தையரதக்காபுரம் பண்ணை பங்களா கொ.இ.க தலைவர்
தண்டல்பாடே தொண்டர்களை தேர்தல் தோல்விக்குப் பிறகு தன்னை சந்திக்க அனுமதி வழங்கி
இருந்த காரணத்தால் அல்லக்கைகள் முதல், அடிவருடிகள் வரை அலைமோதிய கூட்டத்தை
அடியாட்கள் கூட்டம் வசப்படுத்தி வடக்கு பக்கமாக போட்டிருந்த நிரந்தர கொட்டகை பந்தலில்
ஒதுக்கியது.
இதோ தலைவர் இப்பொழுது மாடியை விட்டு கீழே
இறங்கி வருவதாக கூட்டத்தில் கிசுகிசுவாக குசுகுசுவென்று பேச்சு அடிபட்டது. பங்களா
வாசலில் தலைவரின் பளீர் முகம் கண்டதுதான் தாமதம்...
‘’தலைவர் பாடே’’
‘’வாழ்க’’
‘’தலைவர் பாடே’’
‘’வாழ்க’’
‘’தன்மானத்தலைவன் பாடே’’
‘’வாழ்க’’
தொண்டை வறண்டு கத்தினார்கள் வாங்கிய
கூலிக்கு... கோஷம் விண்ணைத் தொட்டு பிளந்தது...
இந்திரலோகத்தில் சயன அறையில் தேவதைகளை வதை
செய்து கொண்டிருந்த இந்திரன் கீழே என்ன சத்தம் இந்த நேரம் ? உயிரின் ஒலியா ? என்று கேட்க, தேவதையொருத்தி கீழே தையரதக்காபுரத்தை
நோக்கி விட்டு...
ஏதோ அரசியல் அடிவருடிகளின் கோஷம் பிரபு என்றாள்.
தண்டல்பாடே கூட்டத்தை வணங்கியபடியே மேடையில்
ஏறினார் மய்யமாக போட்டிருந்த சோபாவில் அமர்ந்து கையை அசைத்து தொண்டர்களை அமரச்
சொன்னார். 24/7/30/365 நேரமும் கெனிக்கென் பீரை குடித்து, கன்னங்கள்
உப்பி ஊரின் பண்ணையைப் போல தொந்தியை வார்த்து, வளர்த்து வந்தார்.
நன்றாக சிலம்பம் ஆடுவார், ஆடுவதுபோல
தொண்டர்களை அடித்தும் விடுவார். கம்பு எடுக்கும்போது யாரும் முன்னே வரமாட்டார்கள்.
இது உங்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்பு
வடக்கிலிருந்து பானிபூரி விற்றுக் கொண்டே அரக்கோணம் வந்தவரை, வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம் அள்ளி அணைத்து கொண்டது.
சிகப்பு தோலையும், தத்தக்கா, புத்தக்கா
உச்சரிப்பிலும் மயங்கிய தமிழர்கள் தலைவராக்கினார்கள். பாடே என்ற தனது ஜாதிப்பெயரை
இணைத்துக் கொண்டால்தான் தன்மீது டெல்லிக்கு மரியாதை இருக்கும் என்பதை அறிந்தவர்
தண்டல்பாடே. இந்தப்பாடையில போற தெண்டங்களுக்கு பாடே என்பது ஜாதி என்று தெரியாது
ஆகவே கோஷம் போட்டே சாகின்றார்கள்.
‘’என்னாது உயிதிள் களன்ட உதவுகலே’’
(எனது உயிரில் கலந்த உறவுகளே)
என்று தொடங்கியதுதான் தாமதம் விசில் சத்தம்
மீண்டும் அந்த தேவதையை எட்டிப் பார்க்க வைத்தது. காலம் முழுவதும் தமிழனை கத்த
வைக்க தலைவர்கள் கண்டு பிடித்து வைத்த ஒன்றை வார்த்தைகளில் எத்தனை சக்தி வழக்கம்
போல் அமைதியாக கேட்ட பிறகு, உதவியாளர் உத்தவ்வை பார்க்க...
உதவ், உத்தவ் மைக்கை கையில் எடுத்து,
ஆர்ப்பரிக்கும் சிங்கங்களே தொண்டர்களே இப்பொழுது அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் மைக்குகளை வாங்கி நமது தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தெளிவாக தலைவரிடம் விளக்கி சொல்லுங்கள் வரிசையாக சலசலப்பு இல்லாமல் பேசுங்கள். உங்களது பிரச்சனைகளுக்கு தலைவர் முடிவில் தீர்வு சொல்லுவார்கள்.
அல்லக்கை ஒன்று மைக்கை முதல் வரிசையிலிருந்து
கொடுத்து வாங்க ஆரம்பித்தது...
நபர் - 1
தலைவா வணக்கோம் எங்க ஊத்துப்பேட்டை தொகுதியிலே சாக்கடை நாத்தம் தாங்க முடியலை முனுசுபாலிட்டியிலே சொன்னா ஆளுங்கச்சிகாரங்க போலீசை வுட்டு அடிக்க வராங்க... கேசு போட்டு உள்ளே தள்ளுறாங்க...
நபர் - 2
தல போன தடவை நம்ம ஆச்சியிலே நீ கொடுத்த பொட்டிக்கடை பெட்டி அதுலதான் நான் யாவாரம் பாத்துக்கிட்டு வந்தேன் இப்ப என்னை எடத்தை காலி பண்ணச் சொல்லி டாச்சர் குடுக்கிறாங்கே தல...
நபர் - 3
வணக்கோம் தலைவரே நான் தேர்தல் மேடையில கொஞ்சம் ஓவரா பேசிப்புட்டேன் அதுக்கு இப்ப ஆளுங்கச்சிகாரங்கே ரோட்ல நடக்க வுட மாட்றாங்கே. வூட்ல பொண்ணு, பொரசுங்க வெளியே போக முடியல கொஞ்சம் சரி பண்ணி கொடுங்க தலைவரே...
நபர் - 4
தலைவா ரோடு காண்ட்ராக்ட் எல்லாம் நான்தான் எடுத்துக்கிட்டு இருந்தேன், நம்ம ஆளுதான் மங்காத்தா இப்ப ஆளுங்கச்சியிலே மாவட்ட செயலாளர் சென்னிமலையோட சேர்ந்துக்கிட்டு என்னை கழட்டி விட்டுட்டா தலைவரே...
நபர் - 5
தலைவரே நம்ம ஆட்சியல இருக்கும்போது தம்பி காலேஜ்ல பொட்டணம் வித்தான் போலீஸ்காரங்க கண்டுக்கலை இப்ப ஆளுங்கட்சி சகலையோட மச்சினன் ஒருத்தன் அவன்தான் விற்கணும்னு போலீசுல சொல்றாங்க ஒரு போனு போட்டு சொல்லுங்க தலைவரே...
சரி, சரி போதும் தலைவருக்கு டெல்லியில மீட்டிங்
இருக்கு அடுத்த முறை பேசிக்கலாம் இப்ப தலைவர் உங்களுக்கு இதற்கான தீர்வை சொல்வாரு
எல்லோரும் அமைதியாக இருங்க... சொல்லி விட்டு மைக் ஸ்டாண்டை அவரது வாயின் அருகில்
வைத்தான் உதவ் உத்தவ்.
தலைவருடைய உச்சரிப்பை அப்படியே எழுதினால்
பலருக்கும் புரியாது, மேலும் காது கொடுத்து கேட்க... மன்னிக்கவும் வாய் கொடுத்து
படிக்க முடியாது ஆகவே நானே முழி பெயர்த்து தருகிறேன்.
ஓரளவுக்கு மேல்தான் நாம்
பொறுமையை கையாள முடியும் அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்வோம்.
சொல்லி விட்டு எழுந்த தலைவர் கூட்டத்தை வணங்கி
விட்டு பங்களாவை நோக்கி நடந்தார். கோஷம் மீண்டும் இந்திரனை கடுப்பேற்றியது.
தலைவரது உரையின் உள்ளார்ந்த வார்த்தைகளின் அர்த்தம் இங்கு வந்திருக்கும் ஒவ்வொரு
தொண்டர்களுக்கும் அத்துபடி ஆகவே... அடுத்த
சில நாட்களில் தொலைக்காட்சி, தினத்தந்தி பத்திரிக்கைகளில் செய்திகளை பார்க்கலாம்.
கில்லர்ஜி தேவகோட்டை
சிவாதாமஸ்அலி-
ஏண்டா நாதாரிகளா... கொசுக்கடி பிரச்சனைக்கெல்லாம் ஃபாம் போடுவீங்களாடா... ?
Chivas Regal சிவசம்போ-
இந்த மாதிரித்தான் எல்லாக்கட்சி அரசியல்வாதிகளும் காலத்தை ஓட்டுறாங்களோ ?
ஏதோ அரசியல் அடிவருடிகளின் கோஷம் பிரபு என்றாள்.
ஆர்ப்பரிக்கும் சிங்கங்களே தொண்டர்களே இப்பொழுது அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் மைக்குகளை வாங்கி நமது தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தெளிவாக தலைவரிடம் விளக்கி சொல்லுங்கள் வரிசையாக சலசலப்பு இல்லாமல் பேசுங்கள். உங்களது பிரச்சனைகளுக்கு தலைவர் முடிவில் தீர்வு சொல்லுவார்கள்.
தலைவா வணக்கோம் எங்க ஊத்துப்பேட்டை தொகுதியிலே சாக்கடை நாத்தம் தாங்க முடியலை முனுசுபாலிட்டியிலே சொன்னா ஆளுங்கச்சிகாரங்க போலீசை வுட்டு அடிக்க வராங்க... கேசு போட்டு உள்ளே தள்ளுறாங்க...
தல போன தடவை நம்ம ஆச்சியிலே நீ கொடுத்த பொட்டிக்கடை பெட்டி அதுலதான் நான் யாவாரம் பாத்துக்கிட்டு வந்தேன் இப்ப என்னை எடத்தை காலி பண்ணச் சொல்லி டாச்சர் குடுக்கிறாங்கே தல...
வணக்கோம் தலைவரே நான் தேர்தல் மேடையில கொஞ்சம் ஓவரா பேசிப்புட்டேன் அதுக்கு இப்ப ஆளுங்கச்சிகாரங்கே ரோட்ல நடக்க வுட மாட்றாங்கே. வூட்ல பொண்ணு, பொரசுங்க வெளியே போக முடியல கொஞ்சம் சரி பண்ணி கொடுங்க தலைவரே...
தலைவா ரோடு காண்ட்ராக்ட் எல்லாம் நான்தான் எடுத்துக்கிட்டு இருந்தேன், நம்ம ஆளுதான் மங்காத்தா இப்ப ஆளுங்கச்சியிலே மாவட்ட செயலாளர் சென்னிமலையோட சேர்ந்துக்கிட்டு என்னை கழட்டி விட்டுட்டா தலைவரே...
தலைவரே நம்ம ஆட்சியல இருக்கும்போது தம்பி காலேஜ்ல பொட்டணம் வித்தான் போலீஸ்காரங்க கண்டுக்கலை இப்ப ஆளுங்கட்சி சகலையோட மச்சினன் ஒருத்தன் அவன்தான் விற்கணும்னு போலீசுல சொல்றாங்க ஒரு போனு போட்டு சொல்லுங்க தலைவரே...
காணொளி
ஏண்டா நாதாரிகளா... கொசுக்கடி பிரச்சனைக்கெல்லாம் ஃபாம் போடுவீங்களாடா... ?
இந்த மாதிரித்தான் எல்லாக்கட்சி அரசியல்வாதிகளும் காலத்தை ஓட்டுறாங்களோ ?
அரசியல்வாதிகள் இப்படிதான் இருக்கிறார்கள், செயல்படுகிறார்கள். அவர்கள் பிழைப்புக்காக மக்கள் நிம்மதியைக் கெடுக்கிறார்கள்.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி ஆம் இவர்கள் மக்களின் காவலர்கள் அல்ல! காலன்கள்.
நீக்குகாணொளி ரசித்தேன். வாட்ஸாப்பில் பல வருடங்கள் முன்பே வந்ததது!
பதிலளிநீக்குபல வருடங்களுக்கு முன்பு வந்ததுதான், நம்ம கதை இப்போதுதானே தயாரானது.
நீக்குஉங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஏகப்பொருத்தம் போலுள்ளது.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகை கண்டு மகிழ்ச்சி
நீக்குசாக்காடைகளில் எந்தச் சாக்கடை உசத்தி!!! சொல்லுங்க?!!!!!ஹாஹாஹா அதைச் சுற்றி வேற என்ன இருக்கும் சொல்லுங்க!!?
பதிலளிநீக்குகாணொளி....ம்ம் என்ன சொல்ல?
கீதா
வருக உண்மைதான் தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குசுவாரசியமான கதை சார். மக்கள் பிரச்சனையை எழுப்பாமல், தாங்களே வேலியில் போன ஓனானை வேட்டியில் விட்டுக்கொண்ட சொந்த பிரச்சனைகளை அடுக்கியது சிரப்பு. தனக்கு மிஞ்சியது தான் தானம் என்னும் பொன்மொழி இவர்களின் விஶயத்தில் சரியாக வேலை செய்கிறது.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது அழகிய கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குகட்டுரை மிக மிக அருமை... ரசிக்கும்படியாக இருந்தது. அதற்காகவே உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
பதிலளிநீக்குஅடுத்து, அந்த காணொளி இருக்கிறதே காணொளி.... அதை பார்த்து முடித்தவுடன் சிரிச்சு சிரிச்சு எண்ட்ற பிராணனே போச்சு.....
மொத்தத்தில் சிவ சம்போ எண்ட்ற பிராணன் அம்போ....
வருக நண்பரே
நீக்குபதிவை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
சிரித்து பிராணன் போனால் நிர்வாகம் பொறுப்பு அல்ல!
நகைச்சுவையோடு கூடவே உண்மையும் ஆங்காங்கே வந்திருக்கே! காணொளியும் இஃகி,இஃகி,இஃகி! இப்படி எல்லாம் உங்களைத் தவிர்த்து யாராலும் எழுத முடியாது.
பதிலளிநீக்குவருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஅருமை பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குநேக்கு ஒண்ணுமே பிரியல்லே உலகத்திலே:)).. பாடே பாடே எனச் ஸ்டைலாச் சொல்லி பாடையில்:) ஏற வச்சிடுவீங்களோ எனத்தான் பிரியுது சே..சே.. டங்கு /ச்லிப்பாகுதே.. புரியுது:))
பதிலளிநீக்குவாங்க அதிரா இப்படி அபசகுணமாக பேசலாமா ? நல்ல வார்த்தைகளை பேசுங்கள்.
நீக்குஹா ஹா ஹா கில்லர்ஜி, நீங்க நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனத் தெரியும் ஆனா இவ்ளோஓஓ நல்லவர் என இப்போதான் தெரியுது ஹா ஹா ஹா மீ ஓடிடுறேன்ன்:))
நீக்குபரவாயில்லை அதிரா இப்பவாவது என்னை புழிஞ்சுகிட்டீங்களே...
நீக்குஇதென்ன இது புயு:) வம்பாக்கிடக்கூஊஊ:))
நீக்குhttps://www.acomaanimalclinictucson.com/wp-content/uploads/2020/04/AdobeStock_288690671-scaled.jpeg
அடியாத்தி படம் பயமுறுத்துவதே..
நீக்குஅருமையான பதிவு.. வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன்..
பதிலளிநீக்குவாங்க ஜி அப்படியா ? மிக்க மகிழ்ச்சி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இப்படி நகைச்சுவையாக எழுத உங்களால் மட்டுமே முடியும். (நடு நடுவில் இந்திர லோகத்ததையும் எட்டிப்பார்க்க வைத்து விட்டீர்கள்.:)) ) இந்த மாதிரி அரசியல் நடந்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான். காணொளியையும் பார்த்து ரசித்தேன். 3டி படம் மாதிரி இருக்கிறது. காலையில் பதிவை படித்தேன். மிகவும் நகைச்சுவையாக இருந்தது. ரசித்துப் படித்தேன். ஆனால் வழக்கப்படி உடனே கருத்துச் சொல்ல என்னால் வர இயலவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குபதிவை ரசித்து படித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
ரசித்து சிரித்தேன் ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி மகிழ்ச்சி
நீக்குகாணொளி பார்த்தேன். அது சரி.. ச்சிகலாம்மா என்ன செஞ்சாங்க, இப்படிப் பேசினப்பறம்?
பதிலளிநீக்குவருக தமிழரே எங்கேயாவது, ஏதாவது நடந்து இருக்கும்.
நீக்குஹஹஹா ரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே ரசித்தமைக்கு மிக்க நன்றி
நீக்குசிரிப்போ சிரிப்பு. பானிப்பூரி வித்துகொண்டு வந்தவர் ஹா...ஹா...
பதிலளிநீக்குவாங்க சகோ ஆம் இப்படித்தான் நிறைய நபர்களின் வாழ்க்கை இருக்கிறது.
நீக்கு