वनदे मातरम्
வதனநூலில் (FACE BOOK) மலையாள நண்பர் ஒருவர் எனக்கு இந்த வாசகம் அடங்கிய புகைப்படத்தை அனுப்பி இருந்தார் படித்ததும் எனக்கு
தோன்றியது எத்தனை
சத்தியமான வார்த்தைகள், இதையேன் நாம் நம் தமிழர்கள் படிப்பதற்கு தமிழில் அனுப்பக் கூடாது ? எனதோன்றியது.
உடனே என் இனிய தமிழில் TYPE செய்தேன், பிறகு தோன்றியது
இதையேன் தமிழர்கள் அல்லாத நம் இந்தியர்கள் அனைவரும் படிப்பதற்கு ஹிந்தியில்
அனுப்பக் கூடாது ? எனதோன்றியது
(தமிழர்களுக்கு மட்டும்தானே ஹிந்தி
படிக்கத் தெரியாது)
உடனே எனது இந்திய மொழியான,
ஹிந்தியில் TYPE செய்தேன். பிறகு தோன்றியது இதை அரேபியர்களும் படித்தால் என்ன ? எனதோன்றியது.
உடனே அரபியில் TYPE செய்தேன், பிறகு தோன்றியது
இதையேன் நாம் உலகமே படிப்பதற்கு ஆங்கிலத்தில் அனுப்பக் கூடாது ? எனதோன்றியது.
உடனே ஆங்கிலத்தில் TYPE செய்தேன் பிறகு தோன்றியது
இதுவரை தெரிந்த மொழிகளில் TYPE செய்து விட்டோம், தெரியாத மொழி
ஒன்றில் செய்தால் என்ன ?
உடனே கொஞ்சம் பேசத் தெரிந்த தெலுகுவை, தேர்வு செய்து தெலுகுவில் TYPE செய்தேன், சத்தியமாக இந்த நிமிடம்வரை தெலுகு படிக்கத் தெரியாது ஆனால் நான்தான் இதை TYPE செய்தேன், எனது தெலுகு நண்பர்களான ராமுலு, சேகர், கௌதுவிடம் காண்பித்து, 100 % சரி செய்த பிறகே இதை வெளியிடுகிறேன்.
கடைசியில் என்ன ஆனது ?
நான் தற்காலம் தெலுகு படித்துக் கொண்டு இருக்கிறேன்.
கடைசியாக இப்படியும் தோன்றியது, நாளை நாம் இறந்து விட்டாலும் எனது சந்ததிகள், எனது குரலை INTERNET டில் எப்பொழுதும் கேட்க கூடுமே, ஆகவே இதை நாமே படித்துக் காண்பித்து நமது குரலை பதிவு செய்தால் என்ன ?
விளைவு இதோ.....
காணொளி
(Please ask Audio Voice)
(Please ask Audio Voice)
இந்தப் பதிவை எமது இனிய
நண்பர் திரு. துளசிதரன் தில்லை அகத்து மற்றும் திருமதி. கீதா
அவர்களுக்காக வெளி இடுகின்றேன் - கில்லர்ஜி.
நண்பரே,
பதிலளிநீக்குமிக உண்மையான கருத்தை இத்தனை மொழிகளில் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். குரல்... கில்லர்ஜீ பேருக்கு ஏத்தமாதிரி இருக்குமோன்னு நெனைச்சேன் ஆனா... அவ்ளோ சாந்தமா... !
தேசம் மதத்த்தின் பின்னால் போகவில்லையென்றாலும், இனிவரும் காலங்களில் அது மத அரசியலை முன்னிறுத்தும் அரசியல்வாதிகளின் கைபொம்மை ஆகிவிடாதபடி, பசி, பட்டினி, கொலை, கொள்ளை முக்கியமாய் கற்பழிப்பு, ஆசிட் வீச்சுகளற்ற உண்மையான அழகிய தேசமாய் மாற்றும் பொறுப்பும் நம்மிடம்தான் உள்ளது !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
உண்மையான கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி நண்பா...
நீக்குஇதிலிருந்து எனக்கு என்னா..தெரியுதுன்னா...நீங்க..பழமொழிக்காரருன்னு......( நேற்றைய வயித்தெறிச்சல் இன்னிக்கு குறைந்திருக்குமே)
பதிலளிநீக்குஇது நீடிச்சா... குறைய வாய்ப்பிருக்கு நண்பரே..
நீக்குநம்ம பக்கத்து நாடுகள் மட்டும்தானா ,மதத்துக்கு இரையாகி உள்ளன ?பல ஆண்டுகளாக மதவாதிகளின் கையில் சிக்கிக் கொண்டு சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கில்லர்ஜி !
பதிலளிநீக்குவருக ! பகவான்ஜி தாங்கள் சொல்வதும் உண்மையே ஆனால் ? எனக்கு கிடைத்த தகவலை நான் மொழி மாற்றித்தந்துள்ளேன் அவர்கள் சொன்னது 3 நாடுகள் மட்டுமே !
நீக்குஅட! அண்ணனுக்கு எத்தனை மொழி தெரிஞ்சுருக்கு!!!
பதிலளிநீக்குஆன ஆங்கிலத்தில் கொஞ்சம் சரி பண்ணணும் அண்ணா! விஷயம் சூப்பர்!!
ஆங்கிலம் முயற்சிக்கிறேன் சகோதரி ஆனால், எனது பயோடேட்டா பார்த்திருந்தால் ? இப்படி கேட்டிருக்கமாட்டீர்கள் அல்லது இம்மாத பதிவு 'விருது' படித்திருந்தால்கூட கேட்டிருக்கமாட்டீர்கள் அதேநேரம் நான் தவறுக்கு வருந்துகிறேன் நிச்சயமாக தங்கள்மீது கோபமில்லை எம்மை செம்மை படுத்துவதாகத்தான் கருதுகின்றேன் தங்களுக்கு நேரமிருப்பின் கீழேயுள்ள 'விருது' அவசியம் படிக்கவும் நன்றி.
நீக்குதமிழர்களுக்கு தமிழே ...சரியாக தெரியாதபோது...இந்தி எப்படித்தெரியும் கில்லர்...
பதிலளிநீக்குஇதுவும் சரியே,,,,,
நீக்குபன்மொழிபுலவர் என இனி உங்களை அழைக்க்லாம் என எண்ணுகிறேன். ஏன் மற்றொரு மாநில மொழியான கன்னடத்தை விட்டுவிட்டீர்கள்?
பதிலளிநீக்குஒலிப்பதிவையும் கேட்டேன். சகலகலாவல்லவர் என்பதை உணர்த்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
வருகைக்கும், வாழ்த்துரைக்கும் நன்றி நண்பரே கன்னடமொழியின் தொடர்பு எமக்கு 5 % சொல்லலாம் நண்பரே இனியெனினும் முயற்சிக்கிறேன்.
நீக்குதங்களின் மொழியாக்கம் புதுமையான பயனுள்ள முயற்சி.
பதிலளிநீக்கு//மதம் வேண்டுமா, மனுசம் வேண்டுமா?// மக்கள் அனைவரையும் உடனடியாக பதிலளிக்க வேண்டிய கேள்வி. என் பதில்:”மனிதம் வேண்டும்”.
தங்களின் பதில் ஸூப்பர் நண்பா....
நீக்குபன்மொழிக்கலைஞரே..வாழ்க ...கைவசம் இன்னொரு திறமையும் இருக்கிறது. டிவில செய்தி வாசிக்க... வாழ்த்துக்கள். நன்றி.
பதிலளிநீக்குஇதெல்லாம் கொஞ்சம் ஓவரூ......
நீக்குநானே இங்கு வானொலியில் செய்திகளை வாசிக்கும்போது, தாங்கள் அங்கு தொலைக்காட்சியில், அரபு மொழியில் செய்திகளை வாசிக்க முடியும்.
நீக்குநண்பரே, அரேபியர்களோடு வேலை செய்தது எப்படி ? வேலை செய்வது எப்படி ? என்பதைப்பற்றி 100 பதிவுகள் வைத்திருக்கிறேன் பல காமெடியாக இருந்தாலும் பலதும் வேதனை நிறைந்தவையே... நானாவது எவ்வளவோ பரவாயில்லை அதிலும் வீட்டில் வேலை செய்பவர்களின் நிலை கண்ணீர் வரவழைத்து விடும்.. வரும்... வரும்... காலம் நெருங்கி விட்டது.
நீக்குஉலகிற்குச் சிறந்த வழிகாட்டலை
பதிலளிநீக்குபல மொழிகளில் வெளிப்படுத்தியதிற்கு
எனது பாராட்டுகள்
பலமொழிகளில் இல்லை நண்பரே எமக்கு தெரிந்தவைகளை மட்டுமே... வருகைக்கு நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குநல்ல முயற்சி வாழ்த்துக்கள் வித்தியாசமான சிந்தனை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி நண்பா....
நீக்குஎன்ன சகோ இப்படி எல்லாம் அசத்துகிறீர்கள் பல மொழிகளில் நல்ல விடயமும் முயற்சியும். உங்கள் குரலையும் கேட்கமுடிந்தது. தோழி உமை சொல்வது போல் இனி நியூஸ் வாசிக்கலாம் ஹா ஹா.... மேலும் திறமைகள் வெளிவர முயற்சிகள் புதுமையாக செய்ய வாழ்த்துகிறேன்....!
பதிலளிநீக்குசகோதரி இது அசத்தல் என்றால் ? எம்மைப் பொருத்தவரை ஆரம்பமே... நிறைய நண்பர்கள் தொடரட்டுமே (பேராசைதான்) என காத்துகொண்டு தென்றலாக வீசுகிறேன் பிறகுதான் முழுவீச்சில் சூறாவளி & டி. சுனாமி எல்லாம்..
நீக்குசூறாவளி..சுனாமி..எல்லாம் வேண்டாம் கில்லர்ஜீ...... அதில் நிறைய பேர் காணாமல் போய்விட்டார்கள்..... தென்றலே எல்லாவற்றுக்கும் நண்மை ஜீ
பதிலளிநீக்குசரி நண்பரே கொஞ்சம் உணச்சிவசப்பட்டு விட்டேன் தென்றலாகவே தீண்டுகிறேன்.
நீக்கு
பதிலளிநீக்குஉண்மையான வார்த்தைகள் ஜீ, எத்தனை சோகங்கள் இருந்தாலும் இந்தியா என்று நினைத்துப் பார்க்கும் போது அத்தனையும் பறந்து போய்விடுகிறதே அது தான் இந்தியனின் நாட்டுப்பற்று. இன்னொன்றும் தெரிந்து கொண்டேன், உங்களுக்கு இத்தனை மொழிகள் தெரியும் என்பது.... கலக்குங்கள்..
நண்பா, நான் ''இந்தியன் '' என்பதில் பெருமை கொள்பவன் அதில் ''தமிழன் '' என்பதில் கர்வம் உள்ளவன்.
நீக்குசகோதரரே!.. உங்களுக்குள் இத்தனை ஆற்றல்களா?..
பதிலளிநீக்குவியக்க வைத்தீர்கள்! மிக அருமை!
மதமா?... மனிதமா?.. கையாளப் பட்ட விடமும் மிகச் சிறப்பு!
நீங்கள் நல்ல சிந்தனவாதி என்பதனையும்
பன்முகத் திறமையாளர் என்பதனையும்
உங்கள் பதிவு பறைசாற்றுகின்றது!
மிக அருமை! வாழ்த்துக்கள்!
சகோதரரே!.. இம்முறை இந்தப் பதிவு எனக்கு ஏனோ டாஷ்போர்ட்டில் காண்பிக்கவே இல்லை. அதனாலேயே இங்கு என் கருத்துப் பகிர்வும் தாமதமாகிவிட்டது!..
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரி. டாஷ்போர்டில் வரவில்லையென சகோதரி உமையாள் அவர்களும் சொன்னார்கள்.
நீக்குஅடேங்கப்பா கருத்தை அனாயசமா பல மொழிகள்ல டைப்பினதோட பேசியும் அசத்திட்டீங்களே பிரதர்.... சூப்பர்.
பதிலளிநீக்குவருக ஆசிரியரே... தொடர்ந்தால் ? சந்தோஷமே... மதுரையில் சந்திப்போம் நண்பரே...
நீக்குகில்லர்ஜி அசத்திட்டீங்க! நல்ல ஒரு வாசகத்தை பல மொழிகளில் மொழி பெயர்த்து..........அதற்கு ஒரு ஷொட்டு!!!! புல்லரிக்க வைச்சுட்டீங்க ஜி! எங்களுக்குச் சமர்ப்பித்து! பல மொழிகளில் புகுந்து விளையாடறீங்க ஜி! சூப்பர். மைதிலி சகோதரி சொன்ன மாதிரி ஆங்கிலம்....ஆனால் அது ஒன்றும் பிரம்ம சூத்திரம் இல்லை ஜி! எளிதுதான்!
பதிலளிநீக்குஇந்த பல மொழிக் கருத்தைச் சொல்ற மாதிரி ஒரு பதிவு எழுதினோம். கொஞ்சம் அரசியல் வாடை காட்டமாக தூக்கலாக இருந்ததால்...அப்படியே கொஞ்சம் நயமப்ட உரைக்க ட்ராஃப்டில் உள்ளது! போடுகின்றோம்....அப்போ நீங்கள் கண்டிப்பாக அதை ஆமோதிப்பீர்கள்!
நண்பரே, நான் படிக்காததற்க்காக பலமுறை வேதனைப்பட்டாலும் சிலநேரங்களில் இன்றைய கல்லூரி மாணவர்கள் சினிமா நடிகனுக்கும், கிரிக்கெட்காரன்களுக்கும் கட்டவுட் வைப்பதை பார்க்கும்போது படிக்காமல் விட்டது சரிதானோ ? என்று தோன்றுவதுண்டு இருப்பினும் அந்த தீராத ஆசையை எனது பொங்கிஷங்கள் தீர்த்து வைத்துக்கொண்டு வருகிறார்கள்.
நீக்குகவலைப்படாதே சகோதரா!
நீக்குசரி என்னாச்சு உங்களுக்கு? இன்னும் காணலையே! கோபமா? நாங்க அப்பாவிங்க சகோதரா! வாங்க உங்களுக்கு ரொம்ப பிடிச்ச நீங்க ஆமோதிக்கும் கருத்து உள்ள இடுகை....இன்று
அப்புறம் உங்கள் தளம் எங்க தளத்துல அப்டேட் ஆக மாட்டேங்குதுப்பா...என்ன செய்யணும் சொல்லங்க...சாட்ல சொல்லுங்களேன் ப்ளீஸ்
தாமத்திற்கு வருந்துகிறேன் நண்பரே!
பதிலளிநீக்குமத வலிப் பிரிவினை இருக்கட்டும்.
எப்படி இத்தனை மொழிகள் தெரிஞ்ச ஒரு மொழியும் கத்துகிட்ட ஒரு மொழியும் வைச்சுகிட்டு ஏதோ பொழப்ப ஓட்டலாமின்னு பாத்தா,
இப்படி பலமொழிகள்ல புகுந்து விளையாடுறிங்க..!
சரி சரி,
அப்படியே மெதுவா கொஞ்சம் எங்களுக்கும் கத்துக்கொடுக்கலாமே!
கிளாஸ் எப்ப..?
நண்பரே தங்களிடம் நான் படிக்க வேண்டியது நிறைய இருக்கும்போது... நண்பா நீங்களெல்லாம் இந்திய I.A.S மாதிரி நானெல்லாம் தமிழ்நாட்டு M.L.A மாதிரி புரிஞ்சு இருக்குமே ? கல்வித்தகுதி.
நீக்குநல்ல முயற்சி,வாழ்த்துக்கள் சார்/
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குசிந்தனைச் செம்மல் ஆகிய தங்களுக்கே இதெல்லாம் வசப்படும்!..
பதிலளிநீக்குமேலும் சிறப்புறுக!..
தங்களின் சித்தம் என் பாக்கியம் நண்பரே...
நீக்குவாவ் உண்மையிலேயே வியந்து பாராட்டுகிறேன்..வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்களோட பதிவுல கண்ணீரை கரைபுரண்டு ஓடவிட்டு என்னை வந்து வாழ்த்துகிறீர்களே.... நன்றி.
நீக்குஅருமையான கருத்தை பல மொழிகளில் கொடுத்த உங்களுக்கு இனிய பாராட்டுக்கள்!!
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி அம்மா.
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குமுதலில் பல மொழிகளை அனாசயமாக கற்றுத்தேர்ந்த தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..! மனிதம் சிறக்க, அருமையாக சிந்திக்க வைத்த வரிகளுடன் ௬டிய பதிவு!
மேலும் பல மொழிகளில், தங்கள் திறமைகள் பெருக, மேலும் சிறந்த பதிவுகளை உருவாக்க, அந்த ஆண்டவனை பிராரத்திக்கிறேன்.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அன்பொழுகிய வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் கண்டு அகமகிழ்ந்து நிற்கின்றேன் சகோதரி.
நீக்குபல மொழி வித்தகர் அவர்களுக்கு வணக்கம்., கன்னடத்தில் 5% தான் புலமை என்று சொன்னீர்கள். சீக்கிரம் அது 100% மாக மாறுவதற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇம்மாதிரி பாலாமொழி கலைஞர்களை பார்த்தால், பொறாமையாக இருக்கும்(பின்ன, எனக்கு அந்த திறமை இல்லையே!!!) ஆனால் சகவாசம் வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்கும்.
இன்னும் பல மொழிகள் கற்று புலமையடைவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். .
லேட்டான வருகைக்கும், லேட்டஸ்டான வாழ்த்துரைக்கும் நன்றி நண்பரே...
நீக்குதங்களின் முயற்சி எங்களை வியக்கவைத்துவிட்டது. இவ்வாறான ஒரு சிந்தனையைப் பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி முனைவர் ஐயா அவர்களே....
நீக்குஇத்துனை மொழிகள் தெரிந்தவரா தாங்கள்
பதிலளிநீக்குஇதற்காகவே தனியே ஒரு வாழ்த்தினைத் தெரிவிக்க விரும்புகிறேன்நண்பரே
உங்களின் மொழித் தாகம் கண்டு வியக்கிறேன் நண்பரே
வாழ்த்துக்கள் நண்பரே
தங்களிடமிருந்து கருத்துரை வரும்போதுதான் மனம் முழுமையடைகிறது... நண்பரே...
நீக்குஎனக்கும் இதே நிலைப்பாடுதான்
பதிலளிநீக்குநன்றி
வாழ்த்துக்கள் சகோ...
குரல் அருமை
கருத்துக்கு நன்றி நண்பரே...
நீக்குசங்கட் தேக்தே ஹும் ...
பதிலளிநீக்குஇத்னா சுந்தர் ஹை ... மேரே பாரத்
கலக்குங்க பாஸ்
ஸுக்ரியா பாய் ஸாப்.
பதிலளிநீக்குஉங்கள் தாய் நாட்டுப் பற்றுக்குத் தலை வணங்குகின்றேன். எத்தனையோ பேர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த நாட்டையே கொச்சையாகப் பேசும் சந்தர்ப்பத்தில் இப்பதிவு சிறப்பைத் தருகின்றது. நல்ல முயற்சி
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோதரியே...
நீக்கு