இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

அக்னிப்பறவை

 
எனது பார்வையில் இந்தியா மதவாதமற்ற நாடு என்று இந்திய மக்களாகிய 120 கோடி நபர்களும் பொய் சொல்லிக்கொண்டு வாழ்கிறோம் உண்மைதானே ஆனால் அந்தப்பொய் ஒருநாள் ஒரேயோருநாள் மட்டும் உண்மையாகியது அந்நாள் 30.07.2015 ஆம் இந்திய மக்கள் அனைவரும் மதம் கடந்து, ஜாதி மறந்து, குலம் துறந்து, சாஸ்திரங்கள் பறந்து புண்ணிய ஸ்தலமான இராமேஸ்வரத்தை நோக்கி படையடுத்தனர்....
ஏன் ? ஏன் ? ஏன் ?

தியாகச்செம்மல் கலாமைக் காணலாம் கடைசியாக என.... முடிந்ததா எப்படி முடியும் ? 

கதறியது இராமேஸ்வரம் தீவு மக்கள் வெள்ளத்தின் கனம் தாங்காது வேண்டாம் வேண்டாமென கதறல் ஒலி கேட்டு தீவு மூழ்கி விடக்கூடாதென கருதி மூடப்பட்டது பாம்பன் பாலம்.


எனது வாழ்வில் இன்றைய நாள்வரை எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் மறைந்திருக்கின்றார்கள் ஆனால் நான் யாரையும் பார்க்க விரும்பியதில்லை, அவர்களின் மறைவுக்கு வருந்தியதும் இல்லை ஒரேயொருவரைத் தவிற அவர்தான் கல்விக்கண் திறந்த கர்மவீரர் உயர்திரு. கு. காமராசர் இவரின் மறைவுநாள் 1975 அக்டோபர் 02 இருப்பினும் எனது அகவை போறா என நானே கணித்து மறந்து விட்டேன் நான் மிகவும் நேசித்த ஒரு மக்கள் தலைவன் என்றால் அது உயர்திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மட்டுமே எமது வாழ்வில் ஒரு நாளாவது இவரை சந்திக்க வேண்டும் சில வார்த்தைகளாவது பேசவேண்டும் என்று ஆசைப்பட்டேன் தாங்கள் நினைக்கலாம் இவரிடம் நீ எப்படி பேசமுடியும் ? என்று சாதாரண மனிதர்களை மிக சாதாரணமாக சென்று சந்திக்கும் இந்த தலைவனை நானும் ஒருநாள் சந்திக்க முடியாதா ? முடிந்திருக்கும் இந்த தேவகோட்டையான் அபுதாபியில் கோட்டை விட்டு விட்டான் ஆம் அன்று எமது துரதிஷ்ட்டம் நான் பணியின் காரணமாய் துபாய் போக வேண்டிய கட்டாய நிலை.

 
கலாம் நீ இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம்
நம் இந்தியாவுக்கு இன்னும் பெருமை சேர்த்திருக்கலாம்
அன்று எனது மேலாளர் விடுமுறை எடுத்திருக்கலாம்
என்னை துபாய் போகச்சொல்லாமல் இருந்திருக்கலாம்
கைப்பேசியில் நான் அனுமதி வாங்கி தடுத்திருக்கலாம்
நானும் உன்னை அருகில் நின்று பார்த்திருக்கலாம்
ஒருக்கால் உன்னுடன் சில வார்த்தைகள் பேசியிருக்கலாம்
உன்னிடம் நான் என்வகை கேள்விகள் கேட்டிருக்கலாம்
அதற்க்கும் நீ உன்வகை பதில்கள் தந்திருக்கலாம்
உன்னுடன் எனது படமும் நாளிதழ்களில் வந்திருக்கலாம்
அந்த நினைவுகள் என்னுள் என்றும் நிலைத்திருக்கலாம்
அதையும் நான் எமது வலைப்பூவில் எழுதியிருக்கலாம்
எமது வலைப்பூ நண்பர் - நண்பிகள் படித்திருக்கலாம்
அதற்க்கு ஏராளமான கருத்துரைகள் கிடைத்திருக்கலாம்
தமிழ் மணம் ஓட்டுகளும் கூட விழுந்திருக்கலாம்
மறுநொடியே அந்தப்பதிவு மகுடத்தில் ஏறியிருக்கலாம்
இதில் நானும்கூட உன்னால் பெருமை பட்டிருக்கலாம்
நீ தற்காலம் இராமேஸ்வரத்தில் ஓய்வாக உறங்கலாம்
தியாகியான உனக்கு நிச்சயமாக மறுபிறவி உண்டாகலாம்
ஜாதி மதம் துறந்த மனித நேயமுள்ள நீ மறுபடி பிறக்கலாம்
இனி ஜாதி மதம் மறந்து மக்கள் உன் பெயரை வைக்கலாம்
கலாம் நீ என்றும் மானிட மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கலாம்

(கவிதை வேறு ரீதியில் போனதால் பகுதியை நீக்கி விட்டேன்)

 பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.
 
 
 
 

இனி பிறக்கும் இந்திய குழந்தைகளுக்கு ‘’கலாம்’’ என்ற மந்திரப்பெயரை அனைத்து மதத்தினரும் வைத்து அவருக்கு மரியாதை செய்து சந்தோஷிக்கலாம் நமக்காகவே வாழ்ந்த கலாமுக்கு இதுவே அவரது ஆன்மாவுக்கு நாம் கொடுக்கும் உண்மையான மரியாதை ஜாதி மதம் மறந்தால் இதை அனைவரும் சரியென ஏற்கலாம் காரணம் பிறநாட்டுக்கு விலை போயி அடைக்கலம் ஆகாமல் இந்தியாவுக்காக விண்கலம் விட்டவருக்கு சலாம் சொல்வதில் மாற்றுக்கருத்து இல்லையெனில் கலாம் என்ற பெயர் வைக்கலாம்.

 பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.
 
 
 
 
 
பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.
 
 
 பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.

2003 Oct 20 U.A.E தலைநகரமான அபுதாபி இந்நாட்டின் அதிபர் மேதகு ஷேக் கலீஃபா பின் ஸாயித் பின் சுல்த்தான் அல் நஹ்யான் அவர்கள் தனது பரிவாரங்களுடன் வரவேற்று மகிழுந்திலிருந்து இறங்கி சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்ட நடைபாதையில் தனது அரண்மனைக்குள் முப்படைத் தளபதிகளின் மரியாதையுடன் அழைத்துப் போகின்றார். யாரைத் தெரியுமா ?


நம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அக்னிப்பறவை மேதகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களை முப்படைப்படை பரிவாரங்கள் முடிந்தும் உள்புறம் சீருடை அணிந்த காவல்வீரர்கள் வரிசையாக ஒரே திசையை நோக்கி கம்பீரமாக நிற்கின்றார்கள் அனைவரின் மரியாதையை புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டு காவல்வீரர்களை பார்த்துக் கொண்டே நடந்து போன அக்னிப்பறவை சட்டென நிற்கிறது மறுநொடி கத்துகிறது...

‘’டேய் மாடசாமி’’ 

மிரண்டது காவல்வீரர் மாடசாமி மட்டுமல்ல ! மற்ற காவல்வீரர்கள் மட்டுமல்ல ! புகைப்படக்காரர்கள் மட்டுமல்ல ! பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல ! அங்கு அவருடன் சென்று கொண்டு இருந்த அனைத்து ஷேக்குமார்களும்தான் இதென்ன மொழி ? தொடர்ந்து சிவப்புக் கம்பளத்தை விட்டு இறங்கிய அக்னிப்பறவை கேட்டது
 
எப்படிடா இருக்கே ? 

தன்நிலை மறந்த காவல்வீரர் மாடசாமி சட்டென இந்துமத சாஸ்திரப்படி கையெடுத்து வணங்குகிறார் கண்களில் நீர்த்துளிகள் தொண்டை அடைத்து பேசமுடியவில்லை வருவது யாரென்று தெரியும் ஆனால் பேசமுடியுமா ? இதோ அவரே பேசி விட்டாரே சராசரி நிலையில் இங்கு வணங்குதல் கூடாது இருப்பினும் மனித உணர்ச்சிகளுக்கு சம்பிரதாயங்கள் தெரியுமா ? தொடர்ந்து அந்நாட்டு மன்னரிடம் அக்னிப்பறவை ஆங்கிலத்தில் சொல்கிறது.

இவன் 25 வருஷத்துக்கு முன்பு என்னிடம் மகிழுந்து ஓட்டுனராக இருந்தான் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.

 பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.
 

நண்பர்களே... நண்பிகளே... நம்ப முடிகிறதா ? நடந்த சம்பவத்தை உண்மை அக்மார்க் உண்மை இந்த சம்பவத்தால் மாடசாமிக்கு கிடைத்த அங்கீகாரங்களும், பதவி உயர்வுகளும், சம்பள உயர்வுகளும் நான் உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா ?


விண்கலம் சென்ற கலாம் இன்று உனக்கு பட்டிதொட்டி தொடங்கி பட்டணங்கள் வரை, கைவண்டித் தொழிலாளி முதல், ஸ்கைக்கு பறப்பவன் வரை இரங்கல் தெரிவித்து பதாகைகள் வைத்திருந்தானே.... ஜாதி மதம் மறந்த மனிதநேயமுள்ள உனது அன்பால்தானே படைத்தவன் உன்னை ஏன் ? அழைத்துக் கொண்(றா)டான் தெரியுமா ? இன்னும் சிறிது காலம் நீ பூமியில் இருந்தால் ஜாதி மத உணர்வுகளை மறக்கடிக்கும் மருந்தினை நீ கண்டு பிடித்திருக்கலாம் என்பதால்...

நீ மக்களுக்கு அதிகம் உழைத்து விட்டாய்
 ஆகவே தற்சமயம் நீ பேக்கரும்பில் உறங்கு.
ஆனால் மீண்டும் பூமியில் வந்து இறங்கு.
விண்கலம் வென்று வந்த கலாம் உமக்கு எமது சலாம்.


உமக்கு பதாகைகள் போதாதெனில் எழுந்து வந்து சொல் ! பார்க்கலாம்
உம்மிடம் நான் அதிசயித்தவை


விண்கலம் தீட்டிய கைகள் வீணையும் மீட்டியதே....
ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டிய விடயம் இதோ...

வாரணாசி: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்து வகையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சிறப்பு கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

காணொளி அவசியம் காண்பீரே.... அளவு குறைத்து வைத்துள்ளேன்.

குறிப்பு - நான் 30.07.2015 அன்று நான் இராமேஸ்வரம் போகாததற்க்கு காரணம் புதுமணத் தம்பதிகளுடன் சுமார் இருபது விருந்தினர்கள் எனது அழைப்பின் பேரில் தேவகோட்டை வந்திருந்தார்கள் அவர்களை விட்டு நான் எப்படி வரமுடியும் ? வேலூர் பதிவர் நண்பர் அன்பேசிவம் திரு. சக்தி அவர்கள் அழைத்து கேட்டார் நான் தேவகோட்டை வருகிறேன் உங்களுடன் இராமேஸ்வரம் போகலாமென எனது நிலையை விளக்கி மன்னிப்பு கோரி விட்டேன். 

பதிவின் நீளம் கருதி முடிக்கின்றேன்
கில்லர்ஜி.

68 கருத்துகள்:

  1. கலாம்... காலம் போற்றும் நாயகன்...
    படங்களுடன் பகிர்வும் அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே முதல் வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  2. "கலாமுக்கு சலாம்"
    வார்த்தையின்றி தவிக்கின்றேன் நண்பா!
    தலை வணங்குகிறேன்!
    நன்றி
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  3. திரு மாடசாமியை கலாம் அடையாளம் கண்ட அனுபவம் இப்போதுதான் படிக்கிறேன். மகத்தான மனிதர் கலாம்.

    இந்தக் காணொளி ஏற்கெனவே வாட்சப்பில் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே மகத்தான மனிதரே... காணொளி எனக்கு முன்பு சிவானந்தா குருகுலத்தில் இருந்து வந்தத C.D அதிலிருந்து சிறிய அளவில் தங்களுக்கு தந்து இருக்கிறேன் குருகுலத்துடன் எனக்கு 15 வருடமாக தொடர்பு இருக்கின்றது நண்பரே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. ஆஹா, எத்தனை கலாம்கள், அசந்து போனேன், நண்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கவிதைக்கு கீழே படித்தீர்களா ? பகுதியை நீக்கி விட்டேன் நன்றி.

      நீக்கு
  5. மாடசாமி சந்திப்பு நிகழ்வு... நெகிழ்ந்து விட்டேன் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜி அவருக்கு எப்படி இருந்திருக்கும் ?

      நீக்கு
  6. அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என பெருமைப்பட்டுக்கொள்வோம். அவரது கொள்கைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடிக்க முயற்சிப்போம். அதுவே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் முனைவரே நாம் பெருமைப்பட ஒரு மாமனிதர் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. மாடசாமி
    நெகிழச் செய்யும் சந்திப்பு ஐயா
    இதன்பெயர்தான் கலாம்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கலாம் மதம் கடந்த மாமனிதரே...

      நீக்கு
  8. மாடசாமி இது வரை கேள்வி படாத கதையா இருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை இல்லை ஜி நடந்த சம்பவம் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. மாடசாமி சந்திப்பு கேள்விப்படாதது, இதுவரை படிக்காதது. உண்மைதானே கற்பனை இல்லையே. பகிர்வுக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா சம்பவம் நடந்தது 2003 சுமார் 12 வருடங்களாகி விட்டது எனது பாணியில் நான் விவரிக்கும் பொழுது அது மிகைப்படுத்தப்பட்டது போல் தங்களுக்கு தோன்றி இருக்கலாம் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  10. ‘’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
    இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்’’

    என்று கவிஞர் வாலி அவர்கள் எழுதியது திரு கலாம் அவர்களுக்கே பொருந்தும். இவர் போல் இனி ஒருவர் பிறந்து அவரது இட்டுச்சென்ற இடத்தை நிரப்புவாரா என்பது ஐயமே. தங்களின் கவிதாஞ்சலியோடு நானும் எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அருமையான பொருத்தமான வரிகளை எடுத்து வைத்தீர்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. சமயங்களைக் கடந்து நின்ற சான்றோர்..
    மக்களின் மனம் கலந்து நின்ற மகத்தான மனிதர்..
    அவர் காட்டிய வழியில் - ஒவ்வொருவரும் நடப்பதே அவருக்கான உண்மையான அஞ்சலி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி வாங்க அழகான முறையில் தங்களின் கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றி ஜி.

      நீக்கு
  12. ஆஹா எத்தனை கலாம் அற்புதம் சகோ.

    பதிலளிநீக்கு
  13. கலாம் ஒரு சகாப்தம்...

    கலாமின் 2020 நோக்கி பயனிப்போம்... அவரின் குறிக்கோளில் சிலவற்றை நாம் பின்பற்றுவோம்....

    1. அலுவலகத்தில் பயன்படாத கம்யூட்டர் மானிட்டரை இரவில் நாம் அனைக்க வேண்டும்
    2. தினமும் நல்ல புத்தகத்தை ஒரு மணி நேரம் படிப்பது
    3. மரங்களை நடுவது
    4. ஏழை குழந்தைக்களுக்கு கல்வி அளித்தல்
    5. குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்த்தல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தும் சரியே...

      நீக்கு
  14. அருமை! அருமை! அருமை! அருமை! அருமை!மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரை தாங்கள் ரசித்தமையை காட்டுகிறது ஐயா.

      நீக்கு
  15. வணக்கம் சகோ,
    கலாம் - தங்கள் கவி அருமை.
    மாடசாமி சந்திப்பு அருமையான நெகிழ்ச்சியான சம்பவம். இது போன்ற செயல் அவரால் மட்டுமே முடியும்.
    பகிர்வுக்கு அருமை.
    வாழ்த்துக்கள் உமக்கு,
    எம் அஞ்சலியும் என்றும்
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  16. கலாம் கலாம் கலாம்.....அவரை நாமும் பின் பற்றலாம்....அருமையான மனிதர். இந்தக் காணொளி கண்டதுண்டு. மாடசாமி கொடுத்துவைத்தவர்....அந்தத் தகவலும் புதியது. மாடசாமியின் புகைப்படம்?

    நாம் எல்லோரும் ஏன் பாமர மக்கள் உட்பட அஞ்சலி செலுத்தினார்கள். நாம் செய்ய வேண்டியது இந்த அக்னிப்பறவையின் கனவுகளை நம்மால் இயன்ற அளவு சிறிதேனும் நனவாக்க முயல்வதே அவருக்குச் செய்யும் மரியாதையாக எண்ணுகின்றோம்...

    வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... சம்பவம் நடந்து 12 வருடங்கள் கடந்து விட்டது அப்பொழுது என்னிடம் வலைப்பூ கிடையாது ஆகவே அதை சேகரிக்கும் எண்ணம் வரவில்லை இப்பொழுதும் முயன்றேன் வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  17. பெயரில்லா8/11/2015 4:49 PM

    அருமை - சிறப்புப் பதிவு.
    அவராத்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
  18. விண்கல நாயகருக்கு வியத்தகு படைப்பு.
    சிறப்புங்க சகோ. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சில பதிவுகளை விட்டு விட்டீர்கள் போல தெரிகிறதே.... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. மாடாசாமி சந்திப்பு அருமை!அவர் புகழ் என்றும் நிலைக்கும். சகோ வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் கருத்துரைக்கு நன்றி நலம்தானே....

      நீக்கு
  20. காலத்தால் மறவாத மாமேதை கலாமிற்கு
    ஞாலமே வியக்கும் வண்ணம் ஆத்மார்த்தமாக
    அருமையான கவி பாடினீர்கள் சகோ!

    படித்துக் கொண்டு போகையில் உண்மையில்
    உணர்வுக் குவியலாகக் கண்கள் கரைந்தே போயிற்று!

    மாடசாமி அவர்களும் மிகவும் அதிர்ஷ்டசாலியே!
    சிறப்பான படைப்பு! உளமார்ந்த வாழ்த்துக்கள் சகோ!

    த ம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஒரு கவிஞரே எனது வார்த்தைகளையும் ‘’கவி’’ என்று சொல்லும்பொழுது மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது.
      எனது வார்த்தைகள் படிக்கும் பொழுது கண்ணீர் வரவழைத்தால் அது எனது எழுத்துக்கு கிடைத்த வெற்றியே நன்றி சகோ.

      நீக்கு
  21. எளிமையின் மறு உருவமாக திகழ்ந்த இருபத்தோராம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்! மறைந்தாலும் மனதினில் குடிகொண்டுள்ளார்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சுரேஷ் உண்மையான வார்த்தை சொன்னீர்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  22. தான் வாழ்ந்த காலத்திலேயே மக்களால் நேசிக்கப் பட்டவர் அப்துல் கலாம் அவர்கள். அவரைப் பற்றிய உங்களது நீண்ட பதிவு, அவர் மேல் நீங்கள் கொண்டு இருந்த அன்பையே காட்டுகிறது. பொறுமையாக முழுதும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் நான் நேசித்த மனிதரே ஆகவே பதிவு நீண்டு விட்டது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  23. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

    என்ற வரிகளுக்கு தன் உயிர் தந்து உயிர் தந்தவர்.

    மேற்கண்ட வரிகளுக்கு தமிழ் அகராதியில் இனி தாராளமாய் இம்மகாத்மாவின் பெயர் வைக்'கலாம்'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பே வருக ஆம் இவரும் மஹாத்மாவே நல்ல சிந்தனையை உதித்த தங்களுக்கு நன்றி.

      நீக்கு
  24. முன்னாள் ஜன அதிபர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய நினைவலைகளுடன் மனம் நெகிழும் அஞ்சலி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் நிஜாமின் நிஜமான வார்த்தைகளுக்கு நன்றி.

      நீக்கு
  25. மகத்தான மனிதர். அவர் காட்டிய பாதையில் பயணிப்போம்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் இவரை அடிக்கடி பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் நன்றி.

      நீக்கு
  26. அன்புள்ள ஜி,

    அக்னிப்பறவை அகிலத்தில் 2020 வரையாவது இருந்திருக்கலாம்
    அக்னிக்குஞ்சொன்று இந்தியா வல்லரசாகக் கனவு கண்டதை கண்டு களித்திருக்கலாம்
    எளிமையில் இன்னொரு காந்தி வாழ்வதை இளைஞர்கள் இன்னும் கண்டு வியந்திருக்கலாம்
    ஏழ்மையிலும் ஏற்றங்கண்டு இந்தியாவின் உச்சாணிக்கொம்பில் அமர்ந்தவர் இவரே என்று மகிழ்ந்திருக்கலாம்
    விஞ்ஞானத்திலும் மெய்ஞானத்திலும் கரைகண்டவர் இவரேயென
    வணங்கி வாழ்த்தியிருக்கலாம்
    பணத்தாசைக்கு ஆசைப்படாத பண்பாளரைப் பாரதம் பெற்றதை எண்ணி மகிழ்ந்திருக்கலாம்
    மதவலைக்குள் சிக்காத மனிதமீன் மனிதநேயத்திற்குள் சிக்கிய புனித மீன் என புளகாங்கிதம் அடைந்திருக்கலாம்
    இந்தியாவின் கடைக்கோடியில் பிறந்து இந்தியாவின் முதல் மனிதனாய் இருந்து இன்னும் வழிகாட்டி இருக்கலாம்
    இராமேஸ்வரம் வரம்பெற்றது நீ பிறந்ததனால்...நீ பறந்ததனால்
    இராமேஸ்வரம் பேக்கரும்பும் சாகாவரம் பெற்ற சுற்றுலாதலமாகலாம்.


    காணொளியில் கலாமின் பேச்சைக்கேட்டு உயர்ந்திருக்கலாம்... சலாம்.

    நன்றி.
    த.ம. 16.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள மணவையாரே...
      தாங்கள் பதிவுக்கு முதலில் வந்திருக்KALAM
      இந்தக் கவியை பலரும் படித்திருக்KALAM
      அனைவரும் படித்து ரசித்திருக்KALAM
      எல்லோருமே சந்தோஷப்பட்டிருக்KALAM
      தங்களின் ஆசை நிறைவேறியிருKALAM
      இவரும் நாளை மஹாத்மாவாKALAM
      நாளை பேக்கரும்பு பேர் வாங்KALAM
      இது கண்டிப்பாக நாளையே நடக்KALAM
      தங்களின் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  27. கண் கலங்க வைத்துவிட்டீர்கள் நண்பரே! அந்த மாமனிதரை இரண்டுமுறை மிக அருகிலே சந்தித்திருக்கிறேன். ஆனாலும் பேசமுடியவில்லை. காரணம் அப்போது அவர் இந்தியாவின் ஜனாதிபதி. இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம் அவர். பதிவும் மாடசாமியும் என்னை கண்ணீர் சிந்த வைத்துவிட்டது.
    த ம 18

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வலைச்சர ஆசிரியரே.....
      தங்களின் கருத்துரை மனதில் நெகிழ்ச்சியை உண்டாக்கி விட்டது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  28. அனைவருக்கும் நண்பனாக, தோழனாக, உறவினனாக எண்ண வைத்தவர் ! அதனை நினைவினிலும் தக்கவைத்தவர் ! சரித்திரத்தில் மட்டுமல்ல... மக்கள் மனதினிலும் நீங்கா இடம்பெற்ற எளிமையாளன் !
    அதிலும் குழந்தைகள்...இளைஞர்களிடத்தே கனவினையும் லட்சியத்தினையும் லட்சியப்பாதையை நோக்கி பயணிக்க துணிவும் அவசியம் என்பதனை வலியுறுத்திய சிந்தனையாளன்...சிறப்புமிக்க மக்கள் தலைவன்....பற்றிய பகிர்வு நெகிழ வைத்தது! வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையான வார்த்தைகள் தங்களின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  29. ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே.

    மிக அருமையான பதிவு. படிக்க படிக்க மனம் கனத்தது. அருமையான மனித நேயம் மிக்க நல்லவர் ஒருவரை இழந்து விட்டோம்.நீங்கள் குறிப்பிட்ட மாடசாமி கொடுத்து வைத்தவர். கலாமின் அருகாமையும், அன்பும் அவருக்கு ஒருசேர கிடைத்திருக்கிறது. கலாமின் மறைவுக்கு வடித்த இரங்கற்"பா"அருமை. நானும் தங்களுடன் சேர்ந்து அவர் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ உண்மையே மனிதநேயமிக்க மாமனிதரே,,,, தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  31. வணக்கம்
    ஜி
    கலாம் பற்றி சொல்லிய விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு