இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 16, 2015

தங்கமான மனிதர்

திரு. கில்லர்ஜி, திரு. துரை செல்வராஜூ மற்றும் திரு. சே.குமார்.

 04.10.2015 ஞாயிறு இரவு 08.42 மொட்டு வாயில் கை வைத்து அடுத்த பதிவுக்கு என்ன ? எழுதலாம் என்று இருக்கும் மூளையை கசக்கிக் கொண்டு இருக்கும் பொழுது டிடிங் என்ற ஒலியோசை எனது கணினியில் மூலையோரமாய் மின் மடல் வந்து இருப்பதற்கான சமிக்ஞையே அது என்னவென்று சொடுக்கினேன் மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம், இன்பம், பேரானந்தம் ஆம் அதில் கண்ட விடயமே காரணம் ஆம் நட்புகளே அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களிடமிருந்து வந்ததே அச்செய்தி இதோ...

புகைப்படத்தை பெரிதாக காண மையத்தில் ஒருமுறை சொடுக்கவும்
அன்பின் ஜி அவர்களுக்கு, வணக்கம்..
எதிர்வரும் சனிக்கிழமை (11/10) அன்று - குவைத்திலிருந்து அபுதாபிக்கு வருகின்றேன்..  வருடாந்திர விடுமுறை.. மகள் வீட்டில் - சில நாட்கள் தங்கி விட்டு - தஞ்சைக்கு செல்வேன்.. இடையில், தங்களைச் சந்திப்பதற்காக - அக்டோபர் 14 - புதன் அன்று மாலை 7 மணியளவில், அபுதாபியில் உள்ள சரவணபவன் உணவகத்தில் நேரம் ஒதுக்கியுள்ளோம்..

திரு (மனசு) குமார் அவர்களுக்கும் - அன்பு கூர்ந்து தெரியப்படுத்தி - 
அவரையும் அழைத்து வரவும்.. நம்முடன் உணவருந்த அழைக்கின்றோம்.. 

தங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என எண்ணுகின்றேன்.. தங்களுடைய பதிலுரையை எதிர் நோக்குகின்றேன்..
வர்ஷிதாவுடன் நானாகிய கில்லர்ஜி
இதுவே மேற்கண்ட சந்தோஷத்திற்க்கு காரணம் ஆஹா உடன் ஜிக்கு பதில் அனுப்பினேன் பிறகு நண்பர் மனசு சே.குமார் அவர்களுக்கு செல்லில் அழைத்து ஒரு வி.ஐ.பியை சந்திக்கின்றோம் என்று சொல்லி விட்டு சரவணபவன் உணவகம் இருக்கும் மதினா ஸாயித் வளாக உரிமையாளரை அழைத்து விபரம் சொன்னேன் என்ன சொன்னேன் 80 தங்களுக்கு பிறகு தெரியவரும் அந்நாளும் வந்தது காலையிலேயே குமார் அவர்களை அழைத்து ஞாபகப்படுத்தினேன் ஏற்கனவே 18 முறை சொல்லி விட்டேன் 80 வேறு விடயம் மாலை சரியாக சொன்னபடியே 07.12 pm க்கு வளாகம் சென்று விட்டேன் அங்கு எனக்கு முன்பே குமார் ஜி உடன் அன்பின் ஜியை செல்லில் அழைக்க அவர்கள் ‘’On the way’’ 80தை தமிழில் சொன்னார்கள் பிறகு இருவரும் உட்கார்ந்து வழக்கம் போலவே பதிவர்களைப் பற்றி பொரணி பேசினோம்
சிறிது நேரத்தில் அன்பின் ஜி, ஜியின் மருமகன், மகள், பேத்தி வர்ஷிதாவுடன் வந்தார்கள் அவர்தான் முதலில் கண்டார் கட்டியணைத்து தழுவிக்கொண்டார் உண்மையிலேயே சிறிது நேரம் எங்களுக்குள் பேச்சொலி வர வில்லை இதை நண்பர் சே. குமாரும் உணர்ந்திருப்பார் அருகில் அமர்ந்து பேசினோம், பேசினோம், பேசினோம், இல்லை, இல்லை ஜி அவர்கள் பேசிக்கொண்டே இருக்க, நாங்களிருவரும் கேட்டுக்கொண்டே இருந்தோம் ஆன்மீகம் முதல் அரசியல்வரை எதையும் விடவில்லை அனைத்தும் குமாரின் மனசில் பதிவாகியது சுமார் 8 GB save ஆகி இருக்கலாம்.
எங்களின் அறுவை தாங்காமலோ... என்னவோ.. ஜியின் மகளும், மருமகனும் கீழ் தளத்துக்கு போய் ரவுண்ட் அடிக்க போய் விட்டார்கள் பிறகு அவர்களும் வந்தவுடன் சரவணபவன் உணவகத்தில் உணவருந்தினோம் பேத்தி வர்ஷிதா பர்ஹானாவைப் போலவே என்னிடம் இருந்து கொண்டது பிறகும் வெளியே வந்தும் பேசிக்கொண்டிருந்தோம் அதன் பிறகு நேரம் அதிமாகி விட்டதால் அவர்களும் சிறிது தொலைவான இடத்தில் இருப்பதால் மனமின்றி பிரியாவிடை பெற்றோம் வாழ்வில் ஒரு உயர்ந்த மனம் படைத்த மனிதரை இன்று சந்தித்து இருக்கிறேன் 80தை எமது வரலாறு எழுதிக்கொண்டது.

ஜியின் மருமகன் திரு. சிவபாலன் வர்ஷிதாவுடன்...

அன்பின் ஜி திரு. துரை செல்வராஜூ அவர்கள் தனது வரலாறு முக்கியம் பதிவில் எங்கள் சந்திப்பினை எதிர் நோக்கியே – அந்த வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் ஜொலித்தது என்று குறிப்பிட்டு இருந்தார்கள் அதன் உள் விபரங்கள் தெரியாத காரணத்தால் அப்படி எழுதி விட்டார் காரணம் என்ன தெரியுமா ? பதிவின் தொடக்கத்தில் நான் சொல்லியிருந்தேனே.... மதினா ஸாயித் வளாக உரிமையாளரை அழைத்தேன் என்று இப்பொழுது புரிந்ததா ?
-கில்லர்ஜி-

 தங்க மனம் படைத்த ஜிக்கு சிறிய பரிசு.

59 கருத்துகள்:

  1. அன்பின் செல்வராஜு அவர்களது பதிவில் இந்தியா வருவதைச் சொல்லவில்லையே இதன் மூலம் செல்வராஜுவுக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் பெங்களூர் வர அழைக்கிறேன் சரி பதிவர்களைப் பற்றிய பொரணியில் என் தலையும் உருண்டதா. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா தங்களைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டு இருந்ததைவிட ஜிதான் அதிகம் பேசினார் இந்த வயதிலும் தங்களது எழுத்தாற்றலின் வலிமையைக் குறித்து வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  2. இனியதோர் சந்திப்பு. உங்கள் மகிழ்ச்சி எனக்கும் தொற்றிக் கொண்டது. தொடரட்டும் சந்திப்புகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜியின் மதிழ்ச்சி எமக்கும் மரிழ்ச்சியே.... நன்றி ஜி

      நீக்கு
  3. வணக்கம் ஜி! அழகான படங்களுடன் அன்பின் வெளிப்பாடு கண்டு மிக்க மகிழ்ச்சி! வரலாறல்ல பெக்கிஷம் ஜி! நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையில் பொக்கிஷம் போன்ற மனிதரைத்தான் சந்தித்தோம்.

      நீக்கு
  4. பொரணி பேசியதில் மும்மூர்த்திகளின் மனமும் உடலும் குளிர்ந்திரந்தால் ...ரெம்ப சந்தோசம்...

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள ஜி,

    திருமிகு.துரை அவர்களைத் தாங்களும் மனசார்ர சந்தித்தது பற்றி புகைப்படத்துடன் அழகாகச் சொல்லியது கண்டு மகிழ்ந்தேன்.

    த.ம. 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணவையாரின் மனம் திறந்த மகிழ்ச்சிக்கு நன்றி

      நீக்கு
  6. நண்பர்களின் சந்திப்பு அருமை சகோ. மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்?

    பதிலளிநீக்கு
  7. இனிய மனம் நிறைந்த சந்திப்புதான்.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. இனிய சந்திப்புதான்...
    மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  9. அண்ணா...
    8 ஜிபி இல்லை அதுக்கும் மேல...
    கலக்கிட்டீங்க பல்சுவைப் பதிவரே....
    சூப்பரோ சூப்பர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 8 GBக்கும் மேலா ? நான் கணக்குல கொஞ்சம் வீக் நண்பரே...

      நீக்கு
  10. மீண்டு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி....

    புரிதலுக்கு மிக்க நன்றி ஜி...

    அன்புடன்
    திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  11. இனிய நட்புகள்... சுகமான சந்திப்புகள்!

    பதிலளிநீக்கு
  12. என்ன இனிய நட்புகள்!!! ம்ம்ம் அங்க போயும் பொரணி பேசியிருக்கீங்க பாருங்க....வில்லங்கத்தாரின் தலை உருண்டிருக்குமே!! உருள்வதை விரும்புபவர்கள்!!!

    அருமையான சந்திப்பு....கொஞ்சம் பொறாமையும் கலந்து மகிழ்வு (நல்ல பொறாமை!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எங்களோட பொரணி பட்டியல் எழுதினால் 1 ¾ கிலோ மீட்டருக்கு பதிவு நீளும்......

      நீக்கு
  13. அழகிய இனிமையான தருணங்கள்.உங்களது சந்தோஷம் எழுத்தில் தெரிகிறது. இனிமையான இந்த சந்திப்பு தொடர வாழ்த்துக்கள் அண்ணா ஜி..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையே சந்தோஷமான தருணங்களே....

      நீக்கு
  14. அன்பின் ஜி..

    கொஞ்ச நேரத்திற்கு முன் தளத்திற்கு வந்தேன்.. உண்மையிலேயே கண்கள் கலங்கி விட்டன.. அந்தப் பக்கம் குமார்.. இங்கே நீங்கள் மீண்டும் மனம் நெகிழ்ந்தது..

    நட்பும் நல்லுறவும் தழைக்க வேண்டும்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி நாங்களும் அந்நிலையைப் பெற்றோம் நன்றி

      நீக்கு
  15. வணக்கம்
    ஜி

    நட்பு தொடரட்டும் தேசம் கடந்தும் நம் பதிவர்களின் நட்பு கண்டு மகிழ்கிறேன் வாழ்த்துக்கள்
    த.ம11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  16. உங்களது சந்திப்பானது எங்களையும் அவ்விடத்துக் கொண்டுவந்துவிட்டது. வ்லைப்பதிவர் விழாவின்போது தொலைபேசியில் நீங்கள் பேசியது நீங்கள் விழாவில் இல்லாத குறையைப் போக்கியது.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் மனம் திறந்த கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  17. அபுதாபியிலும் ஓர் பதிவர் சந்திப்பு
    மனம் மகிழ்கிறது நண்பரே
    திரு துரை செல்வராசு அவர்களை நீண்ட காலமாக,
    வலை உலகிற்கு வருவதற்கு முன்னரே அறிவேன்
    பழகுதற்கு இனியவர், பேச்சில் மென்மை,
    வார்த்தைகளில் அன்பு கலந்து பேசுபவர்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  18. பதில்கள்
    1. தங்களின் விரிவான விளக்கவுரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  19. அந்நிய மண்ணில் நம்மவர்களை அதுவும் நாம் நேசிப்பவர்களை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்? இனிய சந்திப்பை சுவைபட பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  20. கடல் கடந்து சென்றபோதும் வலைப்பதிவர்களைச் சந்திப்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் மூவரையும் ஒரு சேரப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மகிழ்ச்சி கண்டு எமக்கும் மகிழ்ச்சி நண்பரே...

      நீக்கு
  21. வணக்கம் நண்பா!
    அருளாளர் அய்யாவுடன் அளவளாவிய அற்புதமான பதிவாளர் திருவிழா பற்றிய
    அருமை செய்திகளையும் சொல்லி இருக்கலாம். அதுசரி அப்புறம் அடுத்த பதிவுக்கு
    செய்தி வேண்டுமே? அப்படித்தானே?
    மகிழ்வு கரை புரண்டோடி இருக்கும்! நட்புக்கு இணை இவ்வுலகில் ஏதுமில்லை.
    நன்றி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா எல்லாவற்றையும் ஓசியலேயே தெரிஞ்சுக்கவா ? வருகைக்கு நன்றி நண்பா..

      நீக்கு
  22. எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். உங்க உருவத்தையம் மீசையையும் பார்த்தபிறகும் குழந்தைகள் எப்படி அழாமல் இருக்காங்க என்பது தான்(கோபம் வேண்டாம்)
    இதுபோன்ற சந்திப்புகள் இனிமையானவை இதமானவை தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சிறு வயது முதலே குழந்தைகளை கண்டால் பயப்படாமல் போய் விடுவேன் அதுவே காரணம் வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
    2. எனக்கும் இது மிகப்பெரிய சந்தேகம்.

      நீக்கு
    3. எதற்க்கு ? சந்தேகம் அதான் விபரத்தை சொல்லி விட்டேனே பிறகென்ன ?

      நீக்கு
  23. கடல் கடந்த பதிவாளர் சந்திப்பா இது ? ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
  24. அருமையான சந்திப்பும் நெகிழ்ச்சியாக பகிர்வும் ஜீ.

    பதிலளிநீக்கு
  25. அருமை யான பதிவு அன்பரே

    பதிலளிநீக்கு
  26. மூவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  27. //சுமார் 8 ஜி.பி சேவ் ஆகியிருக்கலாம்// - :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கும் நண்பரே... கணிப்பு தெரியவில்லை.

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே.

    இன்றுதான் தங்களின் விடுபட்ட பதிவுகளை படித்தேன். நட்பை மதித்து வலையுலக நண்பர்களை சந்தித்து உரையாடி மகிழும் தங்கள் செயல் பாராட்டுக்குரியது. அதை எங்களிடமும் நட்புடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். தங்கள் இனிதான சந்திப்புக்கள் இனியும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி சகோ.

      நீக்கு