தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 26, 2014

சிறையிலிருந்து, சின்னக்குயில்.


மனிதன், விலங்குகளிடமிருந்து வேறுபடுகிறான் பிறவற்றை உணர்ந்து பார்க்கும் ஆற்றல் உடையவன் ஆகவே அவனுக்கு ஆறறிவு, என்று சொல்லிவிட்டு போனமனிதன், தனது சுயநலத்திற்காக விலங்குகளை கூண்டில் அடைத்து ரசித்துப்பார்க்கவும் சொல்லிவிட்டு போனானா ? காலம்காலமாய் ரசிக்கும் மானிடா நம்மால் ஒரு ½ மணிநேரத்திற்கு இந்தக்கூண்டுக்குள் இருக்கமுடியுமா ? இறைவன் நம்மைப்போல்தான் விலங்குகளையும், பறவைகளையும் படைத்தான் அவைகளை சிறைவைக்க யார் உமக்கு அதிகாரம் கொடுத்தது ? ஆறறிவு படைத்தமனிதன் சுயசிந்தனை கொண்டு காட்டைவிட்டு வெளியே வந்து நாட்டை உருவாக்கினான், மிருகங்களும் காட்டைவிட்டு வெளியே வந்தால் நமது நிலை ? நமக்கு பேசும்சக்தி உள்ளதால் பேசித்தீர்க்கிறோம், அவைகளும் பேசினால் ? இறைவன் படைத்த பூமியில், நீயும் நானும் சமநிலை என்றுகூட சொல்லலாம் ? யார் வெற்றி பெறுவார் ? என்பது வேறுவிசயம் வீடுகளில் பறவைகளை கூண்டுகளில் அடைத்து வைத்து வளர்ப்பவர்களே, அவைகளுக்கு முழுசுதந்திரம் கொடுங்கள் முடிந்தால் விடுதலையே கொடுங்கள் கொடுக்கமனம் வரவில்லையெனில், ஒரு ½ மணிநேரம் கூண்டுக்குள் வேண்டாம் வீட்டு அறைக்குள் இருந்து பாருங்கள், அந்தஅனுபவம் சொல்லித்தரும் ஆயிரம்"வலி"கள்.
Video
(Please ask Audio Voice)


வியாழன், பிப்ரவரி 20, 2014

சிவஹனி

அபுதாபி முஷபாவில் ஒரு நாள், சிவமணியும், ஹனீபாவும் அறுக்கும்போது...

ஏத்தா அரபிக்காரன் கம்பு லூஸ் ன்னு சொல்றானே என்னத்தா அர்த்தம் ?
ஏப்பு இப்படி அட்டுப் புடிச்ச மாதிரி கேக்கிறிய ?

ஏத்தா இது கூடவா தெரியலே ?
அப்படின்னா இன்னா அர்த்தம் ?

கம்புலூஸுன்னா... எத்தனை ரூபான்னு அர்த்தமுத்தா.
அது, கம் புலூஸ் சுல.

அதத்தானத்தா நானும் சொன்னேன்.
ஏப்பு இப்படி உயிர எடுக்கிறிய

ஏத்தா அரபிக்காரன் ஸூத்தாநீ கேட்டா, என்னத்தா சொல்விய ?
ங்கொய்யால, கம்பெடுத்து விளாசிப்புட மாட்டோம்.

அதுக்கு ஏத்தா கம்பெடுக்கிறிய ஸூத்தானி ன்னு கேட்டா... மாபி தானி ன்னு சொல்ல வேண்டியதானே ! 
மொதல்ல என்ன கேட்டீங்க ?

வேற இருக்கான்னு கேக்றான் இல்லேன்னு, சொல்ல வேண்டியதானே !
அது ஸ்ஸூ தானி ல.

எல்லாம் ஒரு எலவுதான்த்தா.
ஙொக்கால் நம்மல்ட்ட கேட்ருவானா அப்படி முட்டித் தூக்கிடுவோமுல..

பாத்துத்தா கொம்பு ஒடிஞ்சிரப் போகுது.
ஒடிஞ்சாலும் முட்டுவோமுள்ள !

ஏத்தா அரபிக்காரன் ரோத்தால்ன்னு, சொல்றானே என்னத்தா ?
ஏப்பு இப்படி மெட்ராஸ்காரன் மாதிரி பேசிறிய !

அப்படின்னா போ, வா, ன்னு அர்த்தமுத்தா...
சரிப்பு அரபியில போ அப்படின்னு, சொல்றதுக்கு ரோ ன்னு சொல்றாங்கள்ல அப்படின்னா, போடா ன்னு எப்படி சொல்றது ?

ரோடான்னு சொல்ல வேண்டியதான்.
நம்மள ஒரு நாளைக்கு துபாய்க்கு கூட்டிட்டு போயி சுத்திகாமிங்கப்பு.

பெஸ்டிவெல் வரட்டும்த்தா, கண்டிப்பா போவோம்.
அப்ப இன்ன இருக்கு ?

அப்பத்தானே ராட்டணம்மெல்லாம் இருக்கும். ஏறி சுத்தலாம் காலத்துக்கும் இப்படி செண்பகநாதன் மாதிரிதானத்தா இருக்கீங்க.
நாங்கல்லாம் மோசமான ஆளுப்பு.

நீங்க மோசமா இருந்தாலும், நாசமா போனாலும் காசா அப்புக்கு என்னா ?
ஏப்பு பேசிக்கிட்டு இருக்கும் போது என்னை இழுக்கிறீங்க ?

நீங்க இப்படி நினைக்கிறீங்க, உங்களைப்பத்தி இவரு என்ன சொன்னாரு தெரியுமா ?
என்னப்பு சொன்னாரு ?

அதை வாயால சொல்ல முடியாதுப்பு,
அப்ப,....                   என்னையா கரண்டு போச்சு ?

அவருதான் சொன்னாருல வாயால சொல்ல முடியாதுன்னு, விட்டுத் தொலைக்க வேண்டியதானே அவரு எப்பவுமே ENTRANCEல வச்சு இருப்பாரு இப்ப பாரு இழுத்த, இழுல கரண்டே போச்சு.  


வெள்ளி, பிப்ரவரி 14, 2014

முதுகுளத்தூர், முதுகுவலி முரளி

முரளி, மாஞ்சூர் நிறுவனத்தில் வேலை செய்கிறார், வீட்டுக்கு வந்தால் இவர் எந்த நேரமும் T.V யில் நாடகம் பார்த்துக் கொண்டே........ இருப்பார், பெரும்பாலும் கட்டிலில் உட்கார்ந்து தான்பார்ப்பார், இப்படியே....... உட்கார்ந்து, உட்கார்ந்து, முதுகு வளைந்து கேள்விக்குறி போல் ஆகிவிட்டது நடக்கும்போது குனிந்தே நடக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டது. 
இவரது நண்பர்கள் கருப்புராஜா, ராஜ்குமார், முருகேசன், குருசாமி, அங்குச்சாமி ஆகியோர் T.V பார்க்க வேண்டாமென எவ்வளவோ சொல்லியும் கேட்க மாட்டார்.
திடீரென முதுகுவலி வந்து விட்டது, டாக்டரிடம் போய் கேட்டார் அவரும் எல்லா விசயத்தையும் கேட்டு விட்டு இனிமேல் T.V யே, பார்க்க கூடாது என்று சொல்லி விட்டார், வீட்டுக்கு வந்து T.V யை, விற்று விட்டு ஒரு COMPUTER வாங்கி வந்தார், உடன் NET இழுத்து நாடகம் பார்க்க ஆரம்பித்தார்....... பிறகும் முதுகுவலி போகவில்லை என்ன செய்யலாம் ? என யோசித்துக் கொண்டு இருக்கும் போது COMPUTER ரில் T.M. சௌந்தரராஜன் வந்து ஒரு பாட்டுப்பாடினார்.
கேள்விக்குறி போல் முதுகு வளைந்தது தோழா... எதற்காக ?
அன்றுதான், அவருக்கு எல்லாமே புரிந்தது. மறுநிமிடமே COMPUTER ரை விற்றதோடு இல்லாமல், கையிலிருந்த SUMSUNG DUOS  MOBILE லையும் விற்று விட்டார், இப்பொழுது TELEPHONE னில், மட்டுமே பேசுகிறார், எது எப்படியோ இதற்கெல்லாம் காரணமான... 
ஐயா T.M. சௌந்தரராஜன்
அவர்களுக்கு நானும் மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.

காணொளி