இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூன் 29, 2023

அத்திச்செடி


ரம் செய்ய இரும்பு
றாவது சின்னம்
ருப்பது கருவேல்
க்களை விரட்டு
டைப்பது விளக்கு
க்கு விற்று பழகு
ன் பந்து இதுவே
ற்றி விட்டு மறவே
யன்தனை தொழு
ழுக்கமதில் விலகு
ங்காரம் விலக்கு
வையினை படி
கி இகி இகி-(from Trichy)
 
கில்லர்ஜி தேவகோட்டை



Share this post with your FRIENDS…

33 கருத்துகள்:

  1. ​அடடே.. அங்கிருந்து வந்த ஐடியாவா...

    பதிலளிநீக்கு
  2. இஃக்கி இஃக்கி இஃக்கி சூப்பர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீனாக்கா... எனது கவிதை நல்லா இல்லை ?

      திருச்சியிலிருந்து இரவல் வாங்கிய வார்த்தை மட்டும் சூப்பரா ?

      நீக்கு
    2. கடவுளே..  உங்கள் 'போட்டிச்சூடி' நன்றாயிருக்கிறது.  அதைப்போய் குறை சொல்வேனா..   பொருத்தமாய் இணைத்திருக்கிறீர்கள் என்று சிலாகித்தேன்!

      நீக்கு
    3. ஓஹோ அப்படியா ? நன்றி ஜி

      நீக்கு
    4. ஹா ஹா ஹா. சகோதரர் ஸ்ரீராம் வைத்த "போட்டிச்சூடி" பெயர் பொருத்தமாக இருக்கிறது. "குறை ஒன்றுமில்லை கோவிந்தா" என சகோதரர் ஸ்ரீராமே சொல்லி விட்டார். இன்று எபியிலும் "குறைகள்" பற்றிய அலசல்தான்.

      நீக்கு
    5. ஆம் போட்டிச்சூடி சரிதான்

      நீக்கு
  3. அறம் செய விரும்பு..

    சிறப்பு..

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்கள் கற்பனை சிறப்பாக உள்ளது. வரிகளை பொருத்தமாக தொகுத்துள்ளீர்கள். ரசித்தேன். ஆத்திச்சூடி அத்திச்செடியாகி விட்ட அந்த தலைப்பையும் ரசித்தேன். இப்பதிவுக்கு காரணம் முகநூல் பதிவா? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பாராட்டுக்கு நன்றி.

      இது முகநூலால் வந்தது அல்ல! எ.பி.வாட்ஸ் அப் குழுவில் நெல்லைத்தமிழரால் உருவானது.

      நீக்கு
  5. அருமை...

    அறம் - 10 குறள்களில் மட்டுமல்ல, 54 குறள்களில் நேரிடையாகவும், அறத்தை உணர்த்தும் வகையில் வகையில் 13 குறள்களிலும் வரும்... இதற்கும் கணக்கியல் உண்டு... முடிவு வழக்கம் போல் ஏழு (7) தான்..!

    சிரிப்போடு முடித்தது சிறப்பு...

    பதிலளிநீக்கு
  6. அரம்:- 3 குறள்களில் உண்டு...! கணக்கும் உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி குறளோடு தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  7. புலவரே ஒளவையோடும் போட்டியா ?

    பதிலளிநீக்கு
  8. திருச்சியில் உதித்த ‘அத்திச் செடி’ நன்று. நீங்கள் நாமக்கல் வந்தால் இன்னும் நல்ல ‘அத்திச் செடி’க் கவிதைகள் பிறக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வருகிறேன் கவிதை எழுதிடலாம்.

      நீக்கு
  9. கவிதை அறுமை.
    உங்களுக்கும் அரசியலுக்கும் மட்டும் ஏன் பத்துப் பொருத்தங்களும் பொருந்துகின்றன என்றுதான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      இதில் அரசியல் இல்லையே...

      நீக்கு
    2. ஆறாவது சின்னம்
      இருப்பது கருவேல்
      எல்லாத்துலயும் கவிதை முழுதும் அரசியல் வாசனை கமழ்கிறது சார்.
      ஒவ்வொரு வரிக்கும் ஒரு அரசியல் நிகழ்வை கற்பனை செய்து இணைத்துவிடலாமே?
      அப்புரம் சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாரன் புலம்பியதுபோல மாட்டிக்கொள்வீர்கள்.
      இப்போது படத்தில் என்ன சொன்னால் எப்படி அரசியல் ஆக்கிவிடுவார்களோ என பயமாக இருக்கிறது என அவர் சொன்னாரே?

      நீக்கு
    3. ஞானத்தோடு கவனிக்கின்றீர்கள் மீள் வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  10. ஹாஹாஹாஹாஹா கில்லர்ஜி.....சிரித்துவிட்டேன். நல்லா இருக்கு.....கடைசில ஔவையை படி...- இத்தனையும் செய்..ஆனா கடைசில ஔவையைப் படித்துவிடு ஒழுங்கான்னு களவும் கற்று மற என்பது போல இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  11. போட்டி கவிதை நன்றாக இருக்கிறது.
    உடனடி கவிதை அருமை.
    வரகவிதான் நீங்கள்.
    உடனே கவிதை எழுதி பதிவு செய்து விட்டீர்கள் , பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் சரியாக இருபது நிமிடத்தில் எழுதி முடித்து வாட்ஸ் அப்பில் தகவல் சொல்லி விட்டேன்.

      புகைப்படத்தில் நேரம் இருக்கிறது.

      நீக்கு
  12. அட...டா..... விரைவு கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  13. இஃகி,இஃகி,இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் "ஆறாவது சின்னம்"... என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.... ஆனால் எங்கள் பகுதிகளில் "ஆறுவது பாயாசம்" என்று குறிப்பிடுவோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதுவும் நல்லாத்தான் இருக்கு.

      நீக்கு