இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், செப்டம்பர் 23, 2014

ஔவையார் TRANSPORT

 ஞானி ஸ்ரீபூவு துணைவியார்
 
 என்னை கல்லாக்கி விட்டு பருந்தாய் பறந்தாய்.


அவள், என்மீது ன்பை பொழிந்தாள்
 
நான், அவள்மீது சையை தொடுத்தேன்
 
 என்னைக் காணும்போது ன்முகம் பூத்தாள்
 
அவள்மீது மான் கொண்டேன்
 
 எனக்கு லகமே நீதான் என்றாள்
 
அவள் மனதுடன் டுருவினேன்
 
 எனக்கு ல்லாமே நீதான் என்றாள்
 
அவளுக்காக ங்கத் தொடங்கினேன்
 
 என்னுயிருடன் க்கியமானாள்
 
 நாங்களிருவரும் ன்றாகவே
 
திரிந்தோம் வீதியெங்கும் டியாடி
 
 திடீரென வையார் டிரான்ஸ்போர்ட்
 
குறுக்கே வந்து மோதியவேகத்தில்
தூக்கியெறியப்பட்டாள் என்னவள்
அருகில் சென்று பார்த்தால் ?
 
அன்பே, உன்னைக்கானும்
போதெல்லாம்
கண்ணே, கனி இதழே
என்று வர்ணிப்பேன் இன்று
விபத்தில் சிக்கி சின்னாபின்னாமாகிய
உன்முகத்தைப் பார்த்து என்ன
சொல்வேன் ஓ....விதியே
நீயே பதில்ச்சொல்.
சாம்பசிவம்-
என்ன கொடுமை சரவணன் இது, ஆக்ஸிடெண்ட்டான மூஞ்சியப் பார்த்தாக்கூடவா, கவிதை வரும் ?
F.P-11 Sep 2011

48 கருத்துகள்:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. படம் மட்டுமே முதலில் இருந்தது... பதிவைக்காணோம்....என்னடா என திரும்பி விட்டேன்.
    உயிர் எழுத்தில் கவிதை...
    உம் வித்தியாசத்தை என்ன வென்று சொல்வது....அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தங்களையும் கவனித்துக் கொண்டே இருந்தேன் Egypt ல் தங்களை தவிற வேறு யாருமில்லையே....

      நீக்கு
  3. ஔவையார் transport பஸ் மோதி இறந்தவளுக்கு ஔவையாரின் ஆத்திச்சூடி போலவே அகர வரிசையில் கவிதாஞ்சலி ,ரசித்தேன் கில்லர் ஜி !

    பதிலளிநீக்கு
  4. கவிதை அருமை...
    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா9/23/2014 10:15 PM

    ஔவையார் பெயர் வைத்துக்கொண்டா இப்படி அரக்கத்தனமாகப் பேருந்தைச் செலுத்தி உங்கள் அன்புக்குரியவரைப் பலி கொண்டார்கள். பாவிகளா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப உள்ள டிரைவர்கள் பூராம் இப்படித்தானே நண்பா....

      நீக்கு
  6. ஆகா.. ஆனா...ஆவன்னா தெரியாதவர்கள் படித்து தெரிந்து கொள்ளட்டும் என்று ஒ...ள...வை...யாரை படைத்துவீட்டீர்கள் நண்பரே!!!

    பதிலளிநீக்கு
  7. உயிரெழுத்தில் ஓர் உணர்வுப் பாடல், செம ஜீ... வாழ்த்துகள் ஜீ..

    பதிலளிநீக்கு
  8. துயரமானாலும் கவிதை கண்ணீர் மழையாக பொழியுமே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துயரமான தருணத்தில் தூவியதுதான் நண்பரே இந்த மழை.

      நீக்கு
  9. உண்மையான அன்பு!.. வாழ்க கவிஞன்!..

    பதிலளிநீக்கு
  10. காயமான மனதில் இருந்து எழும் கவிதை அரிச்சுவடி !
    கவிதையை ரசிப்பதா?
    கண்ணீர் பெருக்குவதா?
    “ விதியே விதியே
    ...................... என்செய நினைத்தாய் எனக்குரையாயோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காயம்பட்ட மனதை கண்ணீரால் நனைத்தெடுப்போம் நண்பரே,,,

      நீக்கு
  11. வணக்கம்
    அகர வரிசையில் தங்களின்
    ஆர்ரூயிர் மனைவிக்கு
    ஆறுதல் சொல்லும் கவிதை
    எங்கள் நெஞ்சை கலக்கியது.

    பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ நண்பா இந்த கவிதைக்கும் எனது மனைவிக்கும் தொடர்பில்லை ஒரு விபத்தை காணநேர்ந்தது அதன் விளைவே இந்தக்கவி(தை)

      நீக்கு
  12. என்னடா ஔவையார்ன்னு தலைப்பை போட்டிருக்காரே என்று பார்த்தேன். கவிதையை படித்தவுடன் தான் தெரிந்தது தலைப்புக்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பு.

    துயரமான கவிதையின் மூலம் தங்களின் உள்ள குமரலைஅறிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்புக்கு தொடர்பு இல்லாமல் எழுதமாட்டேனே...
      ஒரு விபத்தை கண்டபோது.... எழுதியது நண்பரே,,,

      நீக்கு
  13. ஔவையாரின் பெயரில் இப்படி ஒரு பேரூந்தா
    மனம் கனக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்து பெயரிலுமே பேரூந்து இருக்கிறதே அதனால்தான் இந்தபெயரை வைத்தேன் நண்பரே...
      ஒரு விபத்தை கண்டபோது....

      நீக்கு
  14. உங்கள் கவிதை என்னை எங்கோ தூக்கி எறிந்துவிட்டது சகோதரரே!

    ஐயோ!.. இப்படியா நடந்ததென விக்கித்துப் போய்விட்டேன்!

    உளம் தொட்ட வரிகள்! மிக அருமை!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விபத்தை கண்ட வேதனையின் வலியில் பிறந்த கவி சகோதரி

      நீக்கு
  15. துயரக் கவிதையும் வித்தியாசமாய் ஆத்திச்சூடி விதத்தில் பாடி அஞ்சலி செய்த விதம் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி 'தளிர்' சுரேஷ் அவர்களே,,,

      நீக்கு
  16. தங்களுக்கு ஒரு விருது சகோ. என் தளம் வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் எனக்கே விருதா ? அன்புக்கு நன்றி சகோதரி.

      நீக்கு
  17. பெரிய மாட்டக்கு தெரியாத..உயிரெழுத்து..கத்துகிட்டுக்கு தெரிந்திருக்கிற ரகசியம் என்னவோ..

    பதிலளிநீக்கு
  18. அகர வரிசை பாடல் நல்ல முயற்சி அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமான வருகைக்கு உடனடி நன்றி சகோதரி.

      நீக்கு
    2. ஹா....ஹா...ஹா..
      அண்ணா அண்ணா தான்!
      அடுத்த முறை டக்குனு வருவேன் பாருங்க:))

      நீக்கு
  19. நெஞ்சு பொறுக்கவில்லை நண்பரே...
    உயிர் எழுத்துக்களில் கவிதை இருந்தாலும்..
    உயிர் போன பின்னே மெய்க்கு எழுதப்பட்ட கவிதை...
    அந்த புலம்பல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...
    கருங்காயாகிப் போனாயே
    கனியமுதே
    காலனுக்கும் காலம் வராதோ...
    பேருந்தை ஒட்டியவன்
    நெஞ்சத்தில்
    பேரிடியாய் விழாதோ
    என் கவிதை..
    என் செய்வேன்
    ஏந்திழையே
    என்னைவிட்டு சென்றாயே...

    மனம் புழுங்கச் செய்யும் கவிதை நண்பரே...

    பதிலளிநீக்கு
  20. அகரவரிசைப் பாடல் என்றனர்
    "ஆ" என்றாகிப் போனது வாசித்ததும்
    இத்தனைத் துயரமா
    ஈ யாய் வலையில் சுற்றும் ஞாய்ன்ஸ்ரீபூவுக்கு?
    உடைந்த உள்ளம்
    ஊண் வேண்டா எனத் தவிப்பதை?
    என்ன சொல்லி ஆற்றிட?
    ஏன் இந்த விதி என்று
    ஐயமற்ற அவ்விறைவன் தன்னுடன்
    ஒன்றரக் கலந்தெடுத்த ரகசியத்தை
    ஓம்பிடுவானோ? இல்லை
    ஔடதம்தான் தருவானோ?





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் ஆத்திச்சூடி அருமை நண்பரே...

      நீக்கு
  21. உயிர் எழுத்துகளினால் போன உயிருக்கு அஞ்சலி !

    இந்திய வாகன ஓட்டிகளின் பொறுப்பற்றத்தனமும், அரசியல்வாதிகளின் அலட்சியமும் நம் சமூகத்தின் பல சாபங்களில் ஒன்று.

    ( விடுமுறைக்கு பின்னான அலம்பல்களினால் இன்னும் செட்டாகவில்லைஜீ ! தாமதத்துக்கு பொறுக்கொள்ளுங்கள் ! )

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்வாதிகளின் அலட்சியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது நண்பரே அவர்களை அரசியல்வாதி ஆக்கியது யார் ?

      நீக்கு
  22. நண்பரே,

    சமீப நாட்களின் சுழற்சி விருதிகளில் நீங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கும், இந்த வாரம் வலைச்சரத்தில் துளசிதரன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டதற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல பெருமைகள் உங்களை வந்தடையும்.

    ( எனது வலைப்பூ அறிமுகத்தின் போதெல்லாம் முதல் ஆளாக எனக்கு வாழ்த்து தெரிவித்த உங்களை தாமதமாக வாழ்த்தும்போது குற்ற உணர்ச்சி கொள்கிறேன் நண்பரே, மன்னிப்பீரா ? )

    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மடை திறந்த வெள்ளம்போல் மனம் திறந்து வாழ்த்தும் தங்களின் மனம் அறிந்தவன் நான் எல்லோருக்குமே முதலில் பணி பிறகே மற்றவைகளை செய்யமுடியும் நண்பரே... இதில் மன்னிப்பு எதற்க்கு ?

      நீக்கு
  23. அவ்வையார் பெயரில் ஒரு பேருந்து என்பதே ஆச்சரியம்! இந்த பேருந்து மோதி இறந்தவருக்கு அவ்வையாரின் ஆத்திச்சூடி போல் பாமாலை கொடுத்து அஞ்சலி செய்திருப்பதும் வித்தியாசமாக உள்ள‌து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்ஜாவிலிருந்து.... அபுதாபியை வாழ்த்தியதற்க்கு நன்றி.

      நீக்கு
  24. உயிரூட்டமுள்ள உயிரெழுத்துக்கள். உணர்வுகளின் வெளிப்பாட்டை நன்கு உணரமுடிந்தது.

    பதிலளிநீக்கு