மனிதன்,
விலங்குகளிடமிருந்து வேறுபடுகிறான் பிறவற்றை உணர்ந்து பார்க்கும் ஆற்றல் உடையவன்
ஆகவே அவனுக்கு ஆறறிவு, என்று சொல்லிவிட்டு போனமனிதன், தனது சுயநலத்திற்காக
விலங்குகளை கூண்டில் அடைத்து ரசித்துப்பார்க்கவும் சொல்லிவிட்டு போனானா ? காலம்காலமாய் ரசிக்கும்
மானிடா நம்மால்
ஒரு ½ மணிநேரத்திற்கு
இந்தக்கூண்டுக்குள் இருக்கமுடியுமா ? இறைவன் நம்மைப்போல்தான்
விலங்குகளையும், பறவைகளையும் படைத்தான் அவைகளை சிறைவைக்க யார் உமக்கு அதிகாரம்
கொடுத்தது ? ஆறறிவு படைத்தமனிதன்
சுயசிந்தனை கொண்டு காட்டைவிட்டு வெளியே வந்து நாட்டை உருவாக்கினான், மிருகங்களும்
காட்டைவிட்டு வெளியே வந்தால் நமது நிலை ? நமக்கு பேசும்சக்தி
உள்ளதால் பேசித்தீர்க்கிறோம், அவைகளும் பேசினால் ? இறைவன் படைத்த பூமியில்,
நீயும் நானும் சமநிலை என்றுகூட சொல்லலாம் ? யார் வெற்றி பெறுவார் ? என்பது வேறுவிசயம்
வீடுகளில் பறவைகளை கூண்டுகளில் அடைத்து வைத்து வளர்ப்பவர்களே, அவைகளுக்கு
முழுசுதந்திரம் கொடுங்கள் முடிந்தால் விடுதலையே கொடுங்கள் கொடுக்கமனம்
வரவில்லையெனில், ஒரு ½ மணிநேரம் கூண்டுக்குள்
வேண்டாம் வீட்டு அறைக்குள் இருந்து பாருங்கள், அந்தஅனுபவம்
சொல்லித்தரும் ஆயிரம்"வலி"கள்.
Video
(Please
ask Audio Voice)