இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூலை 14, 2016

சொல்லத்தான் நினைக்கிறேன்...

14.07.2016 இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

நட்பூக்களே வெகு காலமாக நான் எழுத வேண்டும் என்று நினைத்த விடயம் ஒன்று நான் கணினியில் உலாவும் போது எனது கண்ணில் கண்டதை இங்கு அப்படியே தருகிறேன் கீழ்காணும் விடயம் அனைத்தும் என்னுடையது அல்ல ! கீழே குறிப்பு மட்டும் எனது - கில்லர்ஜி

"சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்" என்று ரீமிக்ஸ் பாடல்களை கேட்டு பழைய பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். போன மாசம் வந்த குமுதத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் பேட்டி

புதுசா வந்திருக்கிற மியூசிக் டைரக்டர்ங்ககிட்டருந்து நான் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு'' என்று எப்படித்தான் சொல்ல முடிகிறதோ 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ். விஸ்வநாதனுக்கு பெருந்தன்மை. 'அழகிய தமிழ் மகன்' படத்தில் 'பொன்மகள் வந்தாள்...' பாட்டும், 'பொல்லாதவன்' படத்தில் 'எங்கேயும்.. எப்போதும்..' பாட்டும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது அடுத்து 'பில்லா'விலும் 'மை... நேம் இஸ் பில்லா'... பாடலும் சுடச்சுட ரீ மிக்ஸில் கலக்க ஆரம்பித்திருக்கிறது இந்த மூன்று பாடல்களும் அந்தக் காலத்தில் எம்.எஸ்.வி .இசையமைத்தவை என்பதுதான் ஹை லைட். ஒரு மாலை நேரத்தில் மெல்லிசை மன்னரைச் சந்தித்தோம்.ஒரு மாலை நேரத்தில் மெல்லிசை மன்னரைச் சந்தித்தோம்.

''எப்படி இருக்கீங்க ?'' என்றதும்,

''ஹார்ட் ஆப்ரேசனுக்குப் பிறகு நல்லா ரெஸ்ட் எடுத்தேன் தினமும் 'பிஸியோதெரபி' எடுத்துக்குறேன். இப்போ ஆல்ரைட் பழைய வேகம் வந்துடுச்சு. சமீபத்துல கூட 'குங்குமக்காரி' என்ற பக்தி ஆல்பத்துக்கும், 'மணல்மேரி மாதா' என்ற ஆல்பத்துக்கும் ஒரே வாரத்துல ரெக்கார்டிங் செய்து முடிச்சேன்.''

சினிமா இசை இப்போ எப்படி இருக்கு ?
''எல்லாரும் நல்லா பண்றாங்க. பிரமாதமான பாட்டெல்லாம் வருது. ஒரே ஒரு குறை வார்த்தைகளைக் கடித்துத் துப்புறாங்க கேட்க வருத்தமாயிருக்கு நான் புதுசா மியூசிக் பண்ண வந்த சமயம் 'தேவதாஸ்' படத்துக்கு பாட்டு கம்போஸ் நடந்துக்கிட்டிருந்துச்சு. உடுமலை நாராயணகவி பாட்டை எழுதினார். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்ன நான் நாராயணகவி கிட்ட வேட்டி, சட்டை துவைச்சு போட்டுக்கிட்டு இருந்தேன். பிறகு தான் மியூசிக் பண்ற வாய்ப்புக் கிடைச்சது. 'தேவதாஸ்' படத்துல கவிராயர் எழுதின, 'உலகே மாயம் வாழ்வே மாயம்' என்ற பாட்டை கண்டசாலா பாடினார். தமிழ் சரியா உச்சரிக்க வராம 'உல்கே மாயம்'னு பாடிட்டார். எவ்வளவோ சொல்லிக் குடுத்தும் வரல. சரின்னு அப்படியே பதிவு பண்ணிட்டோம். இதைக் கேட்டுட்டு உடுமலை நாராயண கவிராயர் என் கன்னத்துல ஓங்கி ஒரு அறை விட்டுட்டு, 'ஏண்டா தமிழை இப்படிக் கொலை பண்றீங்க'ன்னு கோபப்பட்டார். அதுக்கப்புறம் ரொம்ப கவனமா பாடல் வரிகள் நல்லா கேட்கிற மாதிரி மியூசிக் பண்ணினேன். ஆனா கவிராயர் அன்னிக்கு பயந்தது மாதிரி இப்ப நடந்துட்டுருக்கு. கேரளாவிலோ, கர்நாடகாவிலோ இப்படிப் பாடமுடியாது. ஆனா தமிழர்கள் தான் மன்னிச்சு ஏத்துக்கிறாங்க இது ஒரு பெரும் குறையா இருந்தாலும், புதிய பாடல்கள் வித்தியாசமான குரல்கள்னு ஒரு வெரைட்டியா கேட்க முடியுது.''

எல்லாரும் நல்லா பண்றதா ​​சொன்னீங்க இப்ப, பழைய பாடல்களை ரீ_மிக்ஸ் செய்யுறாங்க. அதில் அதிகமா உங்கள் பாடல்களாகவே இருக்கு இது போன்ற முயற்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?''

இந்தக் கேள்வியைக் கேட்டதும் எம்.எஸ்.வி. முகம் மாறுகிறது அதைத் தன் பளீர் புன்னகையால் மறைத்து விட்டுப் பேசுகிறார்.
நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனா இப்ப இருக்குற ரசிகர்கள், இளைய தலைமுறையினர் இதைத் தான் விரும்புறாங்கன்னு சொல்றது தப்பு. ''தொட்டால் பூ மலரும்..'' பாட்டை ரஹ்மான் ரீ_மிக்ஸ் செய்திருந்த சமயம், ஏர்போர்ட்ல மீட் பண்ணினோம். என்னைப் பார்த்துட்டு நான் எதுவும் சொல்வேனோன்னு பயந்தார் ரஹ்மான். ஆனா, நான் பாராட்டினேன். காரணம் ரஹ்மான் செய்தது ரீ_மிக்ஸ் மாதிரி இல்ல. முழு பாடல் வரிகளையும் அப்படியே வெச்சுக்கிட்டு டியூன் போட்டார். பாட்டு கேட்கவும் நல்லா இருந்தது. அதுதான் சரி.அப்படித்தான் பண்ணணும். ஆனா பழைய ட்யூனை வெச்சுக்கிட்டு இடையில் 'காச் மூச்'னு கத்தறதும், சத்தமான மியூசிக்கும் கேட்கவே பரிதாபமாயிருக்கு. ஏன் இப்படிப் பண்ணணும். செய்தா 'பழமை மாறாமல்' செய்யணும். இப்ப கூட 'பில்லா' படத்துல 'மை நேம் இஸ் பில்லா' பாட்டை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறதுக்காக வர்றேன்னு சொன்னாங்க. நான் தவிர்த்துட்டேன். என்னோட வாழ்த்து எப்பவும் எல்லார்க்கும் இருக்கும்ஒரு ரசிகனா நான் இதை ரசிக்கவில்லை இளைய தலைமுறைக்கு விஷம் பிடிக்குதுன்னா நாம விஷம் கொடுக்கலாமாஇது தப்பு. சரியில்ல... 'நினைத்தாலே இனிக்கும்' படத்துக்காக கம்போஸ் செய்தபோது, ஒரு கிராமத்துப் பாடலை நான் பாடிக் காண்பித்தேன். 'கத்தாழங் காட்டுக்குள்ள... விறகொடிக்கப் போனபுள்ள' இதுதான் அந்தப் பாட்டு. அதையே கண்ணதாசன், 'எங்கேயும் எப்போதும்'னு உடனே பாடலை எழுதிக் கொடுத்திட்டார். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று வந்தால் தப்பில்லை. எதையும் கெடுத்திடக் கூடாது''

என்றவர் ''சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்'' என்று உச்ச ஸ்தாயியில் பாட ஆரம்பித்தார்...


குறிப்பு - ஒன்றைக் குறிப்பிட ஆசைப்படுகிறேன் திரு. எம்.எஸ்.வி சொன்னதே (கேரளாவிலோ, கர்நாடகாவிலோ இப்படிப் பாடமுடியாது) இப்பதிவு எம்எஸ்வி அவர்களின் நினைவு தினமான இன்று அவரது ஆன்மாவுக்கு காணிக்கை.
காணொளி

34 கருத்துகள்:

  1. எனக்கும் இந்த ரீமிக்ஸ் சமாச்சாரங்கள் எரிச்சலைத்தான் தரும். அதுவும் வரிகளுக்கு நடுவே காச்மூச் என்று - மாடர்ன் மியூசிக்காம்! - கத்திக் கொண்டு...

    எம் எஸ் வி பெருந்தன்மையானவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் சொல்லி விட்டீர்கள் நான் சொல்லத்தான் நினைக்கிறேன்...

      நீக்கு
  2. எம்.எஸ்.விஅவர்களின் நினைவினைப் போற்றுவோம்
    தம+1

    பதிலளிநீக்கு
  3. மெல்லிசை மன்னர் என்றைக்கும் நம்முடன் தான்!..

    அவரது நினைவின் பசுமையில் - என் மனம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இசைஞானம் உள்ள மனிதர்கள் வாழும் காலம்வரை அவரது இசையும் வாழும்.

      நீக்கு
  4. திரு msv அவர்கள் .ரீமிக்ஸ் பாடல்களைப் பற்றி ,சொல்லத்தான் நினைத்து சொல்ல முடியாமல் உள்ளத்தால் தவிப்பது நமக்கு புரிகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி மிகச்சரியாக சொன்னீர்கள் அவரது ஆதங்கம் இதேதான்.

      நீக்கு
  5. எம் எஸ் வி அவர் இசையில் என்றும் வாழ்கிறார்

    பதிலளிநீக்கு
  6. உங்களுடன் சேர்ந்து நாங்களும் அவரை நினைக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. நல்லவேளையா இந்தப் புதிய பாடல்களைக் கலப்பிசையில் கேட்கும் சந்தர்ப்பமே வாய்க்கலை! பிழைச்சேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனக்கெல்லாம் கேட்டவுடன் 'சுள்' என்று கோபம் வரும்

      நீக்கு
  8. மெல்லிசை மன்னர் என்றால் மெல்லிசை மன்னர்தான். எத்தனை எத்தனை அருமையான பாடல்கள் அவரது இசையில் மிளிர்ந்தன...இன்றும் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன இனியும் மிளிரும்...எங்களுக்கு ரீமிக்ஸ் சுத்தமாகப் பிடிப்பதில்லை. அதுவும் இடையில் ஏதோ குரல்கள் கன்னா பின்னாவென்று. இசையின் இரைச்சல்..ஹும்...

    நீங்கள் சொல்லுவது சரிதான் கில்லர்ஜி. கேரளத்தில் இப்படி இல்லை. செய்யவும் முடியாதுதான்.

    நல்ல பதிவு.மெல்லிசை மன்னர் என்றும் வாழ்வார்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அந்தக்கருத்து திரு. எம்.எஸ்.வி. அவர்களின் கருத்தே நான் வழி மொழிந்தேன் காரணம் நானும் அவர் ஜாதியே...

      நீக்கு
  9. எம்.எஸ்.வி யை நாம் அனைவரும் போற்றுவோம். அவரின் பாடல்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. தாயின் தாலாட்டைப் போல எம்.எஸ்வியின் மெல்லிசையும் தாலாட்டுதான். காலம் மாறிபோச்சு-ன்னு கண்ணாபின்னா பாடல் என்ன செய்யுறது கேட்டா. ஒங்களுக்கென்ன கேள்வி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகாக சொன்னீர்கள் இனிமேல் காதைப் பொத்திக்கொண்டுதான் இருக்க வேண்டும்

      நீக்கு
  11. மலரும் நினைவுகளா சகோ? ,நல்ல நேரத்தில் தான் வந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே வருக சகோ நலமா ? வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. மெல்லிசை மன்னருக்கு அருமையான வகையில் அஞ்சலி.
    பாராட்டுக்கள் நண்பரே.

    கோ

    பதிலளிநீக்கு
  13. தங்களின் ஆதங்கமும் சரிதான் நண்பரே.....

    பதிலளிநீக்கு
  14. எம்.எஸ்.வி. மிக அபூர்வமான இசை மனிதர். அவரைப் போல் மற்றொருவரை இந்த திரையுலகம் இனி சந்திக்கப் போவதில்லை.
    த ம 6

    பதிலளிநீக்கு
  15. மெல்லிசை மன்னரின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்தமைக்கும் அவரது ஆதங்கத்தை அறிந்துகொள்ள உதவியமைக்கும் நன்றி!
    என்றைக்கு தமிழ் திரையுலகம் இந்த Remix ஐ விட்டொழிக்கிறதோ அன்றுதான் MSV அவர்களின் ஆன்மா சாந்தியடையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இன்றைய இசையமைப்பாளர்களுக்கு இசை ஞானம் இல்லை இதுதான் உண்மை.

      நீக்கு
  16. எம். எஸ்.வி பாடல்கள் காலம் கடந்து இன்னும் மனதில் நின்று கொண்டுதான் இருக்கிறது. காலத்தால் அழிக்க முடியாதது அவரது இசை மெட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் கும்மாச்சி அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. மெல்லிசை மன்னர் - அவரையும் மறக்க முடியாது - அவரது இசையையும்....

    ரீ மிக்ஸ் - கேட்கும் போதே காது கதறுகிறது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மையான வார்த்தை சொன்னீர்கள்

      நீக்கு