இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூன் 15, 2025

அழகி

 

ண்ணே என்றான் கண்மணியை

கனியே என்றான் கனிமொழியை

பொன்னே என்றான் பொன்னியை

முத்தே என்றான் முத்தழகியை

 

அழகே என்றான் அகிலாவை

அமுதே என்றான் அமுதாவை

மானே என்றான் மாதவியை

தேனே என்றான் தேன்மொழியை

 

தேவதையே என்றான் தேவகியை

பூவிழியே என்றான் பூமிகாவை

சிலையே என்றான் சினேகாவை

நதியே என்றான் நதியாவை

 

சுகந்தமே என்றான் சுகந்தியை

சுகமே என்றான் சுமதியை

சொரமே என்றான் சொர்ணாவை

வேதமே என்றான் வேணியை

 

நாதமே என்றான் நாகினியை

இதமே என்றான் இதயாவை

தவமே என்றான் தமன்னாவை

மேகமே என்றான் மேகலாவை

 

வாசமே என்றான் வாசுகியை

நேசமே என்றான் நேந்திராவை

ஸ்வரமே என்றான் ஸ்வாதியை

சித்தமே என்றான் சித்ராவை

 

சங்கே என்றான் சங்கவியை

மலரே என்றான் மலர்விழியை

மதியே என்றான் மதியழகியை

முகிலே என்றான் முகிலாவை

 

சகியே என்றான் சகிலாவை

மைனாவே என்றான் மைதிலியை

சிந்தையே என்றான் சிந்துவை

விந்தையே என்றான் விந்தியாவை

 

குயிலே என்றான் குயிலியை

மயிலே என்றான் மயூரியை

தமிழே என்றான் தமிழரசியை

உயிரே என்றான் உத்திராவை

ஆனால் இந்த கவிஞனை இவர்கள் அனைவரும் போடா லூசு என்று சொன்னார்கள்...

கில்லர்ஜி துபாய் 

7 கருத்துகள்:



  1. அன்பு காட்டவும் அந்த அன்பை ஏற்றுக் கொள்பவரிடம் அன்பை காட்டி இருக்க வேண்டும்.

    ஏகப்பட்ட பேரிடம் அன்பு என்றால் லூசு என்றுதான் சொல்வார்கள்.

    கவிஞன் உண்மை அன்பு காட்டவில்லை போலூம்.

    பதிலளிநீக்கு
  2. வைரமுத்துவைச் சொல்வது போலத் தெரிகிறதே

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஒருவரை மட்டும் புகழ்ந்து வர்ணித்தால் அவர் மதிமயங்கி அவரே சரண் என இருப்பர். பலரையும் அவ்வாறே புகழ்ந்தால், யாருக்குத்தான் பொறுக்கும். நல்லவேளை "போடா லூசோடு" நிறுத்தினார்கள். :)). நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பெயருக்கேற்ற பொருத்தமான வர்ணனைகள். பெயர்கள் தேர்வனைத்தும் சிறப்பு. அதை குறிப்பிட வந்து மறந்து விட்டேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. ஒரு பெண்ணை அழைத்தால் சரி, இருக்கிற அத்தனை தமிழ்ப்பெயர்ப் பெண்களையும் கொஞ்சினால், கெஞ்சினால், அவர்கள் வேறென்ன சொல்வார்கள்!!!!

    பதிலளிநீக்கு
  6. ஹாஹாஹா! நல்ல ட்விஸ்ட்!

    பதிலளிநீக்கு
  7. ஹாஹாஹா....பின்ன போடா லூசுன்னு சொல்லாம என்ன சொல்லுவாங்களாம்!!! ரைமிங்க் நல்லாருக்கு கில்லர்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு