நான் நாத்திகத்திலும், ஆத்திகத்திலும்
சேர்க்கப்படாத விசித்திகத்தை தேடிக்கொண்டு இருப்பவன், விஞ்ஞானத்தையும்
மெய்ஞானத்தையும் குழைத்து என் ஞானம் பேச முயல்பவன் - கில்லர்ஜி
கல்லைக் கண்டேன் கடவுள் என்றார்,
கடவுளைக் கண்டேன் கல்லாய் நின்றார்.
அகத்தின்
அழகு முகத்தில் தெரியும் என்றார்,
முகத்தைப்
பார்த்தேன் அகத்தைப்பார் என்றார்.
அகத்தைக் காண அருகில் சென்றேன்,
அவன் இருப்பதே உன்னிடத்தில் என்றார்.
என்னுள்
இருக்கும் கட+உள் உள்ளிருந்து...
வெளியே
வா என்றேன், உதவி கோர,
தனலட்சுமியை, வெளியேறச் சொன்ன பாவி
என்றனர் கடவுளை உணர்ந்த பாக்கியசாலிகள்.
தானம் பெறவே வெளியே அழைத்தேன்
என்றேன்,
மடையன்
என்றனர், மதிகெட்ட மானிடரே...
வாழ்வில் சோதனை என்றேன், விதி என்றார்,
மதியால் மாற்றினேன், அதுவே விதி என்றார்.
நடந்தது
விதியின் செயலா ? மதியின் செயலா ?
''இது தற்செயல்'' என்றான், குவாட்டரோடு குமாரு.
CHIVAS REGAL சிவசம்போ-
கவிதை
பீர்ல ஆரம்பிச்சு, குவாட்டருக்கு வந்துருச்சே...
சாம்பசிவம்-
கந்தன் புத்தி கவட்டுக்குள்ளேதானே போகும்.
சிவாதாமஸ்அலி-
எல்லோரும் இப்படியே சொல்றாங்களே... இதுக்கு அர்த்தம்
என்ன ?
Killergee-
Just wait next post.
ஆகா.. அருமையான தத்துவ வாதியாகிவிட்டீர்கள்..!
பதிலளிநீக்குஎதற்கும் வெளியில் போகும்போது சட்டைப் பையில் முகவரி அட்டை ஒன்றையாவது வைத்திருங்கள்.. (அட உங்கள் தத்துவ தரிசனம் பெற்றவர்கள் கேட்பாங்க இல்லியா?)என்பதை 80 ஆக்கி, மாதிரியை மா3 ஆக்கி எழுதும்போதே நினைச்சேன்... நீங்க பெரிய லெவலுக்கு வருவீங்கன்னு.. ஆனா இவ்வளவு சீக்கிரமா வருவீங்கன்னு நினைக்கவே இல்ல...வாழ்த்துகள்..
ஆகா கவிஞரே வாழ்த்தும் பொழுது இனி நானும் கவிதை எழுத முடியா விட்டாலும் கவிதை மா3யாவது எழுதி விடலாம் 80 எனது சிற்றறிவுக்கு 8கிறது இதில் படிப்போருக்கு ஆ10 வந்தால் நான் பொருப்பல்ல நன்றி கவிஞரே...
நீக்குதண்ணி அடித்தால் தத்துவம் பிறக்குமோ. உங்கள் பதிவின் கடைசி வரிகள் என்னை இப்படிச் சிந்திக்கத் தூண்டுகிறது
பதிலளிநீக்குவணக்கம் ஐயா இதுவரை அந்த வியாதி என்னை தொற்றவில்லை ஆனால் அவர்களுடன்தான் கூடி வாழ்கிறேன் காரணம் எங்கு இடம் மாறிப்போனாலும் இங்கு இதுதான் நிலை.
நீக்குஅடுத்து கடைசி வரிகள் அடுத்த பதிவுக்கான அச்சாரம் ஐயா கருத்துரைக்கு நன்றி
என்னவோ சொல்ல வரீங்க என்னன்னு புரியல?
பதிலளிநீக்குபுரிந்தால்தான் நண்பரே கஷ்டம் வருகைக்கு நன்றி
நீக்குஉண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குதத்துவவாதியாகிக் கொண்டு வருகிறீர்கள்
தம+1
நண்பரின் வருகைக்கு நன்றி
நீக்குகுடிகாரன்தான் உண்மையைச் சொல்லுவான் என்ற மதி ஒன்று நிலவுகிறது..அதனால் குவாட்டர் குமாரு சொல்லுவதுான் சரி ..
பதிலளிநீக்குகுமார் சொல்வது சரி என்றால் கில்லர்ஜி சொல்வதும் சரிதானே நண்பரே...
நீக்குஇந்த ,உள்ளே வெளியே விளையாட்டு எல்லாம் எனக்கு படிக்காது ,இல்லேன்னா இல்லைதான் :)
பதிலளிநீக்குநான் எப்ப ? ஜி சொன்னேன் இருக்குனு...
நீக்குஅச்சாரம் தொடர வாழ்த்துகள் ஜி...
பதிலளிநீக்குஅடுத்த பதிவுதான் ஜி
நீக்குஎனக்கென்னமோ சந்தேகமாகவே இருக்கின்றது!..
பதிலளிநீக்குடாக்டர் 7மலை ஊரில் தானே இருக்கின்றார்..
அவரிடம் சென்று என் நிலையைக் காட்டவேண்டும்..
முன்பதிவு செய்து வையுங்கள் - ஜி!...
வாங்க ஜி டாக்டர் 7 மலை விரைவில் வருவார் பதிவு தயாராகிறது
நீக்குஹஹஹஹ் ஜி! கல்லூரிக் காலத்தில் இப்படித்தான் ஒரு குவாட்டரு குமாரு....எங்களுக்கு அழகான ஒரு போதனை கொடுத்தான்..
பதிலளிநீக்கு"லவ் ஆல் னு தான் பந்தைத் தட்டுறோம்..பூப்பந்து....ம்ம்ம் லவ் இஸ் காட்...காட் இஸ் லவ்.....காட் இஸ் இன் யு...காட் இஸ் இன் மி...ஐ லவ் யு... ஐ லவ் காட்....யு லவ் மீ ......யு லவ் காட்....லவ்.. ஆல்....கேம்..வேர்ல்ட் இஸ் கேம்...வி ப்ளே கேம்...வேர்ல்ட் ப்ளே கேம்...ஆல் ப்ளே கேம்..." இப்படி இன்னும் ஆங்கிலத்தில் நீண்டது..
கீதா: இதுதான் எனக்க மோனோ ஆக்டிங்கிற்கு உதவியது என்ன செய்ய என்று யோசித்து வருகையில்....
கிட்டத்தட்ட உங்க குவாட்டர் குமாரும் அதையேதான்சொல்லுறாரு போல....குடித்தால் தத்துவம் பிறக்கும் போல அதுவும் வேறு மொழியில்..ஹஹ்ஹ
வாங்க அந்த குடிகார குமாரு எந்த ஊரு ? குளித்தலையா ?
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குமனிதன் படைத்தான் கடவுளை...! தன்னைத் தானே காத்துக் கொள்ளவும்... உடைமைகளை காத்துக் கொள்ள முடியாத கடவுள் அனைவரையும் காப்பாற்ற முடியுமா?
த.ம.8
வருக மணவையாரே... தாங்கள் சொல்லி விட்டீர்கள்
நீக்கு//மனிதன் படைத்தான் கடவுளை// என்று பிறகு எப்பூடி ?
குமாரு சொன்னா சரியாத்தான் இருக்கும்
பதிலளிநீக்குஇப்படி நீங்கள் சொல்வதும் சரிதான் நண்பரே...
நீக்குபதிவைப் பார்த்ததும் பட்டினத்தார் பிளாக் பக்கம் சென்றுவிட்டோமோ என்று நினைத்தேன். ஆனால் நீங்கள்தான். விசித்தகரே வாழ்க உம் பணி.
பதிலளிநீக்குஹாஹாஹா முனைவரின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇது என்ன விசித்திகம்? இதுவரை கேள்விப்படாததாய் இருக்கிறதே! தயை செய்து விளக்கவும்,
பதிலளிநீக்குYES or NO இதனுள் ஊடுறுவி வேறு வார்த்தை தேடுகின்றேன் நான்.
நீக்குவிசித்திகம் என்பதை வித்தியாசம் என்ற வட்டத்துக்குள் அடைக்கலாம் நண்பரே மாறுபட்ட எண்ணங்களும், வேறுபட்ட வார்த்தைகளும், எமது தளத்தில் பிறருக்கு கிடைக்க வேண்டும் என்பதே எமது அவா.
அது வேறொன்றுமில்ல அய்யா, துவைதம் - அத்வைதம் இரண்டுக்கும் இடையில் சிக்கினால் விசித்துவம்..எப்புடீ?
நீக்குசரியா கொலைகாரரே! (அதான் தமிழில் உங்கள் பேர்?)
கவிஞரின் மீள் வருகைக்கு நன்றி தாங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும்
நீக்குஎன்னை இப்படி சமூகம் அங்கீகரிக்க முடியாத பெயரில் அழைக்கின்றீர்கள் யாராவது காவல்துறையினர் கேட்டால் தவறான கண்ணோட்டத்தில் ஏதாவது ஆகிவிடுமே என்று பயமாகீது.
கொமாரு சொன்னா சரியாத்தான் இருக்கும் "ஜி".
பதிலளிநீக்குகரகத்தோடு தாங்கள் சொல்வது உண்மைதான் நண்பா.
நீக்குநம் உள்ளே இருக்கும் கடவுளை விட்டு வெளியே தேடுகிறோம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கேங்கோ அழைகிறோம் ஞானதங்கமே! என்று சித்தர்கள் பாடி இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குகடந்து உள்ளே போனால் இறைவனை காணாலாம் என்பதை தான் தத்துவ் ஞானிகள் கட-உள் கடவுள் என்றார்கள். நீங்களும் தத்துவ்ஞானி ஆகிவிட்டீர்கள்.
வருக சகோ சித்தர்கள் சொல்லி வைத்தது அனைத்துமே மக்களுக்கு போதனைகள்தான் அதை யாருமே புரிந்து கொள்ளாதவரை வேதனைகள்தான் வருகைகும், வாக்கிற்க்கும் நன்றி.
நீக்குஎன்ன சொல்வது,,
பதிலளிநீக்குஒன்னுமே புரியல,,,,
தொடருங்கள் சகோ,
வாங்க சகோ பதிவே புரியவில்லையோ....
நீக்குபிரமாதமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதம +1
நண்பரின் பாராட்டுகளுக்கு நன்றி
நீக்குநன்றி!
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கு நன்றி
நீக்குஇது தான் நீங்கள்...சொல்லும் எதையும் வித்தியாசம் காட்டும் உங்கள் பதிவுகள்..தொடரட்டும் ....
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே....
நீக்குவிசித்திகம் அருமை .மயிலின் கதை எப்படி மாறப் போகிறதோ .காத்திருக்கிறோம்
பதிலளிநீக்குமயில் நாளை வரும் நண்பா பறந்து வாருங்கள் நன்றி
நீக்குஅருமை அண்ணா...
பதிலளிநீக்குசூப்பர்.
வருகைக்கு நன்றி நண்பரே..
நீக்குவித்தியாசம் சகோ, அருமை! அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..முகத்தைப் பார்த்தால் அகத்தைப் பார் :)
பதிலளிநீக்குசகோவின் கருத்துரைக்கு நன்றி
நீக்குபுது குறள்
பதிலளிநீக்குபுது மொழி
நன்று..நன்று
மிகுதியை பார்ப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
https://kovaikkavi.wordpress.com/
வருக சகோ கருத்துரைக்கு நன்றி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
எல்லாம் புதுமையாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம17
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றி
நீக்குதனலெட்சுமி ங்கிறது புது ஆண்டியா அங்கிள்...? ( surely i want auntys number)
பதிலளிநீக்குஇதுதான் தொல்லைபேசி நம்பர் - 00010987654321
நீக்குஎன்னா தைரியம் உங்களுக்கு? அவல் உண்மையிலேயே போட்டுக் குடுத்துடுவா அங்கிள்...அப்புறம் மேல் மண்டை காலி மாதிரி..அடர்ந்த மீசையும்....!!!!அய்யோ..
நீக்குஆஹா... நாந்தேன் உளறிட்டேனோ.... அவ்வ்வ்வ்வ்
நீக்குவணக்கம் ஜி விசித்தகரே !
பதிலளிநீக்குநடைமுறையை நயமாகச் சொல்லிவிட்டீர் கடைசியில் ஒரே வார்த்தையில் குமார் முடித்திட்டான் அவன் அறிவாளி இல்லையா !
கருத்தாளம் நிறைந்த கவி................தை வரிகள் அருமை ஜி !
தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தம +1
ஆம் கவிஞரே குடிகாரர்களில் பலரும் அறிவாளி என்பது எனது கருத்து வருகைக்கு நன்றி
நீக்குகுவாட்டரோடு இருந்தது யார்? நீங்களா? குமாரா? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்..எல்லோரும் ஏதேதோ சொன்னாங்க..நான் கண்டு பிடிச்சேன் பாருங்க..உங்க வீக்கை..
பதிலளிநீக்குஅய்யய்யோ..... மாட்டிக்கிட்டேனோ.....
நீக்குசொன்னாங்க பாருங்க முத்துநிலவன் அங்கிள் உங்களைத் தமிழ்ல கொலைகாரருன்னு...அடடா..மெய் சிலிர்க்குது அங்கிள்..பாத்தீகளா எங்க ஊரு ஆற்றலை
பதிலளிநீக்குஆமாத்தா நீயும் அவருக்கு தலைப்பா கட்டி விடு அவரு உலகம் பூராம் சொல்லட்டும்.
நீக்கு