இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, அக்டோபர் 14, 2023

மனம் விட்டு மணம் பெறுங்கள்

மேலே உள்ள வாசகம் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது மறுப்பு சொல்ல முடியாதுதான் ஆனால் வேலை செய்யும் இடமோ, வாடகைக்கு குடியிருக்கும் இடமோ, அல்லது சொந்த வீடோ அது மனதுக்கு இஷ்டப்படாமல் இருந்தால் ஒதுங்கி மாற்றிக் கொள்ளலாம், நண்பர்களோ, சொந்தங்களோ, மனஸ்தாபம் வந்தால் ஒதுங்கி விடலாம்.
 
ஆனால் சாஸ்திரம் பார்த்து சொந்த பந்தங்கள் கூடி நின்று வாழ்த்தி ஊர் அறிய திருமணம் செய்த கணவனோ, அல்லது மனைவியோ விருப்பமில்லை என்றால் ஒதுங்கி விடமுடியுமா ? கடைசிவரை இருவரும் வாழ்க்கையை இழுத்துக் கொண்டுதானே போக வேண்டியதிருக்கின்றது இந்த சமூகத்தில் வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு வாழும் நண்பர்கள் எத்தனையோ ? நண்பிகள் எத்தனையோ ? இது சரியா ? தவறா ? இதற்கு தீர்வு இருக்கிறதா ? இருக்கிறது ஆம் இருக்கிறது.
 
இதனைக் குறித்து பேசுவது யார் ?
அலசி ஆராய்வது யார் ?
 
முடிவில் தீர்ப்பு சொல்வது யார் ?
எல்லாமே இரண்டே பேர்தான்.
 
ஆம் எல்லாமே இரண்டே பேர்தான்.
யாரந்த இரண்டு பேர் ?
 
கணவனும், மனைவியும் மட்டுமே...
 
இதற்கு இரண்டு பேருமே நியாயமான நியாயம் பேசும் அறிவாளிகளாக இருத்தல் அவசியம் Ego என்னும் அரக்கனை மனதிலிருந்து வெளியேற்றிய பிறகே இதனைக் குறித்து பேசமுடியும் விட்டுக் கொடுத்தலில் இருவருமே நீயா ? நானா ? என்று போட்டி போடவேண்டும்.
 
கணவன் மனைவிக்குள் ஆயிரம் விடயங்கள் இருக்கும் முதலில் இருவருமே உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தல் அவசியம் தன்னை குற்றப்படுத்தி விட்டாளே... என்றோ, விட்டானே... என்றோ நினைத்தல் கூடாது பேசும் விடயங்கள் ஆணித்தரமாக, ஆக்கபூர்வமாக, நியாயமாக, அதையும் இதமாக, கனிவாக, பணிவாக பேசுதல் வேண்டும், அதைவிட முக்கியம் இருவருமே மீண்டும் இணைந்தே வாழப்போகிறோம் என்ற சிந்தனையே மேலோங்கி இருக்க வேண்டும் தவறு தன் மீதெனில் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை தவறு என்மீதுதான் மறப்போம் என்றாலே போதுமானது
 
மன்னிப்பு கேட்குதலும் கூடுதல் மகிழ்ச்சியைத் தரும் அதேநேரம் மன்னிப்பு கேட்டவரை இகழ்ச்சியாக பார்த்தலும் கூடாது அதுவே மீண்டுமொரு பிரச்சனைக்கு ஆரம்பமாகி விடக்கூடும் பேசும்போது இருவரும் கண்களை நேருக்குநேர் பார்த்து பேசுதல் மிகவும் முக்கியம் சுவற்றைப்பார்த்து பேசுதல் கூடாது நீங்கள் இருவரும் நேருக்கு நேர் பார்ப்பதில் தயக்கம் ஏன் ? எத்தனை முறைகள் இந்தக்கண்கள் சந்தித்து காதல் மொழிகள் பேசி இருக்கின்றன...
 
மேலும் பேசும் பொழுது பேச்சில் சிறிய இடைவெளி அவசியம் அவை புரிதலை அதிகப்படுத்தும் பேசும் பொழுது எதிரெதிர் உட்காரக்கூடாது அருகருகே இருத்தல் மிகமிக அவசியம் பேசும் பொழுது தொட்டு பேசுதல் ஏற்படும் தருணத்தில் தொட்டுப் பேசவேண்டும் அந்தத் தொடுதலும் கையைப்பற்றிக் கொண்டு பேசும் வார்த்தைகளாக இருந்தால் மிகவும் சிறப்பாகும் இதை சண்டை சச்சரவு இல்லாத தம்பதியினரும்கூட செயல் படுத்திப்பாருங்கள் உண்மை விளங்கும்
 
தொடுதல் அன்பை வெளிப்படுத்தும் இதன் காரணமாகவே எதிரெதிர் உட்காருதல் கூடாது என்றேன் வேறு காரணமல்ல... அரபு நாடுகளில் சமாதானம் ஆனவுடன் கை கொடுத்துக் கொள்வதுகூட இதனால்தான் இருக்கும் என்பதும் எமது கருத்து ஒரு தமிழ்த் திரைப்படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் என்று நகைச்சுவையாக காண்பிப்பார்கள் உண்மையில் இது ஒரு நல்ல விடயமே கோபத்தை குறைத்து பகைவனையும் நண்பனாக்கி விடும்.
 
இந்த இருவரின்றி பேச்சு வார்த்தைக்கு மூன்றாம் நபரொருவர் வரும் பொழுது இருவருமே அவரிடம் தனது தன்மானத்தை உயர்துவதிலேயே குறியாகி பிறரை குற்றவாளியாக்கியே தீரவேண்டும் என்ற சிந்தை மட்டுமே இருக்குமேயின்றி வேறில்லை அதிலும் மனைவி கௌரவக் குறைச்சலாக மூன்றாம் நபரின் முன் ஒரு வார்த்தை சொல்லும் பொழுது இயல்பான ஆணின் குணம் அந்த இடத்தில் கோபத்தையே வெளிப்படுத்தும்.
 
அதில் மனைவியும் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாதவர் என்றால் பிரச்சனைகள் மேலும் வளருமே தவிர குறைவது சாத்தியமில்லை மேலும் நாட்டு ஆமையாக நுழைந்த மூன்றாம் மனிதர் நல்லெண்ணம் இல்லாதவராயின் மேலும் எதையாவது பற்ற வைத்து மூட்டி விட்டு விடுவார் காரணம் இன்று நாட்டில் இந்த மாதிரியான சகடைகள் நிறைய திரிகின்றது
 
மூன்றாம் நபர் மனைவியின் சகோதரர் ஆனாலும்கூட சாத்தியங்கள் குறைவே காரணம் வந்தவர் தனது சகோதரியை எப்படியாவது வாழவைத்து விடவேண்டும் என்றுதான் பேசுவார் ஆனால் கணவன் மைத்துனரிடம் தனது வெட்டி பந்தா காட்டுவார், சகோதரி தனது சகோதரனிடம் தனது குடும்பத்து வரட்டுக் கௌரவத்தை நிலை நாட்டி பேசுவார் இதுவும் தவறே...
 
கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் இரவில் கூடிக்கொள்வார்கள் என்ற பழஞ்சொல் உண்டு இது தவறு இரவுக்கு முன்பே பேசிக்கொள்ளுதல் வேண்டும் இதுவே உண்மையான அன்பு இரவில் கூடினால் அது உடலுக்காக, இரவுக்கு முன்பே பேசினால் அது உணர்வுக்காக, உண்மையான அன்புக்காக.. இருவருக்கும் சண்டை வந்து சமாதானமான பிறகு சேர்ந்து கொண்டால் இதில் வெற்றியாளர் யார் தெரியுமா ?
 
நடந்ததை மறப்போம் என்று முதலில் சொல்பவர் யாரோ அவரே வெற்றி பெற்றவர் அவள்தானே வலியக்க வந்து பேசினாள் ஆகவே நாம்தான் வெற்றி பெற்றோம் என்று கணவனோ, அவர்தானே வலியக்க வந்து பேசினார் ஆகவே நாம்தான் வெற்றி பெற்றோம் என்று மனைவியோ நினைத்தால் ? அவர்கள் இருவருமே அறிவீணர்களே... விட்டுக் கொடுப்பவரே வெற்றியாளர்.
 
கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் கடைசிவரை வரும் உறவு அதாவது மரணம்வரை இதுதானே நமது தமிழ்க் கலாச்சாரம் கற்றுக் கொடுத்தது பெற்ற மக்கள் இடையில் வந்தவர்கள் இடையிலேயே போய் விடலாம் இனிவரும் காலங்களில் இதுவே எழுதப்படாத விதி விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை மனைவியிடம் கணவனும், கணவனிடம் மனைவியும் விட்டுக் கொடுத்தால்தான் என்ன ? அவர்கள் உணர்வின், உடலின், உயிரின் பாதியல்லவா !
 
மனம் விட்டு மணம் பெறுங்கள் வாழ்க வளமுடன்.
 
இதையெல்லாம் சொல்லித்தர அன்று எனக்கு யாருமே இல்லை நான் இந்த உலகப் பிறவிப்பயனில் 99 சதவீதம் இழந்து நடைபிணமாக வாழ்ந்து கொண்டு இருந்தவன், இருப்பவன் நான் வாழ்ந்தது மிக மிக மிக மிக குறைவு இந்த உண்மை அறிந்தவர் மூவர் மட்டுமே முதலாமாவர் நான், இரண்டாமாவர் மறைந்து விட்ட என்னவள், மூன்றாமாவர் என்னையும், அவளையும் படைத்து, இணைத்து, பிரித்து விட்ட இந்த உலக மேலாளன். அந்த இழப்பின் ஏக்கம், விரக்தி எனது எதிரிக்குகூட வேண்டாம் என்று இவ்உலக மேலாளரிடம் வேண்டிக் கொள்கிறேன்.
 
எனது இந்த வயதுக்குள் பிரிந்திருந்த நான்கு தம்பதிகளை நான் சேர்த்து வைத்து இருக்கின்றேன் அவர்களில் மூன்று தம்பதிகள் இன்றுவரை நலமுடன் வாழ்கிறார்கள் இத்தனையும் நான் எமராத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது எனது வேலைகளில் இதுவும் ஒன்றாக இருந்தது.
 
கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

30 கருத்துகள்:

  1. நல்லதொரு சிந்தனை.  விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று சொல்வார்கள்.  அனுசரித்துப் போவதே அன்பின் வழி.  ஒருவருக்கொருவர் கட்டாயம் வேண்டும்.  சிறு பிரச்னைகளால் அது பிளவுபட்டு விடக்கூடாது.

    பதிலளிநீக்கு
  2. 1111 வது பதிவுக்கு வாழ்த்துகள்.  பேத்தி கூட பெருமைப் படுகிறாள் 1111 வது பதிவுக்கு!  இணையும் காலம் இனிதே வரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. யாராவது சொல்லிக் கொடுத்தால் இந்த குணங்கள் நமக்கு ஏறுவதில்லை.  அனாவசிய ஈகோ அல்லது பந்தா பார்த்து இருந்து விடுவோம்.  நம் அனுபவங்களே நமக்கு பாடம் போதிக்கின்றன.  இது மாதிரி விஷயங்களில் தானாய் வரும் தீர்வுதான் நிலைத்து நிற்கும்.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் எழுதியிருப்பது உண்மை. ஆனால் இதெல்லாம் அனுபவத்தில்தான் வரும்.

    இரண்டு வெவ்வேறு மனிதர்கள் (மனுஷன், மனுஷி) சேர்ந்து வாழ்வது என்பதே சாதனைதான். அட்ஜஸ்ட் செய்துகொள்ளத்தான் வேண்டும். இருவரும் மற்றவர் பார்வையில் விஷயத்தை அணுகுவது நல்லது. எழுத சுலபமா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே எழுதுவது சுலபம்தான். ஏற்று நடப்பது கஷ்டம் , ஆனால் நடந்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.

      நீக்கு
  5. உங்கள் பெயர்த்தி நல்லா இருக்கட்டும். குடும்பங்களுக்கு இடையேயான இணைப்புப் பாலமாக இறைவன் அமைக்கட்டும்.

    1111 பதிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதலில் தங்களது 1111 வது பதிவுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    நல்ல சிந்தனையான இப்பதிவின் எழுத்துக்களை படித்து ரசித்தேன். உண்மை. தம்பதிகள் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசினால் வாழ்வில் பிரச்சனைகள் விலகுவது உறுதி. அழகாக சொல்லியுள்ளீர்கள்.

    தாங்களும் இது போன்ற மனப் பிணக்கு கொண்டு பிரிந்திருந்த தம்பதிகளுக்கு உதவியாக இருந்து அவர்களை சேர்த்து வைத்த பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள்.

