இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 14, 2016

உகாண்டா அரசுக்கு ஓர் கடிதம்


டமில் அச்சிகள்
வாழ்க தமிழ் சொல்லில் மட்டும் 
வீழ்க தமிழன் பிறரின் காலைத் தொட்டு.
நடிகர் திரு. தக்காளி சீனிவாசன் அல்ல தக்காளியே...

எனது கண்ணோட்டத்தில் ஆண்பால் சிலரைவிட பெண்பாலான பெரியாரின் ஆசி பெற்ற கன்னி செல்வி. நமீதா அவர்கள் உயர்வானவராக தெரிகின்றார் ஆம் நண்பர்களே நேர்கொண்ட பார்வை நிமிர்ந்து நடக்கும் நெஞ்சுரம் யாருக்காகவும் நெளிந்து, வலைந்து, குனிந்து போகாத ‘’துணி’’ச்சல், இடியே விழுந்தாலும் இடிஅமீன் போன்று இடித்து வீழ்த்தும் திறன், KISSCOOL கம்பிகள் போன்ற பலம் பொருந்தியவர், குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி, இசைஞானம் பெற்று தீர்ப்பு வழங்கிய நீதி தேவதை, கட்டிட வேலை செய்து சித்தாள்களின் சிரமம் அறிந்தவர், சித்தப்பன் முதல் கொழுந்தியாள் மகன்வரை உறவு முறையில் அன்புடன் அழைத்து அணைத்துப் போகும் தாயுள்ளம் கொண்ட மாண்பு, கனிவான பார்வை, கணீரென்ற டமில் உச்சு அரிப்பு கண்டு வியக்கின்றேன் இவரை 2016-ஆம் ஆண்டின் ‘’துணி’’ச்சல் மிக்க பெண்மணி விருது கொடுக்க உகாண்டா அரசுக்கு கடிதம் எழுதப்போகின்றேன் நட்பூக்களே தாங்களும் ஏதும் குறிப்பு கொடுக்க இருந்தால் எனது மின்னஞ்சலிலோ அல்லது கருத்துரையிலோ அனுப்பலாம் அதையும் கடிதத்துடன் இணைத்து வரும் ஆடி 33-ஆம் தேதி அனுப்ப இருக்கின்றேன் என்பதை பெருமையுடன் அறிவிக்கின்றேன்.

 வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது பிறராக இருக்கட்டும்.
ஹேய் நமீ இங்கே பாருடீ.... கூத்தை....
எலியை சொடுக்கி பெரிதாக்கி காண்க...
எதையும் வளைக்க கூடிய வலிமை பெற்றவர்
 
நெல்லையம்மன் துணை
சித்தாள் வேலை செய்து...
படிப்படியாக... சூப்பர் வைஷரானவர்
நாளை மறுதினம் தேர்தலில் ஓட்டுப் போடச்செல்லும் நட்பூக்களே-- என்னை --கொஞ்சம் சொடுக்கி பார்த்து விட்டு செல்லுங்கள் யோசனை உண்டாகலாம்.
காணொளி

40 கருத்துகள்:

  1. அடக் கெரகமே!...

    ராத்திரி நிம்மதியா தூங்கிவிட்டு -
    நாளைக்கு காலையில வேலைக்குப் போகும் எண்ணம் இல்லையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எதிர்ப்பலைகள் இருந்தே இவ்வளவு கூத்து நடக்குதே ஜி

      நீக்கு
  2. ஏழு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சொத்து இருந்தாலும் ,இவ்வளவு பணிவா காலில் விழுபவர்களை பாராட்ட வேண்டாமா :)

    பதிலளிநீக்கு
  3. சிந்திக்கட்டும் ஒட்டுப்போடுவோர்))) நமீத்தாஅடுத்த அம்மா போல )))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாக்கு பலிச்சிடும் போலயே நண்பா...

      நீக்கு
  4. தக்காளி யும் பிக்காளியும் ரசித்தேன் நண்பரே....
    சிரித்தேன் பலமாக,இப்போ சிந்திக்கிறேன்
    நம் தமிழ்நாடா இப்படி நாறிப் போயிருக்கு என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுதும் உறங்கினால் இன்னும் நாறும் நண்பரே

      நீக்கு
    2. நாறட்டும் இன்னும் நாறட்டும்
      அப்போதுதான் மூக்கை மூடி
      மூச்சு விட முடியாமல் தானாக
      சுத்தம் செய்ய முன்வருவார்கள்
      நாறி,ஊறிப்போன மக்கள்...

      நீக்கு
  5. வணக்கம்
    ஜி
    காலந்தான் பதில் சொல்லும் ஜி சிறப்பாக தொகுத்து எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே நலம்தானே ? வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி

      நீக்கு
  6. துணிந்து உங்கள் கடிதத்தை அனுப்பலாம். அவர்கள் ஏதாவது (?) தந்தால் வாருங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தாங்கள் சொல்வதைைப் பார்த்தால் அடி வயிற்றைக் கலக்குதே...

      நீக்கு
  7. அங்கேயும் டமில் அச்சிகள் இருந்திர போறாங்கள்..பாத்து சூதானாம பாத்து எழுதவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கேயெல்லாம் உண்மையான தமிழச்சிகள் இருப்பார்கள் நண்பரே...

      நீக்கு
  8. வணக்கம் ஜி !

    கண்ணென்றால் கனிவிரக்கம் காட்சி எல்லாம்
    ....காண்பதெனக் கருத்துரைக்கும் முன்னோர் போலே
    பெண்ணென்றால் பேயிரங்கும் என்றே நாமும்
    ....பிழைசரியைப் பகுத்தறியா தாய்ப்பா சத்தில்
    மண்ணென்றால் மலர்பூக்கும் அம்மா வுந்தான்
    ....மக்களறம் காத்திடுவாள் என்னும் போதில்
    பண்ணென்றால் பைந்தமிழே என்னும் கூற்றைப்
    ....படித்தறியா நமீதாவும் கெடுப்பாள் தானே !

    தங்கள் மனவோட்டம் அறிவேன் ஜி காலத்துக்கு ஏற்ற பதிவு தொடர வாழ்த்துகள் ஆமா நமீதா அச்சி தமிழா தெலுங்கா ஹா ஹா ஹா தமிழ்மணம் + 1


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே எம்மை சரியாக பிரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  9. நமீதாவுக்கு விருதுக்கு முன்மொழிந்ததை தமிழகமே வழி மொழியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வழி மொழிந்தமைக்கு நன்றி

      நீக்கு


  10. நிமிர்ந்து நிற்கிற இந்த நாய்க்கு இருக்கும் துணிச்சல் கூட உங்களுக்கு இல்லையே என அமைச்சர்களை சாடியிருக்கும் வரிகளை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நானும் ரசித்த வரிகளே இந்த வரிகள் என்னுடையது அல்ல இணையத்தில் கிடைத்த புகைப்படம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. வெட்கமே இல்லாமல் எப்படித் தான் காலில் விழறாங்களோ தெரியலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ இவர்களுக்கு வெட்கம் இருக்கும் என்று இன்னும் நம்புகின்றீர்களா ?

      நீக்கு
  12. நமீதாவைச் சரியாகப் புரிந்து கொண்டவர் நீர் மட்டும் தானிருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஐயா என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே.... ?

      நீக்கு
  13. ஹா ஹா எப்படி இப்படியல்லாம் உங்களால் மட்டும் நினைக்க முடிகிறது ஐயா.நமீதாக்கு விருதா..????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நம்மால் முடிந்தால் 4 பேர் நல்லா இருக்கோணும்.

      நீக்கு
  14. வீழ்க தமிழன் பிறரின் காலைத் தொட்டு.....
    (எங்கள் வீட்டில் எப்போதும் இதற்குச் சிரிப்பு)
    அடுத்து தக்காளிப்பழமும் ...
    எங்கே ஐயா தேடினீர் இந்தத் தக்காளிப் பழம்!!!!
    அருமை உமது நகை மனம் வாழ்க!
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ இணையத்தில் தேடினால் எல்லாம் கிடைக்கும் வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. சமூக அவலத்தை நன்றாக சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. மக்களுக்கு சேவை செய்ய தமிழச்சிகளின் வருகை, காலில் விழும் தமிழனின் அழகான காட்சிகள் கொண்ட நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பர் திரு. வேகநரி

      நீக்கு
  17. ஜி நமீதாம்மனை வேண்டிக் கொண்டால் தேர்தலில் வெற்றி உறுதின்னு சொன்னாங்களே அதை விட்டுப்புட்டீங்களே ஜி..எப்படியோ நமீதாம்மனைப் புரிந்து கொண்ட ஒரே பக்த தொண்டர் நீங்கதாம்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஜியெம்பி ஐயாவும் இதைத்தான் சொன்னார்.

      நீக்கு