இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 15, 2016

கொல்லத்தான் நினைக்கிறேன்...


இப்பதிவின் முந்தைய தொடர்பு பதிவின் இணைப்பு கீழே...

தேவகோட்டை முகில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் 132-வது மாடி அறை எண் 13208 இயக்குனர் சாம்பசிவமும், கவிஞர் Chivas Regal சிவசம்போவும்.

டைரக்டரே பாடலுக்கான ஸுச்சுவேஷனை சொல்லுங்க ?
அதாவது கவிஞரே காதலன் தன்னுடைய காதலியை கொல்வதற்கு கொலைகாரனிடம் பேரம் பேசி பகுதி பணம் கொடுக்கிறான் கொடைக்கானல் போன காதலியை பின் தொடர்ந்து தனியாக மலையில் சிக்கியவளை கொல்லப்போற நேரத்துல கொலைகாரனுக்கு சந்தேகம் வந்துருது அதாவது காதலிச்ச காதலிக்கே துரோகம் செய்யிறவன் வேலை முடிந்ததும் நமக்கு துரோகம் செய்யாமல் மீதி பணத்தை தந்திடுவானா ? அப்படின்னு மலையின் இயற்கையான சூழல் அவனை பாட வைக்கின்றது இந்த நிலையை விளக்கி அவன் வேதனையோடு பாடுகிறான் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி காதலியும் பாடல் மூலமாகவே அறிவுரை சொல்லி அவனிடம் இருந்து தப்பிச்சுடுறா, பிறகு இவர்களுக்குள் காதல் ஊற்றெடுக்குது இதுதான் கவிஞரே சூழல்...
ம்...ம்... மறுபடியும் ஒரு சிவாஸ் ரீகல் ஆர்டர் பண்ணுங்க....
(சிந்தனையில் மூழ்கிய நமது Chivas... ஏற்றிய அடுத்த 20 நிமிடத்தில் இதோ....)

கொல்லத்தான் நினைக்கிறேன்
பாக்கி பணத்தால் தவிக்கிறேன்
கத்தி இருந்தும் குத்துவதற்கு
வாய்ப்பை இழந்து தவிக்கிறேன்
ஆ ஹா... கொல்லத்தான் நினைக்கிறேன்

காற்றில் பறக்கும் பணம்தானே - என்
கூட்டில் நுழைந்தது உன் குணம்தானே
பணம்தானே அவன் தந்தானோ இங்கு
எனை நானே உனக்கு தந்தேனே
ஆ ஹா... கொல்லத்தான் நினைக்கிறாய்

கொலை செய்தால் இங்கு விலையாகும்
வீட்டில் உலை இல்லையேல் உணவுக்கு வழியேது
அவன் பணம் தந்தான் உன்னை கொலை செய்ய
பாக்கி வராதோ நீ சொல்லு பதில் நீ சொல்லு
ஆ ஹா.... கொல்லத்தான் நினைக்கிறேன்

கொலைகள் என்பது கலையானால்
கலைகள் எல்லாம் பிழையாகும்...
பிழைப்புக்கு உனக்கு வழியுண்டு
நான் தரலாமே நீ பெறலாமே
ஆ ஹா... கொல்லத்தான் நினைக்கிறாய்

என் ஆசை பொங்குது உனை கண்டு
காகிதப் பணம் தடுக்குது ஆசைகளை
வழியுண்டோ வாழ வழியுண்டோ
என்ன செய்ய நான் என்ன செய்ய
ஆ ஹா... கொல்லத்தான் நினைக்கிறேன்

மனம் குழம்பி போனாய் நீ தானே
உனக்கு தேவை பணம் தானோ
கட்டி அணைத்தேன் உனை நானே
கத்தியை எறிந்தாய் உடன்தானே
ஆ ஹா... கொல்லத்தான்.... நி....

கொல்லவே நினைக்கலை உன்னை
கட்டிக் கொள்ள நினைக்கிறேன் பணம்
வேண்டாம் உன் குணம் போதும்
பறப்போம் நாம் வானிலே.. ஆ ஹா....

ம்.... ஹூம் ஹூம்.. ம்... ஹுஹூம்...
ஆ.. ஹா.... ஆ... ஹ.. ஹா...
லாலலா..... லா லாலலா...
ம்.... ஹூம் ஹூம்..

புடிச்சு இருக்கானு பாருங்க...
ஆஹா ஸூப்பர் கவிஞரே... இதை வச்சு கலக்கிடுவோம் இந்தப் பாட்டுக்காகவே படம் ஸூப்பர் ஹிட் ஆகும்.
நல்லது கிளம்புவோம் நாளைக்கு நான் ஸ்விஸ் போகணும் ஏவிஎம் சரவணன் சார் புதுப்படத்துக்கு பாட்டு எழுதணும்.
இருவரும் ஹோட்டலை விட்டு வெளியேறினார்கள்.

 காணொளி

42 கருத்துகள்:

  1. பாட்டு அருமை. நானும் தங்களுக்கு வாழ்த்து சொல்லத்தான் நினைக்கிறேன். ஆனால் வார்த்தையின்றி தவிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சொல்ல நினைத்ததை சொல்லி விடுங்கள்

      நீக்கு
  2. ஆஹா, பாராட்டுகள் கவஞரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயாவின் பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  3. "சொல்லத்தான் நினைக்கிறேன்" என்பதை
    "கொல்லத்தான் நினைக்கிறேன்" என எழுதினாலும்
    காதல் காதல்தானே!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா killergee நீங்க கொன்னுட்டீங்க.பாட்டிலதான்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. நேற்று சொல்லத்தான் நினைக்கிறேன் வாசித்தேன்... இன்றும் அதே தலைப்பா... எதுவும் தொடர் எழுதுறாரோன்னு வந்தா இது கொல்லத்தான் நினைக்கிறேன்... ஹி..ஹி... பாட்டு சூப்பர்... சினிமாவில் பாட்டெழுத போகலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னை எவன் அழைக்கப் போறான்.

      நீக்கு
  6. ரசித்தேன் ஐயா உங்களின் எழுத்தை.

    பதிலளிநீக்கு
  7. கில்லர் பேருக்கேத்தமாதிரியே, கில்லிட்டீங்க ஐ மீன் கொன்னுட்டீங்க. ஆமாம் அந்த கில்லரும் நீங்கள்தானோ?

    சூப்பர்.

    கோ

    பதிலளிநீக்கு
  8. கொலைக்காரனே காதலனாகி விடுகிறானா ?பாலச்சந்தர் பாதிப்பு தான் இது என்று நான் சொல்லத்தான் நினைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மையில் நான் அந்த சினிமா பார்த்ததில்லை விரைவில் பார்க்கிறேன்

      நீக்கு
  9. ஆகா!...
    கொலை செஞ்சிருந்தா கூட
    ஏதாவது கொசு ....ன்னு நினைச்சுட்டேன்.. அப்படின்னு சொல்லி வழக்கை 50 வருசத்துக்கு இழுத்தடிச்சி தண்டனையில இருந்து தப்பிச்சிடலாம்..

    இது தப்பிக்கவே முடியாத தண்டனையாச்சே!... நல்லாருக்கட்டும்..

    ஆனா - அந்த பழைய ஆசாமி குறுக்கே வந்து மறுபடிக்கு குழப்பாம இருக்கணும்...

    அரே.. ஓ.. சம்போ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சரியாக சொன்னீங்க ஆனால் பழைய ஆசாமி வந்தால் அவனுக்கு கத்திக்குத்து உறுதி

      நீக்கு
  10. ஹாங்... ஹா.... ஹா... ரசித்தேன் ஜி!

    பதிலளிநீக்கு
  11. தம 5 பிறகு வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ பிறகு வந்து என்ன சொல்லப்போறீங்களோ.... ? (அவ்வ்வ்வ்வ்வ்)

      நீக்கு
  12. நல்லா ரசிக்க முடிந்தது. உங்க மூளை எப்போவும் ஓடிட்டே இருக்கும் போல! தூங்கும்போது கூட யோசிப்பீங்களோ????????? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தூங்கும் பொழுதும் மூளை வேலை செய்யுமா ?

      நீக்கு
  13. ஆஹா! சுவிஸுக்கும் வருகின்றீர்களா? வாங்க வாங்க!

    பாட்டும் மெட்டும் ஷூப்பரோ ஷூப்பர் சார்!வாழ்க!வளர்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ ஸ்விஸுக்கு வருவது நானல்ல... கவிஞர் Chivas Regal சிவசம்போ வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  14. பெயரில்லா7/16/2016 11:10 PM

    நல்வ ரசனை சுலைத்தேன் சகோதரா.

    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  15. ஆஹா... நல்லா இருக்கு கவிஞரே....

    த.ம. 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கவிஞரே என்றது உண்மைதானே... ?

      நீக்கு
  16. ஜாலியா மட்டுமே எழுதுவேன் என்று உறுதி எடுத்துடீங்க போல
    வாழ்த்துகள்
    அருமை
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தோழரே கோபமான பதிவுகள் வேண்டுமா ?

      நீக்கு
  17. ஆஹா..சூப்பர்...கவிஞரே.........

    பதிலளிநீக்கு
  18. சூப்பர் ஜி! அப்படியே பொருந்துது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாடிப்பார்த்தீர்களா ? வருகைக்கு நன்றி

      நீக்கு
  19. பாட்டு அருமை அதற்கு இணைப்பும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  20. 'நிறைய வார்த்தைகள் சந்தத்தில் நிற்கவில்லை. "கத்தி இருந்தும் குத்துவதற்கு" - இது சரியாக அமையாது. இதை "வாளிருந்தும் கொல்வதற்கு வாய்ப்பிழந்து தவிக்கிறேன்" என்று மாற்றிப்பாடுங்கள். "எனை நானே உனக்குத் தந்தேனே" - எனை நானே (ஏ) தந் தேனே.. சரி சரி. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்து இன்னும் எம்மை செம்மை படுத்த உதவும் வருகைக்கு நன்றி

      நீக்கு