    தங்கள் பேத்தி அழகாக உள்ளார். அவர் கைகளில் தங்களது பதிவின் இலக்கமிட்ட வெற்றிக் கொடி. இதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் தங்களது பேத்திகள் தங்களுடன் சேர்ந்து மகிழும் காலங்கள் வந்து விடும். சந்தோஷமாக இருங்கள். இறைவன் அவ்விதமே அருள வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், விரிவான கருத்தை பதிவு செய்து வாழ்த்தியமைக்கும் மனம் நிறைந்த நன்றிகள் பல!

      நீக்கு
  7. அருமையான எண்ணங்கள்...

    1111 : வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  8. 1111 வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறது நண்பரே. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  9. பேத்திக்கு மனமார்ந்த நல்லாசிகள்.விரைவில் தாத்தாவுடன் சேர்ந்திருக்கப் பிரார்த்திக்கிறேன். உங்கள் இந்தக் கருத்துரைகளால் புதிய தம்பதியர் பயன் அடையட்டும். மேலோட்டமாய்ப் பார்த்துக் கேட்டுப் பழகிப் பிரிவதே இப்போதெல்லாம் வழக்கமாகி வருது. ஆழமாகச் சிந்தித்து மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல் பேசிப் புரிஞ்சுக்கணூம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும், பெயர்த்தியை வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  10. நல்ல சிந்தனை ஜி . நன்றி

    பதிலளிநீக்கு
  11. அருமையான கட்டுரை. நீங்கள் பிரிந்தவர்களை சேர்த்து வைத்து நல்ல காரியம் செய்து இருக்கிறீர்கள்.

    1111 வது பதிவுக்கு வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
    தாத்தா வின் 1111 வது பதிவை சொல்லும்
    பேத்தியை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள்! வாழ்கவளமுடன்.
    பேத்தி உங்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது வருகைக்கும், பெயர்த்தியை வாழ்த்தியமைக்கும், விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. முதலில் 1111 வது பதிவுக்கு வாழ்த்துகள் கில்லர்ஜி.!

    பெயர்த்தி ரொம்ப அழகாக இருக்கிறார். உங்கள் பக்க ஜாடையில் இருக்கிறார். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு. கூடிய சீக்கிரம் அவரோடு சேர்ந்து களிக்கும் மகிழ்ச்சி கிடைத்திட வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. பதிவு மிக நல்ல பதிவு கில்லர்ஜி.

    ஈகோ இல்லாத உறவுகள்தான் வலுவாக இருக்கும். புரிதல் வேண்டும். சேர்ந்திருப்பது என்பதை விட புரிதல் விட்டுக்கொடுத்தல் என்பது மிக அவசியம்.
    அதிலும் ஒருவர் மட்டுமே அட்ஜஸ்ட் செய்து கொண்டு கடனே என்றும் சமூகத்திற்காகவும், சுற்றம் ஏதாவது சொல்லுமே என்றும் வாழ்வது என்பது என்னைப் பொருத்தவரை சிறப்பான வாழ்க்கை என்று சொல்லமாட்டேன். அதற்குப் பிரிவது தவறில்லை. நீங்களே ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் கட்டம் - ஒப்புக்கு மாறடிக்காதே....அதே தான்...

    இந்தப் புரிதல் என்பது வருவது லேசுபட்டதில்லை.

    ஒரு சில உறவுகளில் நான் நீங்கள் முதலில் சொல்லியிருக்கும் அந்தக் கட்டத்தில் உள்ளதைத்தான் பின் பற்றி வருகிறேன். என்னைப் பிடிக்கவில்லை என்பவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  14. எந்த இரு உறவுக்குள்ளும் மூன்றாவது நபர் நுழைவது சரியல்ல. அது பல சமயங்களில் ஆபத்தாக அமையும். குறிப்பா கணவன் மனைவி உறவுக்குள் அவர்களின் பெற்றோர் கூட ஏனென்றால் அதில் ஒரு பக்கம் சாய்வது தான் நடக்கும். வெகு சில கேஸ்களில் மட்டும் தான் தன் பெண் தன் பிள்ளை என்று பாக்காம பேசுபவர்கள் இருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மூன்றாவது நபர் வரவே கூடாது இதை தம்பதிகள் உணர வேண்டும்.

      நீக்கு
  15. மனம் விட்டு பேசினால் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு.

    பேத்திக்கு ஆசீர்வாதங்கள். பகிர்வுகள் தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு