இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மார்ச் 30, 2016

இரவு 8 க்கு பிறகு 7 ½


அன்பு நெஞ்சங்களே.... கடந்த வருடம் இதே தேதியின் தமிழ்ச்சங்கு என்ற பதிவில் சொல்லி இருந்தேன் இரவு 8 மணிக்கு மேல் 7 ½ என்று அதை சற்று மறந்து விட்டேன் ஆனால் பாருங்கோ... கரீக்டா மறு வருடம் ஞாபகம் வந்துடுத்து... ஹி... ஹி... ஹி...
  
ஆம் மகன் தமிழ்வாணன் பிறந்த சந்தோஷத்தில் பக்கத்தில் இருந்த உணவகத்தில் போய் சாப்பிட்டு விட்டு மருத்துவமனைக்கு வந்தேன் (சாப்பிடும் போதே நினைத்தேன் மகனுக்குப் பிடித்த கோழி 65 வாங்கிக் கொண்டு போவோமா ? நாளைக்கு நேரடியாக கூட்டிக் கொண்டு வருவோமே) ஒரு அம்மாள் மாலை 05.00 மணிக்கு மகளை பிரசவத்திற்க்கு அழைத்து வந்தவர் முகத்தில் கவலையோடு அங்கும் மிங்குமாக நடந்து கொண்டு இருந்தார் நான்தான் ஆறுதல் சொன்னேன் எல்லாம் நல்லபடியாக நடக்கும் கவலைப்படாதீங்க அம்மா, கூடவே ஒரு பெரியவரும் கணவராக இருக்கும் அவரும் ஒரு நிலையில் இல்லாமல் இருந்தார் எனக்கு எம்மெஸ்வி அவர்களின் பாடலொன்று நினைவுக்கு வந்தது.
பெத்தெடுத்த வயிறுதானே பத்திக்கிட்டு எரியூ.....ம்
பிள்ளை குட்டி இல்லாத எவனுக்கென்ன புரியும்...
உண்மையான வரிகள்தானே... உள்ளே நுழைந்தவுடன் கேட்டேன் குழந்தை பிறந்துருச்சாம்மா ? ஆமாப்பா... பின்னேயேன் கவலையா இருக்கீங்க ? இல்லைப்பா பொம்பளைப் புள்ளையா போச்சு.. என்னம்மா நீங்க பிரசவம் நல்லபடியா முடிஞ்சதுக்கு சந்தோஷப்படாமல் நீங்களே இப்படிச் சொல்றீங்களே... அவரு இப்ப வந்துருவாரு நானென்ன சொல்றது ? யாரு ? மாப்பிள்ளை இதுனாலே என்னம்மா இருக்கு சொல்லித்தானே ஆகணும் எல்லாம் நம்ம கையிலேயா இருக்கு ? இல்லை தம்பி ஏற்கனவே ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க, இது மூணாவது இப்பவும்... கவலைப்படாதீங்கம்மா... அவர் வந்ததும் நான் பக்குவமா சொல்றேன். சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ... ராஜ்கிரனோட ராசாவின் மனசிலே படம் பார்த்திருப்பீங்க அதில் வந்த வடிவேலு எப்படி ? இருந்தார் இப்பக்கூட பார்க்கலாம் அப்படியேதான் ஒருத்தர் வந்தார் இந்த அம்மாள் முந்தானையை எடுத்து ஒரு மாதிரியாக போர்த்திய போதே எனக்கு தெரிந்து விட்டது இவர்தான் அந்த மாப்பிள்ளை அந்த அம்மாவைப் பார்த்து என்னாச்சு என்றார் மிடுக்காக.. அந்த அம்மா சொன்னார் நல்லபடியா பொறந்துடுச்சு தலையை குனிந்து கொண்டே சொன்னார் சிறிது நேரம் மௌனம் நிலவியது கொஞ்சம் அதட்டலாக கேட்டார் மறுபடியும் பொட்டக் கழுதையா(எனக்குள் சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்) அந்த அம்மாள் மௌனமாக நின்றார்... இவர் வெடுக்கென ஹும் என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டார் அந்த அம்மாளின் கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது அம்மா இப்படி உட்காருங்க சுவரோரமாய் கிடந்த பெஞ்ச்சில் உட்கார வைத்து விட்டு இவனென்ன ? வந்ததும் குழந்தையை பார்க்காமல் உடனே வெளியேறி விட்டான் வெளியே வந்து எட்டிப் பார்த்தேன் தெருமுனையில் ஒரு அம்மாளும், இவனும் கையை காலை ஆட்டி பேசிக்கொண்டு நிற்க... நான் போனேன் உடனே அவனிடம் கேட்டேன் என்ன பிரச்சினை ? அந்த அம்மாவும் இவனும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள் மேலிருந்து கீழ் சொல்லுங்க ஏன்குழந்தையை பார்க்காமல் இங்கே நிற்கிறீங்க ? நீங்கயாரு ? அது கிடக்கட்டும் குழந்தை என்ன தப்பு செஞ்சுச்சு ? அந்த அம்மாள் சொன்னார் மூணாவதும் பொட்டைக் கழுதையை பெத்துருக்கா... அதுக்கு அந்தப் பெண்ணு என்ன ? செய்ய முடியும் பொம்பளையான நீங்களே பொட்டக் கழுதைனு சொல்றீங்க... அப்புறம் ஆம்பளை சொல்லாமல் என்ன ? செய்யிவான் ? உங்க மகளுக்கு இப்படி பிறந்தால் என்ன ? செய்வீங்க... யேன் மவ ரெண்டு சிங்க குட்டிகளை பெத்தவ... எதுக்கு இவளைப் போல பெறப்போறா ? சரிம்மா அந்த சிங்க்க் குட்டிகளுக்கும் நாளைக்கு ஒரு பெண் குட்டி வேணுமுள்ள அதுக்கு இந்த குட்டிகள் உதவும்ல... இதுவரை சும்மா நின்ற மாப்பிள்ளை என்னை கேட்டா(ன்)ர் மொதல்ல நீங்க யாரு ? பார்த்தவுடன் கணித்து விட்டேன் இது கஞ்சாக் கிராக்கி கன்னாபிஸ் சாடிவா ஈசியா தட்டி விடலாமென பொம்பளைப்புள்ள பிறந்ததுக்கு யாரு ? மீது யாரு ? கோபப்படுறது ? உங்க மனைவி உங்க மேலே கோபப்பட்டா ? நீங்க என்ன சம்பந்தம் இல்லாமல் பேசுறீங்க ? நான் சம்பந்தம் இல்லாமல் பேசுறேனா ? உங்க குழந்தைதானே... யோவ் மரியாதையா ? பேசு... இப்பக் கோபம் வருது என்ன காரணம் ? எங்க குடும்பத்துல தலையிட நீ யாரு ? நான் யாருமில்லை சரி வா போலீஸ் ஸ்டேஷனுக்கு போவோம் ஏன் ? இப்படிச் சொன்னேன்... எனக்கே குழப்பம். உடனே அந்த அம்மாள் சரிதான் குழந்தையை பார்க்க வந்த மருமகனை ஆளை வச்சு அடிக்க ஏற்பாடா ? ஏன்டி... சிரிக்கி மவளே... எம்புள்ள ஆம்பள சிங்கம்டி இன்னும் மூணு கல்யாணம் பண்ணுவான் உரக்க கத்தினாள் (இவன் சிங்கமா ?நம்ம தலையிட்டது குடும்பத்துல வேற பிரச்சினையை உருவாக்கிடுச்சே அந்தப் பக்கமாக வந்த எனது மாமனார் அந்த சிங்கத்திடம் போய் தம்பி மன்னிச்சுக்கங்க அவரு தேவையில்லாமல் பேசிட்டாரு என அவன் கைகளை பிடித்துக் கொண்டு அசிங்கப்படுத்திக் கொண்டு இருக்க... முந்தைய பதிவில் வந்த அந்த சண்முகம் ஓடி வந்து என்னை பிடித்து உங்களுக்கு ஏன் ? தேவையில்லாத வேலை என்று என்னை மருத்துவமனைக்கு இழுத்துக் கொண்டு வந்து விட்டார். அந்த அம்மாவை பார்த்தேன் அப்படியே உட்கார்ந்து வெளியே நடந்தது எதுவும் தெரியாமல் அழுது கொண்டு இருந்தார் என்னால் வந்த புதிய பிரச்சினை தெரிந்தால் இந்த தாய் மேலும் அழுமோ ? என் மனம் கசியத் தொடங்கியது நான் செய்தது சரியா ? தவறா ?

 இந்த சம்பவத்தை எனது மாமனார் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை என்றே நினைக்கின்றேன் (இறந்து விட்டார்) காரணம் எனது மனைவிகூட இதனைப் பற்றி கடைசி வரை கேட்டதில்லை.
அன்புச் சகோதரிகளே.... பெண்களே பெண் குழந்தைகளை ‘’பொட்டக்கழுதை’’ என்று இழிவு படுத்தலாமா ?

Chives Regal சிவசம்போ-
பொம்பளைப் புள்ளைகளை வேண்டாம்னு சொல்றவன் கல்யாணம் செய்துக்கிறதுக்கு மட்டும் ஏன் ? பொம்பளைப் புள்ளே கேட்கிறான்...
சாம்பசிவம்-
இதொரு குடிகார மட்டை எதையாவது குண்டக்க மண்டக்க கேட்கும்.
சிவாதாமஸ்அலி-
மட்டையா இருந்தாலும்... கேள்வி சரிதா’’னே....

44 கருத்துகள்:

  1. பின்னே திடீரென ஒரு அன்னியர் வந்து தலையிட்டால் கோபம் கூடாதா என்ன! மெல்லப் பேசி, நிலைமை தெரிந்து கொண்டு நட்பாக வழிக்குக் கொண்டு வர முயற்சித்திருக்கலாம் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் ஏற்கிறேன் அன்றைய (1993) காலத்தில் எனக்கு பக்குவம் போதவில்லை என்று நினைக்கின்றேன் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. வேதனையான நிகழ்வு நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வேதனையேதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. இழிவு மட்டுமா படுத்துகிறார்கள் ?கள்ளிப் பால் கொடுத்து கதையை முடித்து விடுகிறார்களே (:

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி அன்றைய காலத்தில் கள்ளிப்பால் பிரபலமானதே....

      நீக்கு
  4. அன்புள்ள ஜி,

    ஆணோ... பெண்னோ... அதற்கு முழுப்பொறுப்பு ஆண்தான் என்ற உண்மை பலருக்குத் தெரியமால் இருப்பது துரதிஷ்டம்தான்...! ஆணாதிக்கம் ஒழிய வேண்டும்.

    நன்றி.

    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்தான் காரணம் பலருக்கும் இது புரியவில்லை உண்மையான வார்த்தை சென்னீர்கள் மணவையாரே.... ஆணாதிக்கம் இன்னும் இருக்கின்றது.

      நீக்கு
  5. பொட்டைக்கழுதை னு திட்டக்கூடாதுதான் நண்பரே

    எனது சித்தப்பங்காரன் ஒருத்தன்
    பெண்பிள்ளை பெற்றால்
    சித்தியை கொலை செய்வேன்
    என்றே மிரட்டினான் ....
    ஆனால் அவன் பெற்ற
    மூன்று ஆண் பிள்ளைகளினால்
    அவனுக்கு நிம்மதியே இல்லை....
    இப்போது அவன் உணர்வானே
    பெண் பிள்ளை தெய்வமென்று....


    நீங்கள் சொன்ன வடிவேல்
    மிக விரைவில் உணர்வான்
    தேவதைகள் பிள்ளைகள் என்று....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவன் கண்டிப்பாக உணர்ந்திருப்பான் இது நடந்தது 1993-ல்
      எனது சொந்தக்காரர் எனக்கு தாத்தா முறை தம்பியை கேலி செய்தார் ஐந்து பெண் பிள்ளையை பெற்று இருக்கின்றான் ஆண்டியாகி விடுவான் நான் எட்டு ஆண் பிள்ளைகளை பெற்றவன் ராஜா மாதிரி வாழ்வேன் என்றார்
      நடந்தது தம்பி ராஜபோகமாக வாழ்ந்து இறந்தார் அண்ணன் தெருவில் அனாதைப் பிணமாக கிடந்தார் நடந்த உண்மை.

      நீக்கு
  6. வேதனை . பெண்ணும் ஆணும் சமம் என்ற புத்தி எப்போது வருமோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இந்த எண்ணங்கள் ஆண்களுக்குத்தான் வரவேண்டும் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. ஆண்களால் அடிமையான பெண்ணடிமைகளே! ஆண்களுக்கு நிகராக சாதி வெறியில் திளைக்கும்போது... பெண்களால் பெண்களை பொட்டக் கழுத என்று சொல்லாமல் இருப்பதுதான் ஆச்...ச்சரியம் நண்பரே.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மாறுபட்ட கருத்தைரை தந்தமைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  8. பெங்களூர் அரசு மருத்துவ மனையில் பிறக்கும் ஆண்குழந்தைகளுக்கு ரூபாய் ஆயிரமும் பெண்குழந்தைக்கு ரூபாய் ஒரு லட்சமும் தருவதாக என் வீட்டில் வேலை செய்பவர் கூறினார் பெண் இல்லாமல் குழந்தையேது ஆணோ பெண்ணோ ?சிந்திக்க வைக்கும் பதிவு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தாங்கள் சொல்வது ஆச்சர்யமாக இருக்கின்றதே ? இது வரவேற்கத்தக்கது அதேநேரம் அந்தப்பணத்தை உடனடியாக கையில் கொடுப்பதைவிட அரசே குழந்தையின் பெயரில் 20 வருடங்களுக்கு டெபாசிட் செய்தால் இன்னும் பலன் பெறும் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. பெண்மையை போற்றும் பதிவு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  10. ஏழரை யின் தாக்கம் இன்னும் விடவில்லையோ!

    காலிகளான காளைகள் தரும்
    வலிகளின் வலிகள் தரும் வேதனைகள்
    காலம் பூராவும்
    காலன் கொண்டுபோகுமட்டும்
    மாறா வடுவாய் நெஞ்சினிலே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கவிதையாய் கருத்துரை அருமை

      நீக்கு
  11. மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
    மாதவம் செய்திருக்க வேண்டுமம்மா!..

    - என்ற அருமையை உணராத அசடர்கள்..

    அந்த ஆம்பளை சிங்கம் மூணாவது கல்யாணத்துக்கு முகூர்த்தக்கால் நட்டால் - குடும்பத்தோட கோயம்புத்தூர்
    ஜெயில்ல களி தின்னுக்கிட்டே கம்பி எண்ண வேண்டியிருக்கும்..ங்கறதை சொல்லி விட்டு வந்திருக்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இப்பொழுதாக இருந்தால் என்னிடம் அந்த சிங்கம் அசிங்கப்பட்டே இருக்கும்

      நீக்கு
  12. சில இடங்களில் பெண்களை பெண்களே இப்படித்தான் பேசுகிறார்கள்...

    பதிலளிநீக்கு
  13. ஜி! முதலில் ஒரு குழந்தை பெண்ணாகவோ, ஆணாகவோ பிறப்பதற்குப் பெண் காரணமல்ல. ஆணின் விந்தணுதான் தீர்மானிக்கின்றது. இந்த விழிப்புணர்வை முதலில் அறியாமையில் கிடக்கும் மக்களை அறிந்து கொள்ள வேண்டும். இதை மிக எளிதாக ஒரு பிரசவம் பார்க்கும் மருத்துவர் செய்ய முடியும்.

    அது சரி ஜி கொஞ்சம் உங்க கொடுவா மிசையை முறுக்காம பேசியிருக்கலாமோ. பின்ன அவங்களுக்குக் கோபம் வராம..ஹஹஹ் எப்பவுமே கோபப் படுவதை விட உங்கள் காரியம் நடக்க வேண்டும் என்றால் வின் வின் சிக்சுவேஷன் தான் உதவும்..அவர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கலாமோ...ஹிஹிஹி டூ லேட்..இது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அப்பொழுது எனக்கு பக்குவம் போதாது அந்த நபர் இன்று சம்மந்தி ஆகி இருக்கலாம்.

      நீக்கு
  14. அவ்வாறான சொல் கொண்டு பெண்களை அழைப்பதோ, பேசுவதோ தவறு என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தங்களின் கருத்தை பதிந்தமைக்கு நன்றி

      நீக்கு
  15. குழந்தைகளைப் பாலினப் பாகுபாடின்றி குழந்தைகளாகப் பார்க்கும் மனநிலை வந்தால் மட்டுமே இப்படியான நிலை மாறும் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி வரும் சந்ததிகள் கண்டிப்பாக உணரும் நண்பரே

      நீக்கு

  16. பெண்கள் பிறந்தால் சலித்துக்கொள்வது மற்றும் வெறுப்பது போன்றவைகள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் இருப்பது ஆச்சரியமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

    நீங்கள் தலையிட்டது சரிதான். ஆனாலும் அதை தனி ஒரு ஆளாக இல்லாமல் இன்னும் சிலரோடு சேர்ந்து அவரைக் கேட்டிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  17. கேட்டிக்கலாம். என்பதை கேட்டிருக்கலாம் என படிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அது இளையான்குடி அந்த ஊரில் எனக்கு யாரையும் தெரியாது பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வந்த இடத்தில் நிகழ்ந்த நிகழ்வு வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. பெண் பிள்ளை பிறந்தால்
    பெத்தவளில் தவறில்லை...
    பிறக்கப் போவது
    ஆணா? பெண்ணா? - அதை
    உறுதிப்படுத்துவதே
    ஆணின் உயிரணுக்களே! - அப்படியிருக்க
    பெண்மீது பழி சுமத்தும் ஆண்களுக்கு
    சாவு ஒறுப்பு (மரண தண்டனை) வழங்கலாம்!

    பெண்ணின் சினை முட்டை வெறும் X என்ற குரோமோசோமை மட்டுமே உடையதாக இருக்கிறது. ஆணின் உயிரணுக்களில் X என்ற குரோமோசோம்களுடன் Y என்ற குரோமோசோம் உம் இருக்கிறது.
    குடும்ப உறவின் பயனாகக் கருவுறும் வேளை
    பெண்ணின் X என்ற குரோமோசோம் உம் ஆணின் X என்ற குரோமோசோம் உம் இணைந்தால் பெண் குழந்தையாகவும்
    பெண்ணின் X என்ற குரோமோசோம் உம் ஆணின் Y என்ற குரோமோசோம் உம் இணைந்தால் ஆண் குழந்தையாகவும்
    தாயின் வயிற்றில் பிள்ளை கருவுறும்!
    பெண் பிள்ளை கருவுற உடனிருந்த ஆண் தானே குற்றவாளி!
    பாழாய்ப் போன மக்களாயம் (சமூகம்) பெண்ணில் பழிபோடுவதைத் தொடருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகிய விளக்கம் தந்தீர்கள் இதையெல்லாம் உணராத ஜென்மங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள் நண்பரே..

      நீக்கு
  19. பதிவு போட்ட இரவே வாசித்தேன்... கருத்து இடவில்லை...
    இப்படியும் சில மனிதர்கள்... வேறென்ன சொல்வது.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஜி !

    மாப்பிளை சும்மா இருந்தாலும் மாமியார் சும்மா இருக்க மாட்டா போல இருக்கே பெற்ற பிள்ளையை பார்க்காத மூதேவிக்கு மூணு கல்யாணம் செய்துபார்க்க தாய்க்கிழவிக்கு ஆசையப் பாரேன் !

    நீங்கள் புத்திமதி சொல்லப் போய் உங்கள் நேரத்தை வீணடித்து விட்டீங்க ஜி ! உங்கள் நிலைமையில் நான் இருந்தாலும் கோபப்பட்டுத்தான் இருப்பேன் ஆனால் என்ன செய்வது அதுக்கும் காரணம் சொல்லி சண்டை பிடிப்பாங்களே சரி விடுங்க ஜி !
    தங்கள் மகன் தமிழ்வாணன் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே பெண்களே இப்படி சொன்னால் என்ன செய்வது ?
      எமது மகனை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  21. ஹூம், இப்படியும் சில மனிதர்கள்! பல வீடுகளிலும் மாமியார் தனக்குப் பெண் பிறந்ததைக் கடவுளின் அருள் என்றும் மருமகளுக்குப் பெண் பிறந்தால் அவள் மேல் குற்றம் சாட்டியும் பேசுகின்றனர். உண்மையில் பெண் குழந்தையா, ஆண் குழந்தையா என நிர்ணயிப்பது ஆண் தான். பெண் அல்ல! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ பெண்களே இப்படிச் சொல்வதுதான் எனக்கு புரியவே இல்லை வருகைக்கு நன்றி

      நீக்கு
  22. இப்பவும் இந்த கொடுமை உண்டு சகோ,, ஆணா பெண்ணா நிர்ணயிப்பது பெண் அல்ல,,,

    தங்கள் கோபம் நியாயமே,, ஆனால் அது வேற மாதிரிபேசப்படும்,,,
    நல்ல பகிர்வு,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி சகோ

      நீக்கு