You Want See Big size ? Just Click One Time Photo Inside.
ஜெர்மனி, நாட்டைக் குறித்து அதன் அபார வளர்ச்சி,
கலாச்சாரம், கண்டு பிடிப்பாளர்களின் எண்ணிக்கை, பொருளாதாரம், அழிந்து வரும் மக்கள்
தொகை, அதன் காரணம், பெருகி வரும் ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்கள், அடுத்த இருபது ஆண்டுகளில் அதன் பாதிப்பு, இதனைக் குறித்து எனது பார்வையில், ஜெர்மனியில், ஜெயாவுடன் ஜெமினி என்ற
தலைப்பில் ஒரு கட்டுரை எழுத தீர்மானித்து உள்ளேன்.
அரண்மனை பெயர் மறந்து விட்டேன்.
வித்தியாசமான தூண்கள் வெளிப்புறந்திலிருந்து எடுத்தது.
பூமிக்கு அடியில்.
பெர்லினில், செக் பாய்ண்ட். அமெரிக்க ஆர்மி.
பெர்லின் சுவர்.
முழு மரத்தில்.
பெர்லின் சுவர்.
என்னைப்போன்ற பாமரர்களுக்கு வழிகாட்டி.
பூசணிக்காய்கள்தான்.
கல்லிலே கலை வண்ணம்.
ஆயிரக்கணக்கான தையல் இயந்திரங்கள் விற்பனைக்கு அல்ல.
காண்டாமிருகம்.
You Want See Big size ? Just Click One Time Photo Inside.
கீழே ஆறு ஓடுகிறது.
நண்பர்களே.... இதில் தொங்கி கொண்டு இருப்பதெல்லாம் நமது வலைச்சித்தர் அவர்களின்
திண்டுக்கல் பூட்டுதான்... இதைல்லாம்
இதில் பூட்டி வைத்தது யார் தெரியுமா ?
தெய்வீக காதலர்கள் ஆம் காதலர்கள் தங்களின் காதல்
இறுக்கமானதாக இருக்க வேண்டுமென நினைத்து இந்த இரும்பு கேட்டுகளில் பூட்டி சாவியை,
என்ன செய்வார்கள் தெரியுமா ? சாவியை.... சாவியை.....
சாவியை... கீழே ஓடிக்கொண்டு இருக்கிறதே.... தாமிரபரணி ஆறு அதில் வீசி விடுவார்கள்
இப்படிச் செய்தால் தனது காதல் கை கூடி விடுமாம், நம்மூரு கோயில் மரத்தடியிலே ஆத்தா மகமாயி எம்மவ வவுத்துல ஒரு புழு
பூச்சியைக்கொடு அப்படினு நேர்த்திக்கடன் வச்சு தொட்டிகட்டி தொங்க விடுறதுபோல அப்படியொரு
நம்பிக்கை இவங்களை என்ன சொல்றது ? நம்மூருல நித்தியை நம்புறகின்ற கூட்டம் இன்னும்
இருக்கே இவங்கெளப்போல அங்கே அவங்கே.
(அடப்பேதியிலே
ஓயிருவியலா... ஏண்டா அவ அப்பன், ஆத்தா கிட்டப்போயி பேசுங்களேன்டா,
எப்படியிருந்தாலும் அவுங்கதானே நாளைக்கு தாரை தம்பட்டம் முழங்க தாரை வார்க்கணும்)
சாவியை ஆற்றில் வீசினால் அந்த ஆறு அடிச்சு கன்னியாகுமரி
கடலில் கொண்டு போயி சேர்த்துட்டா, இவளும் காலம் பூராம் கன்னியாத்தானேடா இருப்பா,
இந்த முட்டாப்பயல்கள் எப்படி விஞ்ஞானத்துல இவ்வளவு வளர்ச்சி அடைஞ்சாங்கே ?
எனக்கு கூட மனதில்
தோன்றியது இப்படியே ஒரு ஓரமா சாக்கு விரிச்சு உட்கார்ந்துக்கிட்டு நம்ம நண்பர்
திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஊருல இருக்குற பூட்டைப்பூராம்
வளைச்சுப்புடிச்சு இங்கே அனுப்புங்க ரெண்டு பேருக்கும் 50/50 எப்பூடி ? அப்படினு கேட்கலாம்னு
தோணுச்சு, பூட்டும் சாவியும் ஒன்றாக இருந்தால்தானே சிறப்பு இந்தப்பழக்கம்
ஜெர்மனியில் மட்டுமல்ல, ஸ்விட்சர்லாண்டிலும் இருக்கிறது.
//போங்கடா
நீங்களும் உங்க காதலும்// அப்படினு கோபமாக திட்டிப்புட்டு
வந்துட்டேன்.
பெர்லின் ஜூவின்
முகப்பில்....
நான் வியந்த ஓவியம்.
போன இடத்தில்
கொழுந்தியாளுக்கு கல்யாணம்.
ஜெல்லி வகை மீன்கள்.
மியூசியம் 6-வது மாடி.
எனது கண்ணில் பட்ட மரத்தூர்.
நம்மூரு வைக்கோல்தான்.
பென்ஸ் மியூசியம்
வெளிப்புறத்தில்.
முதல் தட்டச்சு
இயந்திரம்.
புகைப்படக்கருவி.
சரி அடுத்து ஸ்ரீலங்கா போவோமா ?
இதன் தொடர்பான மற்ற
பதிவுகளை காணதவர்கள் கீழே ‘’கிளிக்’’கவும்.
ஒலியோடு, ஒளி காண்பீர்.
அனைத்து புகைப்படங்களும் அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குதம வை காண வில்லையே...?
வருகைக்கு கருத்துரைக்கும் நன்றி சகோ
நீக்குதமனாவை காக்கா தூக்கிட்டு போயிருச்சோ....
super super super ji
பதிலளிநீக்குநன்றி, நன்றி, நன்றி.
நீக்குஜி!... கை கொடுங்க..
பதிலளிநீக்குவண்ண மயமான படங்களைப் பதிவில் வைத்தமைக்கு!..
அபுதாபியிலிருந்து குவைத்துக்கா ?
நீக்கு1) இந்த முட்டாப்பயல்கள் எப்படி ? விஞ்ஞானத்துல வளர்ச்சி அடைஞ்சாங்கே?..
பதிலளிநீக்குஜெர்மனியில் உள்ள பழைமையான நூலகத்தில் - தமிழகத்தின் பழங்காலத்து ஓலைச் சுவடிகள் ஏராளமாக - காட்சிப் பொருளாக இருக்கின்றன என்று படித்திருக்கின்றேன்.
அது உண்மையா ஜீ!.. அப்படியானால் - அது ஒரு காரணமாகவும் இருக்கலாம்(!)
2) Mr. DD ஊருல இருக்குற பூட்டைப் பூராவும் வளைச்சு புடிச்சு – இங்கே அனுப்புங்க.. ரெண்டு பேருக்கும் 50/50 எப்பூடி?..
உங்க வியாபார நேர்த்தி - மிகவும் பிடித்திருக்கின்றது!..
3) போங்கடா நீங்களும் உங்க காதலும்.. அப்படினு கோபமா திட்டிப்புட்டு வந்துட்டேன்..
நீங்க திட்டினது அவிங்க காதுல விழுந்ததா ஜி!.. இருந்தாலும் திருந்திடுவாங்கே.. ன்னு நெனைக்கிறீங்க?!..
4) போன இடத்தில கொளுந்தியாளுக்குக் கல்யாணம்!..
மொய் வெச்சீங்களா!?..
01. ஓலைச்சுவடி நான் பார்க்கவில்லை, நீங்கள் சொல்வதும் உண்மையாகத்தான் இருக்கும்.
நீக்கு02. நான் எருமை மாடு வியாபாரம் செய்தாலும் அதிலும் நேர்மை வேண்டும் அப்படினு நினைக்கிறவன்.
03. நான் பூட்டைப்பார்த்து திட்டினேன், ஒரு மா3 யாகத்தான் என்னை பார்த்தாங்கே.... தமிழில் திட்டியதால் விளங்கி இருக்காதோ....
04. மொய் எப்படி ? வைப்பேன் பாயாசத்துல வடிச்ச தண்ணியை கலந்துட்டாங்கே...
வருகைக்கும், விஸ்தாரமான கருத்துரைக்கும் நன்றி ஜி.
உலக நாயகனின் உல்லாச பயணங்கள் படத்தின் பாடலோடு படத்தின் பார்ட் - 3
பதிலளிநீக்குபார்த்து மகிழ்ந்தேன்! நண்பா!
படம் சூப்பர் ஹிட்!
நட்புடன்,
புதுவை வேலு
பார்த்து மகிழ்ந்தமைக்கு நன்றி நண்பரே...
நீக்குtha.ma 1
பதிலளிநீக்குதமிழ் மணத்தின் மணம் அறிந்து மீண்டும் வந்து வாக்கு அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி
நீக்கு
பதிலளிநீக்குநண்பர் கில்லர்ஜி,
அற்புதமான 'டேஸ்ட்' உங்களுக்கு.
ஜெர்மனியை -ஏதோ ஒன்றிரண்டு திரைப்படங்களில்
பார்த்ததோடு சரி. அதற்கு மேல் 'கொடுத்து' வைக்கவில்லை..!
ஒரு நல்ல வலைப்பதிவை இவ்வளவு நாளாக
பார்க்காமல் இருந்து விட்டேன். அறிமுகம் செய்து
வைத்தமைக்கு நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி தொடந்தால் நலமே....
நீக்கு“போங்கடா நீங்களும் உங்க காதலும்” திட்டாதிங்க நண்பரே...காதல் மயக்கத்தில் முட்டாள்தனமாக செய்கிறார்கள்... .....
பதிலளிநீக்குநண்பரே.... காதல் மயக்கம் என்றால் அவளையல்லவா பூட்டவேண்டும்.
நீக்குஜென்டில்மேனின் பயண அனுபவத்தை ரசித்தேன் ,கொளுந்தியாளின் கல்யாணத்தில் கலந்துக்க முடியவில்லையே என்று ஏக்கமாய் போய்விட்டது:)
பதிலளிநீக்குத ம +1
கவலையை விடுங்க பகவான்ஜி சீமந்தம் நடக்கும்போது 2 பேரும் சேர்ந்தே போவோம்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
கடந்த கால நினைவலைகளை மிகவும் கண்கவர் படங்களுடன்... பதிவில் அசத்தி விட்டீங்கள்... வாழ்த்துக்கள் ஜி. த.ம6
எனதுபக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: காதலும் காவியம்படைக்கட்டும்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் நண்பரே.... தங்களின் காவியக்காதல் கவிதையை கண்டு மனம் கணத்தேன்.
நீக்குபடங்கள் அருமை அண்ணா...
பதிலளிநீக்குபோன இடத்துல ஏன் கொழுந்தியாளுக்கு கல்யாணம்? வீட்ல மாப்பிள்ளை பார்க்கலையா? .. ஹி...ஹி...
த.ம. வாக்குப் போட்டாச்சு அண்ணா.
வாருங்கள் நண்பரே.... வீட்டுல பார்க்கிறதுக்குள்ளே சிரிக்கியை சகலை ஒருத்தன் பூட்டு கொடுத்துட்டான்.
நீக்குஅருமை சகோ . நகைச்சுவையுடன் பதிவும் படங்களும் அற்புதம். :)
பதிலளிநீக்குவருக சகோ கருத்துரைக்கு நன்றி
நீக்குதமிழ் மணம் 8 :) ரொம்ப வருஷம் கழிச்சு ஓட்டு போட்டிருக்கேன் சகோ :)
பதிலளிநீக்குஅரசியல்வாதிகள் மீது தங்களுக்கு கோபம் இருப்பது நியாயம்தான் அதற்காக என்னையும் அவர்கள் லிஸ்டில் சேர்க்காமல் ஓ்ட்டு போட்டமைக்கு நன்றி சகோ.
நீக்குவாவ்.. படங்கள் கலாட்டா ... அருமையான பதிவு ஜி.. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாங்க தோழரே நன்றி
நீக்குதம+
பதிலளிநீக்குநன்றி
நீக்குநல்ல Idea-வா இருக்கே ஜி... பார்சல் அனுப்பி வைக்கவா...? ஹிஹி...
பதிலளிநீக்குசெல்லாது செல்லாது இப்போ அபுதாபியிலே செல்லாது.
நீக்குநான் விரும்பிப்படிக்கும் நாடுகளில் ஒன்று ஜெர்மனி. தங்களின் பதிவு மூலமாக ஜெர்மனியைப் பற்றி கூடுதல் விவரங்கள் அறிந்தேன்.அவ்வப்போது வெளிநாட்டுப் பத்திரிக்கைகளைப் படிப்பதுண்டு. ஒரு முறை ஜெர்மனியிலிருந்து வெளிவரும் Der Spiegel என்ற இதழினைப் படித்த நினைவு. தம+1
பதிலளிநீக்குமுனைவரின் வருகைக்கும், விஸ்தாரமான கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.
நீக்குஅந்த நாட்டின் மக்கள் தொகை குறைந்து கொண்டு வருகிறது இதற்க்கு காரணம் பெண்கள்தான் காரணம்... வேண்டாம் அதை மையமாக வைத்துதானே எழுதப்போகிறேன்.
படங்கள் அருமை. வாத்து வடிவில் இருப்பது சுரைக்காய் என நினைக்கிறேன். பூட்டு .........எப்பேர்பட்ட நாடானாலும் மூட நம்பிக்கை போகாது போல!! ஏன் மக்கள் தொகை குறைய வேண்டும்?, ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்கள் எண்ணிக்கை அதிகமாகிறது.............. ம்......... ஆவலோடு அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்!!
பதிலளிநீக்குவருக நண்பரே சுரைக்காய்தான் வருகைக்கு நன்றி
நீக்குஎழுதுவேன் கட்டுரை விரைவில்.
ஜேர்மனியில் நிறையபேர் இருக்காங்க போல. பூட்டுக்கள் போட்ட இடம் இங்கு cologne ல இருக்கு.நீங்க கொலோன் பக்கம்(cologne west site) வந்தீங்கன்னா இதைவிட நிறைய பார்க்கலாம். நீங்க east,south லதான் இடங்கள் பார்க்கிறீங்க.
பதிலளிநீக்குஅந்த அரண்மனை ஸ்டுட்காட் (stuttgart) அருகில் இருக்கும் Ludwigsburg அரண்மனை.
ஜேர்மனி காகங்களை படம் பிடிப்பது கஷ்டம்.ஹி.ஹி.
எழுதுங்க விரைவில்.....படங்கள் தொகுப்பு அருமை.
வாருங்கள் சகோ தங்களது தொடர் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது ஸ்டூட்கார்ட் தெரியும் அங்குதானே தங்கினேன் அரண்மனையின் பெயரைத்தான் மறந்து விட்டேன் விளக்கவுரைக்கு நன்றி.
நீக்குவணக்கம்!
பதிலளிநீக்குஇன்றைய எனது பதிவு ""மாங்கல்ய(ம்) மந்திரம் " (சிறுகதை)"
படித்து கருத்துரை தருமாறு வேண்டுகிறேன்!
நன்றி!
இதே மந்திரம் படிக்க வருகிறேன் நண்பா....
நீக்குஉள்ளத்தை கொள்ளையடிக்கும்
பதிலளிநீக்குஅருமையான காட்சித் தொகுப்பு
தொடருங்கள்
வருகைக்கு நன்றி நண்பரே....
நீக்குபுகைப் படங்கள் ஒவ்வொன்றும் மனதை கொள்ளை கொள்ளுகின்றன நண்பரே
பதிலளிநீக்குஅருமை
பூட்டைத் தொடங்கவிட்டு அங்கேயும் வேண்டுதல் செய்கிறார்களா
ஆச்சரியமாக இருக்கிறது நண்பரே
தம +1
வருகைக்கு நன்றி ஆம் நண்பரே சகோ பிரியசகி அவர்களின் கருத்துரையை படித்துப்பாருங்கள்.
நீக்குபடங்கள் எல்லாம் அருமையாக இருக்குதே... இந்தப்படத்தையெல்லாம் நீங்க கையில வச்சுயிருக்கிற புகைப்பட கருவியில புிடித்ததுங்களா...!!!!!!!!!!!!
பதிலளிநீக்குகையில் இருப்பது வீடியோ கேமரா நண்பரே...
நீக்குமிகவும் தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன்.
பதிலளிநீக்குவியப்பில் ஆழ்த்தும் அதி அற்புதப் புகைப்படங்கள்! சுவை பயக்கும் புத்தம் புதிய தகவல்கள்.
அழகழகான பின்புலங்களில், நண்பர்களுடன் மிக அழகாகக் காட்சி தருகிறீர்கள். என் கண்ணே பட்டுவிடும்போல் இருக்கிறது.
அடுத்து வரும் கட்டுரைகளை வாசிக்கவும், புகைப்படங்களைக் கண்டு மகிழவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி கில்லர்ஜி.
நண்பரின் வருகைக்கும் விஸ்தாரமான கருத்துரைக்கும் நன்றி, முடிந்த அளவு தங்களது ஆவலை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.
நீக்குதங்களின் பதிவு அருமை. புகைப்படங்கள் நேரில் பார்த்த அனுபவத்தை தருகிறது. நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ.
நீக்குபுகைப்படங்கள் அத்தனையும் அருமை, நண்பா.
பதிலளிநீக்குகோ
நல்ல பிள்ளைபோல வந்து கண்டு களித்தமைக்கு நன்றி நண்பா.
நீக்குஅழகான படங்கள். அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி திரு. துபாய் ராஜா.
நீக்குபடங்களும் தகவல்களும் அருமை. திண்டுக்கல் பூட்டு விற்பனை - நல்ல ஐடியாவா இருக்கே.... இங்கே திருவரங்கத்து கோவிலின் உள்ளேயும் இப்படி பூட்டு போட்டு இருக்கிறார்கள். எதற்கு என்பது அவர்களுக்கே வெளிச்சம்!
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
பதிலளிநீக்கு