நண்பர்களே.. மேலே புகைப்படத்திலிருக்கும்
குடும்பம் ஹரியானா மாநிலத்தில் நாகரீகம் வளராத மலைவாசி மக்களின் குடும்பங்களில்
ஒன்று. முன்புறம் கையில் தான் பெற்ற குழந்தையுடன் நிற்பதுதான் குடும்பத்தலைவி
பின்புறம் நிற்பவர்கள் யார் தெரியுமா ? அவர்கள் இந்தப் பெண்மணியின் கணவர்கள். ஆம் ஐந்து நபர்களும்
கணவர்களே... வரிசைப்படி பிறந்தவர்கள்.
இந்த தகவலை நான் அறிந்து பத்து வருடங்களாகி விட்டது அபுதாபியில் இருந்தபோது கிடைத்த விடயம். இங்கு திருமணம் செய்யும் பெண்கள் அந்த வீட்டில் பிறந்த அனைத்து சகோதரர்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம். பிறக்கும் குழந்தை அனைவரையும் அப்பா என்றே அழைக்குமாம். அதாவது மனைவி வீட்டின் அறையில் இருக்கும் பொழுது கணவர் உள்ளே இருந்தால் வாசலில் செருப்பு கிடக்கும் அப்படி இருந்தால் மற்ற சகோதரர்கள் அதாவது கணவர்கள் உள்ளே போக மாட்டார்களாம். பிறந்த குழந்தை யாருக்கானது என்பதை இவர்கள் வாழ்நாள் முழுவதும் தெரிந்து கொள்ள மாட்டார்களாம்.
ஆண்கள் வேலைக்கு சென்று வந்து குடும்பத்தை காப்பாற்றுவார்களாம், பெண்கள் வேலைக்கு செல்வதில்லையாம். காரணம் கணவர்களை மகிழ்ச்சி படுத்துவது ஒன்றே முக்கிய காரணமாம். இதை இவர்களது சமூகம் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றதாம் மேலும் பெண்கள் குறைவாக இருப்பதும் ஓர் காரணமாம். சமீபத்தில் இத்தோப்பியா நாட்டில் பெண்கள் அதிகமான காரணத்தால் ஆண்கள் கட்டாயமாக இரண்டு மனைவிகளை திருமணம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது நாம் அறிந்த விடயமே...
கில்லர்ஜி அபுதாபி

இந்த செய்தியை நானும் முன்பு படித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குபெண்கள் குறைவாக இருக்கிறார்கள் இப்போது.
ஒரு காலத்தில் பெண் குழந்தைகளை வேண்டாம் என்றார்கள்.
வருக சகோ ஆம் உண்மைதான்.
நீக்குஇந்தத் தகவல் எனக்கும் படித்த நினைவு இருக்கிறது. ஆச்சர்யம்தான்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குFraternal polyandry exists among the Khasa of Dehradun; the Mala Madessar, the Mavilan, etc. of Kerala and among the Sirmur, Shimla, Kullu, and Lahaul-Spiti of Himchal Pradesh. Non-fraternal polyandry exists among the Kota; and among the Karvazhi, Pulaya, Muthuvan, and Mannan in Kerala.
பதிலளிநீக்குThanks Google and wiki
நமது ஊட்டியில் இருக்கும் தோடர் இன மக்கள் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட ஆணினை மணம் செய்து கொள்வார்கள் என்று படித்திருக்கிறேன். செருப்புக்கு பதில் கைத்தடியை அறைக்கு வெளியே வைப்பார்கள். இது கேள்வி. இப்போது நடைமுறையில் உண்டோ என்று தெரியாது.
Jayakumar
வாங்க ஐயா தங்களது தகவலையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
நீக்குகாலம் மாறுவதால் இத்தகைய நடைமுறைகள் இப்போது அருகிவருகின்றன. நானும் பெங்களூர் இரயில் நிலையங்களில் வந்திறங்கும் வடவர்களின் மிகச் சிறிய வயது, அதே அல்லது குறைவான வயதில் மனைவி, இரண்டு பிள்ளைகள் என வந்திறங்குவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். (சாதா வேலைக்காக குடி பெயருகிறவர்கள்). இரண்டு மூன்று தலைமுறையில் அவர்களும் எஞ்சினீயர்களாக அல்லது நல்ல படிப்புடன் முன்னேறிவிடுவார்கள்.
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது கூற்று வரவேற்கத்தக்கது.
நீக்குமனைவி இறந்தால், அவள் தங்கைக்குத் திருமணம் ஆகவில்லை என்றால் அவளைக் கட்டிக்கொடுக்கும் வழக்கம், உரிமையுடன் கூடிய நடைமுறை இங்கு இருந்தது.
பதிலளிநீக்குஆம் நானும் இந்த விடயம் அறிந்து இருக்கிறேன்.
நீக்குஇந்தச் செய்தி வாசித்திருக்கிறேன். இப்படிச் சில மாநிலங்களில் உண்டு. இதைச் சட்டம் எப்படி அங்கீகரிக்கிறது என்று தெரியலை. எப்படியான வாழ்க்கைன்னு மனசு நினைக்குது.
பதிலளிநீக்குகீதா
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குஇப்படி பிஹாரோ இல்லை உபியிலோ கணவர் இறந்ததும் அவர் தம்பிக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வைச்சிரும் வழக்கம் உண்டு விருப்பம் இல்லைனாலும் கூட!
பதிலளிநீக்குகீதா
ஆம் இவ்வகையில் தமிழ் நாடு சற்று விழிப்புண்வுதான் அரசியலைத் தவிர..,
நீக்குவடக்கில் சில மாநிலங்களில் இப்படியான ஏற்பாடுகள் இருந்தன. இப்போதும் ஹரியானாவில் பெண்களின் எண்ணிக்கை குறைவு - திருமணம் செய்து கொள்ள பெண்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. திருமணம் குறித்த இவர்களது சில கொள்கைகள் மிகவும் சர்ச்சைக்குரியது.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவின் விபரங்கள் அறிந்து கொண்டேன். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், விநோதமான சடங்குகள், சம்பிரதாயங்கள் என இவ்வாறு பிரமிப்பை ஏற்படுத்துவது உண்மைதான். நானும் இந்த விஷயத்தை எங்கோ படித்ததாக நினைவு. மாறுபட்ட மக்கள்களின் மனநிலையை புரிந்து கொள்ள இயலவில்லை. எப்படித்தான் இவற்றை ஏற்று வாழ முடிகிறதோ என நினைப்பேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குஇப்படியும் நடக்கிறதா? ஆச்சர்யம்தாம். இதை சட்டம் அனுமதிக்கிறதா?
பதிலளிநீக்குவாங்க மேடம்
நீக்குஇங்கு சட்டம் நுழைவதற்கு இடமிருக்காது என்று நினைக்கிறேன்.