இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 05, 2015

தமிழ்ப் பதிவருடன், In U.A.E

 அன்பு நண்பர்களே வணக்கம்...
கடந்த பதிவில் சொல்லி இருந்தேன் அல்லவா... கண்ணேரு காரணமாக வெளிநாட்டு பதிவர்களை சந்திப்போமென ஆகவே எந்த நாட்டுக்குப் போய் யாரைச் சந்திக்கலாம் என்று வீட்டின் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு ஆலோசித்தேன் இதுதான் சரியென ஒரு கருப்புத்தாளில்... (Sorry எழுதும்பொழுது வெள்ளைத்தாள் என்பதற்க்கு பதிலாக கருப்புத்தாள் என்று வந்து விட்டது அதை மாற்றி எழுத முயற்சித்தேன் முடியலை அவ்வளவு தொழில் நுற்பம் தெரியாத காரணத்தால் விட்டு விட்டேன்) 

வெளிநாட்டு தமிழ்ப்பதிவர்களின் பெயர்களை எழுதினேன்.. அன்பின் ஜி குவைத். திரு. துரை செல்வராஜூ, ஃப்ரான்ஸ் திரு. புதுவை வேலு, திரு. கவிஞர் பாரதிதாசன், திரு. சாமானியன் மற்றும் திரு. தனிமரம், எஜிப்த் திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, ஆஸ்திரேலியா திரு. சொக்கன் சுப்பிரமணியன், மற்றும் திருமதி. கீத மஞ்சரி, ஜெர்மனி திருமதி. இளமதி, திருமதி. பிரியசகி, திருமதி. கௌசல்யா சிவபாலன், மற்றும் திருமதி. சுபாஷிணி ட்ரெம்மல், U.A.E  திரு. சே.குமார், திரு. மகேந்திரன், திருமதி மனோ சாமிநாதன், திரு. பனித்துளி சங்கர், திருமதி. சுமிதா ரமேஷ் மற்றும் திரு. துபாய்ராஜா, நியூசிலாந்து திருமதி. துளசி கோபால், மலேசியா திரு. ரூபன், இலங்கை திரு யாழ்பாவாணன் காசிராஜலிங்கம், தாய்லாந்து ஜனாப். முஹம்மது நிஜாமுத்தீன், கனடா திருமதி. இனியா, டென்மார்க் திருமதி. வேதா. இலங்காதிலகம், பஹ்ரைன் திரு. தினேஷ்குமார், அமெரிக்கா திருமதி. கோமதி அரசு, திருமதி. கீதா சாம்பசிவம், திரு. மதுரைத்தமிழன், திருமதி. தேன்மதுரத்தமிழ் கிரேஸ், திரு. விசு AWESOME மற்றும் திரு. ஒபாமா, லண்டன் திரு. கோ இப்படி இவர்களின் பெயர்களை எழுதி ஊருக்கு வெளியே இருக்கும் தீச்சட்டி தீர்த்து வைப்பாள் காளி கோயிலுக்குப்போய் நானே குலுக்கிப் போட்டு பூசாரியை எடுக்கச்சொன்னேன் அவர் எடுத்துத் தந்ததை பிரித்துப்பார்த்தால் ? U.A.E அடடே நம்ம ‘’மனசு’’ சே. குமாரையும், மகேந்திரனையும் சந்திக்கச் சொல்லி ஆத்தாள் உத்தரவு கொடுத்து விட்டாள் வேறுவழி டிராவல்ஸ் போனேன் அபுதாபிக்கு டிக்கெட் போடு என்றேன் போட்டான் வந்துட்டன்... அபுதாபி பிறகென்ன ? நண்பர் திரு.’’மனசு’’ சே.குமார் அவர்களை முதலில் சந்தித்தேன் திரு. மகேந்திரன் அவர்களை விசாரித்தேன் அவர் கடலுக்குள் தீவில் வேலை செய்கிறாராம் அவரைக் காண்பதென்றால் நெல்லிக்காபட்டரில் பறந்து போகவேண்டுமாம் அவ்வளவு வசதிக்கு நாம எங்கு போவது ? 

(அவ்வளவு பணமிருந்தால் ஊரில் எவனாவது, ஏதாவது பொறம்போக்கு வயல்காட்டை ஃப்ளாட் போட்டு விற்பான் வாங்கிப் போடலாம் நம்பிக்கையான இடத்தை வாங்க வேண்டும் என்றால் நம்ம டெல்லி கணேஷ் தொலைக்காட்சி விளம்பரத்தில் சொல்வதை பார்த்துக்கொள்ளலாம் அவரே சொல்லும் பொழுது நம்பிக்கையான ஸ்தாபனமாகத்தான் இருக்கும் இவரே விளம்பரத்துல நடிக்கிறதுக்கு பணத்துக்குப் பதிலாக இடத்தைத்தான் வாங்கிப் போடுறாராம் அப்படீனாக்கா நம்பிக்கையானதுதானே... இந்த விபரத்தை எனக்குச் சொன்னதுகூட நண்பர் ‘’மனசு’’ சே. குமார்தான்)

தேவகோட்டையும்(கணேஷ் குமார்)டெல்லியும்.

சரி நண்பர் மகேந்திரன் நாட்டுக்கு வந்தால் தூத்துக்குடிக்கு உப்பு வாங்க போகும்பொழுது சந்திக்கலாம் என்று விட்டு விட்டேன் பிறகு இருவருமாக ஊர்க்கதைகளைப்பற்றி பொரணி பேசினோம் பிறகு அபுதாபியில் உள்ள இடங்களையெல்லாம் நண்பர் குமார்தான் சுற்றி சுற்றி காண்பித்தார் ஸார்ஜா திருமதி. மனோ சாமிநாதன் அவர்களை சந்தித்து விட்டேன் துபாய் திருமதி. சுமிதா ரமேஷ், துபாய் திரு. பனித்துளி சங்கரை இன்னும் சந்திக்கவில்லை மேலும் திரு. துபாய் ராஜாவைத்தான் தேடுகின்றேன் நான் காரணம் அவர்தானே துபாயை சுற்றி சுற்றி காண்பிக்கவேண்டும்.


இந்தியாவில் நான் சந்திக்க முடியாமல் தொலைபேசியில் மட்டுமே பேசியவர்கள். பெங்களூரு ஐயா திரு. ஜியெம்பி, சென்னை திரு. கவிஞர் கவியாழி கண்ணதாசன், சென்னை ஐயா திரு. சென்னைப்பித்தன், சென்னை திருமதி. மஞ்சுபாஷிணி சம்பத்குமார், பாலக்காடு திரு. துளசிதரன், பெங்களூரு திரு. ஜெயதேவ்தாஸ், மணப்பாறை திரு. ஜேம்ஸ், ஆஸ்திரேலியா திரு. சொக்கன் சுப்பிரமணியன், மலேசியா திரு. ரூபன், மதுரை திரு.  S.P. செந்தில்குமார், சென்னை வாத்தியார் திரு. பாலகணேஷ், சென்னை திரு. இ. ஆ. ஞானப்பிரகாசன், மற்றும் சேலம் திரு. மெக்னேஷ் திருமுருகன் அவர்கள்.

வயிற்றுக்காக கயிற்றில் தொங்கி வேலை செய்யும் நம் இந்தியர்கள் இவர்களின் கஷ்டம் தெரியாமல் வீ(நா)ட்டில் பலரும் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்கிறார்கள்.

 இந்தியாவில் நான் கைப்பேசியில் பேச முயற்சித்து முடியாமல் போனது சென்னை திரு. சுப்பு தாத்தா, சென்னை திரு. ஸ்ரீராம், சென்னை திருமதி. ராஜலட்சுமி பரமசிவம், சென்னை திரு. வே. நடனசபாபதி, கோவை திருமதி. எழில், டெல்லி திரு. வெங்கட் நாகராஜ், பெங்களூரூ திருமதி கமலா ஹரிஹரன், டெல்லி திரு. கோபால் கிருஷ்ணன், சென்னை திருமதி. சசிகலா, பாளையங்கோட்டை திருமதி. சாரதா, திருப்பதி திரு. மகேஷ், மற்றும் கோவை திரு. ஆவி அவர்கள்.
திரு. குமார் ஜி (கும்மாச்சி அல்ல)

குறிப்பு – நண்பர்களே... பதிவில் விடயம் ஏதும் இல்லையெனினும் நமது நண்பர், நண்பிகள் வசிக்கும் நாடுகள், ஊர்களை தெரியாதவர்களுக்கு தெரிய வைத்திருக்கின்றேன் 80தே விடயம் நன்றி.

