Please ask audio voice then go to Read.
காணொளி
இப்பாடலில் இருந்து நாம் தெரிந்து கொள்வது, இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே மாடு
வாழ்ந்து இருக்கிறது
ஆம்
அப்படியானால் மாடு உண்பதற்கு புல் கிடைத்து இருக்கிறது புல்
தாவரவகை அப்படியானால் மற்றவைகளும் கிடைத்திருக்கும் அதாவது தாவரவகையான நெல், செடி, கொடி, கோதுமை, கம்பு, சோளம், கத்தரிக்காய்,
புடலங்காய், முட்டகோஸ், காரட், பீட்ரூட், எனக்கு பிடித்த பாகற்காய், லொட்டு, லொசுக்கு இவை வளர்வதற்கு நீர்
தேவைப்பட்டிருக்கும்.
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே மழை பெய்திருக்கிறது
மழை பெய்ய மேகம் கடலிலிருந்து நீர் எடுத்து வந்திருக்கும்
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே கடல் இருந்திருக்கிறது
மேலும் இவை உலர்வதற்கு வெயில் தேவைப்படும்
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே சூரியன் தோன்றியிருக்கிறது
மேலும் சூட்டைத் தணிக்க நிலவு வந்து இருக்கும்
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே நிலவு தோன்றியிருக்கிறது
காற்றில்லாமல் இவ்வுலகில் எதுவுமே வாழ முடியாது
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே காற்றும் இருந்திருக்கிறது
இந்த மாடு வாழ்ந்து இறந்தும் இருக்கிறது அல்லது கொல்லப் பட்டிருக்கிறது
நிச்சயமாக கொல்லப் பட்டிருக்க வேண்டும்
ஆம்
கொன்றது மனிதனாகத்தான் இருந்திருக்க வேண்டும் அவன்தான்
உணவுக்காக கொன்று நெருப்பிலிட்டு தின்று இருக்கிறான்
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே நெருப்பும் இருந்திருக்கிறது
அவன்தான் உணவுக்காக தின்று விட்டு டைம்பாஸிற்காக அதன் தோலை வைத்து
உடுக்கை செய்திருக்கிறான்
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே மனிதன் வாழ்ந்து இருக்கிறான்.
ஆம்
அந்த உடுக்கையிலிருந்துதான் இந்த உலகம் படைக்கப் பட்டிருக்கிறது.
சாம்பசிவம்-
அடப்பாவமே ஒரு வார்த்தை எல். ஆர். ஈஸ்வரியம்மா
தெரியாம பாடுனதுக்கு இவ்வளவு பிரச்சினை ஆக்கிட்டியய்யா உன்னை அந்த புண்ணை நல்லூர்
மாரியம்மன்தான்யா காப்பாத்தணும்.
ஹா... ஹா... எப்படியெல்லாம் பதிவு தேத்துறாங்க பாருங்கப்பா...
பதிலளிநீக்குசூப்பருண்ணே...
வருக நண்பரே கருத்துரைக்கு நன்றி
நீக்குநகைச்சுவைக்காக நீங்க இந்த கருத்தை சொன்னாலும் ,ஊம் ஊமென்று தங்கள் மதத்துக்கு ஆதரவாக இந்த கருத்துக்கு உடுக்கை அடிக்கும் ஆபத்து உள்ளது :)
பதிலளிநீக்குஹாஹாஹா வாங்க ஜி அதென்ன என்னை தள்ளி வைக்கிறீங்க....
நீக்குஆகா...
பதிலளிநீக்குஉடுக்கையும் உங்களிடம் சிக்கிக் கொண்டுவிட்டதா!..
( அது உலகநாதன் வெச்சிருந்த உடுக்கை தானே?..)
ஆனாலும் - உடுக்கைச் சத்தம் பிரமாதம்!..
வருக ஜி அதே உடுக்கைதான் வருகைக்கு நன்றி
நீக்குநல்ல உடுக்கையடி,
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅறிவியலாளர்களை (விஞ்ஞானிகளை) விஞ்சி - உன்
பதிலளிநீக்குஆய்வுகள் முன்னேறி மின்னுகிறதே - அதற்கு
முதலில் பாராட்டுகள் - அடுத்து
ஆண்டவன் (கடவுள்) முதலில்
உலகைப் படைத்தான் - அடுத்து
மனிதனைப் படைத்தான் - அடுத்து
மனிதன் பேசத் தமிழ்மொழியைப் படிப்பித்தான் - அடுத்து
மனிதன் வாழத் தேவையான எல்லாவற்றையும் படைத்தான் - அடுத்து
இப்படித் தான் எல்லாம் உருவானது - ஆனால்
அழிப்பதையோ கொல்லுவதையோ - அந்த
ஆண்டவன் (கடவுள்) படிப்பிக்கவில்லை - அந்த
ஆண்டவனுக்கு (கடவுளுக்கு) மனிதன் தான் படிப்பித்தான்!
வருக நண்பரே அழகான விளக்கமான உரை
நீக்குஇதில் மனிதன் மொழியைப் படிப்பித்தான் என்பதைவிட மொழியை உருவாக்கினான் என்று சொல்வது சரியாகுமே... வருகைக்கு நன்றி நண்பரே
நல்ல ஆராய்ச்சி!
பதிலளிநீக்கு:)))
வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குஹாஹா... நல்ல ஆராய்ச்சி தான் போங்க!
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கு நன்றி
நீக்குஅருமை!
பதிலளிநீக்குவாங்க ஐயா தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஇந்த உலகம் யாராலும் படைக்கப்படவில்லை நண்பரே....
பதிலளிநீக்குவருக நண்பா... எல். ஆர். ஈஸ்வரியம்மா சும்மா பாடியிருக்கும்.
நீக்குஅந்த ஈஸ்வரியம்ம சும்மா பாடவில்லை நண்பரே..துட்டு வாங்கிட்டுத்தான் பாடியது..
நீக்குஹாஹாஹா துட்டுக்காகத்தானே பாட்டு.
நீக்குஉடுக்கையிலிருந்துதான் உந்த உலகம் பிறந்தது என்று அதாவது செலஸ்டியல் டேன்ஸ் சிவ தாண்டவம் என்றும்...அதாவது அந்த அண்டம் வெடித்துச் சிதறுதல் அதிலிருந்து உலகம் தோன்றுதலை இப்படித் சமயதத்துவாளர்களும் சொல்வதுண்டு....ஆனால் அதற்கு முன் இந்த உலகம் எல்லாம் கிடையாது...அந்த வெடிக்கும் சத்தத்தைத்தான் சிவனின் உடுக்கைச் சத்தம் என்று சொல்லுவ்துண்டு. என்ன மண்டை குழம்புதா.. பரவால்ல ஒரு பதிவு தேறிச்சுனு சொல்லுங்க ஜி...ஹிஹிஹி
பதிலளிநீக்குவாங்க தங்களது விரிவான தகவலை வத்தே இன்னொரு பதிவு எழுதலாம் போலயே.... நன்றி
நீக்குபொழுது போகாத ஆராய்ச்சியா? ஆனாலும் சுவையான ஆய்வு தான்! :)
பதிலளிநீக்குவாங்க எல்லாமே பொழுது போகாமல்தானே எழுதுறோம் வருகைக்கு நன்றி
நீக்குஒலி கேட்க என்ன செய்ய வேண்டும் ஒலி கேட்காமலேயே வாசித்து விட்டேன் ஆக்கல் அழிவு எல்லாம் ஒரு சீக்வென்சில் இல்லையே
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி
நீக்குஉடுக்கை சத்தம் எனக்கு செல் மூலம் கிடைத்ததோ !!
பதிலளிநீக்குஅடடா...நான் ஏதோ ராங் நம்பர் என்று வைத்துவிட்டேன்.
இன்னா விசயம் அப்படின்னு பாத்தா,
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்று சொல்லும் குறளின்
முதல் வார்த்தை என்னமா ஆராயப்பட்டு இருக்கிறது !!
வாழ்த்துக்கள். !!
சுப்பு தாத்தா.
வாங்க தாத்தா இன்று பதிவர் கையேடு கண்ணில் தென்பட்டதோடு தாத்தாவின் பெயர்தான் முதலில் தென்பட்டது ஆகவே உடன் அழைத்தேன்.
நீக்குஹாஹாஹா குறளை பொருத்தமாக சொன்னீர்கள் தாத்தா
நண்பா,
பதிலளிநீக்குஎப்படியெல்லாம் யோசிக்கிறது இந்த தொப்பிக்குள்ளே இருக்கும்(??) மூளை.
கற்பனை பனையளவு உயர்ந்திருக்கிறது.
கோ
வாங்க நண்பா தொப்பிக்குள் இருக்கும் (??) என்பதில் ஐயம் உள்ளதோ.... வருகைக்கு நன்றி நண்பா.
நீக்குஉங்க பாணியே தனி
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே
நீக்குவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுபோல் தங்களுக்கு ஒரு வரியும் ஒரு ஆயுதம் தான். பதிவு எழுத!
பதிலளிநீக்குஹாஹாஹா தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே
நீக்கு