இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2023

விடியா மூஞ்சி

மறதி
அவளை மறக்க நினைத்தேன்
மறந்து விட்டேன் ஆனால்
இவனை மறக்க முடியலை.
 
சாமி
இறையை வணங்க கோயிலுக்கு
போனவனை இரைக்காக வாசலில்
நின்றவர்கள் ஐயா..சாமி என்றனர்.
 
துரை
தர்மம் கேட்டான் என்னிடம்
தரமாட்டேன் என்றேன் நான்
காரணம் நானே அதர்மதுரை.
 
பால்
மணிச்சத்தம் கேட்டது வாசலில்
பால்க்காரன் வாங்கிய வெள்ளை
நீரில் காபி போட்டாள் மனைவி.
 
காதல்
மாமா மகளிடம் காதல் கடிதம்
கொடுத்தேன் வாங்கியவள் அதை
அத்தையிடம் கொடுத்து விட்டாள்.
 
கைநாட்டு
பரம்பரை சொத்தை மீட்டுத்தர
வழக்கறிஞரிடம் கைநாட்டினேன்
சொத்து மாறியது அவர் பெயரில்.
 
டாட்டா
எனது காதலுக்காக போராடினேன்
காதல் கை கூடியது அவனோடு
போனாள் எனக்கு டாட்டா காட்டி.
 
அழகி
பேருந்துக்கு நின்ற என்னை 17-பி
போயிருச்சா ? என்று கேட்டாள்
18 - அகவை அழகி அர்ச்சனா
 
குரல்
ரயில் நிலையத்தில் ‘’கும்பகோணம்
போறேன்’’ யாரிடமோ சொன்னாள்,
குயில் போலவே அவளது குரல்.
 
வியப்பு
விமான நிலையத்தில் விமலா
என்ற பெயர் அட்டையோடு
நின்றவளை கண்டு வியந்தேன்.
 
மாமா
கப்பலில் பயண பழக்கத்தில்
உணவகத்தில் இருந்தவளை
நெருங்கினேன் அருகே அப்பன்.
 
வட்டி
விடிந்ததும் சூரியா-ன் வந்தான்
விடியா மூஞ்சியாய் வட்டியை
வசூலிக்க வாசலில் நின்றான்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
முதுகுல என்ன தழும்பு... எவனும்... சூடம் காட்டிருப்பானோ ?

Share this post with your FRIENDS…

42 கருத்துகள்:

  1. டிபிகல் தேவகோட்டை ஜி பாணி!

    பதிலளிநீக்கு
  2. சுமார் கருத்துகளும், சூப்பர் கருத்துகளுமாய் கலந்து கொடுத்திருக்கிறீர்கள்!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  3. மறதி வசந்தமாளிகை வசனத்தை நினைவு படுத்துகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு படத்தையும் பார்த்தபோது எனக்கு தோன்றுகிறது.

      நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது ஜி

      நீக்கு
  4. கோவிலுக்குள் செல்லும்போது தர்மம் செய்யலாமாம்.  வணங்கி விட்டு வெளியே வரும்போது தர்மம் செய்யக்கூடாதாம்!  கர்ணன் கண்ணனுக்கு தன் குருதியால் தனது தர்மத்தை கொடையளித்தது போல சில்லறையாக நம் புண்ணியம் அங்கே சென்று விடுமாம்!!!  எங்கோ படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இக்கருத்து ஏற்கனவே அறிந்து இருக்கிறேன் ஜி

      நீக்கு
    2. ஆஆஆ இதென்ன இது புதுசா இருக்கே... யாரோ கட்டிவிட்ட கதையாக இருக்குமோ ஸ்ரீராம் சொல்வது...

      நீக்கு
    3. இது கதையல்ல முன்னோர் சொன்னதுதான்...

      நீக்கு
  5. எல்லாமே அதி விசேசமா இருக்கு ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பாட்டிலை ஆராய்ந்து விட்டீர்கள் போலயே...

      நீக்கு
  6. விடியா...

    தலைப்பில் அதிர்ந்து விட்டேன்..

    அரசியலோ என்று!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஹா.. ஹா.. அரசியல் எனக்கு தெளி"யாது.

      நீக்கு
  7. உரிக்கப்பட்ட கோழி போல பெண்கள் வீதியில் வரவிருக்கும் நாள் தொலைவில் இல்லை..

    பதிலளிநீக்கு
  8. முதல் படம் ! கோபுர தரிசனம்.
    பெண் சட்டையில் கோபுரம்,அடுத்து சாராயமா?
    சாமி, கைநாட்டு ரசித்தேன்.
    சொத்தை மீட்க வக்கீல் கிட்ட போனால் அவர் தான் செல்வந்தர் ஆவார்.
    கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தாங்கள் ஒவ்வொன்றுக்கும் வரிகளை சிறப்பாக அமைத்தது கண்டு பிரமிக்கிறேன். நல்ல பொருள் நிறைந்த கவிதைகள். அனைத்தையும் ரசித்துப் படித்தேன். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கவிதையை ரசித்தமைக்கு நன்றி

      நீக்கு
  10. சிலது நல்லாருக்கு. சிலது ஓகே....மறதி, சாமி (இதை ரொம்ப ரசித்தேன்) டாட்டா, கைநாட்டு, காதல் இவை சூப்பர். கில்லர்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  11. ஒண்ணுமே புரியலே. கோபுரம் பிளவுஸ் சாராய பாட்டில் படம்.

    மூன்று வரி கவிதைகள் என்று மறதி, சாமி, காதல் , பால் என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் கவிதைகள்.

    நல்லாதானே இருந்தீங்க, திடீர்னு என்ன ஆச்சி?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      முதல் படம் பெண்ணை மறந்தவனுக்கு பாட்டிலை மறக்க முடியவில்லை.

      இது ஒரே கவிதை இல்லையே எல்லாமே தனித்தனி குட்டி கவிதைதான்.

      நீக்கு
    2. ஜே கே ஐயாட டவுத்தேன் நேக்கும் இருந்துது:)

      நீக்கு
    3. டவுட் தீர்ந்ததா ?

      நீக்கு
  12. நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்:).. ஐ ஒப்ஜக்ஸன் யுவர் ஆனர்:).. தலைப்புக்கும் படத்துக்கும் ஜம்பந்தமே இல்லையே... சரி அது போகட்டும் எனப் பார்த்தால், அந்த முதுகுக்கு கீழ எதுக்கு கில்லர்ஜியின் பெயர் இருக்குது.... நெஞ்சு பொறுக்குதில்லையே நான் விடமாட்டேன் இப்பவே சிறீ சிவசம்போ அங்கிளைக் கூப்பிடுங்கோ.. அந்தப் போத்தில் படம் அங்கின எதுக்கு... கோயில் கோபுரத்துக்கு அருகில் மதுபானமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சே..சே நான் காசியிலயே இருந்திருக்கலாமே காசி விஸ்வநாதா...:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருநாமம் பொறிக்க வேண்டாமா ? இடம்தான் மாறி விட்டது போல...

      நீக்கு
  13. ஹைக்கூ நன்றாகவே இருக்கு, ஆனா குரல், வியப்பு இரண்டும் புரியவில்லை, ஒருவேளை தேவகோட்டை எனச் சொல்லாமல் விட்டிட்டாவே எனும் கோபமோ அங்கு??:)).. ஹா ஹா ஹா..

    விமலா என்றதில் என்ன இருக்கு? புரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "வி"மலா "வி"யப்பு ஒற்றுமைக்காக சொன்னேன்.

      நீக்கு
  14. அது செரி:)).. எங்கட துரை அண்ணனை எதுக்கு இங்கின இழுத்தீங்க?:).. அப்பாடா கோத்து விட்டிட்டேன்ன்... அப்போ நான் போட்டு வரட்டே கில்லர்ஜி:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சந்திராயனை இறக்கி விட்டு வந்த வேலையை முடித்தமைக்கு நன்றி அதிரா.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நல்லவேளை துரை அண்ணன் இதைப் பார்க்காததால தப்பிட்டீங்க கில்லர்ஜி:)

      நீக்கு
  15. அம்மா ஏன் நிறைய நெகட்டிவ் இருக்கு ஜோக்குக்கு தான் என்றாலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      உண்மையைதானே சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
  16. எது எப்படியோ.... ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா கில்லர்ஜி அய்யாவின் தயவால்... கோபுர தரிசனத்தை சேவிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது எங்களின் முன்னோர்கள் செய்த புண்ணியம் என்றுதான் சொல்லவேண்டும்... "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பார்கள்... அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை இன்றுதான் புரிந்துகொண்டேன்...

    அந்த கடவுள் அருளால் இன்னும் நூறு வருசத்துக்கு நீங்க நல்லா இருக்கணும் சாமி....

    குறுங்கவிதைகள் இன்னும் படிக்கவில்லை... இனிதான் படிக்கவேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கோபுர தரிசனம் நல்லது தங்களுக்காகவே இந்த படத்தை பகிர்ந்தேன்.

      தரிசனம் செய்து கொள்ளவும்.

      நீக்கு
  17. சுருக் கவிதைகள் சுவை

    பதிலளிநீக்கு
  18. இதெல்லாம் எதுக்குனு ஒண்ணுமே புரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      ஹைக்கூ என்ற குட்டிக்கதைகள் படித்ததில்லையா ?

      நீக்கு