இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 23, 2015

கிருஷ்ணகிரி கிறுக்கன் கிருஷ்ணன்.

 
கிளிக்கண்ணு பறந்தாள்...
கிஷோருடன் எனைமறந்து...
அவன் கணவனாய் கிடைக்கவும்
கிறுக்கனானேன் அவளுக்கு
கிடைக்க வேண்டியவள்
 எனக்கு கிடைக்கவில்லை,
 ஆதலால் கிடைத்ததை
 எல்லாம் கிடக்கட்டுமென
 கிடைப்பில் கிடத்தினேன்,
 கிளியவள் கிளப்பிய கிளர்ச்சியால்
 கிழிந்த துணியை கிழித்தெறிந்தேன்,
 கிணற்றில் குதித்தேன்
 கிழித்து கீறியது முட்கள்
 காரணம் தண்ணீரற்ற கிணறு...
 கிள்ளிப்பார்க்க சதையில்லாத 42 கிலோ
 உடலில் கிரிட்டிகல் தையல்கள்...
 கில்லி விளையாடும் சிறார்கள்கூட
 எள்ளி நகையாடினர் பல்லி போகுது
 பாரீர் யென சொல்லி,
கிர்ரென்று கிளப்பியது மூளை
 கிளியவளை கிழிதாலென்ன ?
கிளம்பினேன் சங்ககிரிக்கு...
கிச்சனில் கிளியவள்
 முள்ளங்கி கிச்சடியோடு
கிறுக்கன் எனை கண்டதும்
கண்களில் கிலி கிளிக்கு
கீழே கிடத்தி அவளை
கிழிக்க பாய்ந்தபோது...‘’டங்’’
கிண்னென்று சுற்றியது தலை
தள்ளாடி பார்த்தபோது கில்லாடி
கிஷோர் கையில்தடி தடியன்களுடன்
கிறங்கி விழுந்தேன் கிரைண்டர்மீது
கிரிட்டிக்கல் தையல் போட்டு
கீழ்ப்பாக்கத்தில் கிடந்தேன்
கிருஷ்ணகிரி கிருஷ்ணன் நான்.
 
குஷ்பு-
கில்லர்ஜி ஸூப்பர், கல கலனு கலக்கிட்டீங்க..
கலா மாஸ்டர்ர்ர்ர்ர்ர்-
குஷூ சரியாக சொன்னாள், கில்லர்ஜி கிளி.. கிலி.. கிழிச்சுட்டீங்க...
நமீதா-
வாவ் நச்சுனு இருக்கு கில்லர்ஜி மச்சான்.
Video
(Please ask Audio Voice)
 
சாம்பசிவம்-
என்ன ? இவளுகள்....
சிவாதாமஸ்அலி-
ஆஹா...... நமக்கு வேலையில்லையோ ?
CHIVAS REGAL சிவசம்போ-
வச்சாளுகளா.... ஆப்பு.


50 கருத்துகள்:

  1. கிருஷ்ணகிரி கிறுக்கன் கிருஷ்ணனிடம்
    கிருபை கிடைக்கும்
    "கிங்கினி கிடா மீசை கில்லர்ஜிக்கு"
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் வருகை தந்து முத்தாய்ப்பாய் கருத்துரை வைத்தமைக்கு நன்றி நண்பா.

      நீக்கு
  2. பார்த்தேன், படித்தேன், பசையில்லை, படியவில்லை, படிமத்தில்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா படித்தது வரை சந்தோஷம் அடுத்து ‘’ஸூப்பர் க்ளு’’வோடு கவிதை தருகிறேன் நன்றி.

      நீக்கு
  3. கில்லர்ஜி இன் கிறுக்கலில்
    கிருஷ்ணகிரிக் கிறுக்கனா
    நன்று
    ஆனால்,
    மானாட மயிலாட ஆள்கள்
    ஏன் வந்தாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... அந்தக் கோஷ்டிகள் எப்படி இதுக்குள்ளே வந்தாக ? இதான் எனக்கும் குழப்பம்.

      நீக்கு
  4. 'கி...கி ....கி ....' யென சிரித்தேன். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து சிரித்தமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  5. வணக்கம்
    ஜி
    அருமையாக சொல்லியுள்ளீர்கள் கீழப்பாக்கம் போகவேண்டுமா....... பகிர்வுக்கு நன்றி த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் யாரு எங்கே போகனுமோ போய்த்தானே ஆகனும்

      நீக்கு
  6. ஹா... ஹா... நீங்க அசத்துங்க ஜி...

    பதிலளிநீக்கு
  7. கோபம் கண்ணை மறைக்க சென்றதால்..கீழ்பாக்கத்தில் கிடக்க வேண்டிய நிலை...கிருஷ்ணனுக்கு...--அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா, கோபம்தானே பலபேருடைய வாழ்க்கையை நாசம் ஆக்குது.

      நீக்கு
  8. கவிதை போட்டியின் நிர்வாக குழுவில் பதவி கொடுத்த போதே இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்தேன். நடந்து விட்டது.

    கி..கி..கி.. நல்ல கவிதை!
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே இது நேற்று வந்தது நான் 2 ½ வயசுலயே ¾ அடி ஹைக்கூ எழுதுனவன்.

      நீக்கு
  9. கிருஷ்ணகிரி கிறுக்கனுக்கா இந்த கதி?..
    அவன் ரொம்ப நல்லவனாச்சே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஜி அவன் தலையெழுத்து இப்படியாகிடுச்சு.

      நீக்கு
  10. காமெடி பகடி....அசத்தல்

    பதிலளிநீக்கு
  11. நீங்களும் என்னவெல்லாமோமுயற்சி செய்கிறீர்கள். பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா முயற்சி திருவினையாக்கும் 80 தெரிந்தவன் ஐயா.

      நீக்கு
  12. கிருஷ்ணா கிருஷ்ணா உனக்கேன் இந்தச் சோதனை :)

    த ம 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் விதிதான் கவிஞரே வேறென்ன செய்யமுடியும்.

      நீக்கு
  13. அது சரி கிகி எப்போ மானாட மயிலாடுல ஆடினாறு??!!!!!! இல்ல கீழ்ப்பாக்கத்துல கிடக்கும் போது இந்த நிகழ்ச்சி மயக்கத்துல வந்துச்சோ....ம்ம்ம் கிகி நிறைய மானாட மயிலாட பார்ப்பாரு போல....

    கிகிகிகி......கிகிகி....இது வேற ஒன்ணும் இல்ல ஹிஹிஹி தான் அப்படி கிகி படிச்சுட்டு அப்படி வந்துருச்சு...கிகி க்கு ஏன் இந்த வேண்டாத வம்பு அந்தக் கி கிட்ட.....ஹஹஹஹ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யய்யோ இன்னொரு தடவை விளையாட்டுக்கு கூட என்னை அப்படி சொல்லாதீர்கள் மானாட மயிலாடவை கிழித்து எழுத நிறைய தகவல்கள் வைத்து இருக்கிறேன் நானா அதைப் பார்ப்பேன்

      நீக்கு
  14. கிறுக்கிய கதை என்றாலும் கிறுக்கனின் கதை கிறுகிறுக்க வைத்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  15. இவள் இல்லாட்டி வாழ்க்கையே இல்லைன்னு நினைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த பஸ் மிஸ் ஆச்சா, பின்னாடியே இன்னொன்னு வரும், எனவே போன பஸ்சுக்காக வருத்தப் படாதே, இது அனுபவஸ்தர்கள் சொல்வது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் நண்பா ஆனால் இந்தக் கிறுக்கன் கிருஷ்ணனுக்கு தெரியலையே எல்லாம் வயசுக்கோளாறு வேறென்ன...

      நீக்கு
  16. ஏன் இப்படி? ஒரு பெண் கூடவா வாழ்த்தவில்லை என்று கேட்டதற்கு இப்படியா? இப்படி தான் கிறுக்கானதா? சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா இருந்தவனை உசிப்பேத்துனா இப்படித்தான் ஆகும்.

      நீக்கு
  17. இவன் பெயரில் மட்டுமே கிருஷ்ணன் ,அந்த மாய 'கிருஷ்ணனாய் ' நினைத்துக் கொண்டு லீலைகள் செய்தால், இந்த கதிதான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் லீலாவதி கிடைப்பாளா ?

      நீக்கு
  18. அன்புள்ள ஜி,

    கி கி கி எத்தனை ‘கி’ வந்து கிரங்க வைக்கிறது.

    காணொளியும் கண்டேன்... கி...கி...கி...கில்லர் ஜி...! இரசித்தேன்..!

    நன்றி.
    த.ம. 14.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் மணவையாரே ஏன் ? இப்படி கி. கி. கி உளறல் ?

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே..

    நாம் அனைவருமே நம் தலையில் "அவன் ( பகவான் கிருஷ்ணன்) " கிறுக்கிய எழுத்தின் மயக்கத்தில் தலை கிறுக்கித்தானே தினமும் கிறங்கி கொண்டிருக் கிறோம். இதில் கிருஷ்ணகிரி கிருஷ்ணனின் சோகக்கதை வேறு தலையை அதிகமாக கிறுகிறுக்க வைத்து விட்டது. வார்த்தைகளை கி ( key ) யில் கோர்த்து அருமையாக எழுதி உள்ளீர்கள் ! நன்றி.

    பகிர்ந்தமைக்கு கீழ்த்துக்கள்..ஸாரி ஸாரி வாழ்த்துக்கள். கீ ( ghee ) அதிகமாகி விட்டதால் சற்று தலை சுற்றி கை தடுமாறி வார்த்தை தவறி விட்டது.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சகோ எல்லாம் கிருஷ்ணனின் லீலைதான் நம் கையில் என்ன ? இருக்கிறது
      மௌஸ்தான் இருக்கிறது வேறென்ன சொல்ல முடியும்.

      நீக்கு
  20. கி யில் விளையாடி விட்டீர் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  21. ஓரெழுத்து மந்திரம் எங்களை ஈர்த்துவிட்டது. அடுத்த எழுத்து எதுவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வருகைக்கு நன்றி அடுத்த எழுத்து ஆலோசிக்கின்றேன்.

      நீக்கு
  22. பெயரில்லா4/25/2015 2:47 PM

    கில்லர்ஜி நீர் ஒரு
    பில்லர்ஜி இங்க் பில்லர்ஜி
    காலி இடத்தை காற்று நிறைப்பது போல்
    வரட்டுப் பிரதேசங்களை புரட்டி
    வன்னமயமாக்கும் வனப்புத் தோட்டா
    வளமையான ஒர் கற்பனைக் கோட்டா
    வலங்கைமான் பசீர் கடை புரோட்டா
    சிரிப்பான கவிதை தரும் இருட்டுக்கடை
    சிந்தனையை கடனா தரும் சேட்டுக்கடை
    இளைஞர்கள் தருவர் பாஸ்மார்க்-உன்
    கவிதை படித்தால் நாடார் டாஸ்மார்க்
    வருத்தப்படும் வாலிபரின் துன்பங்களை
    மெரசலாக்கும் கோலி சோடா
    மந்தமான மனத்தை மாற்றிடும்
    ஒன்னாம் நம்பர் சேட்டுப் பீடா
    கில்லர்ஜி நீ பில்லர்ஜி-ஆம்
    புதுக்கவிதை உலகின் பில்லர்ஜி
    கான்க்ரீட் பில்லர் ஜி
    நீவீர் வாழ்க உம் கவிதை வளர்க.

    ”டெராபைட்” தாமஸ்

    பதிலளிநீக்கு
  23. அடடே கவிதை போன்றே பாராட்டு நன்பா அருமை நண்பா ''டெராபைட்''தாமஸ்

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா4/25/2015 4:25 PM

    ”இங்க் பிள்ளர்” என பிழை திருத்திக் கொள்ள வேண்டுதலுடன் கேட்டுக் கொள்ள விழைகிறேன்.

    பதிலளிநீக்கு
  25. அருமையாக எழுதியிருக்கிறீங்க. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஒவ்வொரு முறையும் இரண்டு பதிவுகளைப்படித்து கருத்தும், வாக்கும் அளிப்பதற்க்கு நன்றி எப்படியாவது வந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது மீண்டும் நன்றி.

      நீக்கு