இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 08, 2016

வலைப்பதிவர் சகோதரி இளமதியின் கணவருக்கு அஞ்சலி


நட்புறவுகளுக்கு ஜெர்மனியில் வசிக்கும் நமது இலங்கை சகோதரி கவிஞர். திருமதி. இளமதி அவர்களின் கணவர் இயற்கை எய்தி விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன் சகோதரிக்கு இரங்கலையும், சகோதரியின் கணவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகளும் செய்வோம்.
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

47 கருத்துகள்:

  1. ஆழ்ந்த இரங்கல்கள் (:

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஜி
    ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. கண்ணீர் அஞ்சலிகள்!

    பதிலளிநீக்கு
  4. ஒரு முறை எனக்கிட்டிருந்த பின்னூட்டமொன்றில் தனது கணவர் கோமா நிலையில் ஆண்டுகள் பலவாக இருப்பதாகவும் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டமிடுவது கடினமாய் இருக்கிறது என்றும் எழுதி இருந்தார் அவரது கணவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா தாங்கள் கேள்விப்பட்ட விடயம் உண்மைதான்.

      நீக்கு
  5. ஆழந்த இரங்கல்கள்.....இளமதி அவர்களுக்கு இறைவன் இதைதாங்கும் சக்தியை கொடுக்க வேண்டும்......வருத்தமான நிகழ்வுகளை தொடர்ந்து கேட்டு வருவது மனதிற்கு கவலையை அளிக்க கூடியதாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  6. ஆழ்ந்த இரங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் ஆழ்ந்த இரங்கல்கள்! என படிக்க வேண்டுகிறேன்!

      நீக்கு
    2. ஆழ்ந்திரங்கல்கள் என படிக்க வேண்டுகிறேன்!

      நீக்கு
  7. அவரை இழந்து வாடும் சகோதரி இளமதியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. இளமதி அவர்களின் தளம் பார்த்ததில்லை. ஆனால், அவருடைய கருத்துரைகளைத் தங்கள் தளத்திலும் மற்றும் நண்பர்கள் பலருடைய தளங்களிலும் படித்திருக்கிறேன். மிகவும் சுவையாகவும், உரிமையோடும் எழுதுவார். என் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் திகைப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்! தகவலைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. வருத்தம் தரும் செய்தி. இளமதி அவர்கள் துயரத்தில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. சகோதரி இளமதி அவர்களின் கருத்துக்களை என் தளத்திலும் பலரது தளங்களிலும் பார்த்திருக்கிறேன். அவரது கணவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
  11. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  13. வருத்தம் தரும் செய்தி......

    ஆழ்ந்த இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
  14. மண்ணில் வாழ்ந்தது போதும் என்று
    விண்ணில் வாழ போனாயோ....
    உன்னால் கண்ணில் கண்ணீர்
    ஆழ்வது அறியாயோ...!

    பதிலளிநீக்கு
  15. சகோ இளமதியின் கணவர் வெகு நாட்களாக கோமாவில் இருந்தார் இல்லையா...வருத்தம் மிகுந்த செய்தி...சகோ இளமதி தன் துன்பங்களை கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தியவர் பாவம்.

    அவருக்கு நல்ல மன உறுதியும் தாங்கும் சக்தியும் கிடைக்க வேண்டும்...அவரது கணவருக்கு எங்கள் அஞ்சலிகள். செய்தியை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அவர் கடந்த 14 ஆண்டுகளாக கோமா நிலையில் வாழ்ந்தவர் சகோதரி இளமதியின் வாழ்க்கை மிகவும் வேதனைக்குறியது

      நீக்கு
  16. இளமதி அவர்களுக்கு துயரத்தில் இருந்து விரைவாக விடுபடும் மனவலிமை உண்டாகட்டும்.

    பதிலளிநீக்கு
  17. அறிஞர் இளமதியின் குடும்பத்தினருக்கு
    நாமும் துயர் பகிருவோம்.

    பதிலளிநீக்கு
  18. கவிஞர் இளமதியின் வலைப்பதிவுகளை நான் படிக்க நேர்ந்ததில்லை இதுவரை. வலைப்பதிவர் சந்திப்பு வலைப்பக்கத்தில் அவர்பற்றி கொஞ்சம் அறிந்திருந்தேன்.
    உங்கள் பக்கத்தில் இருக்கும் தகவல்களிலிருந்து அவரது கணவர் பலவருடங்களாக நோய்வாய்ப்பட்டு அல்லலுற்றதை அறிந்தேன். கவிஞர் இளமதியின் வாழ்க்கை வெகுகாலமாக மிகவும் கடினமானதாக, சோகம் நிறைந்ததாக இருந்திருக்கிறது என்பது தெரிந்து கலக்கமுறுகிறேன். அவருடைய கணவரின் ஆன்மா சாந்தியடைய இறை அருள் கிட்டட்டும்.

    உங்கள் பதிவின் மூலம் தெரிவிக்கிறேன் மனம் நெகிழ்ந்த அஞ்சலிகள்.
    -ஏகாந்தன், டெல்லி

    பதிலளிநீக்கு
  19. என்னுடைய ஆழ்ந்த இரங்கலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். “கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்” - சிலப்பதிகாரம்.

    பதிலளிநீக்கு
  20. அன்புச் சகோதரி இளமதி, அவ்வளவு துன்பங்களுக்கிடையிலும் வலைப்பதிவு எழுதிக்கொண்டும், வலைப்பதிவர் விழாவை விசாரித்து உற்சாகப்படுத்திக்கொண்டும், உதவிகள் செய்தும் வந்த உயர்ந்த உள்ளத்தினர். அவரது துயரங்கள் சொல்லி முடியாதவை. அன்புச் சகோதரியின் துயரில் பங்கேற்போம். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை, எனினும் துன்பம் அதிகரிக்க அதிகரிக்க வலிமையைச் சேர்ப்பதே வாழ்க்கையின் விசித்திரம். என் இளவயது வாழ்வின் துயரங்களைத்தான் நான் மேடையில் அனைவரையும் சிரிக்க வைப்பதில் கரைக்கத் தொடங்கினேன். அந்தத் தழும்புகள் என்னைச் செதுக்கி என்னில் நிறைந்து, என்வழி பலருக்குமான அனுபவங்களாக இப்போதும் வெளிப்படுகின்றன. சகோதரி இத்துயரக்கடலில் கரையேறி வரவேண்டும். பதிவுலகம் அவருக்கு நிரம்பக் கடன்பட்டுள்ளது. மன அமைதி கொள்ளுங்கள் சகோதரி! துயரைப் பங்குபிரித்த சகோதரர் கில்லர்ஜி உங்களுக்கு என் வணக்கம். (அலைபேசியில் தொடர்பு கொள்வோம்)

    பதிலளிநீக்கு
  21. ஒருமுறை இளமதி அக்கா நீண்ட நேரம் சாட்டிங்கில் என்னுடன் பேசினார்... அப்போது அவர் கணவரின் நிலமை குறித்துச் சொன்னார்... இடையில் கொஞ்சம் பிரச்சினைகளால் எழுதுவது குறைந்து விட்டதாக மற்றொரு முறை அறிந்தேன்... வேதனையான நிகழ்வு...

    அக்காவின் கணவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...

    பதிலளிநீக்கு
  22. 14 வருடங்கள் கோமாவில் இருந்தவரா..? எத்தனைப் பெரிய துயரம் அது. அதை வெளிக்காட்டாமல் வலைப்பதிவர் சந்திப்பையொட்டி நான் எழுதிய பதிவுகளுக்கெல்லாம் உற்சாகமூட்டும் பின்னோட்டம் இட்டிருக்கிறார், இளமதி. இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அது எவ்வளவு பெரிய ஆன்ம பலம்.?! தொடர் துன்பங்கள் அவரை புடம் போட்டிருக்கின்றன.
    கணவரை இழந்து துயரத்தில் இருக்கும் சகோதரி இளமதி அவர்கள் இந்த துன்பத்தில் இருந்து வெளிவர இறைவன் துணை இருக்க வேண்டும். அவர் கணவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
    பதிவுலகுக்கு இது போதாத காலம் போல அடுத்தடுத்து துயர் நிகழ்வுகளாகவே நடந்து கொண்டிருக்கின்றன. இதுவும் கடந்து போகட்டும்..!!
    த ம 8

    பதிலளிநீக்கு
  23. அதிர்ச்சியான தகவல் சகோ. அன்புத் தோழி இளமதியின் கணவர் உடல்நலன் குறித்து அறிவேன்..அவரையும் கவனித்துக் கொண்டு வலைத்தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்..அவருடைய தாயார் மறைவு, அவரின் உடல்நலக் குறைவு என்று அனைத்திலும் இருந்து மீண்டு வந்து அன்போடு பழகுபவர். அவருடைய இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. இளமதிக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்...அவருடைய கணவரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. எனது அஞ்சலிகளையும் பதிவு செய்கிறேன் .அவரது கணவரின் ஆன்ம சாந்திக்காகவும் சகோதரி இளமதி அவர்கள் இத்துயரத்தில் இருந்து வெளிவரணும் என இறைவனிடம் பிரார்த்திப்போம்

    பதிலளிநீக்கு
  25. அன்புள்ள ஜி,

    அன்புச்சகோதரி திருமதி.இளமதியின் கணவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். சகோதரி மற்றும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சகோதரியின் கணவர் பணித்தளத்தில் ஏற்பட்ட விபத்தில் படுத்த படுக்கையாக ஆன போதும் இத்தனை ஆண்டுகள் மெய்வருத்தம் பாராது அன்னாரை கவனித்து பணிவிடைகள் செய்தது எண்ணும் போது கண்கள் பனிக்கிறது.

    ‘இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது...!’

    ஈடு செய்ய முடியாத இழப்பு... இதய அஞ்சலி...!





    பதிலளிநீக்கு
  26. சகோதரி இளமதி அவர்களின்
    தியாக வாழ்வு குறித்து நண்பர்கள் முலம்
    கேள்விப்பட்டு வியந்திருக்கிறேன்
    அவரது கணவரின் ஆன்மா சாந்தியடையவும்
    இந்தப் பிரிவைத் தாங்கும் வலிமையை
    அவருக்கு வழங்க அன்னை மீனாட்சியை
    வேண்டிக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  27. ஆத்மா சாந்தியடையட்டும் விரைவில் இளமதி அக்காச்சி வலைப்பக்கம் வர எல்லாருக்கும் பொதுவான இறைவன் வழிகாட்ட நானும் பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  28. சகோதரி இளமதி அவர்களுடைய கண்வர் வெகு நாட்களாக துயருற்றிருந்த செய்தி அறிந்த ஒன்று தான்.. ஆனாலும் - செய்தியினை அறிந்து மனம் வருந்துகின்றேன்..

    மனோதிடம் மிக்கவர் - சகோதரி அவர்கள்.. இன்று விடியற்காலைப் பொழுதில் வேலைத் தளத்தில் அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்..

    அந்த நிகழ்வு - வேலை முடிந்து திரும்பியதும் இந்த துயரச் செய்தியைக் கேட்பதற்குத் தானோ?..

    அவர்தம் அன்புக் கணவரின் ஆன்மா சாந்தியுறட்டும்..

    சகோதரிக்கு ஆறுதலையும் தேறுதலையும் எல்லாம் வல்ல இறைவன் அளித்தருள பிரார்த்திக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  29. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
    இளமதி இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவன் மனவலிமை தரட்டும்.

    பதிலளிநீக்கு
  30. இளமதி சகோ அவர்களுக்கு தாங்கும் வலிமையும் திடமும், இதனைக் கடந்து அவர் வர வேண்டுவோம். எனக்கு மிகவும் பிடித்த பதிவர். மனம் மிகுந்த வேதனையாக இருக்கு. எம் ஆழ்ந்த இரங்கல்,,,

    நன்றி சகோ,,,

    பதிலளிநீக்கு
  31. ரொம்பவும் வருத்தத்தை அளித்தது இந்த செய்தி ! இந்த துக்கத்தைத் தாங்கிக்கொள்ள‌வும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளவும் தேவையான மன வலிமையும் அமைதியும் அவருக்கு விரைவில் கிடைக்க என் ஆழ்ந்த பிரார்த்தனைகள்! மறைந்த அவரின் கணவருக்கு அஞ்சலிகள்!!

    பதிலளிநீக்கு
  32. மிகவும்வருத்தமாக உள்ளது..நல்லவர்கள் இப்படி சோதனைக்கு உள்ளாகும் போது சில நேரம் வாழ்க்கையே வெறுத்து போகின்றது..

    பதிலளிநீக்கு

  33. தங்களோடு சேர்ந்து சகோதரி இளமதிக்கு நானும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரியின் கணவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையைப் பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  34. இளமதிக்கும் அவர் குடும்பத்தவருக்கும ;மன அமைதி மனவலிமை கிடைக்க இறையாசி நிறையட்டும்.
    அவர் கணவர் ஆத்மா அமைதியடையட்டும். என் ஆழ்த துயரத்தைத் தெரிவிக்கிறேன்.
    முகநூலில் இரண்டு நாட்களாக இத் தகவல் உலவுகிறது.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  35. மனத்திற்கு மிகவும் வருத்தமான செய்தி ...அவர் மீண்டும் உறுதியோடு மீண்டு வர கடவுள் அருள் புரிய வேண்டுகிறேன் ...

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் அன்புச் சகோதரர் கில்லர்ஜி அவர்களே!

    என் அன்புக் கணவரின் பிரிவுத்துயரை அறிந்தவுடனேயே தாங்கள் பதிவிட்டு என் கணவரின் ஆன்ம சாந்திக்காகவும், எனக்கும் ஆறுதலையும் தேறுதலையும் தர வேண்டி இறையருளைப் பிரார்த்தனை செய்தும் பதிவிட்டு, அதனையும் இன்று என் பதிவில் நீங்களே வந்து கூறியமையால் தெரிந்து திகைத்துவிட்டேன்.!!!

    எப்படி உங்களுக்கும் இங்கு வந்து கருத்துப் பகிர்விட்டு தங்களின் அன்பையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய வலையுலக நட்புகள் யாவர்க்கும் நான் நன்றி சொல்வதெனத் தெரியாமல் திணறி நிற்கின்றேன்....:’(

    சகோ கில்லர்ஜி!.. உங்களுக்கும் இங்கு வருகைதந்த வலையுலக அனைத்து நட்புள்ளங்களுக்கும் என்னிரு கரங்கூப்பிக் கண்ணீருடன் நெஞ்சார்ந்த நன்றிகள் பல!

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு