை தேடி கொள்வதும் நடக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      நமது ஊரிலும் இப்பொழுது திருமணம் என்பது விளையாட்டு போல மாறி விட்டது.

      தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  6. என்ன வாழ்க்கை இது...? தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  7. கில்லர்ஜி நம்மூர் பொண்ணுங்க நிறைய கிடைச்சிருப்பாங்களே அவங்களுக்கு....மூன்றாவது என்ன 4, 5 கூட. கொடுமைடா சாமி...

    ஏன் அயல்நாடு வரை போணும் இங்க நம்மூரிலேயே நடக்கிறதே...

    "ஃபுல்" ஆனாலும் புருஷன் இப்படியும் நம்ம ஊரு பெண்ணுங்களோட வாழ்க்கை இருக்கிறதே.....இப்படியானதுக்கு விவாகரத்து மேல்!! டுபுக்கு ந்னு சொல்லிப் போக மாட்டேன்றாங்களே!! பாருங்க அந்தப் பொண்ணுங்களை....ஓ இங்க டுபுக்குன்னு சொன்னா பைசா கிடைக்காதே!!!

    இந்தக் கருத்து போக ஒரு மணி நேரம் ஆகுது வெளியிடுகிறதுன்னு சொல்லி...என்ன இணையமோ இங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் இங்கும் இப்படியான வாழ்க்கை இருக்கிறது ஆனால் அது ஒரு சில இடங்களில் என்று சொல்லலாம்.

      அங்கு நிறைய நிகழ்கிறது அடுத்தடுத்த பகுதிகளில் வரும் கவனியுங்கள். தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  8. எமராத் பெண்களின் சுதந்திரம் ஆண்கள் பயப்படும் அளவுக்கு இருப்பது திகைப்படைய வைக்கிறது.
    ......தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை தொடர்ந்து வருவதற்கு நன்றி

      நீக்கு
  9. பயணம். தொடர்கிறேன். பிறகு கருத்திடுகிறேன். பிலிப்பினோக்கள் 3-4வதா இருப்பாங்க, வாழ்க்கையை வீணாக்கிட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      ஆம் சிலர் பிலிப்பைன்ஸ் பெண்களையும் மணக்கின்றனர்.

      இவர்கள் மதத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள்.

      நீக்கு
  10. நல்ல விவரமான பதிவு.. பொதுவாக வளைகுடா நாடுகளில் இப்படித் தான்..

    அந்த காலத்து நியதி வேறு.. அது இப்போதும் இருப்பதாகத் தெரியவில்லை..

    நமக்கெதுக்குங்க வீண் பொல்லாப்பு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மையை சொல்வதில் தவறில்லை.
      தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  11. நானும் குவைத்தில் பார்த்திருக்கின்றேன்..

    பாவப்பட்ட பிலிப்பினோக்கள்..

    பல கம்பெனிகளில் மஸ்ரிகள்
    (எகிப்தியன்) பிலிப்பினோவுடன்!..

    சொல்லாமல் கொள்ளாமல் அவன் நாட்டுக்கு ஓடி விட்டால் -
    பிலிப்பினோக்களின் நிலைமை பரிதாபம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி பிலிப்பினோக்களின் கொள்கை பெரும்பாலும் இன்றைய மகிழ்ச்சி போதும் என்பதே...

      நாளை எழுந்தால் பார்க்கலாம்.

      மீள் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  12. வெள்ளாடுகளே வெட்டுக் கத்தியுடன் வருகின்றன...

    கறிக் கடைக்காரன் காட்டில் மழை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஆம் என்ன செய்வது ?

      நீக்கு
    2. அவங்களுக்கு, அவங்க சம்பாதிக்கிறது ஊருக்கு அனுப்புவாங்க. தங்கறது, சாப்பாடு மற்ற செலவுகளை, வைத்திருக்கிறவன் பார்த்துக்கணும். ரொம்பவே சுதந்திரமானவங்க பல பிலிப்பினோக்கள்.

      நீக்கு
    3. ஆம் தமிழரே
      அவர்களது ஒட்டு மொத்த சமூகமே இதை ஆதரிக்கும் போது யாருடைய வாழ்க்கைக்கும் பிரச்சனை இல்லை.

      நீக்கு
  13. இரு பாலாருக்கும் கற்பின் விளக்கம் மாறும் காலம் தானே

    பதிலளிநீக்கு
  14. கல்யாணம் என்பதே கேலிக்கூத்தாக ஆகி விட்டதே! எதுக்கு அப்படியானும் மூணாவது மனைவியாகணும்? பணம், காசுக்கா? பின்னர் விவாஹரத்து?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமா ?
      மூணாவது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா ? இஃஹி... இஃஹி... இஃஹி.‌.

      நீக்கு