இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 23, 2015

வெண்மேகமே...


வெண்மேகமே எங்கே நீ போகின்றாய்
நீர் எடுக்கவா ஏன் உனக்கு வெட்டி அலைச்சல்
இங்கு மரமும் இல்லை அதை வளர்க்கும்
மானிடர் மனமும் இல்லை பிறகேன்
உனக்கு வெட்டி அலைச்சல்
கான்கிரீட் வீடுகளுக்கு மழை நீர் எதற்கு
விளைச்சல் இல்லாத நிலங்களுக்கு
நீர் எதற்கு காரணம் அத்தனையும்
ப்ளாட் போட்டார்கள் ஸூட்டு போட்ட
கோமான்கள் மன உலைச்சலில் கேட்கிறேன்
உனக்கு எதற்கு வெட்டி அலைச்சல்
ஊரணியை நிரப்ப மழை தருகின்றாயா
வாளியில் குளிப்பவனுக்கு வான் மழை எதற்கு
வெண்மேகமே கடலில்தானே நீர் எடுக்கின்றாய்
அதுவும் வற்றிப்போனால் மீன்களும்
வேதனைப்படுமே உனக்கு எதற்கு
இந்த வெட்டி வேலை நீ மனிதர்களுக்கு
துரோகம் செய்கிறாய் ஆம் மீன் வளம்
குறைந்தால் உணவுப்பஞ்சம் வராதா
விட்டுவிடு மேகமே கடல்நீர்
எடுப்பதை விட்டுவிடு வேண்டாம்
உனக்கு வெட்டி அலைச்சல்.

- இது கவிதை அல்ல  விண்ணப்பமனு.

56 கருத்துகள்:

  1. மழைக்கு அனுப்பிய விண்ணப்பம் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சுரேஷின் முதல் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. வாளி நீரில் குளிப்பவனுக்கு எல்லாம் வான் மழை எதற்கு!..
    இயற்கையின் அருமையும் பெருமையும் இப்போது தெரிந்திருக்கும்..

    தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரை வெள்ளம் என்கின்றான்.. ஓடும் மழை நீரைப் பேரிடர் என்கின்றான் - தொலைக் காட்சிக்காரன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எந்த ஊர் கோவில் தரிசனத்துக்கு போய் வந்தீர்கள் நலம்தானே... பிரயாணம்
      நாம் செய்த தவறுகளுக்கு நாம்தானே ஜி தண்டணை அனுபவிக்க வேண்டும்

      நீக்கு
    2. நலம் தான் ஜி.. தாங்களும் நலம் தானே.. இன்னும் சற்று நேரத்தில் புதிய பதிவினைக் காணலாம்..

      நீக்கு
    3. வருக ஜி தரிசனத்துக்காக ஆவலுடன்....

      நீக்கு
  3. இயற்கைக்கு எதிரான உங்கள் விண்ணப்ப மனுவை வெண்மேகம் ஏற்றுக்கொள்ளாது என்றாலும் உங்களின் ஆதங்கம் சரியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் நியாயமான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  4. வெண் மேகத்திடம் விடும் தூது அருமை.
    கோடையில் இதையே மாற்றீயும் எழுத வேண்டுமல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியான கேள்வி நாளையே.... வரும்...
      இப்படியே உசுப்பேற்றித்தான் ரணகளமாயிடுச்சு....

      நீக்கு
    2. மழையே மழையே போ போ என்பதும் அப்புறம் வாவா என்பதுமாய்... ஐயோ இந்த மனுசங்ககிட்ட மாட்டிகிட்டேனே ... நான் போகணுமா.. வரணூமா என அந்த வெண்மேகமும் மழையும் தலையை பிச்சிக்கிறதா பட்சி வந்து என் காதில் சொல்லிச்சு!

      அதான் நான் கேட்கின்றேன்.. மழை சார்பாக கேட்கின்றேன்.. வெண்மேகம் சார்பாக....விண்ணப்பத்தூது விட்ட கில்லர்ஜி சாரிடம் கேட்கின்றேன்.. மழை போகணுமா வரணூமா?.

      இல்லை போயிட்டு வரட்டுமா?

      நீக்கு
    3. இதற்கான பதில் நாளைய பதிவு கார்மேகமே......

      நீக்கு
  5. வணக்கம்
    ஜி
    கருமேகமே என்று எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஜி... எழுதிய விண்ணப்பம் சிறப்பு.. த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன் எழுதி விடுகிறேன் இதற்க்கு எதிர்பதம் தலைப்பு கார்மேகமே.... நாளை வருக நன்றி

      நீக்கு
  6. பொறுப்பில்லாத மக்களுக்கு இம்மழை வீணே! விண்ணப்ப மனு அருமை.
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துக்கு நன்றி

      நீக்கு
  7. மழைக்காக அனுப்பிய விண்ணப்ப மனு அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  8. மழையினைப் பயன் படுத்தத் தெரியாதவர்கள் நாம்
    மட+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே இந்த மழை பிறநாட்டில் பெய்தாலும் அவர்கள் பயன் படுத்திக் கொள்வார்கள்

      நீக்கு
  9. இயற்கைக்கு
    படிக்கத்தெரியாது
    படிப்பினை தரத்தான் தெரியும்..
    இந்த படிப்பினை தந்த
    இயற்கையை ஏற்று அதன்
    (நல்) வழி
    நடப்பதே மாணுட தர்மம்.

    இதைப்பயன்படுத்தி
    இன்னொரு பிச்சை வழங்கவும்
    அதற்காக தனியே பிச்சையெடுக்கவுமே
    இன்றைய அரசி'யலாளருக்கு வரமாய்
    மாறி விட்டதே வராது வந்த இந்த
    மாரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே மாரி இடம் மாறி வந்து விட்டாள்.

      நீக்கு
  10. விண்ணப்பக் கவிதை அருமை
    மிகவும் ரசித்தேன்
    பதிவுகளும் கவிதைகளும் தொடர
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் ரசிப்பிற்க்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  11. அன்புள்ள ஜி,

    விண்ணப்பம் கண்டதும் இந்தப் பாட்டுகள் நினைவிற்கு வந்தன.

    அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்...!

    கூவின பூங்குயில் கூவின கோழி
    குருவிகள் இயம்பின
    இயம்பின சங்கம்.
    யாவரும் அறிவறியார் உமக்கெளியார்.
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயோ!!!

    செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
    வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
    வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.
    நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்,
    நித்தம் நித்தம் தித்திக்கும் முத்தம் முத்தம்

    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையாய் முத்தமழை பொழிந்து விட்டீர்கள் மணவையாரே...

      நீக்கு
  12. இப்பத்தானே விண்ணப்பம் அனுப்பி இருக்கீங்க..... பதில் எப்ப வருது என்னான்னு பார்ப்போம்... நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இந்த மனுவும் நமது அரசியல்வாதிகளிடம் கொடுத்தது போலதான்.

      நீக்கு
  13. வெண்மேகத்திடம் வேண்டுகோளா?
    கவிதை வடிவில் ஒரு,
    வெள்ளை புரட்சி!!! வெல்கவே!!!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  14. நாம் செய்யும் தவறுகளுக்காக நொந்துகொள்ளும் விதம் கவிதை நடையில்அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தவறு நம்மிடமே தொடங்குகிறது... வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. நன்றாக இருக்கிறது உங்க விண்ணப்பம். நிச்சயம் வெண்மேகத்திற்கு கேட்டிருக்கும். மானிடர் மனமும் இல்லை-- உண்மைதான் இருப்பதையும் அழிக்கிறார்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ மானிடம் மனம் செத்துக்கொண்டே இருக்கின்றதே....

      நீக்கு
  16. மச்சான் உங்கள் பதிவே உமது தனிச்சிறப்பு.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோ,
    நான் இப்படி தான் புரிந்துக்கொண்டேன்,
    வீணா போன வெட்டிப் பயலுக உன்னை புரிந்துக்கொள்ள மாட்டார்கள்,
    உனக்கு ஏனப்பா இந்த இந்த வெட்டி வேல,,,,,,,,
    எப்படி சகோ, இப்படி தானே,,
    ம்ம் தொடருங்கள்,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தாங்கள் சொல்வதும் சரியென்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. மேகத்தைத் தூது விட்டவரைப் பற்றிக் கேட்டதுண்டு;இங்கு மேகத்துக்கே தூது!
    அருமை

    பதிலளிநீக்கு
  19. தூது விடு படலம் நன்று, நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  20. கவிதை "மனு" நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. கரகாட்டக்காரன் அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் நன்றி

      நீக்கு
  21. ஆமாம் ஜி! இந்த மழை சுத்த வீண். எல்லாம் கடலுக்குள் போய் விழுகின்றது. சென்னையை வெனிஸ் நகராக்கி படகு சவாரி விட்டது மட்டுமே...மழை பாவம் நல்லது செய்ய நினைத்தாலும் புத்திகெட்ட மனிதர்களால் அதன் உழைப்பும் வீணாகின்றது. நல்லாருக்கு ஜி

    பதிலளிநீக்கு
  22. நல்ல விண்ணப்பம்தான்...
    மழை கேட்டுக் கொண்டதா அண்ணா...
    மனசில் சின்ன வலி... அதான் நேற்று வரவில்லை... பதிவை வாசிக்க...
    யாருக்கும் கருத்து இடவில்லை...
    இன்று தங்கள் பதிவுக்கு மட்டுமே...

    பதிலளிநீக்கு
  23. நல்ல விண்ணப்பம்.

    சூட்டு போட்ட கோமான்கள் - நம் ஊரைப் பொறுத்தவரை சூட்டு போட்ட கோமான்கள் அல்ல! பலரும் கரை வேட்டி கட்டிய கோமான்கள். பெரும்பாலான நிலங்களைக் கையகப்படுத்தி வீடுகள் கட்டி விற்பது அவர்கள் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தாங்கள் சொல்வதும் உண்மையே...

      நீக்கு
  24. வணக்கம் கில்லர் ஜி !

    மேகம் விடு தூதா இது ! அருமை பருவத்தில் பெய்யாத மழைக்கும் பருவம் தவறிப் பெய்யும் மழைக்கும் முதலில் ஒரு வழக்குப் போடணும் வருண பகாவானிடம் !

    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தம +1

    பதிலளிநீக்கு
  25. சரிதான், விண்ணப்பம் அனுப்பியதே நீங்க தானா? அதானா வெளுத்து வாங்குது? :)

    பதிலளிநீக்கு