இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 27, 2023

குழந்தைகள் சுமைதாங்கி கல்லா ?


ணக்கம் நண்பர்களே அன்றாடம் இந்தக் காட்சிகளை பலரும் சாலையில் மட்டுமல்ல, தங்களது வீட்டில்கூட கண்டு மனம் வருந்தி இருப்பீர்கள். அதாவது ஐந்து அகவை உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை அவர்கள் எப்படி செல்கிறார்கள் ? தங்களது எடைக்கு மீறிய புத்தகச் சுமைகளை முதுகில் தூக்கிக் கொண்டு செல்வதை. கூன் விழுந்த பாண்டியர்களைப் போல் அவர்களை இப்படி செல்ல வைப்பது சரியா ?
 
பிறநாடுகளில் குழந்தைகளின் உயிர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு கொடுக்கிறது தெரியுமா ? பள்ளி பேருந்துகளை முந்திச் செல்வதுகூட குற்றம். ஏதோவொரு நாடு அதன் பெயர் நினைவில் இல்லை குழந்தைகளை 12-வது அகவையில்தான் பள்ளியில் சேர்க்க வேண்டும். அதுவரையில் அவர்கள் இந்த உலக வாழ்வை சந்தோஷமாக அனுபவிக்கட்டுமே... இப்பொழுது பால்குடி மறக்காத ஒரு வயதில் பால்வாடி என்ற பள்ளியை உருவாக்கி அதிலும் வருமானத்தைப் பெருக்கி கொள்கின்றார்கள்.
 
இவைகளை புரிந்து கொள்ளாத நாம், நமது பிள்ளை நாளையே மாவட்ட கலெட்டராக வருவது போல நினைத்துக் கொண்டு பணத்தை கட்டி சேர்க்கிறோம். அது கல்லூரியை விட்டு வெளியே வந்து கூத்தாடிகளின் பதாகைகளுக்கு பாலூற்றி தனது வாழ்வை பாழாக்குகின்றது. வெளிநாடுகளில் பள்ளிக் குழந்தைகளின் பேருந்தின் கதவுகள் முழுமையாக அடைத்த பிறகே புறப்படும் இங்கு வாயிலில் பத்து குழந்தைகள் தொங்கி கொண்டு செல்கிறது. காரணம் இலவச அட்டையில் செல்கின்றார்களாம்.
 
அதனால் இவர்களுக்கு மதிப்பு இல்லை மேலும் நாட்டை ஆளும் வெட்டி முந்திரிகள் நல்லா ஓசியில் போறீங்களா ? என்று நம்மைக் கேட்கிறது தனக்கு அனைத்துமே ஓசி என்பதை மறந்து விட்டு, காரணம் நாம் இவைகளை மறந்து விட்டு இவர்களுக்கே மீண்டும் ஓட்டளிப்போம். நாம் பால்வாடியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு முதல் காரணம் கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்கின்றார்கள். வேலைக்கு செல்வது எதற்கு தெரியுமா ? நமது ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணை எல்.கே.ஜி. சேர்க்க பணம் வேண்டுமே அது மட்டுமா ? கல்லூரி வரையில் படிக்க வைக்க வேண்டுமே...
 
மேலும் வீட்டில சுட்டி செய்கிறதாம் அட அற்பப்பதறுகளா... சுட்டி செய்தால்தான் அது குழந்தை இல்லை எனில் அது பிண்டம். நீ மட்டும் சாதாரண ஆளா ? பின்புறம் வால்தான் இல்லை. குழந்தையின் சுட்டியை இரசிக்கத் தெரியாதவன் இவ்வுலகில் எதைத்தான் ரசிப்பான் ? பிறகு உங்களுக்கு என்ன மானாவுக்கு குழந்தை ? அன்று பத்து குழந்தைகள் பெற்று வளர்க்கவில்லையா ? அதேநேரம் அன்று ஐந்தாவது அகவையில்தான் பள்ளியில் சேர்த்தனர்.
 
என்னுள் ஓர் குழப்பமான கேள்வி ஐந்து அகவை நிரம்பாத குழந்தையின் முதுகில் ஆறு கிலோ புத்தகச்சுமையை ஏற்றிடும் நாம், இருபத்து இரண்டு அகவை நிரம்பி கல்லூரி போய் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய படிப்பை படிக்கப் போகின்றவன் கையில், ஒரு சிறிய நோட்டை மட்டுமே எடுத்துக் கொண்டு அதையும் மரியாதை இன்றி விரல் நுணியில் சுற்றிக்கொண்டு போகின்றானே இது முறையா ? இந்த இழிநிலைக்கு காரணவாதி மக்களா ? அரசா ?
 
கில்லர்ஜி அபுதாபி
 
சிவாதாமஸ்அலி-
மக்கள் மாக்கல்லாக இருக்கும் வரையில் விடிந்தும் விடியாது.

Share this post with your FRIENDS…

21 கருத்துகள்:

  1. முன்பு குழந்தைகளுக்கு இருந்த சுதந்திரம், சௌகர்யம் இந்தக் கால குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன்.  அளவான பள்ளி பாடங்கள்.  மாலையில் விளையாட்டு..  அதுவும் தெருவில் இறங்கி.   விடுமுறையில் திகட்டத் திகட்ட விளையாட்டு.  இப்போது அதெல்லாம் சாத்தியமில்லை.  கல்வி முறையை மாற்றி விட்டார்கள்.  கடுமையானதாக்கி விட்டார்கள்.  நல்லொழுக்க வகுப்புகளை எடுத்து விட்டார்கள்.  அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கையில் குழந்தைகளுக்கும் விளையாட இடமில்லை, விருப்பமில்லை, நேரமும் இல்லை.  முன்பு தொலைகாட்சி, இப்போது மொபைல்.  மேலும் அவர்கள் பெற்றோர்கள் அனுப்பும் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் வகுப்புகள்..  பாவம்..  இளமையைத் தொலைக்கும் குழந்தைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. இது பற்றி நிறைய எழுதலாம் கில்லர்ஜி.

    குழந்தைகள் மீது நிறைய திணிக்கப்படுகின்றன என்பது மிக உண்மை. பாவம். விளையாட்டு குறைந்துவிட்டது . விளையாட இடம் இருந்தால் தானே...பாடத்திட்டங்கள் நன்றாக இல்லை. தேவையற்றவை திணிக்கப்படுகின்றன. தேவையான விளையாட்டு, மாரல் வகுப்புகள், திறன் வளர்க்கும் வகுப்புகள் எதுவும் இல்லை இப்போது.

    பெற்றோரும் அப்படி இருக்காங்க.

    இங்கு பாத்தீங்கனா எங்கள் தெருவில் குழந்தைகள் மிக மிக ஜாலியாக விளையாடுறாங்க. பெற்றோரும் சேர்ந்து விளையாடுறாங்க. ரொம்ப நல்லாருக்கு பார்க்க. பெரிய குழந்தைகளும் விளையாடறாங்க. பெரும்பாலும் குழந்தைகள் சத்தம்தான் மாலை...இப்போது விடுமுறையா....ஹையோ செம சத்தம் விளையாட்டு. தெருவில் மரங்கள் அடர்ந்து இருப்பதால் அவங்களுக்கு விளையாட சௌகரியம்.....எங்கள் பகுதியில் வளாக வீடுகள் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  3. இந்த ஜெனெரேஷன் குழந்தைகள் (முந்தைய ஜெனெரேஷனும்) இளமையைத் தொலைத்துவிட்டு மனப்பாடக் கல்விக்கு அடிமையானவர்கள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும்படியாக பெற்றோர்களும் கடனை உடனை வாங்கி அந்த கோர்ஸ், இந்த கோச்சிங் என்று பிழிந்து எடுக்கிறார்கள். ப்ளஸ் 2 நல்ல மார்க் வாங்கி வெளில வந்தவனுக்கு சைக்கிளுக்கு காற்றடிக்கக்கூடத் தெரியாது. அந்த மாதிரி அசட்டுக் கல்வியை நாம் கற்பிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈ:)... கடனை உடனை.... என்பதில் உடனை எண்டால் என்னவாக்கும்.. புயு வயுடம் பிறக்கமுதல் எனக்குப் பதில் வேணும்.. எனக்கு டமில்ல ஆரும் பிழை விட்டால் பிடிக்காதாக்கும் எனச் சொல்லி வையுங்கோ கில்லர்ஜி, நெ டமிலனிடம்....

      ஹையோ ஜாமி தெரியாமல் லெக்கை வச்சிட்டமோ .. இருந்ததுபோல இருந்திருக்கலாமோ ரொம்ம்ம்ப அமைதியான பொண்ணாக...

      நீக்கு
    2. வருக தமிழரே தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    3. உடனே என்பது உடனை என்று மாறிவிட்டது அதிரா அத்தை.
      Jayakumar

      நீக்கு
    4. ஜேகே ஐயா.. ஹா ஹா ஹா இப்போ நான் ஆருக்கு அட்டை சே சே வெரி சோரி டங்கு ஸ்லிப் ஆச்சு:).. அத்தை ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்????:)

      நீக்கு
  4. வளாகத்தில், எங்கள் டவரின் ஒவ்வொரு ஃப்ளோரின் காரிடாரிலும் குழந்தைகள் கத்தி விளையாடினால், உடனே வாட்சப் குழுமத்தில், விளையாட்டுச் சத்தம் தாங்கலை, வெளில தள்ளிப் போய் விளையாடச் சொல்லுங்க என்று கம்ப்ளெயிண்ட்ஸ் வந்துடும். பசங்க என்றால் ரோபோ மாதிரி பள்ளிக்குச் செல்லணும், வந்த உடனே புத்தகத்தை வைத்துக்கொண்டு படிக்கணும், மொபைல் பார்க்கக்கூடாது, தொலைக்காட்சி பக்கமே போகக்கூடாது, மார்க் நல்லா வாங்கிக் காட்டணும்...ஆனால் பெற்றோர்கள் அதற்கு நேர்மாறாக நடந்துக்குவாங்க என்பதுபோல இருக்கு நிலைமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது உண்மையான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. கல்வி திட்டம் மாறி விட்டது, குழந்தைகள் எல்லோரும் முதல் ராங்க் வாங்க வேண்டும் என்பது பெற்றோர்கள் ஆசை.

    ஆசிரியர்களுக்கு தங்கள் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் மாணவர்கள் தேர்வு பெற வேண்டும் என்ற ஆசை.

    தான் படிக்க வேண்டும் என்று நினைத்து ஆசை பட்டு முடியாமல் போனதை எல்லாம் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்.

    அவை எல்லாம் முதுகின் சுமையாக ஏறி இருக்கிறது குழந்தைகள் மேல்.
    எங்கள் வளாக குழந்தைகள் சனி, ஞாயிறு இரண்டு நாள்தான் விளையாடுவார்கள் அதுவும் சில குழந்தைகள்தான் விளையாடுவார்கள். சில குழந்தைகளை பெற்றோர்கள் விளையாட விட மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  6. சேத்தன் பகத் எழுதிய கதை 3 idiots என்ற பெயரிலும் பின், நண்பன் என்று தமிழிலும் படமாக வெளிவந்தது. பெற்றோர்கள், நிறைவேறாத ஆசையை தம் குழந்தைகள் மூலம் நிறைவேற்றக் கூடாது, சிறார்களின் தனித் திறமையை அடையலாம் கண்டு ஆவன செய்ய வேண்டியது பெற்றோர் கடமை என்பதை வலியுறுத்தும் அற்புத படம். அக்கறையான உங்கள் பதிவை படிக்கும் போது அதுவே நினைவிற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  7. என்ன கில்லர்ஜி, மகன் கொண்டு போய் விட்டிட்டாரோ கிண்டக்காடினில பேத்தியை... நெருப்பில்லாமல் புகையாதே.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு..

    அதுசரி அபுதாபிக்கு எப்போ போனீங்க சொல்லவே இல்லயே... அப்போ உகண்டாவில இருக்கும் கொழுந்தியா கோபிக்கப் போறாவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா பெயர்த்திகளோடு இப்போது அலைபேசியில் தொடர்பில் இருக்கிறேன்.

      நீங்கள் ஆடிக்கு பிறகு அமாவாசைக்கு வருகிறீர்கள்.

      பிறகு நான் உகாண்டாவை விட்டு அபுதாபி வந்தது எப்படி தெரியும் ?

      நீக்கு
  8. என்ன சொன்னாலும் கரடியாய்
    கத்தினாலும்
    யாரும் கேட்டுக் கொள்ள மாட்டார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கூற்றும் உண்மையே...

      நீக்கு
    2. புத்தக சுமை பற்றி கஸ்தூரிரங்கன் கமிட்டி முதல் பலரும் ஆராய்ந்து அறிக்கைகள் தந்தார்கள். அனைத்தும் குப்பைதொட்டியில் தான்.

      எல்லோரும் பொதுவாக கற்றிருக்க வேண்டியது என்ன பாடத்திட்டம் என்பதில் திட்டம் தயாரிப்பவர் எல்லோரும் அவரருக்கு முக்கியம் என்று தோன்றுவதை உட்படுத்துகிறார்கள்.அதுதான் முக்கிய குறை. மேலும் வேண்டிய வேண்டாத சில மொழிகள் வேறு கற்க வேண்டி உள்ளது.

      நீக்கு
    3. வாங்க ஐயா தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு