நமது மக்களிடம் எவ்வளவு முரண்பட்ட சிந்தனைகள்
காரணம் என்ன ? இறை பயம் இல்லை
ஆகவே நேர்மையற்ற சிந்தை. எல்லோருக்கும் நியாய தர்மங்கள், தவறு எது ? சரி எது ? என்பது நன்றாகவே
தெரிகிறது இருப்பினும் செயல்பாட்டில் பேச்சில் முழுக்க, முழுக்க தவறுகளே செய்கின்றனர்.
01. பிள்ளைகள் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்க வேண்டும் ஆனால் வேலை மட்டும் அரசாங்கத்தில் வேண்டும்.
02. தனது மகனுக்கு பணக்கார வீட்டில் பெண்
எடுக்க வேண்டும் ஆனால் மருமகள் தங்களை மதிக்க வேண்டும்.
03. மருமகன் குடித்து வந்தால் குடிகார
மாப்பிள்ளை ஆனால் தனது மகன் குடித்து வந்தால் தவறு இல்லை.
04. ஓட்டுப்போட பணம் வாங்க வேண்டும் ஆனால்
வெற்றி பெற்றவர் தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும்.
05. கடன் கேட்டதும் கிடைத்து விடவேண்டும்
ஆனால் திருப்பி கேட்டால் கடன் கொடுத்தவர் கெட்டவர்.
06. பெண் கொடுக்கும்போது பெற்றோர் வேண்டும்
ஆனால் திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை மட்டும் போதும்.
07. இறைவனுக்கு பரிகாரங்கள், பிரார்த்தனைகள், படையல்கள் வெகுசிறப்பு ஆனால் மனம்
முழுவதும் அழுக்கு.
08. ஆபாசமாய் உடையணிந்து சாலையில் செல்ல
வேண்டும் ஆனால் பொறுக்கிகள் கேலி செய்தால் தவறு.
09. திருமணம் முடிந்தாலும் நவ நாகரீகமான
உடையணிதல் ஆனால் கல்யாணப்புடவை ஐம்பதாயிரத்தில் வேண்டும்.
10. பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்ததும்
குழந்தைகள் வேண்டும் ஆனால் தன்னை பாட்டி என்று அழைக்ககூடாது.
11. ஏலச்சீட்டு நிறுவனங்களில் அதிகமான வட்டி
கிடைக்க வேண்டும் ஆனால் அவன் ஏமாற்றக்கூடாது.
12. மனைவி பேரழகியாக வேண்டும் ஆனால் அவளுக்கு
இணையாக தான் இல்லா விட்டாலும் பிரச்சனையில்லை.
கில்லர்ஜி அபுதாபி
Chivas Regal சிவசம்போ-
குவாட்டர்
தரம் குறையாமல் வேணும் ஆனால் விலை ஏறக்கூடாது நாம சொன்னால் கேட்பாய்ங்களா...
சிவாதாமஸ்அலி-
எல்லாம் வேணும்னா தலையெழுத்து சரியா
இருக்கணுமே... அதுக்கு சரியா சிந்திச்சு ஓட்டுப் போடணும்.
மக்களின் மனோநிலை. இப்போதெல்லாம் தவறு என்று எதையுமே சொல்வதில்லை மக்கள். எல்லா அநியாயங்களுக்கும் பழகி விட்டனர்.
பதிலளிநீக்குவாங்க ஜி ஆம் பழகி விட்டது என்பதே உண்மை.
நீக்குஎழுதியது எல்லாமே உண்மைதான்.
பதிலளிநீக்குதான் விரும்பும் கட்சி என்ன செய்தாலும் கவலையில்லை. மாற்றுக் கட்சி செய்யும் தவறுகளை பூதாகாரமாகச் சொல்வதையும் சேர்த்திருக்கலாமோ?
வருக தமிழரே தாங்கள் சொல்வதும் சரிதான்.
நீக்குஅபுதாபி போனதில் ரொம்பவே குண்டாயிட்டீங்களோ, முகம் சொல்லுது!
பதிலளிநீக்குஇல்லை நண்பரே இது மிகப் பழைய புகைப்படம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தாங்கள் எழுதியிருப்பதெல்லாம் உண்மையே.. இதுதான் மனித மனங்கள். ஆசைப்பட்டு தான் தேடியது கிடைத்தவுடன் அந்த ஆசை உடனே பேராசையாக மாறி விடுகிறது. 6 8 9 ல் கூறியிருக்கும் வரிகளை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவில் ரசித்ததை குறிப்பிட்டு சொன்னமைக்கு நன்றி.
நீக்குசுயநலமும் பேராசையுமே மூல காரணங்கள் என்று நினைக்கிறன் நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே நல்லெண்ணங்கள் குறைந்து விட்டதும் ஓர் காரணம்.
நீக்குபதிவு அருமை. அனைத்தும் நடக்கும் உண்மை.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஎல்லாமே நிதர்சனமான உண்மைகள் தான்! தினசரி வாழ்க்கையில் அனுபவிப்பது தான்! ஆனால் உண்மைக்கு எங்கே மதிப்பிருக்கிறது?
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குசொல்லியிருப்பது அனைத்தும் உண்மை. வேதனையான விஷயங்கள் தான்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு