இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, டிசம்பர் 13, 2014

கனவில் வந்த காந்தி (1)


நேற்று ஏனோ தெரியவில்லை வேலைப் பளுவின் காரணமோ அல்லது வழக்கம்போல் மன உலைச்சலோ தெரியவில்லை வீட்டிற்கு வந்ததும் தூங்கி விட்டேன் ஆழ்ந்த உறக்கத்தில் கனவு இந்தக் கனவை வலைப்பூ நண்பர்களுக்கு சொல்லியாக வேண்டுமே எப்படிச் சொல்வது

எனத் தெரியவில்லை காரணம் ஆதாரம் இல்லை கனவுக்கு ஆதாரம் உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்காது, ஸ்காட்லாண்ட் காவல்துறை வந்தாலும்கூட கண்டு பிடிக்க முடியாதே... இருப்பினும் நம்ம நண்பர்கள்தான் ரொம்ப நல்லவங்களாச்சே.... நம்ம சொன்னால் கேட்டுக் கொள்வாங்க... என்ற நம்பிக்கையில் சொல்லப் போகிறேன்...

க்கூவ், க்கூவ், க்கூவ்... சரக், சரக், சரக்...

(என்ன... காதலிக்க நேரமில்லை படத்துல நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்றதுபோல தெடங்குறானே... அப்படினு நினைக்காதீங்க)

வேற ஒண்ணுமில்லை அமைதியான காடு எங்கோ குயிலின் க்கூவ் சத்தம்... மரத்தின் இலைகள் உதிர்ந்து சிதறிக் கிடக்க... அதில் நான் மட்டும் நடந்து போகிறேன் யாருமில்லாத அந்த பூங்காவனத்தில் காற்று இதமாக மனதை வருடிச் சென்றது ஒரு வளைவில் திரும்பினேன் அந்த இடத்தின் இடதுபுறம் பார்த்தால் ஆச்சர்யம் நம்பவே முடியவில்லை ஸ்டீல்பென்ச் ஒன்றில் இயற்கையான இடத்தில் ஸ்டீல்பென்ச்சா... ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஸ்டீல்பென்ச் கிடக்கட்டும் அதில் இருவர் உட்கார்ந்திருந்தார்கள் அது யார் ? சொன்னால் நம்புவீர்களோ ? என்னவோ... காரணம் என்னாலயே நம்ப முடியவில்லையே...

அது யார் தெரியுமா ?

ஒருவர் எனக்கு மட்டும் தெரிந்தவர் மற்றவர் இந்தியர்கள் அனைவருக்கும் தெரிந்தவர்.

ஆம்.

ஒருவர், மஹாத்மா காந்தி.
மற்றவர், ஞானி ஸ்ரீபூவு.

ஆச்சர்யத்தில் அப்படியே வாயடைத்து நின்றேன் என் நிலையை கண்ட ஞானி ஸ்ரீபூவு

என்ன இப்படிப் பார்க்கிறாய் உன்னை எதற்கு போன் செய்து வரச்சொன்னேன் உட்கார் 
என்றார் நான் சட்டென தரையில் சம்மனம் கூட்டி உட்கார்ந்தேன் ஞானி ஸ்ரீபூவு சொன்னார்.

இப்பொழுது மஹாத்மா அவர்கள் உன்னிடம் பத்து வினாக்கள் கேட்பார் அதற்கு நீ விடையளிக்கவேண்டும் அப்பொழுதுதான் நான் உனக்கு ஆசி தருவேன் என்றார்.

நான் ஒருபுறம் பயந்தாலும் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தலையாட்டினேன்.

மஹாத்மா காந்தி அவர்கள் புன்முருவலுடன் என்னைப் பார்த்து சிரித்து விட்டு கேள்விக்கணை தொடுத்தார் எ(ன்)னை நோக்கி...

(முன்குறிப்பு மஹாத்மா காந்தி அவர்கள் ஞானி ஸ்ரீபூவு அவர்களுடன் குஜராத்தியில் பேசினாலும் என்னிடம் ஹிந்தியில்தான் பேசினார்கள், நானும் ஹிந்தியில்தான் பதில் சொன்னேன் அதைத்தான் நமது இனிய தமிழில் மொழி பெயர்த்து தந்துள்ளேன்)

இதோ, அவரின் கேள்விகளும், எனது பதில்களும்.

01. நீ மறுபிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கிறாய் ?
மீண்டும், எனது இனிய இந்தியாவில், இதே இனிய தமிழ் பேசும் தமிழனாய், இதே தாயின் வயிற்றில் பிறக்க ஆசை.

02. ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால் ? சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கிறதா  
உண்டு ஐயா, முதல்வேலை மதங்களை ஒழித்து விடுவேன், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து இலவசம், பெட்டிக்கடையில் தொடங்கி விவசாயத்திலிருந்து.... விஞ்ஞானம்வரை அனைத்துமே அரசாங்கத்தால் இயக்கப்பட்டு அனைவருமே அரசாங்க ஊழியர்கள் ஆக்கப்படுவார்கள், தனியார் வசம் வேண்டுமென யாராவது போர்க்கொடி பிடித்தால் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு பாக்கிஸ்தானின் எல்லையில் கொண்டு விட்டு வரப்படும், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு பொது (ஆண்) மக்கள் முன்னிலையில் உடனடி தண்டனைகள் வழங்கப்பட்டும் அதைக் காண்பவனுக்கு யாரையும் கற்பழிக்க வேண்டும் என்ற சிந்தை தோன்றாது காரணம் காரணகர்த்தா எடுக்கப்பட்டு விடும்.

03. இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வாய் ?
சான்ஸே இல்லை, முதலில் அவர்கள் வெளிநாட்டிற்கே போகமுடியாது இந்தியர்கள் அனைவருமே இந்தியாவில் வேலை செய்து இந்தியாவுக்காக உழைக்க வேண்டும், வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவில் வேலையில்லை, தொழில் தொடங்க அனுமதி இல்லை, வெளிநாடு செல்பவர்கள் சுற்றுலாவுக்காக மட்டுமே சென்று வரமுடியும்.

04. முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா ?
நிச்சயமாக... நாட்டில் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் இருக்காது கூட்டுக் குடும்பம் சட்டமாக்கப்படும், வீட்டு உறுப்பினர்கள் கூடும்போது அதற்கேற்க அரசாங்கத்தால் வீடுகள் வழங்கப்படும், நிலங்களும், வீடுகளும், அரசாங்கத்திற்கு மட்டுமே சொந்தம் ஆக்கப்படும்.

05. அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது ?
இருக்கிறது முதலில் அரசியல்வாதி, ரவுடி, என்ற சொற்கள் அனைத்து இந்திய மொழிகளிலிருந்தும் எடுக்கப்பட்டு விடும், நாட்டை ஆள விரும்புபவர்கள் படிக்கும்போதே விண்ணப்பம் கொடுக்க வேண்டும், பிறகு ஐஏஎஸ் போன்று பரீட்சை எழுதி மதிப்பெண்கள் மக்களுக்கு தெரியவைத்து நீதிமன்றம் மூலம் தேர்வு செய்யப்படும்.

06. மதிப்பெண்கள் தவறென, மேல் நீதிமன்றங்களுக்கு போனால் ?
போகவே முடியாது காரணம் நீதிமன்றம், உச்சநீதி மன்றம் என்ற பிரிவினையே கிடையாது எல்லாமே இந்திய அரசமைப்பின்படி படித்த நீதிபதிகளே... ஒரு தவறுக்கு எல்லா இடங்களிலுமே ஒரே தண்டனைதான் நீதிபதிகள் கொடுக்க வேண்டும், மாற்றிக் கொடுத்து குழப்பினால் அந்த நீதிபதிகளுக்கு தண்டனைகள் கொடுத்த பிறகு மீண்டும் சட்டக்கல்லூரியில் மாணவனாக சேர்க்கப்படுவார்கள்.

07. விஞ்ஞானிகளுக்கு என்று.... ஏதும் இருக்கிறதா ?
கண்டிப்பாக இருக்கிறது... மனித வளர்ச்சிக்கு இடையூரான விசயங்கள் அனைத்தையுமே படிப்படியாக குறைக்க மேற்கொள்ளப்படுவார்கள், உணவுப் பொருட்களில் விஞ்ஞானம் நுழைவது விரைவாக குறைக்கப்பட்டு இயற்கையான உணவு வகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு மக்களிடம் கட்டாயமாக புகுத்தப்படும்.

08. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா ?
நான் மட்டுமல்ல, அனைவருமே ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பதவியை விட்டு கண்டிப்பாக விலகி விடவேண்டும், நாட்டையாளும் ஜனாதிபதி முதல் அலுவலகத்தில் வேலை செய்யும் பியூன்வரை காய்கறி கடையில் வேலை செய்பவர் முதல் விவசாயி வரை அனைவருமே அரசாங்க அதிகாரிகள்தான், இதில் பெருமைக்கும், சிறுமைக்கும் வேலையே இல்லை.

09. மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக ?
இருக்கிறது, பணத்தை நோட்டுகளில் அச்சடித்து வீண் விரையங்கள் நிறுத்தப்படும், எல்லா மக்களுக்கும் நாட்டார் அட்டை வழங்கப்படும் அதன் மூலமே மக்கள் செலவு செய்யவேண்டும் ஒரு டீ குடித்தால்கூட கணினி மூலம் கணக்குகள் அரசாங்கத்திற்கு தெரிந்து விடும், இதன் மூலம் லஞ்சம் ஒழிந்து விடும், கள்ள நோட்டுகள் அழிந்து விடும் வெளிநாடு செல்பவர்களின் செலவுகள் அரசாங்கம் மூலமே நடைமுறையாக்கப்படும், இத்தனை வேலைகளையும் கணினி மூலம் செய்ய ஆட்கள் நியமிக்கப்படும் போது இந்திய மக்கள் அனைவருக்குமே வேலை வாய்ப்புகள் உண்டு என்பது நிச்சயமாகி விடும்.

10. எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாக பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால் ?
அப்படி இறைவன் சொல்ல மாட்டார்னு நான் நம்புகிறேன் ஐயா, நான் ஒரு பாவமும் செய்யவில்லை உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வலைப்பதிவர் சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களிடம் போன் செய்து கேளுங்கள், வலைச்சரத்தில்கூட என்னைப் பற்றி ஈரமனிதர் அப்படினு எழுதியிருக்காங்க... ஒருவேளை மானிடப்பிறவி தரமாட்டேனு சொன்னால் இந்தப் பாழாப்போன மானிடர்களை காணாமல், மழைக் காலங்களில் பிறந்து ஐந்தே நொடியில் இறந்து விடும் ஈசலாக பிறந்து உடன் இறந்து விட வேண்டுமென கேட்பேன்.

ஐயா மஹாத்மா காந்தி அவர்கள் கை தட்ட ஞானி ஸ்ரீபூவு ஆசி வழங்க,

அவர்களிடம் விடை பெற்று விட்டு மீண்டும் சருகுகளில்... சரக், சரக், சரக் என நடந்தேன் தி கிரேட் தேவகோட்டையை நோக்கி....

இனிய வலைப்பூ இதயங்களே... இது ஒரு தொடர் பதிவு நான் ஆரம்பித்த இந்த கேள்வி - பதில் உலகத்தை சுற்றி வரட்டுமே... இதே கேள்வியை மஹாத்மா காந்தி அவர்கள் தங்களிடம் கேட்டால் எப்படி பதில் சொல்லி இருப்பீர்கள் ?

விதி முறைகள் ஏழு.
01.  இது அரசியல் பந்தப்பட்டவையாக இருப்பதால் ஒவ்வொருவரும் பத்து ண்பர்களை மட்டும் இணைக்க வேண்டும்.

02.  நான் மேலே சொல்லி இருப்பது போல் கதையளக்க வேண்டும் என்பது அவசியமில்லை நேரடியாக கேள்வி – பதில் விசயத்தில் இறங்கி விடலாம்.

03.  கேள்வி இதேதான் தங்களது பதிலுக்கு தகுந்தாற்ப்போல் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மாற்றிக் கொள்ளலாம் ஆனால் இதே வளையங்களுக்குள் வருவதுபோல் பார்த்துக் கொள்ளவும் பதில் உங்கள் விருப்பம் சிரிப்பாகவோ, சிந்திப்பதாகவோ, விரிவாகவோ, ரத்தினச் சுருக்கமாகவோ, எப்படியும் இருக்கலாம்.

04.  அனைத்து தொடர் பதிவர்களும் குழறுபடிகளை தவிர்க்க மற்றவர்களுடையதை கண்டிப்பாக பார்த்து விட்டு தொடர் பதிவர்களின் பெயர்களை தேர்வு செய்யவும்.

05.  யாரும் எனக்கு ஹிந்தி தெரியாது ஆகவே மஹாத்மாவிடம் பேசமுடியாது என்று சொல்ல கூடாது ஹிந்தி தெரியாதவர்கள் அவரிடம் ஆங்கிலத்தில் பேசலாம், ஆங்கிலமும் தெரியவில்லை என்றால் ஞானி ஸ்ரீபூவு அவர்களிடம் தமிழில் பேசினால் அவர் குஜராத்தியில் பேசி தங்களிடம் தமிழில் விளக்குவார்.

06.  தலைப்பு கனவில் வந்த காந்தி நான் வட்டத்துக்குள் (1) போட்டு இருக்கிறேன், எனது பத்து தொடர் பதிவர்களும் வெளியிடும் தருணத்தில் மற்றவர்கள் வெளியிட்டு விட்டார்களா ? என்பதை தனது டேஷ்போர்டில் கவனித்து விட்டு (2) போடவும் அடுத்த பதிவர்  (3) போடவும் இதையே எல்லோரும் கடைப்பிடித்தால் கடைசியில் மொத்த பதிவுகளையும் கணக்கு எடுக்க வழி கிடைக்கும்.

07.  எனது குழு முடித்தவுடன், அடுத்த குழு இலக்கம் (12) ல் தொடங்கும்.

வலைப்பதிவர்களுக்கு ஒரு சவாலாக இருக்கட்டும் இந்த பதிவு.

இந்தப் பதிவை எனது இனிய நண்பர்கள் பத்து பேருக்கு பரிந்துரைக்கிறேன்.

சமூக வரலாற்றை எமக்கு கற்றுத்தரும் எமது இனிய நண்பர்.
திரு.கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.

உலகமெங்கும் தெய்வீகம் வளர்க்கும் எமது இனிய நண்பர்.
திரு.துரை செல்வராஜூ அவர்கள்.

ஏமாற்றுக்காரர்களின் உலகை படம் பிடித்து காட்டும் எமது இனிய நண்பர்.
திரு.வே.நடனசபாபதி அவர்கள்.

புதுமையான கண்ணோட்டத்தில் சமூகத்தை அலசும் எமது இனிய நண்பர்.
திரு.துளசிதரன் தில்லைஅகத்து மற்றும் கீதா அவர்கள்.

தாய்நாட்டை விட்டுச் சென்றும் தமிழ் வளர்க்கும் எமது இனிய நண்பர்.
திரு.சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள்.

வரலாற்று ஆய்வாளர் மரியாதைக்குறிய எமது இனிய ஐயா.
Dr. திரு. B. ஜம்புலிங்கம் அவர்கள்.

பணியில்தான் ஓய்வே தவிற எனது எண்ணங்களில் அல்ல ! எனும் எமது இனிய நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.

இந்தியாவின் வருங்கால தூண்களை உருவாக்கும் ஆசிரியப் பெருமான் மலர்த்தரு எமது தோழர் திரு. மது கஸ்தூரி அவர்கள்.

தனது சீறிய எழுத்துக்களால் எமது சிந்தை கவர்ந்த எமது இனிய நண்பர் திரு. இ.பு. ஞானப்பிரகாசன் அவர்கள்.

அரிசியில்கூட அரசியல் பேசும் சூறாவளி ‘’அவர்கள் உண்மைகள்’’ நண்பர் திரு. மதுரைத்தமிழன் அவர்கள்.

எல்லோருமே எனது நண்பர்களே அனைவருக்கும் இதில் இடமுண்டு ஆனால் பத்து நண்பர்கள்தான் என்பது மரபு ஆகவே... தயாராகுங்கள்.

இந்த கேள்வி - பதில் மூலமாகவாவது சமூகம் அரசியலில் மாற்று கருத்து பெறட்டும் என்று எண்ணியே இதை தொடங்கினேன் அரசியலில் மாற்றுக்கருத்தை நம்மைப் போன்ற எழுத்தாணி பிடித்தவன் சொல்லாமல் வேறு யார் சொல்ல முடியும் ?  

பணிவுடன் உங்கள்.
Devakottai KILLERGEE Abu Dhabi

இதனைக் குறித்து மதுரை பதிவர் விழாவில் நான் பேசிய காணொளி.

116 கருத்துகள்:

  1. நல்ல கேள்வி !! அழகான பதில்கள்!!
    என்னை இந்த வட்டத்தில் இழுத்துவிடாத அண்ணன் கில்லர்ஜி அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்!! அப்புறம் வலைமக்களே நான் ஒரு மாதம் வலைபூவிற்கு ஓய்வளிக்க போவதால் ப்ளீஸ் யாரும் இதுல என்னை சேர்த்து புடாதீக!!!(அந்த மூணாவது அண்ணனை தவிர மத்த எல்ல்லாம் நம்ம சனங்க தானே:))) பயணம் தொடர !! வெற்றி பெற வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, சகோதரி மைதிலி கரந்தையாரிடம் சிக்கிக்கொண்டீர்களே... ஆனாலும் அடேங்கப்பா என்ன வேகமாக பதிவைப்போட்டு எஸ்கேப் ஆகிட்டீங்க... ஸூப்பர் பதில்கள் காந்திஜியே கலங்கிட்டதா.. நேற்றும் கனவில் வந்து சொன்னார். (வலைப்பூவுக்கு ஒருமாதம் லீவு புரூடாதானே)

      நீக்கு
  2. கில்லர் ஜி! தங்கள் கேள்விகள் அனைத்தும் மிகச் சிறந்த கேள்விகள். பதிலும் அருமையே, ஐடியல் உலக பதில்களாக இருந்தாலும்...எல்லோரும் விரும்பும் பதில்கள்தான்....இது வரை எல்லாம் ஒழுங்காதான் போய்ட்டுருந்துச்சு....சரி இதில் எங்களை இழுத்தீர்கள் பாருங்கள் அங்க தான்யா நீர் ஆப்பு வைச்சது! என்ன செய்ய ஞானி ஸ்ரீபூவு இருக்கும் போது முடியாது என்று சொல்லவா முடியும்?!! ம்ம்ம் இஎடுகின்றோம் நண்பரே! மறுபடியும் வலைச் சுற்றா....கண்ணைக் கட்டுதே....தலை சுத்துதே..... (னம்ம பதிவு எழுதணுமேனு நினைச்சுட்டுருந்த வேளையில ஒரு பதிவ் போட உதவியதற்கு நன்றி. ஆனா எப்படினுதான் தெரில) ஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக. தில்லை அகத்தார்களே... எப்பூடி ? மதுரைக்கு வராம ஏமாற்றினீங்கள்ல... அதுக்குத்தான்.

      நீக்கு
  3. என் மேல் இரக்கப்பட்டு இந்த வட்டத்தலிருந்து கழட்டி விட்ட நண்பர் உயர்திரு.கில்லர்ஜி அவர்களுக்கு கனவில் வந்த காந்தியின் சார்பாகவும் ஸ்ரீபூவு அவர்களின் சார்பாகவும் கோடானு கோடி நன்றிகள்!!!!!

    பதிலளிநீக்கு
  4. படிக்க படிக்க மிக மகிழ்ச்சியாய் இருந்தது .அதிலும் .கடைசியாக என் பெயர் இல்லாததில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன் ::)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி நீடிக்கலையே... ஆனாலும் உடன் பதிவைப்போட்டு அசத்தி விட்டீர்கள் ஸூப்பர்.

      நீக்கு
  5. சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி! உங்களுடைய கேள்வியும் நானே பதில்களும் நானே பாணியில் அமைந்த இந்த பதிவை ஒரு பார்வை பார்த்து விட்டேன். மீண்டும் வருவேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  6. ஆஹா... அருமையான கேள்விகள்... ஆழமான பதில்கள்...
    கலக்கல் அண்ணா.... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே.... நம்ம ஆளைப் போட்டுத்தாக்குங்க... உங்களோட லிஸ்டுல.

      நீக்கு

  7. தங்கள் பதிவின் ஊடாக காந்தியின் எண்ணங்களை பகிர்ந்தமைக்கு நன்றி. தொடர்ப்பதிவுக்கு சென்று காந்தி பற்றிய பலரது எண்ணங்களை வெளிக்கொணர முயன்றமைக்குப் பாராட்டுகள். தங்கள் ஒளிஒலிப் பதிவிலும் தங்கள் எண்ணங்களை உணர முடிந்தது.
    உண்மையில் ஒர் படைப்பாளி (கவிஞர், கட்டுரையாளர், நகைச்சுவையாளர், பாடலாசிரியர், கதாசிரியர், நாடகாசிரியர் போன்ற எல்லாக் கலைஞர்களும்) தன்னைச் சார்ந்து எழுதுவதோடு நில்லாமல் சமூகம், அரசியல் சார்ந்த தூரநோக்கு எண்ணங்களையும் பகிரலாம்.

    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே தங்களது கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
  8. அருமையான கேள்விகள் நண்பரே
    கருத்துரையில் பலர் மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்கள்,
    அவர்களை இச்சுழலுக்குள்இழுத்து விடாததற்கு, அவர்களின் பெயர்களை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டேன்,
    என் பதிவில்,இவர்களின பெயர்களைத்தான் முதலில் கூறுப் போகிறோன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே கருத்தைத்தான் நான் கூறவிருந்தேன். ஆனால், அதற்குள் அரிவாளை ஐயா வீசி விட்டார். :-)

      நீக்கு
    2. வணக்கம் நண்பர் கரந்தையார் அவர்களே... தங்களது பதிவில் என்னை இவ்வளவு தூரம் தூக்கி எழுதி இருக்ககூடாது எனக்கே ஓவரோனு தோனுச்சு நன்றி சொல்ல வார்த்தை கிட்டவில்லை நண்பரே...

      நீக்கு
  9. கேள்வியும் பதில்களும் அருமை. இந்த தொடர் ‘ஓட்டத்தில்’ என்னையும் இணைத்துள்ளீர்கள். அவசியம் கலந்துகொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நண்பரே... அவசரமில்லை தங்களது பதிவு வித்தியாசமாக இருக்கும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

      நீக்கு
  10. விடுக்கப்பட்ட வினாக்களும்
    அதைவிடுத்த விடைகளும்
    ஆழமான சிந்தனைகளின் விளைச்சல்.
    கனவிலே விளைந்த
    கற்கண்டு சிந்தனைகள்....

    அருமையான தொடர் பதிவு ஒன்றை
    ஆர்மபித்திருக்கிறீர்கள். தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக... கவிஞரே தங்களை ஒருவரிடம் ‘’போட்டுக்’’ கொடுத்துள்ளேன் விரைவில் தெரியும்.

      நீக்கு
  11. நான் சொல்ல வேண்டிய பதிலை வலிப்போக்கன் சொல்லிவிட்டார்.

    அந்த நாட்டார் அட்டை மேட்டர் சூப்பர் கில்லர்!

    நானும் ஒரு வருடம் லீவுல போறேன்கிறத ஞானி ஸ்ரீபூவு கனவுல சொன்னதைச் சொல்லலையே ஜி?

    நன்றி !

    ம்ம், சுழலட்டும் சுழல்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே... ஞானி ஸ்ரீபூவு சொல்லவில்லையே... இதற்காக ஒரு வருடம் லீவா ? கவிஞரே இது உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லை தாங்களெல்லாம் இப்படிச்சொன்னால் ? இந்தப்பாமரன் என்ன சொல்வது ?

      நீக்கு
  12. இந்த கொம்பானி என்ற தொழிலதிபர் இருக்கான், என்னதான் செய்கிறானோ தெரியவில்லை, யார் ஆட்சிக்கு வந்தாலும் அவனுடைய கைப்பாவையாக மாறிவிடுகிறார்கள். உங்கள் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன்னர் அவன்கிட்ட இருந்து தப்பிக்க வழி கண்டுபிடிக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... எவன் எந்தப்பாணியில் வந்தாலும், அவன் சப்பாணியாயினும் என் பணி தொடரும் அதில் மாற்றமில்லை காரணம் நான் பிரதமர் ஆயிற்றே... பொம்மையாக இயங்க மாட்டேன். பிரமாண்டமான பாதுகாப்பு இருக்காது என்றும் எப்போதும் எம்மிடம் துப்பாக்கி இருக்காது கோடரி இருக்கும். நான் பழமையை விரும்பும் புதுமைச் சித்தன்.

      நீக்கு
  13. பதில்களும் நன்று...

    அட...! அடுத்த தொடர் பதிவுகள் ஆரம்பம்... சிறக்கட்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே... தங்களது பதில்களை SORRY பாடல்களை கேட்க காத்துக்கொண்டு இருக்கிறேன்.

      நீக்கு
    2. இதோ : http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.html

      நீக்கு
    3. இதோ வருகிறேன் நண்பா,

      நீக்கு
  14. நல்ல கேள்வி & நல்ல பதில்கள். சகோ.

    என்னை இழுத்து விடாதது கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

    மற்றவர்களும் இழுத்து விடாதீர்கள்.அந்த அளவு எல்லாம் எனக்கு தெரியாது

    கலக்குங்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சகோதரி, எப்படியும் யாரும் விடப்போறதில்லை அது உறுதி.

      நீக்கு
  15. நல்ல கேள்விகளும் பதில்களும் அருமை!

    சுழலட்டும் சுற்று! நானும் என் வாழ்க்கைச் சுழலில் நேரச் சிக்கலில் சுற்றிக்கொண்டுள்ளேன் என்பது எல்லோருக்கும் தெரியும்தானே..

    மாட்டி விடாதீர்கள் அன்புறவுகளே!.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    பகிர்விற்கு நன்றியும் விசேட வாழ்த்தும் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக, சகோதரி... தாங்களும் மாட்டிக்கொண்டீர்கள் போலயே....

      நீக்கு
  16. ஐயா! பதிவு படித்தேன். அருமை! ஆனால், இது கனவு என்பது தமிழ்வெளி... சீ, உடான்ஸ்! (இரண்டுமே திரட்டிகளின் பெயர் என்பதால் ஒரு சிறு குழப்பம்! :-P) இப்படிப்பட்ட சுவையான, பயனுள்ள ஒரு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று முன்கூட்டியே திட்டம் தீட்டி வைத்துவிட்டுக் கனவு நனவு என்று கதையா விடுகிறீர்கள்! :-)

    தொடர் பதிவில் என்னை இணைத்திருப்பதாக நீங்கள் என் வலைப்பூவில் வந்து சொன்னதும் மிரண்டு விட்டேன்! தமிழ்மணம், தமிழ்க் களஞ்சியம் ஆகிய திரட்டிகளில் விருதுப் போட்டிக்காக வாரம் முழுக்க நாள்தோறும் ஒரு பதிவு எழுதச் சொல்வார்களே, அது போலவோ என்று நினைத்து அரண்டு போனேன். ஒரு பதிவு எழுதினால் போதுமா? நல்லது! இப்படி ஒரு சுவையான பதிவு எழுதும் வாய்ப்பை அளித்தமைக்கு மிக்க நன்றி! ஆனால், பணிகள் நிறைய இருப்பதால் சில நாட்கள் கழித்துத்தான் எழுத முடியும். பொறுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்! என்னால் முடிந்த அளவு விரைந்து இதை எழுத முயல்கிறேன், சரியா? நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நான் பதிவில் சொன்னதுபோல் இதற்க்கு ஆதாரம் கிடையாது பொய் சொல்லும் பழக்கமும் எமக்கு கிடையாது நீங்கள் ஸ்காட்லாண்ட் காவல்துறையிடம் கேட்டாலும் கண்டு பிடிக்கமுடியாது தங்களை எனது நல்ல நண்பர்கள் தொகுப்பில் வைத்திருக்கிறேன் தாங்கள் என்மீது ஐயம் கொண்டது மனதுக்கு வேதனையாக இருக்கிறது.
      தங்களது எழுத்தாற்றல்தான் தங்களையும் இணைக்கத்தூண்டியது ஒரு மாறுபட்ட பதிவு தருவீர்கள் என்பதில் எமக்கு ஐயமில்லை நண்பரே.... அவசரமில்லை வேண்டிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

      நீக்கு
  17. நல்ல தலைப்பினைத் தெரிவு செய்து ஆரம்பித்து வைத்துவிட்டீர்கள். தாங்கள் கூறியபடி எனது பக்கத்தில் பதிவினைத் தந்து நண்பர்களையும் இணைத்துள்ளேன். கேள்விகள் கேட்பதற்கு ஒரு திறமை வேண்டும். அத்திறமை தங்களிடம் அதிகம் இருப்பது கண்டு அறிந்தேன். அதற்கு ஏற்றவாறு தங்களது மறுமொழியினை ரசித்தேன். தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்தியமைக்கு நன்றி முனைவரே தாங்களும் உங்களது பங்கை அமர்க்களப்படுத்தி விட்டீர்கள் அருமை

      நீக்கு
  18. மதுரை சந்திப்பில் சொன்னபடி உடனடியாக செயலில் இறங்கிய உங்களை காந்தி தேசத்திலிருந்து வணங்கி வாழ்த்தி மகிழ்வதுடன் இந்திய அரசியலில் கால் பதிக்க வரவேற்கிறேன். முக்கிய வேண்டுதல் தங்கள் பதிவுகள் சிறப்பாக இருப்பதில் மகிழ்கிறேன். ஆனால் சிற்சில எழுத்துப்பிழைகள் இருப்பதை சரிசெய்ய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தோழமையே... அன்பாய் சிவமே சொல்லும்போது கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறது, நண்பரே எழுத்துப்பிழைகள் எனக்கு சிறுவயது தொடங்கியே வருவதில்லை தாங்கள் சொல்வது மேலே பதிவில் உள்ள ‘’வேலைப்பளு’’ ‘’மனஉளைச்சல்’’ ஆக இருக்கும் என கருதுகின்றேன் இது தவறுதலாக வந்தது பெரும்பாலும் நான் பதிவிடுவது இரவு நேரங்களில் அதுவும் அரைகுறை வெளிச்சத்தில் மற்றவர்கள் உறங்கும்போது நான் மட்டும் செய்வேன் தாங்கள் கேட்கலாம் தெரிந்த பிறகு மீண்டும் போய் திருத்தம் செய்யலாமே ? உண்மைதான் சில காலங்களாக எனக்கும் டேஷ்போர்டுக்கும் இடப்பிரட்சினையால் பனிப்போர் நடந்து கொண்டு இருக்கிறது, எனது பதிவுக்கு இடம் கொடுப்பதில்லை (வாடகைப் பிரட்சினையோ, என்னவோ) இதனால் பலருக்கும் தெரியும் வாய்ப்பு குறைந்து வருகிறது. சிறிய திருத்தம் செய்ய நான் உள்ளே நுளையும் பொழுது மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்து எனக்கு தலைவலியை கொடுக்கிறது மேலும் எமக்கு கணினி அறிவு கம்மியிலும் கம்மி. நண்பரே தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இனிமேல் பிழைகள் வராமல் பார்த்துக் கொள்(ல்)கிறேன்

      நீக்கு
    2. பார்த்துக் கொள்!
      பார்த்துக் கொல்? கிறேன்.
      தங்கள்
      ந(எ)டை கண்டு
      நான்
      விய(ர்)க்கிறேன்.

      நீக்கு
  19. அன்புள்ள சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு வணக்கம். உங்களுடைய கேள்வி – பதில் பாணியில் இந்தியாவைப் பற்றிய உங்கள் ஏக்கம், உங்கள் ஆதங்கம் இருப்பதாகவே நினைக்கிறேன். தொடர்பதிவில் சொல்லப்படும் விதிமுறைகளை யாரும் எப்போதும் கடைபிடிப்பதில்லை.

    தொடர் பதிவு எழுதிட இதற்கு முன்னரும் சில அன்பு வலைப் பதிவர்கள் அழைத்து இருந்தனர். எழுத நேரம் இயலாமல் போய்விட்டது. இப்போதும் அப்படியேதான். இருந்தாலும் ஓரளவு எனக்குத் தெரிந்த அளவில் எழுத முயற்சிக்கிறேன்.. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக... சகோதரரே சரியாக கணித்திருக்கிறீர்கள் என்றே சொல்வேன் காரணம் நான் நமது இந்தியாவை அத்தனை தூரம் நேசிப்பவன்... அந்த ஏக்கமும், ஆதங்கமும்தான் என்னை இப்படி எழுதவைத்தது, எழுதவைக்கிறது இந்த தருணத்தில் என் இனிய தமிழுக்கோர் நன்றி. தங்களது பதிவை காண ஆவலுடன் இருக்கிகறேன் வருகைக்கு நன்றி சகோதரரே...

      நீக்கு
  20. சிறப்பான கேள்விகளும், அதற்கு
    சீரிய சிந்தனையுடன் பதில்களும்...
    பாராட்டுகள்.

    தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தோழரே... தாய்லாந்து, நாட்டிலிருந்து... தாய்நாட்டு விசயங்களை அறிந்து கொண்டு கருத்திட்டமைக்கு நன்றி தொடர்ந்து மலரட்டுமே நமது நட்பூ.

      நீக்கு
  21. நல்ல கனவு, நல்ல கேள்விகள். நனவாகட்டும் உங்களது பதில்கள். வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகையை செந்தமிழால் வரவேற்கிறேன் சகோதரியே தங்களின் தளத்திற்க்கும் வந்து கருத்து மழை பொழிந்து வந்தேன்.

      நீக்கு
  22. சுத்தம்....
    நல்லா அரசியல் செய்வீங்க... :)

    தொடருங்கள் ரசிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமது வலைப்பூவிற்க்கு முதல் முறையாக வந்து ஆத்மார்த்தமாய் கருத்துரை இட்ட ஆத்மாவுக்கு எமது ஆத்மார்த்தமான நன்றி. (நல்லவேளை அசுத்தம்’னு சொல்லவில்லை)

      நீக்கு
  23. நான் உங்களுக்கு ஆஸ்திரேலியா விசா அனுப்பியது பாவமா சொல்லுங்கள் நண்பரே!!. சிவனேன்னு இருந்த என்னை இப்படி வம்பில் மாட்டிவிடலாமா?
    தங்கள் அளவுக்கு எல்லாம் எனக்கு மூளை கிடையாது (இந்த மாதிரி எல்லாம் ரொம்ப சீரியஸா யோசிச்சு பதில் எழுதுவதற்கு...) . சரி, நானும் முயற்சி செய்கிறேன். என்ன எனக்கு இதற்கெல்லாம் பதில் எழுதுவதற்கு இன்னும் இரண்டு,மூன்று நாட்கள் வேண்டும், ஆற அமர யோசிக்கனும் இல்ல....

    எல்லா பதில்களும் சூப்பர். இப்ப புரியுது, நீங்க எதுக்கு அபுதாபிக்கு போயிட்டீங்கன்னு, இந்தியாவில இருந்திருந்தா, அரசியல்வாதிகள் உங்களை அடித்து துவைத்து இருப்பார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போன பதிவோட கருத்துரையில ஆஸ்திரேலியா விசிட் விசா அனுப்பிட்டேனு நீங்க சொன்னதை நம்பி விதியேனு வீதியில வர்ற போஸ்ட்மேனுக்காக என்னை காத்திருக்க வைத்தது உங்களது சதியேனு தெரிஞ்சுபோச்சு அதுக்குத்தான் என்மதியை உபயோகப்படுத்தி உங்களை இப்படி மாட்டி விட்டேன் எப்பூடி ? அரசியல்வாதிகள் என்னை எனது இந்தியாவில் என்ன ? செய்யமுடியும் நாங்களெல்லாம் கோடரிப் பார்ட்டி போட்டுவோம்லே....

      நீக்கு
  24. கனவில் வந்தது காந்தி சாந்தி அல்ல http://avargal-unmaigal.blogspot.com/2014/11/gandhi.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்து கருத்திட்டேன் நன்பரே... நன்றி.

      நீக்கு
  25. அன்பு நண்பருக்கு! இன்று எனது வலைத்தளத்தில் “கில்லர்ஜியின் கனவில் வந்த காந்தி – தொடர் பதிவு.
    http://tthamizhelango.blogspot.com/2014/11/blog-post_17.html “ என்ற பதிவினை எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தேன் நண்பரே எமது வார்த்தைக்கு மதிப்பளித்து அழகாக பதில் அளித்து உள்ளீர்கள் மேலும் எமது பதிவுக்குள் ஊடுறுவி ‘’ஞானி ஸ்ரீபூவு வகையறா’’ பதிவை கண்டுபிடித்து அதன் இணைப்பையும் பிறரின் பார்வைக்கு கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  26. ஐயா! கனிவு கூர்ந்து நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்! என்னால் இந்தத் தொடர் பதிவில் இணைய முடியவில்லை. முதலில் நான் கலந்து கொள்வதாகத்தான் கூறினேன். இதற்காகப் பணிகளையும் தள்ளி வைத்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் இன்று எழுதவும் உட்கார்ந்தேன். ஆனால், நான் இந்தியாவின் ஆட்சியாளனாக வந்தால் என்னென்ன செய்வேன் என்பதை எழுதிப் பார்த்தால் அஃது இன்றைய சட்ட நெறிகளுக்குப் பொருந்தக்கூடியதாக இல்லை. கொஞ்சம் தீவிரமானதாக அமைகிறது! சுற்றி வளைத்துச் சொல்ல முனைந்தாலோ மிகுந்த பொய்களைக் கலக்க வேண்டியதாக இருக்கிறது. அஃது எனக்குப் பிடிக்கவில்லை. எனவே, கனிவு கூர்ந்து நீங்கள் என்னை மன்னித்து இந்தத் தொடர் முயற்சியிலிருந்து என்னை விடுவித்து விட வேண்டுமாய்ப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா!தாங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்க முடியவில்லை ‘’பாம்பு திங்கிற ஊருக்குப்போனால் நடுத்துண்டு எனக்கு வேணும்’’னு சொல்லணும் அப்பத்தான் நாம வாழமுடியும் காரணம் நாம அப்பேர்ப்பட்ட பாழும் சமூகத்தில் வாழ்கிறோம் வேறு வழியில்லை கடந்த 18 ஆண்டுகளாக அரபு நாட்டில் வாழ்கிறேன் இதன் சட்ட திட்டங்களுக்கும், நமது நாட்டு சட்ட திட்டங்களுக்கும் 100 சதவீதம் வித்தியாசம் பல விசயங்களில் இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு கொதித்தெழுந்திருக்கிறேன் இருப்பினும் நான் இந்தியாவை நேசிக்க வில்லையா ? தாங்கள் பதிவு போடவில்லை என்பதற்காக சொல்லவில்லை தங்களுக்கே தெரியும் நான் மனதில் உள்ளதை சொல்லி விடுபவன் என்பது பரவாயில்லை வழக்கம்போல் பதிவுகளில் சந்திப்போம். அன்புடன் உங்கள் நண்பன் கில்லர்ஜி.

      நீக்கு
    2. ஐயா! நீங்கள் இந்தியாவை நேசிக்கிறீர்கள். நான் இந்தியர்களை நேசிக்கிறேன். இரண்டுக்குமான வேறுபாட்டை வெளிப்படையாகக் கூற இயலாத நிலைமையில் இருக்கிறேன்! எப்பொழுதாவது நாம் நேரில் சந்தித்தால் கண்டிப்பாக இது பற்றித்தான் நான் முதலில் பேச்செடுப்பேன் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில், மடிப்பாக்கம் பகுதிக்கு வந்தால் கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள்! என் முகவரியை உங்களுக்கு நான் தனிப்பட அனுப்பி வைக்கிறேன்! தவறாக எடுத்துக் கொள்ளாமல் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி! வணக்கம்!

      நீக்கு
    3. வணக்கம் நண்பரே... கண்டிப்பாக நாம் சந்திப்போம், சந்தோஷமாகவே விவாதிப்போம். நான் இந்தியாவை நேசிக்கிறேன் இந்தியர்களை நேசிக்கவில்லை என்ற தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன், காரணம் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இந்தமுறை ஊருக்கு வரும்போது வங்கியில் சண்டை போட்டேன், மருந்துக்கடையில் சண்டை போட்டேன் பேரூந்தில் நடத்துனரிடம் சண்டை போட்டேன் இவர்களின் பேச்சில் துளியளவும் நியாயம் இல்லை எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. இதைப்பற்றியெல்லாம் கருத்துரையில் விரிவாக கூறமுடியாது உங்களுக்காகவே இதை பதிவாக்கும் எண்ணம் மனதில் உதித்து விட்டது நீங்கள் கூட கேட்கலாம் அமெரிக்காவில் பிறந்து இந்தியாவுக்கு விருந்தாளியாகவா ? வந்தீர் என... நான் எனஇனிய இந்திய மண்ணில் பிறந்ததிலிருந்தே இப்படித்தான், நான் கேட்டதற்காக ஏதோ உப்புக்கு சப்பாணி என்பதுபோல் ஒருபதிவை போடாமல் கொண்ட பாதையில் உறுதியாக இருக்கும் உங்களது நல்ல சிந்தனைக்கு எமது வந்தனம் நண்பரே..... நன்றி என்றும் நட்புடன் கில்லர்ஜி

      நீக்கு
  27. பதிவு இப்போ போட்டிடலாம்... அடைப்புக்குள் நம்பர் என்ன போடுவது.... தெரியவில்லை அண்ணா... வெறும் அடைப்பு மட்டுமே இப்போது த்லைப்பில்... தாங்கள் நம்பர் கொடுத்தால் தலைப்பில் ஏற்றப்படும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தேன் நண்பா கலக்கிட்டீங்க,,, இலக்கம் இப்பொழுது கலக்கமாகி விட்டது தலைப்பே சாந்தி பூந்தி ஆகிப்போய் விட்டது. (நம்பருக்கு வெயிட்டிங்க்) இதை எடுத்து விடுங்கள் நண்பா.

      நீக்கு
  28. மதுரையை கலக்கிய நண்பர்..கில்லர்ஜி .....தொடர்ந்து தமிழ் பதிவலகை கலக்குகிறார்.. வாழ்க!! வளர்க!!! அவரது கனவு!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாக்கு பொன்னாகட்டும் நண்பா,,,,

      நீக்கு
  29. நண்பரே!!! தமிழ்மனத்தின் வாக்கு பெட்டியை இணையுங்கள் நண்பரே...!! என் வாக்கு பொன்னாகும் நண்பரே!!!!...

    பதிலளிநீக்கு
  30. அய்யா கில்லரே! பத்துநாளா பதிவர் உலகமே உங்க படமும் பதிவும்தான்.
    இப்படி ஒரேயடியா எல்லாத்தையும் இழுத்துவிட்டீர்களே சாமி?
    நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க... நல்லதையே யோசிச்சிருக்கீங்க..
    வாழ்த்துகள்.. தொடரட்டும் புதிய சிந்தனைகள்.. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பும்படி இல்லை இருப்பினும் ‘’கலக்கல் மன்னனே’’ சொல்லும்போது நம்பத்தான் வேண்டியதிருக்கிறது இது உண்மையெனில் சந்தோஷமே ஐயா...

      நீக்கு
  31. கேள்விகள் சிறப்பு
    பதில்கள் சிறப்பு
    தொடரும் சிறப்பு

    நயமாய் கேள்விகள் பத்தை தொடுத்து
    இயல்பாய் பதில்கள் வரும் தொடர்ந்து..

    பதிலளிநீக்கு
  32. ரைட்டு...
    தொடர்பதிவு பீவர் ஆரம்பிச்சு வச்சுட்டிங்க.....
    ..
    கேள்வி பதில்கள் அருமை...
    பதில்கள் படி எல்லாமே இருந்தால் எப்படியிருக்கும்?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே,,,
      இப்படி நடந்தால் ? நீங்கள் இந்தக்கேள்வி கேட்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

      நீக்கு
  33. உங்களுடைய தளத்தில் இணைய killergee.blogspot.in என்று தட்டச்சு செய்தால்
    noreply@blogger.com(KILLERGEE Devakottai)atkillergee என்னும் தளத்துடன் நீங்கள் எழுதிய வேறு சிலபதிவுகள் வருகிறது.உ-ம் விளம்பரம் என்ற விழும்பாரம், காற்று. etc. எங்கு தவறு தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா எனது இணைப்பில்தான் தாங்கள் இருக்கிறீர்களே ? இதே பக்கத்தில் வலதுபுறத்தில் பதிவுகளின் தொகுப்பும் இருக்கிறது.

      முகவரி – www.killergee.blogspot.com

      நீக்கு
  34. இந்தப் பதிவு என் டாஷ் போர்டில் வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா யாருக்குமே போகவில்லை. கொஞ்சம் பிரட்சினை இருக்கிறது.

      நீக்கு
  35. அன்புள்ள கில்லர்ஜீ,

    கனவில் வந்தவர் யாரெனக்கேட்டால்...

    காந்தி என்றார் தோழா....!

    ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்...வலைத்தளத்தில் முதல்வராக வாருங்கள் என்று... உடனேவா...இதெல்லாம் ரொம்ப ஓவராத் தெரியலை...!

    நன்று...நன்று...!

    வாழ்த்துகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அப்படியெல்லாம் ஆசையில்லை நண்பரே ஏதோ எண்ணத்தில் உதித்ததை உதிர்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  37. கில்லர்ஜி நீங்க பத்த வச்ச பட்டாசு வேடிச்சிகிட்டு இருக்கு, முத்து நிலவன் சார் என்னை மாட்டி விட்டுட்டார். நானும் பதில் சொல்லி இருக்கேன். படிச்சு ஏண்டா இப்படி கேட்டோம் னு நினைச்சுடாதீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தேன் நண்பரே,,,, அனைத்து பதில்களிலுமே நகைச்சுவை அருமை.

      நீக்கு
  38. இது டெங்கு காய்ச்சலைவிட வேகமா பரவும்போல..
    எல்லாரும் கவனமா இருங்க.

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் சகோதரர்
    நீங்க கொளுத்திப் போட்ட பட்டாசு இணையப்பக்கமெல்லாம் மிளிர்வதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கனவிலும் வந்தாரே நானும் பதில் சொல்லிட்டேன் வேற என்ன பண்றது இல்லைன நண்பர்கள் நீங்க விட்ருவீங்க என்ன? சிந்தனைகளை விலாசப்படுத்தும் கேள்விகள் உங்கள் சிந்தனையிலிருந்து உருவாகியமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் சகோ. தொடர்வோம் இப்பதிவை இல்லை சாமி நம் நட்பை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே,,,,

      நீக்கு
  40. ஈசலாகப் பிறக்க விரும்பும் நண்பரே, நீங்கள் ஏன் ஈசனாகப் பிறக்க விரும்பக் கூடாது ? ஒரேயொரு எழுத்து தானே வித்தியாசம் ! மேலும் , மனிதன் தெய்வமாக முடியும் என்பதை நிரூபிக்கவும் முடியும் அல்லவா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பே சிவம்.அன்பே சிவம்.அன்பே சிவம்.அன்பே சிவம்.அன்பே சிவம்.அன்பே சிவம்.அன்பே சிவம்.அன்பே சிவம். இதை இடைவிடாமல். உச்சரித்து பாருங்கள் சகோ... நீங்கள் பெரியவரா?.. அல்லது அற்பமாய் நாம் கருதும் மற்ற உயிர்கள் பெரிதா என்பது தெரியும்.....

      நீக்கு
    2. வருக சிவமே.... பிறவியிலேயே சிறந்தது மானிடப்பிறவியே அதில் கில்லர்ஜியின் பிறவிதான் அற்பமாய் இருக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்தே... இது பிற மனிதர்களுக்கு அப்பாற்பட்டது.
      நல்லது நண்பரே ஆறறிவு மனிதனும் மிருகமாய் இருக்கிறான், ஐந்தறிவு மிருகம் கூட மனிதாபிமானம் காட்டுகிறது இதற்க்கான எடுத்துக்காட்டை அவசியம் பதிவிடுகிறேன் காரணம் பின்னூட்டத்தில் இதையெல்லாம் விளக்க முடியாது மீண்டும் வந்தமைக்கு நன்றி நண்பரே,,,

      நீக்கு
    3. ஐயா செல்லப்பா அவர்களுக்கு வருக...கேள்வி கேட்கும் ஈசனிடம் ஈசனாக கேட்டு விட்டால் ? பிறகு அவருக்கு வேலை ?
      அவரிடம் ஈசலாக கேட்கலாம், ஈயாக்கூட கேட்கலாம், ஈமு கோழியாக கேட்கலாம், பேணோடு சேர்ந்த ஈறுவாக்கூட கேட்கலாம், சுவையான ஈத்தம் பழமாக கூட கேட்கலாம், நீயே நானாக வேண்டுமென்று கேட்டால் ? கோபப்பட்டு ஈவு இரக்கமின்றி மீண்டும் பாழாய்ப் போன இதே கில்லர்ஜியின் பிறவியை கொடுத்து விட்டால் ? என்ன செய்வேன் ? ஆகவே பிறந்து உடன் மரணிக்கும் ஈசலாக கேட்டேன் ஐயா தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  41. தொலை நோக்குப் பார்வையுடன் இருக்கும் உங்கள் சிந்தையில் விளைந்த கேள்வியும் பதிலும் வெகுசிறப்பு. (வலை உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் என்னை இதில் கோர்த்துவிடாதிங்க. எனக்கு இதெல்லாம் பற்றி ஒன்றும் தெரியாது.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  42. மூலயெந்திரம் ஆகி முடிவின் தந்திரம் தாங்கி முழுமைக் காணும் ஆவல் உதித்தது எங்கும் சிறப்பான பதிவு அண்ணே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... சுழன்று வரட்டும் தீப்பந்து
      தீவிர வியாதிகள் சாகட்டும் தீயில்வெந்து
      அரசியவ்வாதிகள் இதைக்கண்டு
      தொலைந்து போகட்டும் மாண்டு
      இனியெனும் நல்லவர் தொண்டு
      கிடைக்கட்டும் வாழ பல்லாண்டு.

      நீக்கு
  43. பதிவுலகை கலக்கியது யாருன்னு...? ஒரு பதிவை தாங்கள் பதிவிடனும் நண்பரே!!!!

    பதிலளிநீக்கு
  44. ஆஹா இப்படி ஒரு கனவா? பதில்கள் அனைத்தும் அருமை, குறிப்பாக ஆறாவது எனக்குப் பிடித்தது. பலரையும் இந்தக் கனவு காண வைத்துவிட்டீர்களே..நானும் காண வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரி எனது மனவேதனையின் ஆறாத வடுக்களிலினால் உதித்ததே அனைத்து கேள்விகளும் அதிலும் நான் மிகவும் நேசித்து எழுதியது ஆறாவது கேள்வியே அதனைக்குறித்து எழுதியமைக்கு ஆறாயிரம் (6000) நன்றிகள்.

      நீக்கு
  45. பெயரில்லா11/20/2014 12:27 PM

    முற்றிலும் புதிய முயற்சி.

    படித்து ரசித்தேன்; சிந்தித்து மகிழ்ந்தேன்.

    நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி, பரமசிவனின் அறிவுப்'பசி'க்கு உணவூட்டிமையறிந்து எனது மனது நிறைந்தது நண்பரே...

      நீக்கு
  46. வணக்கம்
    ஆரம்பித்த வைத்த மகன் நீங்கள்தான் எங்கே பார்த்தாலும் தங்களின் புகைப்படந்தான் தங்களின் ஆலோசனைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே....

      நீக்கு
    2. சகோதரருக்கு வணக்கம். அனைவரது சிந்தனைகளும் சிறகடித்துப்பறக்க தாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு வாழ்த்துகள். சிறப்பான பகிர்வுகள்....

      நீக்கு
    3. சகோதரி கவிக்காயத்ரி அவர்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  47. தலைவரே..என் ஓட்டை போட்டுவிட்டேன். வெற்றி பெற்று விட்டீர்கள். வெற்றி பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது ஓட்டுக்கும், வெற்றி பெற வாழ்த்தியமைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  48. வணக்கம் சகோதரரே!

    நம் கனவுகள் சில, சிலநேரங்களில் பலித்தும் விடுகிறது. பல நன்மைகள் நடக்கும் தங்கள் கனவும் உண்மையாக வேண்டுகிறேன். தங்களின் வித்தியாசமான சிந்திக்கும் திறனை எண்ணி வியப்புறுகிறேன். பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.

      நீக்கு
  49. அருமையான க்ரியேட்டிவா கொடுத்த இந்த பகிர்வு ரசிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த பகிர்வு...

    கேள்வி கேட்ட காந்தியே திணறி இருந்திருப்பார் கண்டிப்பா...

    புரட்சிகரமான சிந்தனைகள் ஜீ.

    தொடர் பதிவாளர்களுக்கும் அருமையான பதில் சொன்ன உங்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  50. நம்பித்தான் ஆக வேண்டும் நான் கண்ட கணவை, “ துாங்கி எழுந்தவுடன் என் முன்னால் “ஈகிள் டவர்” சிரித்துக் கொண்டு நிற்கிறது...............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈபிள் டவருக்கு பல் இருக்கின்றதா.... நண்பரே...

      நீக்கு

  51. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "வலை - வழி - கைகுலுக்கல் - 1"

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துகளுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    http://youtu.be/KBsMu1m2xaE

    பதிலளிநீக்கு
  52. பெயரில்லா11/13/2015 1:57 PM

    தங்கள் பதிவு வாசித்தேன் இதன் கருத்துகள் வாசிக்கவில்லை.
    (வழமையாக கருத்துகளும் வாசிப்பேன்)

    பதிலளிநீக்கு
  53. இந்த பதிவை படிக்கவில்லை நான் அப்போது .
    இப்போது வந்து படித்தேன்.
    உங்கள் பதில்கள் அனைத்து சிந்திக்கவும் , அப்படி நடந்தால் நல்லது என்றும் நினைக்க வைத்து விட்டது.
    உங்கள் தொடர் பதிவில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது.
    அதற்கு அளித்த பதில்களை இன்று மீண்டும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  54. அருமை..அருமை.. ஏறக்குறைய ஐந்தாண்டுகள் கழித்து இந்த பதிவை படித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு