இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015

போவோமா... புதுக்கோட்டை


அன்பு நண்பர்களே... நண்பிகளே... வணக்கம்...

புதுக்கோட்டையில் 08.07.2015 அன்று எனது வீட்டில் பதிவர்களை சந்திக்கலாம் என்று கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் என்னிடம் சொன்னதோடு இல்லாமல் பிரமாண்டமாய் ஏற்பாடும் செய்து விட்டார்கள் இதற்க்காக சகோ கவிஞர் திருமதி. மு. கீதா அவர்கள் பதிவிலேயே போட்டு அமர்க்களப்படுத்தி விட்டார்கள் எனது வரவுக்காக இத்தனை நண்பர் - நண்பிகளா ? உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து விட்டேன் பல தருணங்களில் பேச முடியாமல் மௌனித்திருந்தேன் ஒரு விதமான துக்கம் தொண்டையை அடைத்து விட்டது காரணம் பின்னோக்கிய நினைவோட்டங்கள் எமது வாழ்வில் பிறவி தொடங்கி சொந்த பந்த உறவுகளால், நண்பர்களால் மனம் நோகடிக்கப்பட்டே விரக்தியுடன் வெறித்த பார்வையிலும் உரத்த சிந்தனையுமாய்... சில காரணங்களுக்காக மட்டுமே இயந்திரமாய் வாழ்ந்து வரும் எனக்கு இப்படியொரு வரவேற்பும், உபசரிப்பும் கிடைத்தால் என் மனம் என்ன செய்யும்  ? இரும்பு இலவம் பஞ்சாகி இலவசமாக பறப்பது போல் உணர்ந்தேன் சில சில தருணங்கள்.

 


சொன்னபடியே மாலை 05.30 மணிக்கு கவிஞரின் வீட்டில் ஆஜராகி விட்டேன் உள்ளே நுழைந்ததுமே எமக்கு சிறிய ஐயம் தோன்றியது நாம் வந்தது புதுக்கோட்டையா ? அல்லது நூல் கோட்டையா ? என்பதே அது ஆம் சுவர் முழுக்க சித்திரம் கண்டு இருக்கின்றேன் இங்கு சுவர் முழுக்க நூல்கள், நூல்கள், நூல்களே... சிறிது நேரத்தில் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களும், திரு. முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்களும், மற்றும் திருச்சி எனது எண்ணங்கள் பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களும் வந்து விட்டார்கள் பல விடயங்களும் பேசிப்பகிர்ந்து கொண்டோம் பிறகு கவிஞர் திருமதி. மு. கீதா, திருமதி. மாலதி, திருமதி. ஜெயலட்சுமி, கவிஞர் நீலா மற்றும் பதிவர் அல்லாத சகோ மீனா என்ற மீனாட்சி அவர்களும் வர பேச்சொலி எதிரொலிக்க ஆரம்பித்தது பிறகு தோழர் திரு. மது அவர்கள், திரு. மகாசுந்தர் அவர்கள், கவிஞர் திரு. சோலச்சி அவர்கள், திரு. அப்துல் ஜலீல் அவர்கள், கவிஞர் திரு. செல்வா அவர்கள், கவிஞர் திரு வைகறை அவர்கள் வருகை தந்தார்கள். வரும் ஞாயிறு கவிஞர் திரு. சோலச்சி அவர்களின் நூல் வெளியீட்டுக்கு அனைவரும் வாழ்த்துச் சொன்னோம்.  

  பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.


புதுக்கோட்டை மாவட்ட பதிவர்கள் பாசக்காரர்கள் என்பதில் எனக்கு எள்முனையளவும் ஐயமில்லை ஆனால்  அவர்கள் என் பதிவை தொடர்வதில்லையே ஏன் ? என்பதில் எனக்கு ஏர்முனையளவு ஐயமுண்டு ஒருக்கால் எமது எழுத்தில் வசியத்தன்மை இல்லையோ... என்னவோ... இனியெனினும் முயற்சிப்பேன்.


நான் முதலில் வீட்டுக்குள் நுழைந்த நொடி முதல் இரவு அனைவரும் பிரிந்து செல்லும் வரை நொடிக்கு நொடி கடிக்க வீட்டுக்குள்ளிருந்து உபசரிப்புகள் வந்து கொண்டே இருந்தது விருந்தினர்களை வீட்டில் உள்ளவர்கள் இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பதை நானும் அனுபவித்து இருக்கின்றேன் பிறர் வீட்டில் பார்த்தும் இருக்கின்றேன் ஆனால் இந்த வீட்டில் எனக்கு ஓர் ஆச்சர்யமே உதித்தது காரணம் அனைவருமே ஒரே மாதிரியா ? என்பதுதான் அது. நான் பல வீடுகளில் பார்த்து இருக்கின்றேன் உதடுகள் சிரித்து கண்கள் வெறுத்து வரவேற்பதை ஆனால் இங்கோ உள்ளங்களும் சிரிக்க கடைசி நொடிவரை கூட்டாக வரவேற்றார்கள் கவிஞரின் மகன் திரு. நெருடா அவர்களை நான் ஏற்கனவே அறிவேன் இன்றோ மொத்தமாக அறிந்தேன் இந்த நல்லதொரு குடும்பமான பல்கலைக் கழகத்தை கவிஞரோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததில் சுவாசக்காற்று என்னுள் நுழைந்ததோ  என்னவோ எனக்கும் கூட தோன்றியது...

‘’நிலவுக் கூட்டில்
முத்துக்கள் சங்கமம்’’

என்று ஹைக்கூ கவிதை எழுத வேண்டும்போல்... இருப்பினும் கவிதைக்கும் எனக்கும் உண்டோ ? பந்தம் என அட(க்)ங்கி விட்டேன்.

பலரும் எனக்கு நூல்களை கொடுத்து மகிழ்வித்தார்கள் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்களும் எனக்கு கம்பன் தமிழும் கணினித் தமிழும் மற்றும் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே ! என்ற இரண்டு நூல்கள் பரிசளித்தார்கள் ஆனால் கவிஞர் தனது பதிவர் சந்திப்பு பதிவில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டதுதான் எனக்கு குழப்பமாக இருந்தது அதை விளக்குவது எமது கடமை அல்லவா இதோ...


நான் ஒரு அலுவலகத்தில்தான் வேலை செய்கிறேன் கவிஞருக்கு நான் அபுதாபியில் ஏதோவொரு லாண்டரியில் வேலை செய்கிறேன் என்ற தகவல் கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றேன் ஆகவேதான் நான் வெளுத்து வாங்குகிறேன் என்று தவறுதலாக எழுதிள்ளார் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்.

பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.

கில்லர்ஜி என்றால் என்ன ? அது எப்படியிருக்கும் ? பொருளா... அல்லது உருவமா... ஒருவேளை ஜடமோ... என்று குழம்பி என்னை வேடிக்கை பார்ப்பதற்கு மட்டுமே வந்த பதிவர் அல்லாத சகோதரி திருமதி. மீனா என்ற மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு எமது சிறப்பு நன்றிகள்.


பதிவுகள் மூலம் என்னையும் சிறப்பித்த நண்பர் திரு. கரந்தையார் அவர்கள், நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள், சகோ கவிஞர். திருமதி. மு. கீதா அவர்கள், மற்றும் திருமதி. மாலதி, திருமதி. ஜெயலட்சுமி அவர்களுக்கும் எமது நன்றிகள்.


இரவு ஹோட்டலில் உணவருந்திய பிறகு அனைவரிடமும் பிரியாவிடை பெற்று நானும் நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களும் பேருந்தில் ஏறி புதுக்கோட்டை பேருந்து நிலையம் வந்தோம் பிறகு நண்பர் திருச்சி பேருந்தில் ஏறி விடைபெற நான் மற்றொரு பேருந்தில் ஏறி தி கிரேட் தேவகோட்டையை நோக்கி விடச் சொன்னேன் ஓட்டுனரிடம்...

இந்நாளும் 08.07.2015 எம் வாழ்வில் ஒரு பொன்நாளே...

காணொளி
வாழ்க வளமுடன்.
சந்திப்புகள் தொடரும்...
எமது சந்திப்பு பதிவுகளைக் காண கீழே இணைப்புகளை சொடுக்கவும்.


61 கருத்துகள்:

  1. வெளுத்து வாங்க லாண்ட்ரியில் வேலை செய்யணும்னு அவசியம் இல்லை. எங்க இருந்தாலும் வெளுத்து வாங்கலாம்.

    இதுதான் கோவைக்குறும்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவைக்குறும்புடன் முதல் கருத்துரை தந்தைமைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  2. மிகுந்த சுவாரஸ்யமான சந்திப்பு என்று தெரிகிறது. பல நண்பர்கள் புகைப்படங்களில் தெரிகின்றனர். காணொளி ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  3. சந்திப்பை விவரித்த விதம் இனிமை ஜி... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. ungal varukai otti kutti pathivar santhippe nadanthirukku pola?! vivariththa vitham arumai sir. thodarungal

    பதிலளிநீக்கு
  5. உங்கள் புண்ணியத்தில் அன்று புதுக்கோட்டையில் பல வலைப்பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. உங்கள் பதிவும் படங்களும் அன்றைய மகிழ்ச்சியான கலந்துரையாடலை நினைவு படுத்தி விட்டன. அடுத்த சந்திப்பில் யாரை சந்தித்தீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படச்சித்தரின் கருத்துரைக்கு நன்றி தொடரும் சந்திப்புகள்.

      நீக்கு
    2. அன்பு நண்பருக்கு! நான் புகைப்பட சித்தர் கிடையாது. புகைப்பட பித்தன். எல்லோரையும் போல படம் எடுப்பவன். அவ்வளவுதான்.

      நீக்கு
    3. கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் முன் மொழிந்ததை வழி மொழிகிறேன் நண்பரே...மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. அந்த நாள் ஞாபகம்
    நெஞ்சிலே வந்ததே வந்ததே
    நண்பரே நண்பரே
    அந்த மாலை நேரத்துச் சந்திப்பை
    மறக்க இயலுமா நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  7. இனிமையான சந்திப்பு. உங்கள் மகிழ்ச்சி எனக்கும் தொற்றிக் கொண்டது நண்பரே.... நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு சந்தோஷம் கிடைத்தமைக்கு எமக்கும் சந்தோஷம் நண்பரே...

      நீக்கு
  8. அன்பின் ஜி..

    தங்கள் மனதில் மலர்ந்திருந்த மகிழ்ச்சி பதிவில் மணம் வீசுகின்றது..

    இனிய பதிவு கண்டு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  9. அட டா! அருமையான சந்திப்பு விபரமாக அறியத் தந்தமைக்கு நன்றிகள். வாழத்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நலம்தானே ? காணவில்லையே.... மறதியோ...

      நீக்கு
  10. நல்ல வேளை வழக்கம்போல் தங்களின் பாணியில் புதுக்கோட்டைப் புண்ணியவான்கள் என்பது போன்ற தலைப்பு கொடுத்துவிடுவீர்களோ என்று நினைத்திருந்தேன். வலைப்பூ நண்பர்கள் அனைவருக்குமே உங்கள்மீது அளவற்ற பற்று உள்ளது நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் கூறியதுபோல அந்த அன்பானது உதட்டளவில் அல்ல, உள்ளத்திலிருந்தே வருவதாகும். உங்களின் எழுத்தும், எழுதும் பதிவுகளும் அந்த அளவிற்கு எங்களின் மனதில் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிட்டன. எங்களுக்கெல்லாம் உங்களைக் கண்ட நாள் மறக்கமுடியாத நாள். உங்களின் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து எழுதுங்கள், எழுதுவோம். சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தங்களைப் போன்றவர்களின் பேராதரவு இருக்கும் பொழுது நான் இன்னும் எழுதுவேன் உண்மையே தங்களையெல்லாம் சந்தித்தது ஒரு பொன்னான தருணமே... தொடர்வோம் வாழ்க நலம்.

      நீக்கு
  11. சந்திப்பில் மலர்ந்த மகிழ்ச்சி!! தொடரட்டும் வாழ்க! வளர்க!! வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  12. அக்டோபர் பதிவர் சந்திப்புக்குஒரு ஒத்திகையா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா வாய்ப்பினை (கொடுப்பினை) இருந்தால் வருவேன்.

      நீக்கு
  13. புதுக்கோட்டையில் நடந்த அந்த இனிமையான சந்திப்பை படித்தபோது நானும் அங்கிருந்ததுபோல் உணர்ந்தேன். அடுத்தமுறை தாயகம் வரும்போது சென்னையில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அடுத்தமுறை கண்டிப்பாக சந்திப்போம்.

      நீக்கு
  14. பதிவும் பகிர்ந்த படங்களும் மிக மிகச் சிறப்பு சகோதரரே!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  15. வணக்கம் சகோ,
    தாங்கள் இங்கு இருக்கும் போதே பதிவில் படித்தோம், உறவுகள் என்பது இரத்தம் அல்லாதவையே,,,,,,,, புரிகிறதா?
    தாங்கள் நெகிழ்ந்தது உண்மைதான்,,,,
    வெளுத்து வாங்குவதற்கு இப்படி ஒரு அர்த்தம்மா?
    புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  16. புகைப்படங்களோடு சந்திப்பு விவரங்களைத் தந்தவிதம்
    விறுவிறுப்பாக இருந்தது. இனிய மாலைப் பொழுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  17. புதுகை சந்திப்பை அருமையாக பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. புகைப்படங்களும், நண்பர்களின் சந்திப்பும் அருமையாக இருக்கு. இந்த சந்தோஷம் உங்களுக்கு எப்போதும் இருக்க வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  19. தமிழகமெங்கும் உங்கள் நண்பர்களுடன் அளவளாவி மகிழ்ந்த திருப்தி உங்கள் கண்களில் தெரிகிறது :)

    பதிலளிநீக்கு
  20. உலகத்தில் ரெண்டே ஜாதிதான்
    ஒன்னு ...,
    வெளுக்குற ஜாதி.... !

    இன்னோன்னு ?

    வெளுத்து வச்சதை கட்டி அழுக்கக்குற ஜாதி அப்டின்னு கேள்விப்படலையா ஜீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே அழகாக சொன்னீங்க.... நன்றி.

      நீக்கு
  21. வணக்கம்
    ஜி

    அறியாத நண்பர்களை அறியத்தந்தமைக்கு நன்றி ஜி. தங்களின் சந்திதிப்பு இனிதாக நடை பெற்றதாக அறிந்தேன் நட்பு தொடர எனது வாழ்த்துக்கள் த.ம 12

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  22. விழியோரம் கசிந்தது கண்ணீர்
    மொழியோடு நாம் கொண்ட உறவு
    பழி பகையில்லா பாசம்!
    ஆஹா! இதுவல்லவோ!
    வலைப் பதிவர் வரலாற்று பெட்டகம்!
    அனைவரையும் அன்பு பாராட்டி மகிழ்கிறேன்!
    கொடுத்து வைத்தவர் நீவீர்! மீழைக்கார நண்பா!
    பயனுள்ள பயணம்
    பண்பை கற்றுத் தந்தது!
    நன்றி
    த ம 13
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  23. ஆம் நண்பா வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுப்பெட்டகம் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. ஒரு பதிவர் சந்திப்பே நிகழ்த்தி வந்திருக்கிறீர்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  25. வணக்கம் சகோ...உங்களின் புதுகை வரவு வாழ்வில் மறக்கமுடியாத நாளாக..வலைப்பூ தந்த உறவுகள் மனதை நெகிழச்செய்கின்றன...நீங்கள் என்றும் எங்களின் அன்பிற்குரியவர் தான்,அண்ணா எப்போதும் நன்றாக செய்கின்றார் என்பதை பாரட்டுவதற்காக வெளுத்து வாங்குகிறார் என சொல்வது வழக்கம்....தவறாக எண்ண வேண்டாம்.தங்களின் வலைப்பூ பதிவுகளை பாராட்டிய விதம் அது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வரவு கண்டு மகிழ்ச்சி கவிஞர் தனது நகைச்சுவை பேச்சால் தமிழ் நாட்டையே கலக்கிக் கொண்டு இருப்பவர் நானும் அவரைப்போல் இரண்டொரு வார்த்தையை எழுத்தில் உபயோகப்படுத்தலாம் என்று நினைத்தேன் நீங்கள் வேறு மா3 சொல்கிறீர்கள்
      எனக்கு தெரியாதா வெளுத்து வாங்குவது என்றால் என்னவென்று ஒருவேளை எல்லோரும் இன்னும் என்னை விபரம் அறியாத அப்பாவியாக நினைக்கின்றீர்களோ... என்னவோ...

      இன்னும் சொல்லப்போனால் இந்த வார்த்தை அரசன் சோப் கம்பெனிக்காரர்களுக்குதான் சொந்தம்னு இதிகாசத்துலயே இகுக்குனு சொல் வழக்கும் உண்டு
      வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  26. மகிழ்ச்சியான சந்திப்பு பற்றிய சிறப்பான பகிர்வு

    பதிலளிநீக்கு
  27. நண்பரே! உங்கள் வருத்தம் புரிகின்றது. எங்களுக்கும் நடந்ததுண்டு. வலை அன்பர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளைப் போல பழகும் போது ஏனிந்த வருத்தம். இத்தனை உறவுகள் கிடைத்திருக்கின்றதே என்று மகிழுங்கள்.

    நல்ல இனிமையான சந்திப்பு....மிகவும் மகிழ்வான தருணங்கள்....புகைப்படங்கள் அருமை....நம் எல்லோரது நட்பும் அன்பும் பெருகட்டும்.....அருமை நண்பரே! நீங்கள் இத்தனை முயற்சி எடுத்து எல்லோரையும் சந்தித்தது நினைத்துப் பெருமைப்படுகின்றோம்...

    தொடர்வோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் தங்களின் உடனடி வருகைக்கு நன்றி தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்.

      நீக்கு
  28. ஆமோதிக்கிறேன்.உங்கள் பதிவை முத்துநிலவன் ஐயா அவர்களின் உபசரிப்பில் நானும் மயங்கியவன் என்ற முறையில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே யாவரையும் அனைத்துச் செல்லும் அன்பானவரே

      நீக்கு
  29. அன்புள்ள ஜி,

    தேவகோட்டைக்காரரே!
    புதுக்கோட்டைக்காரர்களின்...
    மனக்கோட்டையை...
    மலைக்கோட்டையாக்கி...
    நிலவன் அய்யாவின்
    நிலத்தில் உலவி உள்ளம்...
    நிலவாய்க் குளிர...
    உலா வந்ததை அறியத் தந்தது
    மிக்க மகிழ்ச்சி.

    நன்றி.
    த.ம. 17.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணவையாரின் வருகை கண்டு மனம் கொள்கிறது மகிழ்ச்சி.

      நீக்கு
  30. நீங்கள் எந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது! மகிழ்ச்சியை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ளும் மனிதர்கள் நெகிழ்ச்சியை அவ்வளவாக வெளியிடுவதில்லை. நீங்கள் ஒளிவுமறைவில்லாத பால் மனத்துக்காரர் என்பதைப் பதிவின் தொடக்கப் பத்தியுடைய கடைசி வரிகள் உணர்த்துகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் எப்போதும், எதையும், மறைப்பதில்லை.

      நீக்கு
  31. அடடாஇதைம்புட்டுநாளும்பார்க்காமபோய்ட்டனேசகோ?

    பதிலளிநீக்கு