இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 11, 2015

நெஞ்சுக்கு நீதி


11.10.2015 அபுதாபி எனது அலுவலகத்தில்...
எனது செல்லில் பட்டும் படாமல் கிடைத்த வலைப்பதிவர் நேரலை (LIVE) பதிவர் விழாவை பார்த்துக்கொண்டு இருந்தேன் மனுஷன் சூழ்நிலை தெரிய வேண்டாம் அறிவு இருக்காயென்ன ? இவளுகளுக்கு அதாங்க.. எனது அலுவலகத்தில் வேலை செய்யும் அரபிப்பெண்களுக்கு சும்மா நொச்சு நொச்சுனு தொலைபேசி அடிச்சுக்கிட்டு அந்தப் ஃபைலை இங்கே அனுப்பு... இந்தப் ஃபைலை அங்கே அனுப்பு, துபாய்க்கு மின்னஞ்சல் அனுப்பு அதை முடிச்சுட்டியா ? இதை முடிச்சுட்டியா ? எனக்கு கோபம்னா கோபம் அப்படிக் கோபம் வந்துச்சு நான் வலைப்பதிவு மாநாடு நடக்கும் சந்தோஷத்தில் காலையில் அலுவலகம் புறப்பட்டவன் ஏதோ இவங்களோட நல்லநேரம் கோடரியை தோளில் தூக்கிப்போட்டு திரியும் நான் இன்று மறந்துட்டேன் இல்லையென்றால் ? சும்மா இருக்கும் பொழுது கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

சரி அலுவலகத்துல எனது கணினிக்கு இணையம் இணைப்பு கொடுத்தாங்களே... பதிவர் மாநாடு திறந்து பார்க்க முடியுதா ? கூடாதாம் எந்தப்பாக்கம் போனாலும் திண்டுக்கல் பூட்டு ஒருவேளை நண்பர் தனபாலன் வாங்கி அனுப்பி இருப்பாரோ ? என்று சந்தேகப்படுகிறேன் அலுவலக சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் (Outlook Only) மட்டும்தான் பார்க்க முடியுமாம் இதென்ன ? நியாயம் அவசரத்துக்கு நண்பர்  Yahoo வைக்கூட பார்க்க முடியவில்லை சரி செல்பேசியில் நமது நண்பர்களை அழைத்து பேசுவோம் என்று அழைத்தால் அலுவலக தொலைபேசியின் தொல்லை டிரிங்.. டிரிங்... இப்படியே தொடர்ந்து அடித்துக்கொண்டு இருந்தால் இவனை நிம்மதியாக பார்க்க விடக்கூடாது பதிவர்களுடன் பேசவிடக்கூடாது என்ற கெட்ட எண்ணம்தானே... இதற்க்கு பின்னணியில் எதிர்க்கட்சியின் சதி இருக்கிறதோ... என்றும் சந்தேகமாக இருக்கின்றது.


எனக்கு பொறுமை தாங்க முடியவில்லை கையும் ஓடலை, காலும் ஓடலை (கையும், காலும் எப்படி ஓடும் ? உடம்போடுதானே இருக்கும்) கோபத்தை அடக்க முடியாமல் உங்களுக்கு அறிவு இருக்கா ? குப்பூஸைத் திங்கிறியளா ? இல்லை வேற ஏதாச்சும் திங்கிறியளானு ? டங்கைப்புடுங்குறது மா3 கேட்டுட்டு பஞ்சிங் செய்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன் உடன் கணினியைத் திறந்து பதிவர் விழாவைப் பார்த்தவுடன்தான் நெஞ்சுக்கு நீதி Sorry நெஞ்சுக்கு நிம்மதி.
குறிப்பு குப்பூஸ் அரபு நாட்டு பாரம்பரிய உணவின் பெயர்.
மன்னர் தொண்டைமான் ஆண்ட புதுக்கோட்டை நகரம்
இன்று 11.10.2015 ஞாயிறு அதிகாலையிலிருந்தே... பேரூந்து நிலையத்தில் தொடங்கியது சலசலப்பு ஆம் தமிழகமெங்குமிருந்து வந்து இறங்கிய வண்ணம் மக்கள் கூட்டம் இறங்கிய கூட்டமெல்லாம் ஆட்டோக்களிலும், நகரப் பேரூந்துகளிலும் ஏறி ஆலங்குடிச் சாலையில் இருக்கும் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்திலேயே... இறங்குகின்றார்கள் உள்ளே நுழைவது யார் தெரியுமா ? நாளைய தமிழகத்தின் சரித்திரத்தை மாற்றி எழுதப்போகும் வலைப்பதிவர்கள் கூட்டம் ஆம் வலைஞர்களின் கூட்டமே...
உள்ளே அனைத்துப் பதிவர்களும் முதன் முதலாக சந்திக்கும் பலரும் சந்தித்து மனம் நிறைந்த சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்கின்றார்கள் பல வலைஞர்கள் சிறப்பிக்கப்படும் காட்சிகளும், கூடி மகிழ்ந்த காட்சிகளையும் இதோ பாருங்கள்.
விழாவுக்கு வருகை தந்த அனைத்துப் பதிவர்களுக்கும் எமது வாழ்த்துகளும், நன்றியும்.
பதிவர் விழாவைப் பற்றிய புகைப்பட வெளியீட்டின் முதல் பதிவாக என்னுடையதாகத்தான் இருக்கும் 80 எமது கருத்து சரியா ? தவறா ? 80தை தாங்களே சொல்ல வேண்டும் பதிவு வெளியான இந்திய நேரம் மாலை 05.30
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

72 கருத்துகள்:

  1. நேரலை நானும் சற்று நேரம் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஜி
    தங்களைப் போன்றுதான் என் நிலையும்...எனது.
    ஜன்னல் ஓரத்து நிலா புத்தக வெளியீட்டு படத்தை வெளியீட்டு படத்தை பதிவில் போட்டமைக்கு நன்றி ஜீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ரூபனின் வருகைக்கு நன்றி நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்

      நீக்கு
  3. போகத்தான் முடியவில்லை..... நேரலையாவது பார்க்கலாம் என நினைத்திருந்தேன். காலையிலேயே அலுவலகத்திலிருந்து அழைப்பு. அலுவலகம் சென்று மாலை ஆறு மணிக்குத் தான் திரும்பினேன்.... :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அடுத்த வருடம் இருவரும் கணடிப்பாக கலந்து கொள்கிறோம்

      நீக்கு
  4. ஹா ஹா .... நானும் கொஞ்ச நேரம் தான் பார்க்க முடிந்தது 3 மணி வரை.
    ரசிக்கும் படியான பதிவு சுப்பர் ரசித்தேன். நான் நினைத்தேன் நீங்கள் கலந்து கொள்கிறீர்கள் என்று. சரி சரி அடுத்த முறை பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நலம்தானே... எத்தனையோ பதிவுகள் கடந்து விட்டனவே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. மகிழ்ச்சி கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர். இரா.தெ.முத்து அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் நன்றியுடன்.

      நீக்கு
  6. ஆஹா..சகோ...விழா பற்றி இனி மற்றவர்கள் தான் பேச வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ஆவலுடன் இருக்கிறேன் சகோ பதிவுகளைக் காண.... வெற்றிகரமாக நடத்தியமைக்கு வாழ்த்துகள்

      நீக்கு
  7. நன்றி நண்பரே! எங்கிருந்த போதும் நம்மால் புதுக்கோட்டை வலைப்பதிவு நண்பர்களை மறக்க இயலாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் புகைப்படக் கலையை காண ஆவலுடன் இருக்கிறேன் தங்களைக் (LIVE) காணொளியில் கண்டேன் தாங்கள் விழா நடக்கும் பொழுது செல்பேசியை எடுத்து விட்டு ஆஃப் செய்து விட்டீர்கள் புரிந்து கொண்டேன்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஸிநேகமாய.. ஜி நமஸ்காரமுண்டு நிங்களின்டே.. அபுதாபியிலேக்கு ஸுவாஹதம் ஞானும் அதே... அதே...

      நீக்கு
  9. விழாவில் தங்கள் மருமகனை சந்தித்து மகிழ்ந்தேன் :)
    நாளைய பதிவுகளில் போட்டோக்கள் நிரம்பி வழியக் காண்போம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி

      நீக்கு
  10. வணக்கம் ஜி! என்னை பார்த்தீர்களா! நல்ல அனுபவம்! பலறை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது! பதிவர் திருவிழா! உண்மையில் மிக பிரமாண்டம் அனைத்து எல்லாம் (?)விசயங்களிலும்! இதைப்பற்றி என்பதிவில் வெளியிட்டதும் வந்து கருத்து தாருங்கள்! விழாவை பற்றி முதல் பதிவுக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்ல அனுபவ அறிவுகளை பெற்றமைக்கு வாழ்த்துகள் காத்திருக்கின்றேன் தங்களின் பதிவுகளுக்காக

      நீக்கு
  11. வலைப்பதிவர் மாநாடு பற்றிய புகைப்பட பதிவை வெளியிட்டதில் நீங்கள் தான் முதல்.. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. வருக நண்பரே முதல் பரிசு பெற்றமைக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தொடரட்டும் தங்களது முயற்சிகள்

      நீக்கு
  13. அழகான படங்கள்.அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நாம்தான் கலந்து கொள்ள முடியவில்லையே புகைப்படத்திலாவது பார்ப்போம்.

      நீக்கு
  14. விழா நிகழ்வுகளை சுட்டுத்தள்ளிக்கொன்(றே)டே இருக்க அருமை கில்லர் இல்லையே என்று வருத்தமுற்றிருந்தவேளையில். தாங்கள் அனுப்பியவரை (மைத்துனர்) சந்தித்தித்தேன். இனி எப்படியும்
    எல்லார் படமும்
    கில்லார் வசம்தான் என உறுதிகொண்டேன். நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் (மருமகன்) எனது தங்கையின் மகனை சந்தித்ததில் மகிழ்ச்சி

      நீக்கு
  15. விழா நடக்கும் போது நீங்கள் தொலைபேசியில் என்னைத்தொடர்பு கொண்டு பேச விரும்புவதாக தில்லையகத்து மேடம் கீதா அவர்கள் சொன்னார்கள் என் துரதிர்ஷ்டம் எதுவுமே கேட்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா தாங்களிடம் அந்த சூழலில் பேசுவது கடினமே... நன்றி ஐயா தொடர்பு கொள்கிறேன்

      நீக்கு
  16. விழாவுக்கு செல்ல முடியவில்லை! என்னாலும் நேரலை பார்த்து ரசிக்க முடியாத நிலை! தொடர் பணி காரணமாக இப்போதுதான் இணையம் பக்கம் வர முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நன்றி அடுத்த வருடம் காணலாம்

      நீக்கு
  17. முதல் பதிவு தங்களுடையதுதான் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது புகைப்படங்களை காண ஆவல் பதிவில்....

      நீக்கு
  18. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள ஜி,

    விழாவில் ஒரு குறை என்றால்... தாங்கள் இல்லையே என்ற குறைதான். உடல் மட்டும் அங்கே... உள்ளம் எல்லாம் இங்கே...நெஞ்சம் மறப்பதில்லை... நெஞ்சுக்க நீதி... Sorry நெஞ்சுக்கு நிம்மதி கிடைத்தது மகிழ்ச்சி.

    நன்றி.
    த.ம. 15

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே தங்களை நேரலையில் கண்டு மகிழ்ந்தேன்

      நீக்கு
  20. அட, நேரலை பார்த்து அப்பொழுதே பதிவிடலாம் என்று நினைத்தேன் சகோ. அசதியில் படுத்துவிட்டேன், மூன்றரை மணிக்கு. பிறகு நேற்று முழுவதும் ஓட்டம், கணவரை இரவு பகலாகப் அலைபேசியில் பிடித்துவைத்துக் கொண்டு நான் எழுதுவதைத் தாமதமாக்கி விட்டார்களே அவர் அலுவகத்தினர்!
    அசத்துங்கள் சகோ

    பதிலளிநீக்கு
  21. போட்டோஸ் கலக்கல்...
    கொன்னு எடுத்துருச்சுங்களா?
    நான் பார்க்கவில்லை அண்ணா...
    ஆறு மணி வரை பணி... அதன் பின் கொஞ்சம் வெளியில் வேலை...
    கலக்கிட்டீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை அடுத்த வருடம் கண்டிப்பாக செல்வோம் நண்பரே..

      நீக்கு
  22. நல்ல நேரத்தில் நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா10/13/2015 1:14 PM

    நானும் பார்த்தேன் கீதாவிடம்
    அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  24. கில்லர் ஜி உங்களுடன் பேசியது இருவருக்குமே ரொம்ப சந்தோஷம்! உண்மையாக! விவேக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு நம்ம குறும்பட மக்களை அறிமுகப் படுத்தினோம். அப்புறம் ரொம்ப நேரம் பேச முடியலை....ஏன்னா எல்லாரையும் பாக்கறது....மேடைல நடக்கறத பாக்கறது....அப்புறம் நம்ம மேடைக்குப் போகணுமே கூப்பிடுவாங்களேனு காத்திருத்தல் அப்படினு போயிடுச்சு. சாப்பிடப் போனப்ப விவேக்கைத் தேடினா அவரும் சாப்பிட்டு வந்துட்டுருக்கேனு சொல்ல சாப்பிட்டாரானு கேட்டோம். அப்புறம் நாங்க கிளம்பற நேரத்துகு சற்று முன்னாடியே அவரும் கிளம்பிட்டாரு ஏன்னா அப்போ எஸ் ரா பேச ஆரம்பிச்சாரு அப்ப எல்லாருமே அமைதியா இருந்தாங்க...ஸோ விவேக்குக்கும் வேற யாரும் இல்ல பேச்சுத் துணைக்கு பாவம்..பையன்...

    ம்ம் சூப்பர்! சுடச் சுட(ப்) பதிவு!!! நாங்க இப்பதான் பாக்க முடிஞ்சுச்சு....சரி கடைசில எல்லாம் பாத்தீங்களா இல்லையா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் விவேக்கை சந்தித்து உரையாடியமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  25. ... பல காரணங்களால் நான் விழாவுக்கு செல்ல வில்லை நண்பரே....தங்களைப்பொல் நேரலையிலும் பார்க்க முடியவில்லை நண்பரே......உங்களுக்கு எதிர்கட்சி சதி காரணம் என்றால்..எனக்கு இயற்கை விதி என்ற சதி காரணம் நண்பரே...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நண்பரே நான் வராததால் நீங்களும் போகாமல் இருந்து விட்டீர்கள்...

      நீக்கு
  26. விழாவைப் போல தங்கள் பகிர்வும் வியக்க வைக்கிறது. சூப்பர் சகோ.

    பதிலளிநீக்கு

  27. "நெஞ்சுக்கு நீதி" கிடைத்ததா நண்பா?
    கிடைக்க வாழ்த்துகள்
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா சரியான தருணத்தில் சரியான கேள்வி கேட்டீர்கள் விரைவில் தெரியும் தங்களுக்கு....

      நீக்கு
  28. களப்பணியின் காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் இன்றுதான் தங்களது இப்பதிவினைக் கண்டேன். விழா நிகழ்வில் ஆழ்ந்துவிட்டதால் தங்கள் மருமகனைச் சந்திக்க முடியவில்லை. விழாவின்போது தாங்கள் அலைபேசியில் பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது.நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன். உங்களது முதல் பதிவைத் தாமதமாகப் பார்க்க வந்தோமே என்ற குற்ற உணர்வு என்னுள். தொலைவில் இருந்தாலும் நீங்கள் எங்கள் அருகிலேயே, என்றும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமாக வந்தாலும் தொடர்ந்து வந்து விடும் முனைவருக்கு நன்றி

      நீக்கு
  29. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...

    இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

    நன்றி...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  30. நன்றி நண்பரே. விழா நேரத்திலும் விடாமல் பேசிய உங்கள் அன்புத் தொல்லை தாங்கல சாமி. அப்பறம் நண்பா... விழாப்பற்றிய முதல்பதிவை உங்களுக்கு முன்போ எங்கள் நேரலை நண்பர்கள் பதிவிட்டதால்தான் நீங்கள் பார்க்க முடிந்தது..இல்லையா? அந்த புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த கணினிக் கல்வி நிறுவனமான
    UK INDOTECH நண்பர்கள் கார்த்தி, முகுந்தன், லீலா, புனிதாவுடன் இதற்காக அவர்களைப் பாடாய்ப்படுத்தி எடுத்துவிட்ட நம் விழாக்குழு நண்பர்கள் கஸ்தூரி, ஸ்ரீ மலையப்பனையும் கொஞ்சம் பாராட்டுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே... ஆகவே மேலே ஃப்ளாஷ் நியூஸ் (தெருக்குரல்) விழா முடிந்த உடனே விட்டேன் கவிஞரே...

      நீக்கு
    2. //..நாளைய தமிழகத்தின் சரித்திரத்தை மாற்றி எழுதப்போகும் வலைப்பதிவர்கள் கூட்டம்

      இதுதான் ஜீ ஹைலைட்டே.
      பொதுப் பதுவுகளை இப்போதுதான் படித்து வருகிறேன். மற்றவங்க பதிவ படிக்கிறத விட கமெண்ட்ஸ் படிக்கிறதுதான் ஜாலியா இருக்கு. நிறைய பேரோட வலைப்பதிவு வருகைப் பதிவேட்டில் உங்களது கையெழுத்தை பார்த்திருக்கேன். அண்மையில் தமிழ்மணம் திரட்டி போன போது இந்தவாரம் அதிக பின்னூட்டம் எழுதியவர்னு உங்க பெயரைப் பார்த்தேன். அட நமக்கு தெரிஞ்சவர்தான்னு நினைச்சுகிட்டேன். தங்கள் வலைப்பதிவிக்கு இதுவே எனது முதல் வருகை. பதிவர் விழா பற்றி ஒவ்வொருத்தரும் என்ன எழுதுறாங்கன்னு தெரிஞ்சிக்க ஒரு ஆசைதான். நம்ம அலைவரிசையில இருப்பவங்களோட நட்பு பாராட்டலாமில்லையா.

      நீக்கு