இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மார்ச் 14, 2024

மன்னார்குடி, மளிகைக்கடை மன்னார்

டேய் மங்கோந்தை... எதுக்குடா... எண்ணையிலே மண்ணைப் போடுறே ?
நீங்கதானே முதலாளி மண்-எண்ணை அஞ்சு லிட்டர் ஊத்தச் சொன்னீங்க...
 
ஏண்டா, உளுந்தம் பருப்பு எடுக்கப்போன ராமு என்ன ஆனானு பாரு.... ?
முதலாளி ஏணியிலருந்து கீழே விழுந்துட்டான்.
 
ஏண்டா சீனிவாசா, சீனி 2 ½ கிலோ போடச் சொன்னேனே ரெடியா ?
சீனி முகம்மதுட்டே சொல்லிட்டேன் முதலாளி.
 
ஏன் நீ என்ன செய்யிறே ?
மேலே ஆணி புடுங்கிட்டு இருக்கேன்.
 
பக்கிரி இவனுக்கு பழைய பாக்கி எவ்வளவு ?
அந்த பக்கிக்கு பழைய பாக்கிக்கு ஒரு ரூபாய் மிட்டாய் கொடுங்க.
 
ஏண்டா.. அறிவழகா வடிவுகரசியோட பில்லுல பச்சரிக்கு வாய்க்கரிசினு போட்டுக்கே ?
எல்லாம் வாயிலதானே போடுறோம் முதலாளி அதனாலதான் அப்படிப் போட்டேன்.
 
டேய், முந்திரி பருப்புக்கு, சுந்தரி பருப்புனு போட்டுருக்கே ?
பில்லு கொடுக்கிறது சுந்தரிக்குங்கிறதை சிம்பாலிக்கா எழுதுனேன் முதலாளி.
 
தம்பி விளக்கெண்ணை நூறு மில்லி கொடுப்பா...
ஸ்டாக் இல்லை விளக்கெண்ணை.
? ? ?
 
மன்னாரு, உன் ஆளுட்ட மை’’தானு கேட்டேன் மைதா மாவை கொடுக்கிறான்
சரியாத்தானே கொடுத்துருக்கான்.
 
நான் கேட்டது, பேனாவுக்கு.
? ? ?
 
கில்லர்ஜி அபுதாபி
 
Chivas Regal சிவசம்போ-
வாச்சவன் பூராம் கோணவாயனாவுல இருக்கான்.

20 கருத்துகள்:

  1. முன்முறுவல் வரவைத்தன...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கடை உரிமையாளரின் கேள்விகள ஒவ்வொன்றிக்கும் சிப்பந்தியின் நல்ல சிலேடையான பதில்கள். ரசித்தேன். சில மனம் விட்டு சிரிக்க வைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. நன்றாக இருக்கிறது.
    கேள்வியும், பதில்களும் அருமை.
    சிரிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  4. நல்ல் நகைச்சுவை துணுக்குகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  5. ஹாஹஹாஹா கில்லர்ஜி....சுந்தரி கணக்கும், வாய்க்கரிசி, மண் எண்ணை, மை தா செம கற்பனை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கேள்வியும், பதிலும் புதுவிதம்..

    ஏதோ நடக்கின்றது..

    பதிலளிநீக்கு
  7. சின்னஞ் சிறிய சிரிப்புப் பூக்கள்

    பதிலளிநீக்கு
  8. நகைச்சுவை துணுக்குகள் நன்று. ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு