இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, பிப்ரவரி 02, 2024

நீ நடிகனே அல்ல !

 

ணக்கம் தமிழக மக்களுக்கு அதாவது ரசிகர்களுக்கு ரசனை இருக்கிறதா ? காரணம் நமக்கு நன்றாகவே தெரிகிறது, இந்தப்படத்தில் இதன் நாயகன் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார், சமூகத்துக்கு பழைய வரலாற்றை சரியாகவோ, புதுப்பித்தோ, மாற்றுக்கருத்தை வலியுருத்தியோ எடுத்து தருகிறார். இருப்பினும் நாம் அந்த மாதிரியாக திரைப்படங்களை பார்த்து வெற்றியடைய வைக்காமல் இருக்கிறோமே... இது தவறு என்பது விளங்கவில்லையா ?
 
காரணம் ஒரு சிலரின் படங்களில் கதையே இல்லை, ஏதோ வந்து நான்கு சண்டைகளும், இரண்டு அர்த்தமற்ற காதில் நுழையாத டப்பாங்குத்து பாடல்களும் இருக்கிறது அந்த படங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் தருகின்றார்கள். நான் ஒன்றும் கமல்ஹாசனின், ரசிகனோ, அல்லது அவரது நண்பர் திரு.நெல்லைத்தமிழன் அவர்கள் மூலமாக ஏதாவது கையூட்டு கிடைக்கும் என்ற காரணத்திற்காகவோ இப்பதிவு எழுதவில்லை.
 
முன்பு ஒரு காலத்திலே... கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் ஆஸ்கார் பரிந்துரைக்கு சென்றது. படமும் குழுவினரால் தேர்வும் ஆனது ஆனாலும் ஒரேயொரு காட்சி அவர்களின் கண்ணை உறுத்தியது. இது சட்டப்படி குற்றம் என்று தீர்மானமாகியது. அது ‘’பச்சைக்கிளிகள் தோளோடு’’ என்ற பாடலில் இடம் பெறும் காட்சி அதாவது தந்தையான கமல் தனது மகள் மழை நீரில் கப்பல் செய்து விளையாட வேண்டும் என்று கேட்கும் பொழுது காகிதம் இல்லாத காரணத்தால்... தனது சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாய்த்தாளில் கப்பல் செய்து கொடுத்து விளையாட விடுகிறார்.
 
இது நூறு ரூபாய்த்தாளைவிட தனது மகளின் சந்தோஷமே முக்கியம் என்ற ஒரு தந்தையின் உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்துகிறது. இயக்குனரும் இதே எண்ணத்தில்தான் இக்காட்சியை அமைத்து இருந்திருப்பார். ஆனால் என்ன ஆனது ? இந்திய ரூபாயை இழிவு படுத்தும் செயலாக இக்காட்சியை கருதி படத்தை விருதிலிருந்து நிராகரித்தது குழு. இப்படியொரு நிகழ்வு வருமென்று நினைத்து இருப்பார்களா ? அதற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகர் இல்லை என்றாகி விடாது.
 
இதற்கு முன்பு ஒரு காலத்திலே... இந்தியப் புகழ் பெற்ற வங்க தேசத்து இயக்குனர் திரு.சத்யஜித்ரேய் கமல்ஹாசனை வைத்து ஓர் திரைப்படத்தில் நடிக்க தீர்மானமானது. அந்த கதாபாத்திரத்துக்கு கமல்ஹாசனை மொட்டை அடித்து குடுமி வைக்கச் சொன்னார் திரு.சத்யஜித்ரேய் இதற்கு கமல்ஹாசன் சம்மதிக்கவில்லை. நீ நடிகனே அல்ல போ என்று சொல்லி விட்டார் இயக்குனர். பின்னாளில் இதற்காக மிகவும் வருந்தினார் கமல்ஹாசன்.
 
இன்று அவர் இல்லை, ஒருக்கால் அவரது இயக்கத்தில் நடித்து இருந்தால் கமல்ஹாசனுக்கு ஆஸ்கார் விருது கிடைத்து இருந்திருக்கலாம். சிலருக்கு சில நியாயங்கள் காலம் கடந்தே தெளிவு பெறுகிறது. பலருக்கு அநியாயங்கள் காலத்தே நலமாக தெரிகிறது.
 
கில்லர்ஜி அபுதாபி

26 கருத்துகள்:

  1. சத்யஜித்ரே கமலஹாசன் தகவல் இதுவரை நான் கேள்விப்படாதது.  பாரதிராஜா சொன்னால்தான் கேட்பார் போலும் கமல்!

    பதிலளிநீக்கு
  2. ​நடிப்பு மிகை. தனிப்பட்ட சொந்த வாழ்க்கை கேவலம். இறுமாப்பு அதிகம் இது போன்ற சில நெகடிவ் பாயிண்ட்ஸ் கமலை புகழாமல் இருக்க செய்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது கருத்து உண்மைதான்

      நீக்கு
  3. "முன்பு ஒரு காலத்திலே" பாடலுக்கு கமல் நடிப்பு நன்றாக இருக்கும். மூன்றாம் பிறை படத்தில்.

    கமல் நடித்த நிறைய படங்கள் நன்றாக இருக்கும் . "அன்பே சிவம்" எனக்கு பிடித்த படம்.
    உங்கள் பொது நல பதிவு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நான் மூன்றாம் பிறை திரைப்படம் பார்த்ததில்லை.

      அது நான் திரைப்படங்களை வெறுத்து ஒதுக்கத் தொடங்கிய காலகட்டம்.

      நீக்கு
  4. கமலஹாசன் நல்ல நடிகர், என்டெர்டெயினர்.

    ஆனால் நல்ல மனிதன் அல்ல, உதாரணமாக்க் கொள்வதற்கு. இவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது சொந்த லாபத்தை எதிர்பார்த்து. ஜெயப்ரதாவே எம்பி ஆகிட்டா, நாமும்தான் ஆவோமே, என்ற நல்லெண்ணம் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே ஜெயப்பிரதாவும், ஜெயப்பிரகாஸும் ஒன்றாகுமா ?

      நீக்கு
  5. பாராளுமன்றத் தேர்தல் வந்து கில்லர்ஜி வாக்களிக்க இந்தியா வந்தாலும் சென்னையிலோ இல்லை கோவையிலோ கில்லர்ஜிக்கு வாக்களிக்க முடியாதே.. இதற்காக கமலை தேவகோட்டையில் போய் நில்லுன்னு தள்ளிவிட முடியாதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழரே உங்களது நண்பர் தேவகோட்டையில் நின்றாலும் எனது வாக்கு கிடைக்காது.

      நீக்கு
  6. சத்யஜித்ரே கமலுக்கு வாய்ப்பு கொடுத்தாரா? புதித தகவல். ஒரு வேளை அப்ப கமல் இப்படி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆர்வத்தில் இல்லையா? ஏன் மறுத்தார் என்பது ஆச்சரியம். கமலோ திரைப்படங்களின் காதலன். நன்றாக நடிக்கவும் செய்வார். பாரதிராஜா படம் 16 வயதினிலே படத்துல கூட வித்தியாசமான பாத்திரம் அப்படியிருக்க ஏன் மறுத்தார் என்பது ஆச்சரியமான விஷயம்.

    எனக்கு கமல் நடித்த படங்களில் அன்பே சிவம் ரொம்ப பிடித்த படம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் நாயகனுக்கு பிறகே கமலின் வேஷங்கள் மாறியது.

      ரே அழைத்தது அதற்கு முன்பு....

      நீக்கு
  7. கமலிடம் குறிப்பிடத்தக்க பலவீனங்கள்[இல்லாத மனிதர் ஏது?] இருப்பினும், அவர் சாதி மதம் கடந்த நல்ல மனிதர்; மிகச் சிறந்த நடிகர் என்பது என் நம்பிக்கை. அதனால், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்ல ரசனையாளருக்கு கமலை பிடித்தேதீரும்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நடிகர் கமல் நடித்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியன் திரைப்படத்தைப் பற்றியும், நடிகர் கமல், திரு. சத்யஜித்ரேய் பற்றிய தெரியாத தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.

    /அதற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகர் இல்லை என்றாகி விடாது./

    தாங்களும் ஒத்து கொண்டதும் சந்தோஷம்... கமல் ஒரு நல்ல குணசித்திர நடிகர். காட்சிகளுக்கு ஏற்ப தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துபவர் . அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது விருப்பங்களை நாம் தடுப்பதற்கு நமக்கு எந்த உரிமையுமில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. வருக சகோ
    //தாங்களும் ஒத்து கொண்டதும் சந்தோஷம்...//

    நான் எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் நிற்பவன்.
    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  10. அதிசயம்..

    ஆனாலும் உண்மை..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  11. இருந்தாலும் பணம் காசு சோறு இவற்றுக்கு உரிய மரியாதையைத் தந்துதான் ஆக வேண்டும்..

    இளமையில் ஒருமுறை கோபத்தில் பணத்தை தூக்கி எறிந்து விட்டு பின் பல வருடம் கஷ்டப்பட்டு இருக்கின்றேன்..

    அவரவரும் ஐந்து ரூபாய்க்கு சிரமப்படும் போது தான் புரியும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வாழ்க்கை ஒரே போல் நிலைப்பது இல்லை ஜி

      நீக்கு
  12. கமலின் நடிப்புத் திறமை பற்றி சிறப்பான கருத்துரை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. சத்யஜித் ரே படத்தில் கமல் - நல்ல வாய்ப்பினை இழந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். தகவல் புதியது.

    பதிலளிநீக்கு
  14. பல படங்களில் தனது நடிப்புத் திறமையை நிலைநாட்டியுள்ளார் .

    பதிலளிநீக்கு