நமக்கு யாராவது துரோகம்
செய்து விட்டால் அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான் போகட்டும் என உடனே நாம்
மன்னித்து, மறந்து விடுவது இல்லை காரணம் நாம் சிறு வயது முதலே யானைக்கு எவனோ
ஒருவன் கொட்டாச்சியில் சுண்ணாம்பு தடவிக் கொடுத்ததாகவும் மறுவருடம் திருவிழாவுக்கு
அவன் வரும்போது யானை அடையாளம் கண்டு அவனைப் பிடித்து தூக்கிப் போட்டு
மிதித்ததாகவும் கதைகள் கேட்டு வளர்ந்து வந்தவர்கள் அதனால்தான் மறப்போம்,
மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விட்டது இதன் காரணமாய் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாய் பழி வாங்குவார்கள் சிலபேர் காலடி மண் எடுத்து செய்வினை
செய்வார்கள் இதற்காக அவன் நடந்து போன பாதையில் அவனுக்கு தெரியாமல் மண் எடுத்து
வருவார்கள் நம்மூரில் சுலபமாக எடுத்து விடலாம் அபுதாபியில் பங்களாதேஷ்காரனுடைய காலடிமண்
எடுத்துக் கொடுப்பதற்கு 500/ திர்ஹாம்ஸ் எனபேசி
அட்வான்ஸூம் வாங்கி விட்டேன் அவன் தெருவில் பார்க் செய்து விட்டு காரிலிருந்து
இறங்கினான் நானும் அருகிலிருந்த டவர் பார்க்கிங்கில் எனது காரை சொருகி விட்டு அவன்
காலடி மண் எடுக்க அவனுக்கு தெரியாமல் மாறு வேடத்தில் பின்னேயே நடந்து போனேன்
எலக்ட்ரா தெருவரை அவன் தார் ரோட்டிலேயே போனான் எடுக்க முடியவில்லை பிறகு
புல்வெளியில் நடந்து போனான் அதிலும் எடுக்க முடியவில்லை பிறகு பிளாட்பாரத்தில்
நடந்தான் பிளாட்பாரம் சிமெண்டுக் கல்லில் உள்ளதால் அதிலும் எடுக்க முடியவில்லை எல்டோராடோ
டூரிங் டாக்கீஸ் வழியாக போனான் நானும் தொடர்ந்தேன் பிறகு அல் ரோஸ்டாமாணி எக்சேஞ்ச்
அடுத்து அவன் தங்கியுள்ள AL SADAF FASHIONS பில்டிங்கில் ஏறி லிப்ட்டில்
நுழைய அது நின்ற தளம் 4 நானும் லிப்டில் போனேன் கொரிடரிலும்
மொசைக்கல் போட்டிருந்தது பிறகு ஃபிளாட் 404 க்குள்
நுழைந்து விட்டான் ஏற்கனவே செக்யூரிட்டியிடம் பணத்தை அடித்து டூப்ளிக்கேட் சாவி
வாங்கி வைத்துக் கொண்டதால் அவனுக்கு தெரியாமல் திறந்து நானும் உள்ளே நுழைந்து இருட்டுக்குள்
ஒளிந்து நின்றேன் வீட்டுக்குள் மார்பிள் போட்டிருந்தது கிச்சனுக்கு சாப்பிடச்
சென்றான் அங்கும் டைல்ஸ் போட்டு இருந்தது சாப்பாடு முடிந்ததும் பெட்ரூமுக்கு
போனான் சரியென போனால் தரையில் கார்பெட் போட்டிருந்தது என்ன ? செய்யலாமென யோசித்துக் கொண்டு இருக்கும் போதே
சட்டென இரும்பு கட்டிலில் ஏறி ஃபோம் மெத்தையில்
படுத்துக் கொண்டான்.
என்ன செய்வது ? சுவடு தெரியாமல் திரும்பி விட்டேன் மறுநாள் மண் உள்ள பாலைவன
ஏரியாவான முஷபாவில் போய் நின்று
கொண்டேன் ஒரு வாரம் காத்திருந்தும் பயனில்லை பிறகு விசாரிக்கும் போதுதான் தெரிந்தது
அவர் பேங்க் மேனேஜர் முஷபாவுக்கெல்லாம் வரவேண்டிய அவசியம் இல்லையென்று.
சாம்பசிவம்-
அந்த
மேனேஜர் முஷபாவுக்கு வந்தாலும் சரி
சிட்டிகுள்ளே திரிஞ்சாலும் சரி கால்ல எப்போதும் ஷுல போட்ருப்பார் இல்லைனா செருப்பு போட்ருப்பார் ஷுக்காலடி மண்ணுல செய்வினைக்கு எஃபெக்ட்
கிடைக்காதே !
CHIVAS REGAL சிவசம்போ-
ஹூம்
அபுதாபிக்கு வந்தும் திருந்தாமத்தான் திரியிறாங்கே கேட்டா குடிகாரப்பய
ஒளர்ர்ர்ர்ரான்னு சொல்வாங்கே.
காணொளி
ஹிஹிஹி... அதைவிட இரண்டு பிடி மண்ணை அவர் போற பாதையிலே நாமளே நைஸா போட்டு விட்டு, அவர் போனதும் எடுத்திருக்கலாம்!
பதிலளிநீக்கு:))))
நல்ல ஐடியா...! ஹா... ஹா...
நீக்குவருக நண்பரே இதுவும் சரிதானோ....
நீக்குவருகைக்கு நன்றி ஜி
நீக்குசூப்பர் ஐடியா... இல்லன்னால் உங்களுக்கு சூ வாங்கி பரிசு தரப்போறேன் உங்க காலடையாளம் கொடுங்க என மண்ணை கொட்டி அள்ளணும். அப்படி இல்லன்னால் உங்க காலடி மண்ணை எடுத்து கடலில் கரைப்பதா வேண்டுதல் என ஒரு ஜால்ஜாப்பு... கில்லர்ஜீ சாருக்கு ஐடியா சொல்ல்ல்ல்ல்ல்யியா தரணும்.
நீக்குஅடடே இது எனக்கு தோன்றவே இல்லையே....
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குஎஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்... மண்வாசனை... செய்வினை... என்றால் செய்யும் வினை... செய்கின்ற வினை... செய்த வினை... வினைத்தொகை இலக்கணம்... அவ்வளவுதான்! மற்றபடி ஏமாற்றும் வேலை...! நல்ல வேளை மண் கிடைக்கவில்லை...!
காணொளி பிரமிப்பு...!
த.ம.3
வருக மணவையாரே... வழக்கம்போல் பாடலுடன் ஆடலைக் கேட்டேன் சுகம் சுகம்.
நீக்குஷீகாலடி மண்ணுக்கு எபக்ட் உண்டா இல்லையா
பதிலளிநீக்குஒரு பட்டிமன்றமே நடத்தலாம் நண்பரே
அருமை
தம +1
வருக நண்பரே பட்டிமன்றமாக தொடங்கலாம் போலயே.... நிறைய கருத்துகளும் பரிமாறிக்கொள்ளலாம்.
நீக்குகாணொளியை கண்டு பிரமித்தேன்! அது ஏன் பங்களாதேஷ்காராரின் காலடி மண்ணை எடுக்க விரும்பினீர்கள்?
பதிலளிநீக்குவருக நண்பரே நான் பங்களாதேஷி என்று குறிப்பிட்டமைக்கு ஒரு பிரத்யேக காரணம் உண்டு அந்த பில்டிங்கின் முகவரி நபர் இன்னும் பதிவுக்கு வரவில்லை அவர் வந்ததும் தங்களுக்கு புரிந்து விடும்
நீக்குROFL
பதிலளிநீக்குதம +
அதுவும் ஏழு
பதிலளிநீக்குவருக தோழரே நன்றி
நீக்குமுயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குநண்பரே இதற்குமா ? வாழ்த்துவீர்கள்.
நீக்குகாலடி மண்ணு வேணும்.. கொடுடா!..
பதிலளிநீக்குஅப்படின்னு கேட்டா அவனே கொடுத்துட்டுப் போறான்..
பொழுது வீணாப் போச்சே!..
இன்னொரு சேதி..
அபுதாபி..ன்னு இல்லே... எங்கே போனாலும் திருந்தாத ஜன்மங்கள் ஏராளம்.. ஏராளம்..
வாங்க ஜி உண்மைதான் உழைப்பை நம்பாதவனின் ஊழ்வினையே செய்வினையாகும்.
நீக்குமண்ணாசை யாரை விட்டது?
பதிலளிநீக்குநண்பா! நான் காலடி மண்ணை மட்டுமே சொன்னேன்.
சுவடு தேடி அலைவதைக் காட்டிலும்,
"சுவடி" தேடி அலைந்தால் சுகமோ சுகம்.
நன்றி!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
வாங்க நண்பா நல்ல கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி இனிமேல் இந்த வியாபாரத்தை விட்டு விடுகிறேன்.
நீக்குசமூகத்தில இப்படியான மூடநம்பிக்கைகளை வைத்துக்கொண்டு இன்னமும் இருக்காங்க.
பதிலளிநீக்குஆஹா பார்க்கிங் ஐடியா அருமை.
உண்மைதான் சகோ நிறைய ஜடங்கள் உண்டுதான் வருகைக்கு நன்றி
நீக்குஇருபது வருசமாக வழக்கு நடக்கும் நான் குடியிருக்கும் வீட்டை விட்டு விரட்டி அடிப்பதற்கு தெரு நாட்டாமையின் குடும்பத்தார்கள் எனக்கு தெரிந்தே என் காலடி மண்ணை எடுத்து பல தடவை செய்வினை செய்தார்கள்.அதில் ஒரு தடவைதான் காய்ச்சலில் விழுந்திட்டேன் நண்பரெ.... போயிருவேன் என்று நிணைத்தவர்கள் ் மனதில் என்னால் பால் வார்க்க முடியவில்லை நண்பரே....
பதிலளிநீக்குவாங்க நண்பரே அவர்கள் வாயில் நீங்கள் ஏன் ? பால் வார்க்க வேண்டும் அவர்களின் காலடி மண்ணை அள்ளித்தான் போடவேண்டும்.
நீக்குநல்ல பதிவு :-)
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅன்னிய தேசத்திலும் நம்மவர்கள் நம் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை போலும்....
பதிலளிநீக்குமுயற்சி திருவினையாக்கும்...சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பரே!
வருக நண்பரே தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது உண்மைதானோ...
நீக்குஊரில் இருக்கும் போது சின்ன வயதில் அம்மாவின் அம்மா இந்த மாதிரி சொல்லி கேட்டிருக்கேன்.மிளகை கீழே கொட்ட விட மாட்டார்.மிளகை கொட்டினால் ஆகாதுமாஎன்பார். அதே போல் வீட்டு வாசலில் எலுமிச்சம்பரம் வெட்டி வைத்து செய்வினை செய்வதாய் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
பதிலளிநீக்குஇதில் உண்மை இல்லாமல் இருக்கும் என சொல்ல முடியாது. நமக்கும் மேலே நல்ல தீய சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கும் போது இந்த காலடி மண், லைமுடி,மிளகு,எலுமிச்சம் பழம் எல்லாம் பொய் என அடித்தும் சொல்ல முடியாது. எனினும் இதில் நம் மனப்பிரமை,பயம் தான் ஆரம்ப அச்சுறுத்தலை தரும் என நான் நினைக்கின்றேன்.
அது இருக்கட்டும்.இந்த காலடி மணி எடுக்க எப்படி அவர் வீட்டுக்குள் போனீர்கள். மாறுவேடம் அரூபமாகவா போட்டீர்கள்? சுஜாதாவின் கதை நாயகன் வேடம் உங்களுக்கு சூப்பரா பொருந்தும் போலவே!
நம்ம்மூர்க்காரர்கள் செவ்வாய்க்கு போனாலும் அதை வெறும் வாய் என சொல்லி தள்ளிப்போ என சட்டம் போடுவார்கள். செவ்வாயில் செவ்வாய் தோஷம் போகும் என இதுவரை யாரும் கண்டு பிடிக்கவில்லையா சார்?
எனக்கு கொஞ்சம் அமானுஷ்ய சக்தி தெரியும் அதை வைத்து பிறர் கண்ணுக்கு தெரியாமல் மறைய முடியும்.
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குமுனைவர் ஐயாவுக்கு நன்றி
நீக்குஉங்களிடம் ஏதோ சக்தி இருப்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன் ,யார் தளத்துக்கும் பெரும்பாலும் வராத பழனி .கந்தசாமி அய்யா கூட உங்க பதிவை ரசிக்கிறாரே :)
பதிலளிநீக்குவாங்க ஜி புதுசா குட்டையை கிளப்புறீங்க..... ஹாஹாஹா
நீக்குஹஹஹ அது சரி உங்க ஊர்லயா மண்ணு இல்ல??!! அதுதானே அங்க நிறைஞ்சு இருக்கும்!! ச்சே அவர் குனிந்து நடக்க மாட்டாரோ? ஹிஹி இல்லைனா அவரது தலைலருந்து கொஞ்சூண்டாவது விழுந்துச்சுனா பிடிசுத்திப் போட உதவுமேனுதான்...ஹிஹி..எனிவே முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!! வாழ்த்துகள்! ஒரு பிடி மண்ணுக்கு ஹும்...
பதிலளிநீக்குநானும் முயன்று கொண்டுதான் இருக்கிறேன் பார்ப்போம். கடைசி பட்சத்தில் பாதி 250 திர்ஹாம்ஸ் கொடுத்தாவது வாங்க வேண்டும்
நீக்குஇந்த மாதிரி பார்க்கிங்க் பத்தித்தான் நாங்கள் பேசுவோம் இங்கு சென்னையில் வந்தால் நன்றாக இருக்கும் என்று. இங்கு டைடல் பார்க்கிற்குள் ஃப்ளோர் பார்க்கிங்க் இருக்கு ஆனால் இப்படி இருந்தால் இடம் சேவ் ஆகும்...
பதிலளிநீக்குஇந்த பார்க்கிங் எந்த நாடென்று தெரியவில்லை.
நீக்குமண்ணைத் தேடி ஒரு நெடும் பயணம்!
பதிலளிநீக்குஹி ஹி
சூப்பர்
ஆஹா இப்படிக்கூட சொல்லலாமே ஐயா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
வித்தியாசமான கருத்தில் பதிவை அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள். த.ம13
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி
நீக்குகாலடி மண்ணுக்காக கால்கடுக்க நடப்பதைக் கண்டு வேதனையடைந்தேன்.
பதிலளிநீக்குஹாஹாஹா முனைவரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குமண்ணுக்கு அலைந்த கதை அருமை
பதிலளிநீக்குவருக நண்பரே பிட்டுக்கு மண் சுமந்த பரம்பரையில் வந்தவர்கள்தானே நாம் துட்டுக்கு மண் சுமப்பதில் தவறில்லை.
நீக்குஅருமையான நிகழ்வு...எசமான் காலடி மண்ணெடுத்து....
பதிலளிநீக்குவாங்க நண்பரே நன்றி
நீக்குஹாஹாஹா! அட்டகாசம்!
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கு நன்றி
நீக்குபதிவைப் படிக்கும் போது எலக்ட்ரா ரோடு வந்ததும் என்ன வண்டி நம்மபக்கம் திரும்புதேன்னு நினைச்சேன்... எல்டரோடா வந்ததும் சரி போறவன் பங்களாதேஷ்க்காரனா இல்லை பரியன்வயலானான்னு யோசிச்சே அல்ரோஸ்டாமணி கடந்து அல் சதாப் லிப்டில் ஏறி 404 வந்து பார்க்கிறேன்...
பதிலளிநீக்குஅங்கே அறை திறந்து என் கட்டிலில் தாங்கள்...
ஹா... ஹா... அருமை அண்ணா...
எதோ ஒரு மண் எடுத்து அவன் மண்ணுன்னு கொடுத்திட வேண்டியதுதானே...
ஹாஹாஹா தொழில் தர்மம் வேண்டும் நண்பரே பொய் சொல்லக்கூடாது.
நீக்கு