இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 05, 2016

Apple TV


ஐயா வணக்கம் எங்களது APPLE TV யின் ஆறாமாண்டு விழா கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிகழ்ச்சிக்காக தங்களது சிறப்பு பேட்டி தொடங்கலாமா ?
வணக்கம் தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ ! ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைத்து ஆறாத் தொண்டாற்றும் APPLE TV க்கு எமது ஆறா''வடு வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா உங்களோட நாவல்கள் எல்லாவற்றிலுமே கதாநாயகன்-கதாநாயகி என்பதற்க்கு கசாநாயகன்-கசாநாயகி என்றே எழுதுகிறீர்களே, ஏன் ? கதா மீது கோபமா ?
ஹிந்தியில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை ''அது'' எனது நாவலில் மட்டுமல்ல எனது நாவால் கூட உச்சரிக்க மாட்டேன்.
ஹிந்தியிலும் கதை எழுதுகிறீர்கள் அந்த வார்த்தையை உபயோகப்படுத்தியது இல்லையா ?
அது'' போகும் பாதையில் நான் செல்வதில்லை.
அப்படியானால் மலையாளத்தில் கதை என்பதற்க்கு கதா என்கிறார்கள், நீங்கள் மலையாளத்தில் கதை எழுதும்போது இதை எப்படி.... ?
அதில் துணையெழுத்து வராது கவனிக்க வேண்டும் ''கத'' என்பதுதான் சரி. மலையாளத்தில் இதுதான் (കഥ) அதே போல தெலு(ங்)குவிலும் கதைக்கு ''கத'' என்றுதான் சொல்வார்கள், தெலு(ங்)குவில் இதுதான் (కథ)
உங்கள் கதையில் வரும் எல்லா பெண்களுமே கடைசியில் ஏதாவது ஒரு வகையில் கொல்லப்படுகிறார்களே.. ஏன் ?
அவர்களின் ''விதி'' முடிந்திருக்கலாம் என்பதைவிட, குற்றவாளி நிச்சயமாக சிறைக்குச் செல்கிறான் என்பதுதான் படிப்பவர்களுக்கு நான் கொடுக்கும் பாடம்.
ஐயா போனமாத க்ரைம் நாவல் ''தண்டு'' வில் வரும் பாண்டுரங்கன் தண்டவாளத்தை தாண்டும்போது மாண்டு போனான், ஆனால் இந்த மாத நாவல் ''மண்டு'' வில் உயிரோட வருகிறான்... இது எப்படி ?
ஒரு திரைப்படத்தில் எதிரி அருவாளால் வெட்டும்போது கசாநாயகன் கையால் தடுத்துப்பிடித்து ஒடித்து வீசுகிறான், மற்றொரு படத்தில் கசாநாயகன் நெஞ்சில் 3 குண்டுகள் பாய்ந்தும் 6 பேரை அடித்தே கொன்று விட்டு 12 KM காரை ஓட்டிச்சென்று வீட்டிற்க்கு வந்து தாயின் மடியில் விழுந்து இறந்து விட்டு மறு படத்தில் அதே தாயை காதலியாக்கி ஸ்விட்சர்லாந்துக்கு கூட்டிக் கொண்டு போயி டூயட் பாடுகிறான் இன்னொரு படத்தில் ரவுடியொருவன் கத்தியால் குத்தும்போது கசாநாயகன் பற்களால் கடித்து நிறுத்துகிறான் அடுத்தொரு படத்தில் வில்லன் பறந்து போகும் ஹெலிகாப்டரை கசாநாயகன் ஜீப்பில் வேகமாக பறந்து போயி மோதி வெடிக்கச் செய்து வில்லனை கொன்று விட்டு கீழே குதித்து தப்பித்து விடுகிறான் இதையெல்லாம் உண்மையென நம்பி ரசிகர்கள் கைதட்டும்போது.... எனது ''தண்டு'' வில் வந்த பாண்டுரங்கன் கண்ணாடியார் வீதியில் குடியிருக்கும் கண்ணபிரான் மகன் என்றும் ''மண்டு'' வில் வரும் பாண்டு ரங்கன் மண்டோதரியின் கொழுந்தன் என்றும் வாசகர்கள் ஏன் யூகித்து கொள்ளக்கூடாது ?
நீங்கள் எழுதிய ''ஒரு நடிகை நடித்து பார்க்கிறாள்'' என்ற நாவல் பிரபல நடிகை கனிகாஸ்ரீ யோட வாழ்க்கை வரலாறு எனசொல்லப்படுவது உண்மையா ?
ஒரு நடிகைக்கு நாடி ஜோஸியம் பார்க்கும் அவசியம் எனக்கில்லை அந்த கதையின்படி அவளுக்கு நடிக்கத் தெரியாது ''தனது மனதால்'' இளைஞர்களின் மனதை துடிக்க வைக்கிறாள், இருப்பினும் அவள் மிகப்பெரிய நடிகையென அவளுக்கு அவார்டும் பேரும் புகழும் கிடைக்கிறது இதை தக்க வைத்துக் கொள்ள அவள் தனிமையில் நடித்துப் பார்க்கிறாள் இதுதான் கதை. மற்றபடி எனக்கும் நடிகை கனிகாஸ்ரீக்கும் தொடர்பு கிடையாது என்பது எனது மனைவி பூங்கோ(ந்)தைக்கும் தெரியும்.
கலையை வளர்பதற்கே நான் கலைத்துறைக்கு வந்தேன் எனநடிகை கலையரசி சொன்னது குறித்து..... ?
ஒருவேளை அப்பொழுதான் தனக்கும் ரசிகர்கள் சிலை வைப்பார்கள் என்ற எண்ணமாக இருக்கலாம்.
சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை எனசொல்வது ஏன் ?
சாதாரண குடிமகன் கனவில்கூட காண முடியாததெல்லாம் நனவாக்கி கொள்ளலாம் என்பதால்.
சமீப காலமாக உங்களுடைய எழுத்துக்கள் இன்றைய இளைஞர்களை புரட்சியில் கொண்டு போய் விடுமென குற்றம் சாட்டுகிறார்களே இது உண்மையா ?
என்னுடைய குறிக்கோளே அதுதான் வாழ்ந்து முடிந்த பெரியவர்களையும், சீரியல்களில் மூழ்கி கிடக்கும் பெண்களையும் கள்ளம் கபடமற்ற குழந்தைகளையும் வைத்து இந்த நாட்டை ஆளமுடியாது.
இன்றைய இளைஞர்கள் நடிகைகளுக்கு கோயில் கட்டுகிறார்களே... இவர்களால் நாட்டை ஆள்வது....... எப்படி ?
அது தரங்கெட்ட குடும்பத்தில் தகாத முறைகளால் பெறப்பட்ட, பெற்ற விபரமறியா விட்டில் பூச்சிகளின் வேலை அவர்களை தவிர்த்துப் பார்த்தால் ஆயிரமாயிரம் வைரங்கள் இந்தியாவில் உண்டு அந்த வைரங்களுக்கு நம்மைப் போன்ற சிற்பிகள் பட்டை தீட்டினால் ஜொலிப்பது அவர்கள் மட்டுமல்ல உலகளவில் நமது இந்தியாவும் கூட.
இது முடியும் என நம்புகிறீர்களா ?
முடியும்மென மனிதன் நினைத்ததால்தான் விஞ்ஞானம் வளச்சி அடைந்து என்முன் வயர் இல்லாத மைக்கில் நமது வார்த்தைகளை பதிவு செய்து கொண்டு இருக்கிறீர்கள்.
இது உடனே நடக்க கூடிய காரியமா ?
உடன் நடக்காது இருப்பினும் நாம் துவங்கி வைப்பது நமது கடமை காரணம் நாளைய நமது சந்ததிகளுக்காக எப்பொழுதுமே மரம் நட்டவன் கனியை சுவைப்பதில்லை எதற்கும் ஒருகால அவகாசம் வேண்டும்.
எத்தனையோ தலைவர்கள் முயன்றும் முடியாதபோது உங்களால்......
சில முட்டுக்கட்டைகளை உடனுக்குடன் களைந்தால் மட்டுமே நாம் அடுத்தகட்ட செயல்களில் இறங்கி வெற்றி காணமுடியும்.
அந்த முட்டுக்கட்டைகள் யார் ? அரசியல்வாதிகளா ?
இல்லை இந்த இடத்திலேயே அவநம்பிக்கைகளை வளர்த்து அடுத்த செயல்களுக்கு போகவிடாமல் நேரவிரயம் செய்யும் உங்களைப் போன்ற அதிகப் பிரசங்கிகளை.
ஐயா கேள்வி கேட்பது எங்களது கடமை இல்லையா ?
நாளை இந்தியா வளர்ந்தால் பலன் எனக்கும் எனது சந்ததிகளுக்கும் மட்டுமல்ல உமக்கும் உமது சந்ததிகளுக்கும் சேர்த்துதான் என்பதை நினைவில் கொள்ளாமல் வேற்று நாட்டவன் போல் கேள்விகணை தொடுப்பதா கடமை ?
மன்னிக்கவும் கடமை கண்ணியம் கட்டுபாடு காத்து பொருமையாக பதில் சொல்கிறீர்களா ? என்பதற்காகத்தான் எங்களது APPLE TV சார்பாக கேட்கப்பட்டது எனது சார்பாக அல்ல APPLE TV சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றி.
நல்லது தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !

61 கருத்துகள்:

  1. தம இன்டர்னல் சர்வர் எரர் என்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் ரசிப்புக்கு நன்றி நண்பரே....

      நீக்கு
  2. நன்றிீ! ஆப்பீல் டீவி செய்தியாளர்களுக்கு..ஆறாம் ஆண்டு நிணைவுதின விழா என்று சொல்லாமல் இருந்ததற்கு.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே அப்படி அபசகுணமாக சொல்லவில்லை.

      நீக்கு
  3. நல்ல பேட்டி! நல்ல பதில்கள்!

    பதிலளிநீக்கு
  4. சரியான நேரத்தில் கழன்று கொண்டீர்கள் ,இல்லையென்றால் ...த்தூ என்று துப்பிவிட்டு ,தூக்கி அடிச்சிருக்கக் கூடும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நல்லவேளை அப்படி நடக்கவில்லை.

      நீக்கு

  5. ஆப்பிள் தொலைக்காட்சி நிருபர் யாரிடம் பேட்டி கண்டார்? தங்களிடமா? கேள்விகளைவிட பதில்களை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சும்மா இருந்தாலும் யாராவது வந்து பேட்டி கேட்கின்றார்கள்

      நீக்கு
  6. உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும் நண்பரே! இதற்குத் தான் ஆப்பிள் டீவி நேரடி விவாத நிகழ்ச்சியெல்லாம் பார்க்கக் கூடாது என்று சொல்வது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் பார்க்கும் சூழல் வந்து விடுகின்றதே நண்பரே..

      நீக்கு
  7. பேட்டியும் பதில்களும் அருமை சகோ. நாளை எனது வலைப்பூ நான்காம் ஆண்டு தொடங்க இருக்கிறது. அந்த நல்ல நாளில் தேங்காய் பர்பியை சுவைக்க வலைப்பூவுக்கு வருகை தாருங்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் நாளை அலுவலகத்திலிருந்து வந்ததும் மதிய உணவு பர்பிதான்.

      நீக்கு
  8. தம வாக்களித்து விட்டேன்.
    :))

    பதிலளிநீக்கு
  9. பேட்டியில் கேள்வி பதில்கள் சுவாரசியம் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    ஜி

    சொல்லிய விதம் சிறப்பு படித்து மகிழ்ந்தேன் த.ம 3 ஜி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. ரசித்தோம் ஜி! அவரு கசாப்புக் கடையில வேலைபார்த்திருப்பாரோ..

    பதிலளிநீக்கு
  12. யாரு ? கேள்வி கேட்பவரா ? பதில் சொல்பவரா ?

    பதிலளிநீக்கு
  13. ஆஹா அருமையான பேட்டி நண்பரே...


    ஒரு திரைப்படத்தில் எதிரி அருவாளால் வெட்டும்போது கசாநாயகன் கையால் தடுத்துப்பிடித்து ஒடித்து வீசுகிறான், மற்றொரு படத்தில் கசாநாயகன் நெஞ்சில் 3 குண்டுகள் பாய்ந்தும் 6 பேரை அடித்தே கொன்று விட்டு 12 KM காரை ஓட்டிச்சென்று வீட்டிற்க்கு வந்து தாயின் மடியில் விழுந்து இறந்து விட்டு மறு படத்தில் அதே தாயை காதலியாக்கி ஸ்விட்சர்லாந்துக்கு கூட்டிக் கொண்டு போயி டூயட் பாடுகிறான் இன்னொரு படத்தில் ரவுடியொருவன் கத்தியால் குத்தும்போது கசாநாயகன் பற்களால் கடித்து நிறுத்துகிறான் அடுத்தொரு படத்தில் வில்லன் பறந்து போகும் ஹெலிகாப்டரை கசாநாயகன் ஜீப்பில் வேகமாக பறந்து போயி மோதி வெடிக்கச் செய்து வில்லனை கொன்று விட்டு கீழே குதித்து தப்பித்து விடுகிறான் இதையெல்லாம் உண்மையென நம்பி ரசிகர்கள் கைதட்டும்போது.... எனது ''தண்டு'' வில் வந்த பாண்டுரங்கன் கண்ணாடியார் வீதியில் குடியிருக்கும் கண்ணபிரான் மகன் என்றும் ''மண்டு'' வில் வரும் பாண்டு ரங்கன் மண்டோதரியின் கொழுந்தன் என்றும் வாசகர்கள் ஏன் யூகித்து கொள்ளக்கூடாது ?

    இந்த பதில் மிகவும் யோசிக்க தூண்டிய பதில் நண்பரே...

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஜி !

    ஆறாவது வாழ்த்தினை ஆறாவடு என்று போட்டீங்க ஒரு போடு
    அரசியலை விழுங்கி ஏப்பம் விட்ட கலைஞருக்கு கூட இல்லாத அறிவு உங்களுக்கு பாஸ் ம்ம் ( ஒரு டவுட்டு இது ஐயா கொடுத்த இலவச தொல்லைக்காட்சிப் பெட்டியின் கதை இல்லையே )கேள்விகளும் பதில்களும் மிகவும் அருமை ஜி தொடர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் !
    தம 1

    பெரும்பாவத் தால்பெற்ற பேரண்டம் முன்னே
    தெருக்குடில் தேவலோ கம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே... பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம் அவர் மலை நான் மடு எனது பார்வையில் திரு. மு. கருணாநிதி அவர்களை மிகப்பெரிய எழுத்தாற்றல் உள்ளவராக போற்றுபவன் (அதில், அதில், அதில் மட்டுமே)

      தெருக்குடில் தேவலோகம் அருமையாக சொன்னீர்கள் பாவலரே..

      நீக்கு
  15. ஐயோ ஐயோ தமிழ்மண வாக்குப் பட்டை எங்கே ஜி ????????????????????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெற்கெல்லாம் காரணம் எதிர்க்கட்சியின் சதியே.

      நீக்கு
  16. இந்தியா ஜொலிக்க அற்புதமான யோசனை, நல்ல பேட்டி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலம்தானே...... மிக்க நன்றி.

      நீக்கு
  17. வித்தியாசமான பதிவுகளை தருவதற்கு நன்றி.கற்பனை என்றாலும் சுவாரசியமான பேட்டி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  18. Rasithen....lollu pathila ungalal than thara mudium sako.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க அக்கபோர் பண்ணாமல் ஆக்கப்பூர்வமா சிந்துச்சு பதில் சொன்னால் இதுக்கு பேர் லொள்ளா ?

      நீக்கு
  19. ஏடாகூட நிருபர் எப்படியோ நல்லவிதமாக தப்பித்து விட்டார்..

    108 க்கு வேலை மிச்சமாகி விட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி தப்பித்து விட்டான் இன்னும் ரெண்டு கேள்வி கேட்டிருந்தான் உனக்கு அறிவு இருக்கா ? அப்படின்னு கேட்டு மூஞ்சியில ‘’தூ’’ அப்படின்னு துப்பி................................................................................ பீப் போட்டுக் கொல்லு’’ங்கள் ஜி

      நீக்கு
  20. நல்ல கேள்வி நல்ல பதில்,, எப்படி சகோ இப்படியெல்லாம்,, ஆனாலும் இளைர்களை புரட்சியை நோக்கி ,,, உண்மையே,, தொடருங்கள்,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ முடியும் என்று நம்புங்களேன்.

      நீக்கு
  21. ஆஹா கலக்கிட்டீங்க ஜி.. நாடு முன்னேற்றமடைய விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கடைசியில் பதிலடி ஐயா.சூப்பர் த.ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தங்களின் கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி

      நீக்கு
  22. ர்சித்தேன் நண்பரே
    ரசித்தேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  23. தங்களது ரசனை எங்களை வியக்கவைக்கிறது.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  24. நீங்களும் எப்போ பேட்டி கொடுக்க ஆரம்பித்தீர்கள் ...இந்த பேட்டி அபாரம்... ஆப்பிள் அருமையான தேர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே என்றாவது ஒருநாள் நிகழலாம் என்ற................

      நீக்கு
  25. இரசித்தேன் ஜி. கடைசி சில கேள்விகளும் அதற்கான பதில்களும் நகைச்சுவை என்பதைக் கடந்து கவனிக்கப்பட வேண்டியவைகள். மரத்தை நட வேண்டியது கடமை. உங்கள் பதிவின் வழி நட்டு விட்டீர்கள். கனி உரியவர்களுக்குச் செல்லட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் அழகிய கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  26. தம 8

    ஓ...

    அமையான பேட்டி.....

    கலக்குறீங்க சகோ

    பதிலளிநீக்கு
  27. பதில்கள்
    1. வாங்க ஐயா நலம்தானே.... வருகைக்கு நன்றி

      நீக்கு
  28. சமூகத்தின் திரைப்பட மோகத்தைப் போக்க என்ன செய்வது என்று என்னைக் கேட்டிருந்தீர்கள். அதற்கு முன்பே நீங்களே இந்தப் பதிவில் பதில் கூறியிருக்கிறீர்களே! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வருக நண்பரே சரியாக புரிந்து கொண்டீர்கள் நன்றி.

      நீக்கு
  29. ஹாஹா! லேட்டானாலும் படித்து விட்டேன் தானே? எப்படித்தான் இப்படி சிந்திக்கின்றீர்களோ?வித விதமாய் சிந்திக்கும் உங்களுக்கு சிந்தனை சிகாமணி பட்டம் தர பரிந்துரைக்கின்றேன் சார்!

    த.ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் அப்பாவியாக இருந்தால் பட்டப்பெயர் வைப்பீங்களோ....?

      நீக்கு
    2. யாருங்க அந்த அப்பா பாவி?

      நீக்கு