இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 04, 2024

அவார்டு கிடைக்குமா ?

ணக்கம் நட்பூக்களே... ஒருமுறை இராமநாதபுரத்தில் சகோதரியின் வீட்டுக்கு போயிருந்தேன். பிரதான சாலையிலிருந்து சற்றே சிறிய தெருவுக்குள் வீடு மகிழுந்தில் சென்ற நான் தெருவில் தண்ணீர் தேங்கி கிடக்கவும், மெதுவாக நகர்த்திக் கொண்டு சென்று இறங்கினேன். ஒரு பெண்மணி விளக்கமாறை வைத்து தேங்கிய தண்ணீரை வழித்து பாதாள சாக்கடைக்குள் அனுப்பி விட்டார் நான் சாக்கடை உடைந்து வெளியேறி விட்டதோ என்று நினைத்தேன். பிறகு தங்கையிடம் விசாரித்ததில் தெரிந்தது.
 
தெருவில் சமீபத்தில் கான்கிரீட் சாலை போட்டு இருக்கின்றார்கள். ஈரப்படுத்துவதற்காக தேங்காய் நாரை உதறி போட்டு இருந்ததால் நிறம் வேறு மாதிரி இருந்தது ஆனால் இது, அது இல்லை. உயரத்தை குறைவாக போட்டதால். மழை பெய்யவும் தண்ணீர் தேங்கி விட்டது. அதைத்தான் அந்த பெண்மணி நீரை ஒழுங்கு படுத்திக்கொண்டு இருந்திருக்கிறார். நான் அவரை நகராட்சியில் வேலை செய்யும் பெண்மணி என்றே கருதினேன் காரணம். அவரது தோற்றம் அப்படி இருந்தது.
 
அவரும் வேலையை முடித்து விட்டு சகோதரியிடம் வந்து மரியாதையாக போயிட்டு வர்றேன் என்று சொல்லவும் தங்கையும் சரிக்கா ரொம்ப நன்றி என்று சொல்லி அனுப்பி விட்ட பிறகு யாரென்று விசாரித்தேன். இந்த வார்டு கவுன்சிலர் என்று சொல்லவும். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முன்பே தெரிந்து இருந்தால் அந்த பெண்மணிக்கு வாழ்த்துகள் சொல்லி சிறிய பேட்டி எடுத்து இருப்பேன். செயல்பாட்டை காணொளிகூட எடுத்து தங்களுக்கும் அறிமுகப்படுத்தி இருப்பேன்.
இவர் இராமநாதபுரத்தின் 15-வது வார்டு கவுன்சிலர் பெயர் விஜயலட்சுமி கட்சி தே.தி.மு.க. அவரே நேரடியாக வந்து வேலை செய்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மோசடி செய்யாமல் இப்படியும் நேர்மையாளர்கள் இந்தியாவில் வாழத்தான் செய்கின்றார்கள். வெளியில் தெரியப்படுத்துவதற்குதான் ஊடகங்கள் இல்லை. திரைப்பட கூத்தாடிகள் நாயை வாங்கிங் கூட்டிப் போனால் அதனை காணொளியோ, புகைப்படங்களோ எடுத்து போடுவார்கள் விபச்சார ஊடகங்கள்.
 
சிலர் இல்லாத இடத்தில் புது வகையான குப்பைகளை போட்டு அதனை கூட்டுவது போல நடிப்பார்கள் அவார்டு வாங்குவதற்கு... இந்த வார்டு கவுன்சிலர் உண்மையாக தொண்டு செய்கிறார். இதிலும் ஓர் சுயநலம் உண்டுதான், மீண்டும் இதே வார்டு மக்களிடம் வாக்கு வாங்குவதற்கு இருப்பினும் உழைப்பு உண்மைதானே... துட்டுக்கு கூட்டுபவர்களும் உண்டு, ஓட்டுக்கு கூட்டுபவர்களும் உண்டு. திரு.வாலி அவர்கள் எழுதி, திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் மெருகூட்டி திரு.டி.எம்.சௌந்திரராஜன் அன்றே பாடி விட்டார்.
 
தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
 
படம் பிடிப்பதற்கு கூட்டுவது போல நடிப்பதால் உடல் வலிக்காது இரண்டு நாளைக்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நின்று கூட்டினால் தெரியும். டவுசர் கிழிஞ்சு போயிடும். புனிதநீராக கருதப்படும் உங்களது வாரணாசி தொகுதியில் போய் கூட்டுங்களேன் பார்ப்போம். முட்டை வெளியில வந்துரும். சோக்கு காமிச்சு மக்களை ஏமாற்றி விடலாம்னு நினைக்காதீர்கள். மறைந்தும் மக்கள் மனதில் வாழும் திரு.காமராஜர் அவர்களைப்போல் ஆறு மாதம் ஆட்சி செய்து பாருங்கள் போதும். மக்கள் போற்றுவார்கள் இல்லையெனில் தூற்றுவார்கள்.
 
கில்லர்ஜி அபுதாபி

20 கருத்துகள்:

  1. பதிவில் மோடி வெறுப்புதான் தெரிகிறது. தலைவர்கள் வழிதான் காட்ட முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நான் மோடி வெறுப்பாளன் அல்ல!

      நீக்கு
  2. வார்ட் கவுன்சிலர் அடுத்த பதவியை தக்க வைக்க செய்தாரோ அல்லது உண்மையாக செய்தாரோ அவர் பணி பாராட்டபட வேண்டியதுதான்.
    பழைய சினிமாக்களில் சமூக சேவை என்று பணக்கார வீட்டு பெண்கள் குடிசை பகுதிக்கு சென்று சேவை செய்து பத்திரிக்கையில் போட்டோ எடுத்து போடுவதை கிண்டல் செய்து கதாநாயகன் பாடுவார். நீங்கள் பகிர்ந்த பாடல் நம்நாடு படமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி.

      அப்படத்தின் பெயர் "நேற்று இன்று நாளை"

      நீக்கு


  3. அவர் மக்களை ஏமாற்ற நினைக்கவில்லை அவர்களை கூமுட்டைகளாக ஆக்க நினைத்தார் ஆக்கியும் விட்டார். முட்டாப் பயல் 10 ஆண்டுகள் ஆட்சி செய்து சாதனையை சொல்லி வோட்டு கேட்க வழி இல்லை. வெறுப்பு விஷத்தைதான் இன்னும் தூவிக் கொண்டிருக்கிறான்

    பதிலளிநீக்கு
  4. ஜீக்கு லாலு கொடுத்த செருப்படி இத்ற்கு மேல் சங்கிகள் பேச ஏதாவது இருக்கா என்ன?

    "இந்தியில் கிட்டதட்ட 1.5 லட்சம் வார்த்தைகள்
    உள்ளன. ஆனால் பிரதமர் மோடிக்கு தற்போது
    மிகவும் பிடித்த வார்த்தைகள் ...
    பாகிஸ்தான், சுடுகாடு, இந்து - முஸ்லிம்,
    கோயில் - மசூதி, தாலி, பசு, எருமை
    2வது கட்ட வாக்குப்பதிவு வரையே இந்த பட்டியல்.
    போகப்போக இதில் புதிய வார்த்தைகள் சேரும்.
    வேலைவாய்ப்பு, ஏழைகள், விவசாயிகள், விலைவாசி,
    வளர்ச்சி, இளைஞர்கள், அறிவியல், முதலீடு போன்ற
    வார்த்தைகளை அவர் மறந்துவிட்டார்.

    -லாலு பிரசாத் யாதவ் ஆர்ஜேடி தலைவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  5. அந்த வார்டு கவுன்சிலர் செய்த செயல் பாராட்டுக்குரியது. பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நிச்சயமாக பாராட்ட வேண்டும் ‌

      நீக்கு
  6. வார்டு கவுன்சிலருக்கு அ"வார்டு" கொடுக்கலாம் - நாஞ்சில் சிவா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கண்டிப்பாக கொடுக்கலாம்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல மனதோடு தன் வார்டு மக்களுக்காக உழைத்த அந்த வார்டு கவுன்சிலரை பாராட்ட வேண்டும். இந்த மாதிரி பொது தொண்டுடன் செய்பவர்களும் இருக்கிறார்கள். வாழ்க அவர்களது எண்ணங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நேற்று பல வேலைகளின் காரணமாக பதிவுலகத்திற்கு என்னால் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  8. நம்ப முடியவில்லை.... நண்பர் சொல்வதால் நம்பாமல் இருக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      உங்கள் பிரதமரை நம்புவீர்கள் மூன்றாவது முறையாகவும் ஆட்சியை கொடுப்பீர்கள்.

      நான் சொல்லும் கவுன்சிலரை நம்பாமல் ஐயப்படலாமா ?

      நீக்கு
  9. எதற்காக என்பதை விட, நல்லது நடந்தால் நல்லதுதானே! அப்படி எடுத்துக் கொள்வோம்.

    என்னைப் பொருத்தவரை மக்களின் கையில்தான் பல விஷயங்களும் பொறுப்பும் இருக்கு. யாராவது வந்து நம்ம வீட்டை சுத்தமா வைச்சுக்கன்னு அறிவுரை செய்யணுமா என்ன? அப்படித்தான் நம் தெரு, சுற்றுப்புறம் நம் நாடு எல்லாமே.

    ஜப்பானிய குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே பள்ளிகளில் முதலில் சொல்லிக் கொடுக்கப்படுவது நாட்டுப் பற்று, நாட்டை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் போன்றவைதான். நம் பள்ளிகளிலும் நம் வீடுகளில் பெற்றோரும் பொறுப்புடன் இருந்தால் எதிர்கால சமுதாயம் நன்றாக வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆண்-பெண் இருபாலரும் கல்லூரி முடித்து கட்டாயம் இரண்டு ஆண்டுகள் இராணுவத்தில் பணி செய்யவேண்டும் என்ற சட்டம் வந்தால் மட்டுமே நம்மவர்களுக்கு நாட்டுப்பற்று வரும்.

      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  10. உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி தோழர்

    பதிலளிநீக்கு