இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2023

ஆரியபவனில் சூடான தோசை

01. தேர்தலில் வாக்கு செலுத்த மூன்று
புறமும் பணம் வாங்குவது தப்பா ?
 
02. மளிகைக்கடையில் போய் குழம்பு
வைப்பதற்கு புலி கேட்டால் தப்பா ?
 
03. குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்தை
குமரிக்கும் கொடுத்தால் தப்பா ?
 
04. நெற்றியில் பட்டையடித்தவருக்கு
பட்டைச்சாராயம் கொடுத்தால் தப்பா ?
 
05. பள்ளிவாசல் அருகில் இந்துக்கோயில்
கட்டி இருந்து வழிபட்டால் தப்பா ?
 
06. சர்ச் அருகில் பள்ளிவாசல் கட்டி
இருந்து முஸ்லீம் தொழுதால் தப்பா ?
 
07. கோயில் அருகில் பிற மதங்களின்
பள்ளியோ, சர்ச்சோ கட்டினால் தப்பா ?
 
08. நோன்புக்கஞ்சி வாங்கி கோயிலிலோ,
சர்ச்சிலோ வைத்து சாப்பிட்டால் தப்பா ?
 
09. மதுரை முனியாண்டி விலாஸில்
போய் தயிர்ச்சாதம் கேட்டால் தப்பா ?
 
10. ஆறி(ரி)-பவன் ஹோட்டலில் போய்
சூடாக தோசை கேட்டால் தப்பா ?
 
கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

32 கருத்துகள்:

  1. நான் எஸ்கேப் ஆகிக்கறேன்.  'ஆமாங்க தப்'புன்னு சொன்னால், 'இல்லை, எப்படி தப்பாகும்'னு நாலுபேர் கேப்பாங்க...  'இல்லீங்க தப்பில்லை'ன்னு சொன்னால், 'அட, இது தப்புங்க'ன்னு சொல்றதுக்கு நாலுபேர் இருப்பாங்க..  அவரவர் கருத்து அவரவருக்கு.  இது ஜனநாயக நாடு.  சுதந்திர தினம்.  இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      கழுவுற இலையில் நழுவுற இல்லையா இருக்கீக...

      தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

      நீக்கு

  2. கேட்ட கேள்விகள் எதுவுமே தப்பில்ல. வயசு 18க்கும் கீழே உள்ளவரை. உங்க வயசு 15 தானே. தாராளமா கேளுங்க.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா குழந்தை மனதோடு கருத்திட்டமைக்கு நன்றி

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கேள்விகள் அருமை. தப்போ சரியோ இப்படியான கேள்விகள் பிறந்து விடுகின்றன. இதற்கு சரியான பதிலை எதிராளிதான் தீர்மானிக்க வேண்டும். அப்படியும் பதில் சரியாக இல்லையென்றாலும், கேள்வி கேட்பவர் வருத்தப்பட கூடாது. இதுதான் உலக நியதி. ஆனால், எந்தவொரு ஆறிய பவனிலும் போய் சூடான தோசை எதிர்பார்ப்பது தவறுதான். மேலும் தமிழ் உச்சரிப்பு பேசும் போது சரியாக வராதவர்கள் மளிகை கடையில் புலி கேட்பதும் இன்று நடப்பதே...:)) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தங்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      தங்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

      நீக்கு
  4. 'ளி'(புளி)... வாடிக்கையாளராகட்டும் கடைக்காரராகட்டும் சரியாக உச்சரிப்பதில்லை கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  5. 4 - ஹாஹாஹாஹா எதுக்கு வாங்கிக் கொடுக்கணும்.....நம்ம வீட்டாண்ட ஒருத்தர் ஊருல இருந்தாரு. காலைல அப்படி இருப்பாரு....ராத்திரியானா இப்படித்தான். நம்ம தோழி வீட்டுல சொல்றது, காலைலயும் பட்டை, ராத்திரியும் பட்டைன்னு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ?
      குடிகாரர்கள் இல்லாத வீடு ஏது ?

      நீக்கு
  6. நல்லா கேட்டிருக்கீங்க - 5, 6, 7, 8 செம...ஆனா நான் பதில் சொல்ல மாட்டேனே!! ஹெஹெஹெஹெ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலக்கம் குறிப்பிட்டு கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. ஓ ஆரிய பவன், ஆறிய பவனா? முன்னாடி சாப்பிட்டிருக்கேனே அப்ப சூடாத்தானே கொண்டு தருவாங்க...இப்ப மாறிடுச்சோ?!

    எனக்கு ஒன்னு புரியலை - சூடா வேனும்னு சொன்னாலும் கடைசித் துண்டு வரை சூடாவா இருக்கும்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சூடா வேனும்னு சொன்னாலும் கடைசித் துண்டு வரை சூடாவா இருக்கும்//

      அடடே ஆமால...

      நீக்கு
  8. ஆரியபவனில் சூடாக தோசை கேட்டால் கொண்டு வருவார்கள். சூடா கொண்டு வந்தாலும் ஏசி ரூமில் வந்தவுடன் ஆறிதான் போகும்.
    கீதா சொல்வது போல கடைசி வரை சூடாய் இருக்க வேண்டும் என்றால் முடியாது.
    மளிகை கடையில் புலி கேட்டால் அண்ணாச்சி கிலி அடைவார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசனையான கருத்துக்கு நன்றி

      நீக்கு
  9. சூடான பவனில் ஆறிய தோசை கேட்ட மாதிரி இருக்கு..

    பதிலளிநீக்கு
  10. நெற்றிக் கண்ணை திறந்தாலும் தப்பு தப்புதுதான்- இப்போதைக்கு இதுதுான் சொல்லத் தோணுது நண்பரே.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நண்பரே இதுதான் சரியான வார்த்தை

      நீக்கு
  11. இந்தியாவில் கோயில் அருகே தான் மற்ற வழிபாட்டுத் தலங்களைக் கட்டி இருப்பாங்க. மற்ற வழிபாட்டுத் தலங்கள் அருகே கோயில் இருக்க வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  12. //மளிகை கடையில் போய் குழம்பு
    வைப்பதற்கு "புலி" கேட்டால் தப்பா?//

    அப்போ உங்கள் வீட்டில் தினம்தோறும் "புலி" குழம்புதானா? வெளியில் சொல்லாதீர்கள் அப்புறம் வனத்துறையினர் உங்களை செமையா கவனிக்கப்போகிறார்கள்.... ஆமா அதெல்லாம் இருக்கட்டும்... நீங்கள் இங்கு குறிப்பிடுவது கொட்டை எடுத்த புலியா? அல்லது கொட்டை எடுக்காத புலியா????....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      கொட்டை எடுத்தால் கதை முடிந்து விடுமே...

      நீக்கு
  13. குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்தை
    குமரிக்கும் கொடுத்தால் தப்பா?

    தப்பே இல்லை.... எக்குத்தப்பாக எதுவும் நடக்காத வரை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை அவர்கள் சமாளிப்பீர்கள் நண்பரே

      நீக்கு
  14. இவையெல்லாம் பிறர் செய்தால் தவறுதான். தாங்கள் செய்தால் தப்பு இல்லை.

    பதிலளிநீக்கு
  15. ஹா ஹா ஹா...

    எப்படி ஜி இப்படி கேள்விகள் எல்லாம்...?

    பதிலளிநீக்கு