இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜனவரி 12, 2016

பிச்சாவரம், பிச்சைக்காரன் பிச்சைமுத்து


எனக்கு திருமணம் செய்ய  பெண் பார்க்க போனேன் என்னைப்பற்றி ஏற்கனவே விசாரிச்சு இருப்பாங்கே போல.... என்னை, என்னை, என்னைத்தான்....

மானாமதுரையிலே, மானங்கெட்டவன்னு சொல்லிட்டாங்க...
திருச்சியிலே, திருட்டுப்பயல்னு சொல்லிட்டாங்க...
வெள்ளக்கோயில்ல, வெட்கங்கெட்டவன்னு சொல்லிட்டாங்க...
மொடக்குறிச்சியிலே, மொள்ளமாறிப்பயல்னு சொல்லிட்டாங்க...
முதுகுளத்தூருல, முட்டாப்பயல்னு சொல்லிட்டாங்க...

கடலாடியிலே, கஞ்சப்பயல்னு சொல்லிட்டாங்க...
கோபாலபட்டணத்துல, கோபக்காரன்னு சொல்லிட்டாங்க...
மண்டபத்துல, மண்டக்கனம் பிடிச்சவன்னு சொல்லிட்டாங்க...
பரமக்குடியில, பரதேசிப்பயல்னு சொல்லிட்டாங்க...
இளையாங்குடியில, இளிச்சவாப்பயல்னு சொல்லிட்டாங்க...

கொடுமலூருல, கொடுமைக்காரன்னு சொல்லிட்டாங்க...
பொன்னமராவதியில, பொறுக்கிப்பயல்னு சொல்லிட்டாங்க...
குற்றாலத்துல, குடிகாரப்பயல்னு சொல்லிட்டாங்க...
கொடைக்காணல்ல, கொலைகாரப்பயல்னு சொல்லிட்டாங்க...
அரக்கோணத்துல, அரைக்கிறுக்குன்னு சொல்லிட்டாங்க...

வீராணத்துல, வீடு இல்லாதவன்னு சொல்லிட்டாங்க...
மதுரையில, மடப்பயல்னு சொல்லிட்டாங்க...
ராமேஸ்வரத்துல, ராப்பிச்சைகாரன்னு சொல்லிட்டாங்க...
வள்ளியூருல, வள்ளுக்கிராக்கினு சொல்லிட்டாங்க...
திண்டுக்கல்ல, தின்னிப்பயல்னு சொல்லிட்டாங்க...

ஜெய்ப்பூர்ல, ஜெயிலுக்கு போனவன்னு சொல்லிட்டாங்க...
பொள்ளாச்சியில, பொல்லாதவன்னு சொல்லிட்டாங்க...
வேலூருல, வேலையே தெரியாதவன்னு சொல்லிட்டாங்க...
சேலத்துல, சேட்டைக்காரன்னு சொல்லிட்டாங்க...
சிங்கம்புணரியில, சிரிச்சுக்கிட்டே திரிவான்னு சொல்லிட்டாங்க...

கும்பகோணத்துல, குடும்பமில்லாதவன்னு சொல்லிட்டாங்க...
பித்துக்குழியில, பித்துப்புடிச்சவன்னு சொல்லிட்டாங்க...
விளாத்திகுளத்துல, விலாசமில்லாதவன்னு சொல்லிட்டாங்கே...
பாபநாசத்துல, பாவிப்யல்னு சொல்லிட்டாங்கே...
சோலந்தூருல, சோம்பேறிப்பயன்னு சொல்லிட்டாங்கே...

தஞ்சாவூருல, தருத்திணியம் பிடிச்சவன்னு சொல்லிட்டாங்க...
விருதுநகர்ல, விளங்காப்பயல்னு சொல்லிட்டாங்க...
கிருஷ்ணகிரியில, கிறுக்குப்பயல்னு சொல்லிட்டாங்க...
ஒட்டன்சத்திரத்துல, ஒழுக்கமில்லாதவன்னு சொல்லிட்டாங்க...
காரைக்குடியில, காவாலிப்பயல்னு சொல்லிட்டாங்க...

சிவகாயில, சிடுமூஞ்சின்னு சொல்லிட்டாங்க...
பேரையூருல, பேரு சரியில்லைனு சொல்லிட்டாங்க...
எட்டையபுரத்துல, எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க...
சீர்காழியில, சீக்கு புடிச்சவன்னு சொல்லிட்டாங்க...
பள்ளத்தூருல, படுபாவின்னு சொல்லிட்டாங்க...

சென்னையில, செவிட்டுப்பயல்னு சொல்லிட்டாங்க...
ஊட்டியில, ஊதாரிப்பயல்னு சொல்லிட்டாங்க...
சாயல்குடியில, சாவு கிராக்கின்னு சொல்லிட்டாங்க...
தலைவாசல்ல, தறுதலைன்னு சொல்லிட்டாங்க...
பிச்சாவரத்துல, பிச்சைக்காரன்னு சொல்லிட்டாங்க...  

கள்ளக்குறிச்சியில, கள்ளப்பயல்னு சொல்லிட்டாங்க...
ஒரத்தநாடுல, ஒண்ணுந் தெரியாதவன்னு சொல்லிட்டாங்க...
கேணிக்கரையில, கேணப்பயல்னு சொல்லிட்டாங்க... 
கரூர்ல, கருவாப்பயல்னு சொல்லிட்டாங்க...       
நாகர்கோயில்ல, நாதாரிப்பயல்னு சொல்லிட்டாங்க... 

தென்காசியில, தெளிவில்லாதவன்னு சொல்லிட்டாங்க...
ஆண்டிப்பட்டியில, ஆண்டிப்பயல்னு சொல்லிட்டாங்க...     
கோயமுத்தூருல, கோல்மால்காரன்னு சொல்லிட்டாங்க...
ஈரோட்டுல, ஈனப்பயல்னு சொல்லிட்டாங்க...
அவினாசியில, அனாதைப்பயல்னு சொல்லிட்டாங்க...

களத்தூருல, களவாணிப்பயல்னு சொல்லிட்டாங்க...  
கன்னியாகுமரியில, கஞ்சா விப்பான்னு சொல்லிட்டாங்க...
விழுப்புரத்துல, விஷப்பயல்ன்னு சொல்லிட்டாங்க...
எமனேஸ்வரத்துல, எமகாதப்பயல்னு சொல்லிட்டாங்க...
பொன்முடியில பொழைக்கத் தெரியாதவன்னு சொல்லிட்டாங்க... 

கடைசிவரை எவனுமே பெண்ணு கொடுக்க மாட்டாங்களோ... என்ன செய்யலாம் ? விடிய விடிய யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன் இத்தனை ஊருக்கும் நம்மைப்பற்றி தெரிஞ்சுயிருக்கு அப்படினா நாமும் அரசியல்ல குதிப்போமா  ?பிச்சைக்காரப்பயல்னு சொல்றீகளா ? எனக்கிட்ட எவ்வளவு  இருக்குன்னு காட்றேன் தேர்தல் வந்தது சுயேட்சையாக நின்றேன் இருக்குற பணத்தை எல்லாம் மொத்தமா கொண்டு போயி தொகுதி மக்களுக்கு வாரி இறைத்தேன் பொன் பொருளென(வெள்ளைச்சேவலில் சத்தியம் வாங்கி கொண்டு) நம்பிக்கை வீண் போகவில்லை அமோக வெற்றி நான் M.L.A ஆகி விட்டேன் எனது அடுத்த இலக்கு முதல்வர் பதவி எனக்கு நம்பிக்கையிருக்கு இந்த மக்கள் மீதும் வெள்ளைச்சேவல் மீதும் தில்லை அகத்தாரும் சொல்லிட்டாங்க நான் பிரதமருனு.... இப்பொழுது எல்லா ஊரிலிருந்தும் எனக்கு பெண் கொடுக்க எனது பங்களா வாசலில் தினம் பத்து பேர் என்ன செய்யிறது ? தற்சமயம் எனக்கு மூன்று மனைவிகள் முதல் தாரம் முழுகாம இருக்கா எல்லோருமே ஒரே வீட்டில்...

(குறிப்பு மனைவிகள் மேலும் தொடரலாம்)

சாம்பசிவம்-

இத்தனை ஊருல பெண் கேட்டவரு தேவகோட்டையில கேட்கலையா ?

CHIVAS REGAL சிவசம்போ-

நல்ல மாடுதான் உள்ளூருல விலை போயிடுமே. 

52 கருத்துகள்:

  1. சாம்பசிவம் நல்லா கேட்டாரு? அதற்கு பதில் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அதற்குதான் Sivas Regal சிவசம்போ பதில் சொல்லி விட்டாரே

      நீக்கு
  2. நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க.. இந்த காலத்து இளவட்டங்களுக்கு... அரசியலுக்கு போனா எல்லாம் கிடைக்கும்னு...
    நிறைய யோசிக்கறீங்க நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே வருங்கால சந்ததிகளை காக்க வேண்டியது நமது கடமை இல்லையா ?

      நீக்கு
  3. வருங்கால முதல்வருக்கு ஜெ
    தம +1

    பதிலளிநீக்கு
  4. அரசியல் தகுதி!!! நகைச்சுவையாய் சொல்லிவிட்டீர்கள்.
    வெள்ளைச்சேவல் எனக்குப் புரியவில்லை சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நன்றி கடந்த தேர்தலில் வெள்ளைச்சேவல் மீது சத்தியம் வாங்கி விட்டு பணம் பட்டுவாடா ஆகி இருக்கின்றது அதில் சத்தியம் வாங்கினால் வாக்கு தவற மாட்டார்கள் என்பது பழங்கால நம்பிக்கை.

      நீக்கு
    2. ஓ அப்படியா? தகவலுக்கு நன்றி சகோ

      நீக்கு
  5. அடா! டா ! எப்படித்தான் இப்படி எழுதத் தோணுதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எல்லாம் தங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்புதான்.

      நீக்கு
  6. மதுரையில் வந்து கேட்டுப் பாருங்க... மக்கள் நண்பன்னு சொல்வாய்ங்க...
    தின்னவேலில வந்து கேட்டுப்பாருங்கள் திருடி விடுவார் உள்ளத்தை என்பாங்கே..
    கோயம்புத்தூருல வந்து கேட்டுப் பாருங்க கோடை வள்ளல்னு சொல்வாங்கோ..
    பதிவர்களைக் கேட்டுப்பாருங்க பக்கா ஜெண்டில்மேன்னு சொல்வார்கள்.

    ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா வாங்க நண்பரே ஸூப்பர் நீங்கள் சொல்வது போலீஸையா ? அரசியல்வாதியையா ?

      நீக்கு
  7. அட்டகாசம் அமர்க்களம் அருமை!

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. ஹாஹாஹா கணவர்கள் தொடர்ந்தால் குழப்பம் வருமே...

      நீக்கு
  9. வருங்கால முதல்வர் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே ஆதரவுக்கு நன்று ஓட்டுப்போடும் போது மறந்துடாதீங்க...

      நீக்கு
  10. வணக்கம்
    ஜி

    ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு அடைமொழியா கேட்கவே நல்லாயிருக்கு...
    இறுதியில் சொல்லிய வரி..வருங்கால முதல்வர்...ஹா..ஹா..நல்லது. த.ம 9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே ஏன் சிரிப்பு நான் முதல்வராக வரக்கூடாதா ?

      நீக்கு
  11. அன்புள்ள ஜி,

    முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே...என்னைக் கண் பாராய்... வாளின் ஓசை கேட்கும் தலைவா வளையலோசை கேட்கவில்லையா முதல்வா...முதல்வா...முதல்வா!

    ஊருக்கேற்ற பட்டங்களை எல்லாம் ஆண்ட ஆண்டவனே...! வாழ்க!

    த.ம. பத்துப் போட்டாச்சு!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே தங்களைப் போன்றவர்களின் ஆதரவு இருக்கும் பொழுது வெகுசுலபமாக ஆகிவிடுவேன் இன்று பத்து போட்டது இருக்கட்டும் நாளை வீட்டோடு மொத்தமாக ஓட்டுப் போடணும் நன்றி

      நீக்கு
  12. மேலே இருக்கும் அத்தனை பட்டமும் எந்தக்காலேஜில் படித்து பெற்றது சார்?

    அரசியல் வாதியாகும் அத்தனை தகுதியும் வைத்துக்கொண்டிருந்தீங்கன்னு எனக்கு தெரியாதே?சுவிஸிலும் பொண்ணு பார்க்கட்டுமா சார்?

    செம்ம்ம்ம்ம்ம்ம்ம தில்லு.கில்லு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இதெல்லாம் மக்கள் கலை இலக்கிய மன்றத்தில் வாங்கியது.
      ஸ்விஸ் பெண்ணும் பார்த்தால் அக்கவுண்ட் படிச்சா பாருங்க அப்பத்தான் பேங்க் கணக்கு பார்க்க சுலபமாக இருக்கும்.
      தங்களின் தொடர் வருகைக்கும், தமிழ் மண ஓட்டுக்கும் நன்றி

      நீக்கு
  13. அரசியல் பிரமுகரை கண்டுக்க போனா....
    ஒன்னு முதலில் போ!
    இல்லை!
    கடைசியில் பார்!
    இதை கடைபிடித்தால் வெள்ளைச் சேவல் குருமா வெள்ளை இட்லியான நமக்கும் கிடைக்குமா கில்லர்ஜி?
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா நீங்க தபால் ஓட்டுப் போடுங்க இட்லியும், குருமாவும் இட்டாலியில் இருந்து ஃப்ரான்சுக்கு பார்சல் வரும்

      நீக்கு
  14. ஊரும் பேரும். நல்ல நகைச்சுவை. பி.எம். ஆக ஆசைப்பட்டது சரி. சி.எம். ஆக ஆசைப்படலாமா? விடுவார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உங்கள் கணிப்புபடி இந்தியாவுக்கு பிரதமர் ஆவது சுலபம், தமிழ் நாட்டுக்கு முதல்வர் ஆவது கஷ்டமா ? ஏற்கனவே மலையாளியும், கன்னடமும் ஆனபோது நான் தமிழன் ஆக முடியாதா ? வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. ஹஹஹஹஹ்...அது சரி இப்படி எப்படிஎம் எல் ஏ ஆனீங்க ஓட்டுப் பெட்டி இல்லாமலே....இது போங்கு ஆட்டமால்லா இருக்கு..ஹஹஹஹஹ் இந்தியா வந்தாலே இப்படித்தானோ..ஹஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க நீங்கதானே தலைப்பா கட்டி விட்டது இப்ப என்னைச் சொன்னால் ?

      நீக்கு
    2. ஹலோ இங்கன ஓட்டுப் பெட்டியக் காங்கல நாங்க வரும் போது. ஒளிச்சு வைச்சுக்கிட்டு அப்புறம் நாங்க ஓட்டு போடலைனு சொல்லி ஹிஹிஹி...இப்ப எப்படி வந்துச்சு? எதிர்க்கட்சி சதியோ...அதானே நாங்கதான் தலைப்பா கட்டிவிட்டு நீங்கதானே பிரதமர்..என்னாச்சு இடைல யாராவது உங்களக் கவுத்துட்டாங்களா...ஒண்ணுமே புரியல இங்க என்ன நடக்குதுனு...சரி சரி ஓட்டுப் போட்டாச்சு...

      நீக்கு
    3. ஜி நு வைச்சுக்கிட்டா இங்கல்லாம் தமிழ்நாட்டுல எல்லாம் முடியாது!! அதுவும் செண்டர்லதான் கொடி கட்ட முடியும்!!

      நீக்கு
    4. நாங்க தமிழன் அதை வச்சு முதல்வராகி டெல்லியை பிடிக்கத்தான் எனக்கு எங்க அம்மா அப்பா முன்னெச்சரிக்கையாக ஜி நு பெயர் வச்சாங்க,,,,

      நீக்கு
  16. நகைச்சுவை பதிவு என்றாலும் அரசியல்வாதிகளை அப்பட்டமாக வெளிக்காட்டிய பதிவு இது. கலக்குங்க ஜி!
    த ம 15

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே உண்மையைத்தானே சொன்னேன் தமிழ் மணம் ஓட்டுப் போட்டதோட மறந்துடாதீங்க நாளைக்கு தேர்தல் வரும் பொழுது கண்டிப்பாக நமக்கு ஓட்டுப் போடணும்.

      நீக்கு
  17. இவ்வளவு ஊருக்கும் போய் பொண்ணு கேட்ட செலவே பெருஞ்செலவா ஆகியிருக்குமே!..

    அதனால என்ன!.. போட்ட முதலீட்டை இப்போ எடுத்து விடலாம்!..

    அதுசரி.. அவ்வளவு ஊர்லயும் சாப்பிட்ட டிபன் காபி பற்றி ஒண்ணும் சொல்லலையே!..

    சாமியேய் சதாசிவம்!..

    அவசரப்படாதீங்க.. அடுத்த பதிவுக்கு சேதி வேண்டாமா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உள்ளதுதான் பெருஞ்செலவுதான்...
      ஜி ஏற்கனவே போட்ட கொக்கி இன்னும் விடுபடாமல் இருக்கே... இருந்தாலும் தீப்பொறி தீனதயாளனை உரசி விட்டுக்கிட்டே இருக்கீங்க.. அது வைக்கோல் படப்புல உரசாமல் இருந்தால் நல்லது.

      நீக்கு
  18. தேவக் கோட்டையில் என்னன்னு சொன்னாங்க. எங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அதான் Chivas Regal சிவசம்போ சொன்னதுதான்
      தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

      நீக்கு
  19. ஹா.....ஹா....

    நல்ல நகைசுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமிகு. மாதேவி அவர்களின் முதல் வருகைக்கு நன்றி தொடர்ந்தால் நலமே...

      நீக்கு
  20. அப்பப்பா.... தமிழ்நாட்டுல ஊர்கள் மிச்சம்மீதி இருக்கா என்ன. முக்காவாசி ஊரும் கேட்டாச்சு. சூப்பர் அண்ணா ஜி.
    வருங்கால முதல்வருக்கு என் ஓட்டு செல்லாது ஆதரவு அளிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி

      நீக்கு
  21. மாநிலத்தை விட்டு ஜெய்ப்பூரில் மட்டும்தான் போயிருக்கீங்க ,அவங்களுக்கு மட்டும் எப்படி உண்மை தெரிஞ்சது ?ஒரு வேளை, இருந்தது அந்த ஊர் ஜெயிலில்தானா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எந்த அரசியல்வாதி ஜெயிலுக்கு போகலை சொல்லுங்க....

      நீக்கு
  22. கலக்கிட்டீங்க அண்ணா....
    நம்ம தேவகோட்டையில் என்ன சொன்னாங்கன்னு சொல்லவே இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... நம்ம, Chivas Regal சிவசம்போ சொன்னதுதான்.

      நீக்கு