இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 22, 2024

எம் வழி அதே வலி


மது ஊர்களின் அரச மரத்தடியில் பார்த்து இருப்பீர்கள் கண்ணாடி பிரேம் போட்ட பழைய சாமி படங்கள் பழையதாகி விட்டதாலும் நமது மோடிஜியின் டிஜிட்டல் இந்தியாவால் மின்சார ஒளியோடு ஒலியும் தரும் அழகிய கண்ணைக் கவரும் (கவனிக்க, கண்ணைக் கவரும் மனதை கவர அல்ல) அழகிய புதிய அவதாரமாக சாமி படங்கள் வாங்கிய காரணத்தால் இவைகளை எடுத்து வந்து இங்கு போட்டுச் செல்வர்.
 
இவ்வளவு காலமாக தனது குடும்பத்துக்கு அருள் வழங்கிய (?) இந்த சக்திகள் இன்று சக்தியற்று போனதாக மக்கள் நினைப்பது எவ்வகையில் தர்மமாகும் ?  கடவுள் நம்பிக்கை வைத்து அனைத்தையும் வணங்குகிறோம் நேற்று முன்தினம் வரையில் குடிகார மட்டையாகவே வாழ்ந்து அழிந்தவர் தந்தை என்ற உறவு முறைக்காக கடவுளாக்கப்பட்டு அவரையும் வணங்குகிறோம். இவர் மட்டும்தானா ?  காமக்கொடூரன் சகலை நித்தியானந்தாவையே சன் தொலைக்காட்சியில் ரஞ்சியோடு பார்த்த பிறகும் கடவுளாகத்தானே பார்க்கிறோம். இது போதாதென்று சிலரது கால்களை படம் எடுத்து விற்கின்றார்கள் அதையும்கூட சுயமரியாதை இழந்து வணங்குகிறோம்.
 

அன்னையே முதல் தெய்வம், தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்றுதானே மதங்கள் போதிக்கின்றது. ஆனால் அவைகளை நாம் முழுமையாக அங்கீகரிப்பதில்லை. கடவுள் தூரிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்ற நம்பிக்கை உண்மையெனில் லட்சுமி வெடியிலும் இருப்பார் முருகன் சுருட்டிலும் என்பது உண்மைதானே பணம் கொடுத்து லட்சுமி வெடியில் தீயை வைத்து அது லட்சுமியோடு வெடித்து சிதறுவதை கண்டு மகிழ்கிறோம். பிறகு எப்படி மறு வருட தீபாவளி நமக்கு நிறைவான வாழ்வைத்தரும் ?  முருகன் சுருட்டை வாங்கி அதை தீயிட்டு புகைத்து விட்டு கடைசி பாகத்தை கீழே போட்டு செருப்புக் காலில் முருகன் படத்தோடு மிதித்து தேய்க்கிறோம் நமது வாழ்வு தொடர்ந்து வளமும், நலமும் பெறுமா ? 
 
இறை நம்பிக்கை வைப்பது தவறல்ல தவறான செயல்பாடுகள் நமது அடுத்த தலைமுறைகளை தொற்றக்கூடாது என்பதே எமது மூலக்கருத்து. நாட்டில் நடமாடும் மனித போலிச் சாமியார்கள் பெறுகி வருவது தெய்வீகத்தை வளர்க்கிறதா ?  இல்லை மனித அறிவு மழுங்கடிக்கப்படுகிறதா ?  யாமறியோம் பராபரமே... நாம் வாழ்ந்து முடிந்து விட்டோம் நமது தலைமுறைகளாவது அறிவாற்றலோடு வாழட்டும்.
 

கில்லர்ஜி அபுதாபி
 
சிவாதாமஸ்அலி-
எத்தனை பெரியார் வந்தாலும் இதே வழினு வலியோட போவாங்கே...

20 கருத்துகள்:

  1. உங்கள் மூலக் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வலியைத் தந்தாலும், நம் வாரிசுகள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

    மிக்க மகிழ்ச்சி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  3. பழைய படங்களை உடைக்கவோ இல்லை குப்பையில் போடவோ மனம் வரலை என்பதுதான் காரணம். தேவகோட்டையில் பெரிய மண்டபம் கட்டினீங்கன்னா எல்லோரும் பழைய படங்களை அங்கு அனுப்பிடலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே மண்டபம் கட்டி விடலாம் ஆனால் இடத்து வரி காட்டமாட்டேன்.

      இதற்கு உத்திரவாதம் வாங்கித்தர முடியுமா ?

      நீக்கு
  4. உங்கள் சிந்தனை நன்று. வடக்கில் நீர் நிலைகளில் போடுவதும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உங்கள் வருத்தங்கள், நியாயமானவைதான். இவ்விதமான போட்டோக்களை இங்கும் சில இடங்களில் பார்த்துள்ளேன். மனம் வருந்தும் செயல்தான்.. நேரடியாக குப்பையில் போட மனம் இல்லாதவர்கள் இப்படி மரத்தடியில் வைத்து விடுகின்றனர்.

    /இவ்வளவு காலமாக தனது குடும்பத்துக்கு அருள் வழங்கிய (?) இந்த சக்திகள் இன்று சக்தியற்று போனதாக மக்கள் நினைப்பது எவ்வகையில் தர்மமாகும் ?/

    நியாமான கேள்வி. எதையுமே தேவைக்கு அதிகமாக சேர்த்தால் இந்த நிலைமைதான். யோசிக்க வைக்கும் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  6. /// எத்தனை பெரியார் வந்தாலும்.. ///

    இதுக்கு அவுரு எதுக்கு!?..

    அறிவு தான் வேணும் நமக்கு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அதானே... சிவாதாமஸ்அலிக்கு இது தெரியவில்லையே...

      நீக்கு
  7. செத்துப் போனவரு எப்படிங்க வருவாரு?..

    அவரை பொறக்கணும்னா அந்த வம்சமே மறுபடியும் பொறக்கணும்!..

    இது நடக்குற கதயா?..

    கடசீ ல
    கவுத்துப் புட்டீங்களே..

    ஆரம்பத்துலயே
    கவுத்துருக்கலாம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி செத்துப்போன வம்சம் கதம் கதம்தான்.

      நீக்கு
  8. நாம என்ன ஊரத் திருத்தவா பொறந்துருக்கோம்?...

    நம்ம புள்ளிங்களே நம்ம பேச்சக் கேக்குறது இல்லே...

    பதிலளிநீக்கு
  9. "தவறான செயல்பாடுகள் அடுத்த தலை முறைக்கு தொடரக் கூடாது' உங்கள் ஆதங்கம் நன்கு .இதை எத்தனை பேர் உணர்வார்கள் ? உணர்ந்தால் வெற்றியே.

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் படத்தில் காட்டியது போல நானும் பார்த்து இருக்கிறேன். மரத்தடியில், கோவில்களில் பழைய படங்களை கொண்டு வந்து போடுவதை.நாங்களும் நிறைய படங்களை பரணில் ஏற்றி வைத்து இருக்கிறோம். நமக்கு பின் அவை என்னவாகும் என்று தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பரணில் போட்டு விடுவது உத்தமம்.

      நீக்கு