நண்பர் மனசு சே. குமார் அவர்கள் எனக்கு அபுதாபியை சுற்றி சுற்றி காண்பித்ததை அடுத்தொரு பதிவில் காண்போம்.

 காணொளி

எமது சந்திப்பு பதிவுகளைக் காண கீழே இணைப்புகளை சொடுக்கவும்.
  வாழ்க வளமுடன்.
சந்திப்புகள் (தற்காலிகமாக) முற்றும்.

75 கருத்துகள்:

  1. இத்தனை வலையுலக உறவுகள் ,இத்தனை நாடுகளில் ...விரைவில் சந்திக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஜி அப்படி நடந்தால் அனைத்து நாடுகளிலிருந்தும் உங்களுக்கு உள்ளி 1 கிலோ வாங்கி வந்து பரிசு தருவேன்.

      நீக்கு
  2. வணக்கம் ஜி!! ஆஹா இத்தனை தமிழ் புலவர் பெரு மக்கள் எல்லாம் வெளி நாட்டிலா இருக்கீறிர்கள்!!

    அருமை! அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே இன்னும் எவ்வளவோ நண்பர்கள் வெளியுலகம் தெரியாமலும், தன்னை மறைத்துக்கொண்டும் வாழ்கின்றார்கள்

      நீக்கு
  3. ஹா... ஹா... அதுசரி...
    நம்மள இப்படிப் போட்டு தாக்கிட்டீங்களே...

    டெல்லியோட தேவகோட்டை எடுத்த போட்டோவைக் கேட்டப்பவே சுதாரிச்சிருகணும்.. அண்ணன் கேக்குறாரேன்னு கொடுத்தா...

    அதுசரி... டீக்குடிக்கும் போது போட்டோ எடுக்கச் சொல்லிட்டு அதையும் போஸ்ட்டுல போட்டாச்சாக்கும்...

    ம்... குமாரு... நடக்குறது நடக்கட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்து நடப்பதும் நன்றாகவே நடக்கும் நண்பரே...

      நீக்கு
  4. வணக்கம் சகோ,
    இம்புட்டு இருக்கா??? கண்ணெல்லாம் கட்டுதே,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இருக்கு சகோ உங்கள் ஊர் பெயர் தெரியவில்லையே.,....

      நீக்கு
    2. அப்ப என் பதிவை தாங்கள் ஒழுங்காக படிக்கல, இதற்கு தண்டனை உண்டு,,,,,,,,,

      நீக்கு
    3. ஊருப்பெயரை கொடுக்கவில்லை என்றால் எப்படித்தெரியும் அதனாலதான் ஒட்டுப் போடலையோ...
      சரி பரவாயில்லை அடுத்து பதிவுக்கு 2 ஓட்டு போட்டுருங்க....

      நீக்கு
  5. ஆஹா நானும் இதிலே இருக்கேனே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலை(யை)நகரை மறக்க முடியுமா ? நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. சூறாவளி சந்திப்புகளா! அடேடே, லிஸ்ட்டில் நானும் இருந்தேனா? மிக்க மகிழ்ச்சி. மனோ மேடம், குமார் உள்ளிட்ட நண்பர்கள் தெரிந்தவர்களே. பனித்துளி சங்கர் அருமையான கவிதைகளுக்குச் சொந்தக்காரர். கேட்டதாகச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நண்பரே கண்டிப்பாக சொல்வேன் திரு. பனித்துளி சங்கருடன் பேசி இருக்கிறேன் இன்னும் சந்திக்கவில்லை.

      நீக்கு
  7. நீங்கள் வெளிநாட்டில் வாழும் பதிவோர் எனும் பட்டியலில் இருக்கும் கிட்டத்தட்ட அனைவர் கவிதைகளையும் நான் மெட்டு இட்டு பாடி இருக்கிறேன்.

    கவிநயா அவர்கள் கடந்த 15 வருடங்களாக ஒவ்வொரு செவ்வாய் அன்றும் பாடல்கள் அம்மன் மீது தொடர்ந்து எழுதுகிறார்கள் . அவரது சுமார் 1000 பாடல்களுக்கு இதுவரை மெட்டு அமைத்து இருக்கிறேன்.

    இனியா, இளைய நிலா, கிரேஸ், மஞ்சு பாஷிணி , உமையாள் காயத்ரி அவர்கள் மற்றும் பிரான்ஸ் பாரதி தாசன் அவர்கள் பாடல்களுக்கும் மெட்டு இடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    நீங்கள் எனது செல்லில் பேசினீர்களா ? !!!!!

    எனக்கு உங்கள் செல் எண் தாருங்கள். நான் ஸ்கைப் , வாட்சப் ல் பேசுகிறேன்.

    உங்களது இரண்டு பாடல்களும் பாடினேனே...கேட்டீர்களா ?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தாத்தா தாங்கள் பாடியதில் திரு(மண்)நாள் கவிதை இணைப்பு தந்தீர்கள் கேட்டு ரசித்தேன் அருமை ஆனால் தாங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வழியே கேட்டேன் யூடிப் வேறு இணைப்புகளுக்கு செல்கிறது

      மற்ற பாடல் கேட்கவில்லையே இணைப்பு அனுப்புங்கள் மேலும் தரவிரக்கம் செய்ய முடியவில்லையே... எனது தொலைபேசி எண் அனுப்பி விட்டேன் நன்றி

      நீக்கு
  8. நீங்கதானே நீங்க எல்லோரையும் சந்திச்சுருவீங்க! விரைவில் சந்திக்க வாழ்த்துகள்!

    நம்ம நண்பர் சே. குமார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தம்பியோ!!? இல்ல அவர் சாயல் இருக்காப்புல இருக்கு அதான்!! அவர்கிட்ட சொல்லுங்க...இல்ல கேட்டுச் சொல்லுங்க ஜி! இத ரொம்ப நாளா சொல்ல நினைச்சு விட்டுப்போச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி சந்தித்தால் நண்பர் பகவான்ஜிக்கு மா3 உங்களுக்கும் பரிசு உண்டு.
      ஆமா கே.எஸ் ரவிக்குமாருடைய கொள்ளுத்தாத்தாவின் மூத்த தாரத்து சம்பந்தியின் கொழுந்தியாழுடைய இரண்டாவது பெண்ணைக் கட்டியவரும் நண்பர் சே.குமாரின் எள்ளுத் தாத்தாவின் கூடப்பிறந்த சகோதரியின் நாத்துனாமகளும் ஒரே வீட்டில் வாக்கப்பட்டவர்களாம் பின்னே ஒரேமா3 இல்லாமலா ? இருப்பாங்க நல்லாக்கேட்டீங்க ? கேள்வி அய்யோ... அய்யோ....

      நீக்கு
    2. ஏன் துளசி சார் இப்பூடி...?

      என்னோட மேரேஜ் அப்போ மனைவியோட பிரண்ட்ஸ் எல்லாம் சேரன் மாதிரி (!!) இருக்காருன்னு சொல்ல இன்னும் எங்க வீட்ல சேரனாவே இருக்கேன்.... இப்ப நீங்க ரவிக்குமார் தம்பியான்னு கேக்குறீங்க... ரவியோட தம்பி (ரெண்டாவது அண்ணன் பேரு ரவிச்சந்திரன்) நானு... அது என்னவோ நம்மளை எல்லாரும் டைரக்டர்சோடவே கம்பேர் பண்ணுறீங்க... நாமளும் ஆயிருவோமோ... ஹா... ஹா...

      நீக்கு
    3. கில்லர்ஜி அண்ணாவுக்கு...
      எனக்கே தெரியாத கொள்ளுத்தாத்தா கதை எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு... சீமான் சொல்ற மாதிரி வள்ளுவன் எம் பாட்டன் சீத்தலை சாத்தனார் என் முப்பாட்டன்னு சொன்னா ரவிக்குமார் கூட உறவுக்குள் வருவார்தானே...? கலந்து கட்டி ஆடிட்டீங்க போங்க...

      நீக்கு
    4. நமக்கு தெரிந்த விடயங்களை சொல்வது நமது கடமை மேலும் கேட்டவுங்களுக்கு பதில் சொல்வதும் நமது பொருப்பு.

      நீக்கு
  9. பெயரில்லா9/05/2015 8:01 PM

    சந்திப்புகளும் குலுக்கலும் யோரு தான்!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் 10 மார்க் வந்திருந்தால் உங்களை சந்தித்து இருப்பேன்

      நீக்கு
  10. குமாருடன் சந்திப்பிள் பலரை தேடவைத்துவிட்டீர்கள்))) பாரிஸ் வரும் போது நிச்சயம் சந்திப்போம் ஜீ.

    பதிலளிநீக்கு
  11. சில பதிவர்களும் அவர்கள் இருக்கும் ஊர் என்று நீங்கள் சொல்வது ம் மேட்ச் ஆகவில்லையே. சிலரது ஊர்கள் நிச்சயம் குறிப்பிட்டது அல்ல. பேசாமல் வந்துபதிவைப் படித்து புகழ்ந்து செல்லாமல் .....என்று நினைக்கலாம் என்ன செய்வது .அது என் குணம். வாழ்த்துக்கள். என்னுடன் தொலைபேசியில் பேசியதையும் குறிப்பிட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எனக்குத் தெரிந்த விடயங்களை வைத்து எழுதினேன் சொன்னால் மாற்றி விடுவேன் இதொன்றும் பெரிய விடயமில்லையே.... மனதில் உள்ளதை உள்ளபடி எழுதும் தங்களது கருத்து என்றுமே எனக்கு பிடித்தமானவையே... காரணம் நானும் அப்படித்தான் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  12. வெளி நாட்டில் உள்ள தமிழ் பதிவர்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் சகோ. ஆஹா உங்கள் பதிவில் என்னுடைய பெயரும் இருக்கே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பாளையங்கோட்டையில் எனது குடும்ப வட்டாரத்துக்குள் கடந்த வருடம் பெண் எடுத்து இருக்கிறோம்

      நீக்கு
  13. நல்ல தகவல்கள். இவ்வளவு பேர் வெளிநாட்டுல இருக்காங்களா?

    பதிலளிநீக்கு

  14. உலகெங்கும் வாழும்
    தமிழைச் சுவாசிக்கும்
    நம்மாளுங்களைச் சுட்டிக் காட்டிய
    தங்களைப் பாராட்டுகின்றேன்!

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    ஜி

    வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்.
    த.ம 7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நாட்டுப்புற பாட்டு படித்தீர்களா ?

      நீக்கு
  16. நண்பர்க்கு இன்னொரு பட்டம் தரலாம் அது உலகம் சுற்றும் தேவகோட்டை கில்லர் ஜீ..தமிழ்பதிவர் அத்துனை பேரையும் கை நுனியில் வைத்திருக்கிறார்..எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சுற்றவில்லையே நண்பரே... முயல்கிறேன்

      நீக்கு
  17. அம்மாடி மூச்சு விடாம அம்புட்டு போரையும் எழுதியிருக்கீங்களே. அப்பா இதை வாசிச்சு எனக்கு மூச்சு முட்டுதுப்பா .....! அட என்னையும் ஞாபகம் வைத்து எழுதியிருக்கிறீர்களே நன்றி நன்றி ! தகவல்களுக்கும் நன்றி சகோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க இப்பத்தான் ஞாபகம் வந்துச்சா..... இருப்பினும் வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. உள்ளூர்க்காரர்கள் இரண்டுபேர் சேர்ந்து ஒரு சுற்று சுற்றி விட்டீர்கள் போலிருக்கிறது. சுற்றிப் பார்த்த அனுபவத்தை எப்போது சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். பொரணி பேசியதையும் சொல்வீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கண்டிப்பாக அனைத்தும் விரைவில் வரும் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. ஆகா
    உலகம் சுற்றும் வாலிபர்தான் தாங்கள்
    தங்களின் தேடல் வியக்க வைக்கிறது நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் சுற்றத்தான் முடியவில்லை தங்களது வாக்கு பலிக்கட்டும் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  20. தங்கள் பதிவில் விடயங்கள் இல்லை என சொல்லாதீர்கள். இந்த பதிவின் மூலம் தான் சில பதிவர்கள் இருக்கும் நாடுகள் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. நீங்கள் அபுதாபியில் பார்த்ததை பார்க்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு பதிவால் உபயோகம் உண்டெனில் சந்தோஷமே வாக்கும் அளித்தமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  21. அன்பு நண்பரே, நான் ஒரு நாடு ஓடி. துபாயில் ஆரம்பித்த வெளிநாட்டுப் பயணம் யூ.ஏ.ஈ.யின் ஏழு நாடுகளும் சுற்றி விட்டு பின் கத்தார்,குவைத், எகிப்து, சிங்கப்பூர், தாய்லாந்து என தற்போது மலேஷியாவில் மையம் கொண்டுள்ளது. உங்களை சந்திக்க நானும் ஆர்வமாக உள்ளேன். துபாயிலோ அல்லது தமிழ்நாட்டிலோ எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே தாங்கள்தான் உலகம் சுற்றும் வாலிபர் என்று நினைக்கிறேன் நான் போக விரும்பும் நாடுகளில் ஒன்று தாய்லாந்து.

      யூ.ஏ.ஈ யின் 7 நாடுகள் என்று தாங்கள் குறிப்பிட்டது தெரியாதவர்களுக்கு குழப்பத்தை உண்டு பண்ணும் 7 ஸ்டேட் 80தே சரி வருகைக்கு நன்றி நண்பா நிச்சயம் ஒருநாள் திருநெல்வேலியிலாவது சந்திப்போம்.

      நீக்கு
    2. ஊருக்கு வரும் பயணம் உறுதியானவுடன் தங்கள் இணைய முகவரிக்கு (devakottaiyan@yahoo.co.in) விபரம் தெரிவிக்கிறேன். தாங்களும் அந்த நேரத்தில் ஊரில் இருந்தால் நிச்சயம் சந்திப்போம்.

      நீக்கு
    3. நல்லது நண்பரே...

      நீக்கு
  22. பதிவின் நோக்கமே பதிவர்கள் வாழும் ஊர்களைக் குறிப்பதுதான் என்றதனால்தான் அப்படி ஒரு பின்னூட்டம் எழுதினேன் திருமதி கீதாசாம்பசிவம் திருச்சிவாசி, திருமதி கோமதி அரசு மயிலாடுதுறை. மஞ்சுபாஷிணி வளைகுடா வாசி என்று நினைக்கிறேன் .மற்றவர்கள் பற்றி நீங்கள் எழுதி இருப்பது சரியாய் இருக்கும் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் எனக்கு நிச்சயமாகத் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கு நன்றி ஐயா திருமதி. கீதா சாம்பசிவம் மற்றும் திருமதி கோமதி அரசு இருவரின் பதிவுகளில் அமெரிக்கா 80தை கண்டேன் அதன் அடிப்படையில் குறிப்பிட்டேன் மேலும் திருமதி. மஞ்சுபாஷிணி சம்பத்குமார் குவைத் நாட்டில் வசிக்கின்றார்கள் அவர்களைப்பற்றி நான் குறிப்பிடவில்லை காரணம் நான் இந்தியா வந்திருந்த பொழுது அவர்களும் வந்து இருந்தார்கள் அவருடன் டெலிபோணில் பேசினேன் மேலும் நானும் அவரும் அடிக்கடி டெலிபோணில் பேசிக்கொ(ல்)வோம் அவர் எடுத்தவுடன் மிரட்டல் பாணியில்தான் பேசுவார் அவரிடமிருந்து போண் வந்தால் எனக்கு பயம்தான்.
      (இன்னும் குவைத் திரும்பவில்லை என்று நினைக்கிறேன் நன்றி ஐயா)

      நீக்கு
  23. அன்பின் ஜி!..

    இத்தனை பெரிய பட்டியலை வெளியிடுவதற்கு - தங்களால் தான் இயலும்..

    பிரமிப்பு!.. ரசனையான சந்திப்பு!..

    (வெறுங் காப்பி மட்டுந்தானா?..)

    அது இருக்கட்டும் -

    சீட்டு எடுத்துக் கொடுத்த பூசாரிக்கு தட்சணை வெச்சீங்களா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எங்கள் சந்திப்புகள் அடிக்கடி நிகழ்வதுதானே...
      பூசாரி நான் வெளிநாட்டுப் பார்ட்டி என்று தெரிந்தவுடன் யூ.எஸ் டோலர் கேட்டார் நான் பார்த்ததே இல்லை என்றேன் பிறகு குவைத் தினார் கேட்டார் நான் கட்டை விரல் பலிபீட விபரத்தை சொல்லவும் உள்ளதை கொடுத்தால் போதுமென்றார் பிறகு பாக்கெட்டிலிருந்து 300 ரூபாய் தாளை எடுத்து 38 டாலே வகுத்து ஒரு பங்கு 13 ரூபா, 15 காசு ஒரே நோட்டாக கொடுத்து விட்டு வந்தேன்.

      நீக்கு
  24. அதிக பதிவர்களை சந்தித்து உரையாடியவர்களில் நீங்கள்தான் முதன்மையானவர் என்று நினைக்கிறேன்.அத்தனை பேரையும் நினைவில் வைத்து பதிவேற்றியும் விட்டீர். உங்கள் நட்பு குணத்திற்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உள்ளதை எழுதினேன் அவ்வளவுதான் தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  25. அட.. அட...! இத்தனை சேகரிப்பு!
    யார் யார் எங்கு இருக்கின்றனர் என்று அறிந்து
    பதிவிட்டிருக்கின்றீர்கள்! நாமும் தெரிந்து கொண்டோம்!
    நன்றி நன்றி!

    சகோதரர் குமாருடனான சந்திப்பும் அருமை!
    தொடருங்கள் சகோ!
    வாழ்த்துக்கள்!

    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  26. பட்டியல் பதிவு ! மிகவும் அருமை! பலபேர் எங்கு உள்ளார் என்பதை அறிய முடிந்தது!

    பதிலளிநீக்கு
  27. அன்புள்ள ஜி,

    ஆத்தா வரம் கொடுக்க மனசு திரு.சே.குமார் அவர்களை சந்தித்ததை விளக்குவதற்கு முன் நம் தமிழ் வலைப்பதிவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள்... ‘எங்கெங்கு காணினும் சக்தியடா...’ பாரதியின் பாட்டு வரிதான் நினைவிற்கு வந்தது.

    தமிழகத்தில் அலைபேசியில் தொடர்புகொண்டவர்களையும் வரிசைப்படுத்தி இருந்தீர்கள்... அந்த வரிசையில் நானும்... மகிழ்ச்சி.

    காணொளி கண்டேன்...

    ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
    ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்

    வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
    ஆடிமுடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
    அன்போடு சொல்லுறதைக் கேட்டு நீ அத்தனைத் திறமையும் காட்டு
    இந்த அம்மாவைப் பாரு ஐயாவைக் கேளு
    ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க...!

    நன்றி.
    த.ம.17

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே.... தங்களின் பாடல் பொருத்தமானதே... தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  28. அடடா!!!!எத்தனை நண்பர்கள்

    பதிலளிநீக்கு
  29. நீங்க குறிப்பிட்ட இப்பதிவில் எனக்கு காணொளி பார்த்ததும் மிககவலையாகிவிட்டது. இங்கு உள்ள பிரபல ஜேர்மன் தொலைக்காட்சியில் உயரமான கட்டடங்களில் வேலை செய்பவர்களின் வாழ்வாதாரம் என மிடில் ஈஸ்ட் ஐ மையமாக வைத்து எடுத்திருந்தார்கள். 2hours. நாங்க முழு விவரணத்தையும் (டாகுமென்ரி) பார்த்தோம். நான் உண்மையில் அழுதே விட்டேன் அதில் ஒருவர் (சொன்னா நம்பமாட்டீங்க தமிழர் அவர்) சொன்ன கஷ்டத்தை கேட்டு.
    நீங்க இப்பதிவில் இதை ஏன் பதிந்தீர்கள்,காணொளி உட்பட.?
    சந்தித்தவர்களை சொல்லவில்லையேஏ?
    காயத்ரிஉமையாள்,சகோ.சொக்கன் அவர்களை காணவில்லையே.நலமா அவர்கள்.
    ஜேர்மனிக்குநோத்ரைன் வெஸ்ட் fபாலன்( பக்கம் வாங்க)வந்தால் சந்திக்கலாம் அண்ணா ஜி.
    நானும் இருப்பது மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இங்கு இந்தவகை வேலைகளில் நிறைய இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களே அதிகம் வேலை செய்கின்றார்கள்
      திருமதி. உமையாள் காயத்ரி இருப்பது எஜிப்த், மற்றும் திரு. சொக்கன் அவர்கள் இருப்பது ஆஸ்திரேலியா கண்டிப்பாக ஒருநாள் போவேன் பதிவுடன் புகைப்படங்களும் வரும் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  30. அனைவரையும் நினைவில் வைத்து எழுதுவதே பெரிய விஷயம். சிறப்பான பகிர்வு சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க இப்பத்தான் வழி தெரிஞ்சுதோ......

      நீக்கு
  31. நான் அம்பேரிக்கா போய் நாலு வருடம் ஆகப் போகிறது. 2012 ஆம் ஆண்டிலிருந்து ஶ்ரீரங்கம் தான். கோமதி அரசுவும் சென்ற வருடம் போயிருந்தார்கள். இப்போ மதுரை, கோவை, மயிலாடுதுறை என மாற்றி இருக்காங்கனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 4 வருசம் ஆச்சா சொல்லவே இல்லை வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  32. நாட்டுப்புறப் பாடலைத் தேடி வந்தேன். அந்தப் பதிவு கிடைக்கவில்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்க்கு முந்தைய பதிவு தலைப்பு - பஞ்சனூர், பஞ்சுவியாபாரி பஞ்சவர்ணம்

      நீக்கு
  33. வணக்கம் சகோதரரே.

    எத்தனை பதிவர்கள்.? அனைவரின் வசிக்குமிடத்தையும் நினைவுபடுத்திக் கொண்டு அனைவரையும் குறிப்பிட்டிருந்த விதம் அருமை சகோதரரே. அதில் என் பெயரும் மறவாமல் இடம் பிடித்துள்ளமைக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தனை பேரையும் நீங்கள் சந்திப்பீர்கள். சமீபத்தில் நிறைய பதிவர்களை சந்தித்து உரையாடிய பெருமையுடையவர் நீங்கள்தானே.! வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  34. அடேங்கப்பா! உங்கள் சுவிஸ் பதிவு தேடி தேடி அலைந்து களைத்தே போனேன். தலைப்பில் ஏதோ பதிவர் சந்திப்பு என இருக்க சரி படிப்போம் என படித்தும் விட்டேன். அமெரிக்காவில் ஒபாமா எனும் பெயரில் தமிழில் எழுதும் பதிவர் இருப்பது நிஜமா க்ல்லர்ஜி சார்?

    பெரிய லிஸ்ட். உலகத்தையே சுற்றி வந்து விட்டீர்கள் சார். கிரேட் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வழி சொல்லியும் சுற்றவேண்டிய அவசியமென்ன.... நேரமிருந்தால் எனது அமெரிக்க பதிவு பாருங்கள் 2015 மார்ச் தலைப்பு - Killergee in AMERICA

      நீக்கு