மேலேயுள்ள புகைப்படத்தை
பார்த்தீர்களா ? இந்த
மாங்கொட்டையன் தெருவின் நுழைவாயிலில் பெயர்ப்பலகை உள்ள இடத்தில் இப்படி அதன் பெயரே
தெரியாத அளவுக்கு மாற்றி, மாற்றி சுவரொட்டிகள் ஒட்டுகின்றனரே.. இது நாங்கள்
முட்டாள்கள் நிறைந்து இருக்கிறோம் என்பதை காட்டுகிறதோ... காவல்துறை உங்கள் நண்பன்
என்று சொல்லும் காவலர்கள் 30 கி.மீ
வேகத்தில் போகும் இரண்டு சக்கர வாகனங்களை வழி மறைத்து, இடையில் சக்கரங்களில்
லத்தியை விட்டு நிறுத்துகின்றார்களே...
அவர்கள்
இந்த வகையான தவறுகளை செய்யும் நபர்களை ஆதாரத்துடன் பிடித்து அபராதம் போடலாம்.
பக்கத்தில் நிற்க வேண்டும் என்பதுகூட அவசியமில்லை. இதில் அலைபேசி எண்கள் முகவரி
இருக்கிறதே... இவர்களை மிரட்டி பணம் பறிக்கலாமே... புதிதாக ஊருக்கு வரும் நபர்கள்
எந்த வகையில் இதனை படிப்பார்கள் ? ஞானசூன்யங்களே... உங்களுக்கு வேறு
இடமே இல்லையா ? தமிழகத்தில்
இதுவொரு மாநகராட்சி.
சமிக்ஞை
திடலில் வலதுபுறமாக திரும்ப வேண்டிய வாகனக்காரர்கள் மறுபுறத்தின் பாதி வரையில்
மறைத்து நிற்கின்றார்கள். சாலையில் நேராக செல்ல வேண்டியவர்கள் அந்த இடத்தில்
நின்று கவனமாக வளைந்து போக வேண்டியது இருக்கிறது. அந்த திடலில் நிற்கும்
போக்குவரத்து காவலர்கள் இவைகள பார்த்துக் கொண்டு நிற்பார்கள் அவர்களின் காமாலைக்
கண்களுக்கு தலைக்கவசம் அணியாமல் வரும் நபர்கள் மட்டுமே தெரியும்.
அப்படி
இடங்களில் பலமுறை விபத்துகள் நிகழ்ந்து இருக்கின்றது இதற்கு அந்த காவலர்களே
காரணமின்றி வேறு யாராக இருக்க முடியும் ? நமது நாட்டில் ஒட்டு மொத்தமாக
போக்குவரத்து விதிமுறைகளை நிறைய மாற்ற வேண்டியது இருக்கின்றது. பிற நாடுகளில்
உள்ளது போல் நமது நாட்டிலும் கொண்டு வருவதற்குத்தான் நமது பிரதமர் மோடி அவர்கள்
நாடு, நாடாக ஓடி அவைகளை தெரிந்து கொண்டு வருகிறார்.
எப்படியும்
அடுத்த பதினைந்து ஆண்டுகளில் இவைகளை இந்தியாவுக்கு கொண்டு வரும் பொழுது மக்களுக்கு
பதினைந்து லட்சம் பணமும் அவரவர் வங்கி கணக்குகளில் வந்து விழுந்து விடும். அதுவரை
கடன் வாங்கி சாப்பிடுங்கள் பிறகு மொத்தமாக கட்டி விடலாம். சில ஊர்களில் இந்த
பணத்தை நம்பித்தான் வட்டிக்கு வாங்கி செலவு செய்கின்றார்கள். காரணம் நம்பிக்கை
நட்சத்திரம் மோடி அவர்கள் மோசடி
செய்யவே மாட்டார்.
கில்லர்ஜி
தேவகோட்டை
சாலைப் போக்குவரத்தை சரிசெய்ய மோடியா? சரிதான்!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல கருத்துள்ள விபரமான பதிவு. இது மக்களுக்கு, மக்களே செய்யும் துரோகங்கள். வேறென்ன சொல்வது.? மக்களாகவே உணர்ந்து திருந்தினால்தான் உண்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பகடி அருமை ஜி...
பதிலளிநீக்குநகைச்சுவையாக சொன்னாலும் ஊரில் நடப்பதை சொல்கிறீர்கள் . பெயர் பலகையை இப்படி விளம்பரங்களை ஒட்டி மறைத்து விட்டார்கள். மக்கள் எதை பற்றியும் கவலை படுவது இல்லை.
பதிலளிநீக்குபெயர்ப்பலகையை, வழி சொல்லும் பலகைகளை இப்படி நோட்டீஸ் ஒட்டி ரொம்ப படுத்துறாங்க கில்லர்ஜி பல இடங்களில் சில இடங்களில் பலகை அழிந்து போயிருக்கும் உடைந்து, இல்லேனா கீழ விழுந்தும் கிடக்கும். இங்கு இது வரை நான் பார்த்த வரையில் நோட்டீஸ் ஒட்டிப் பார்க்கலை ஆனால் பாதி அழிந்து போய் பார்த்திருக்கிறேன்
பதிலளிநீக்குகீதா
ஓலைக்குடா - வித்தியாசமாக இருகக்கு பெயர்
பதிலளிநீக்குகீதா
என்னைக் கேட்டால் போஸ்டர் ஒட்டறவங்களை என்கவுன்டர் செய்துடலாம் விளம்பர அரசியல் போல்டர் ஒட்டுபவய்கள் உட்பட
பதிலளிநீக்குஒரு போஸ்டர் ஒட்டுபவனை என்கவுன்டர் செய்யும்போது அவன் வீட்டில் உள்ள இன்னொருவனையும் இலவசமாக என்கவுன்டர் செய்ய போஸ்டர் ஐடியா கொடுக்குதே. பராட்டாவுக்கு இலவசமாம்
பதிலளிநீக்குநியாயமான கோபம்.
பதிலளிநீக்குபோஸ்டர் ஒட்டுபவர்கள் தாம் உழைத்து வாழ்ந்தால் சரி. மற்றவரைப் பற்றி கவலை இல்லை என்ற எண்ணம் கொண்டவர்கள்.
பதிலளிநீக்கு