விலைமாதரின் விசும்பல்
இரவே நீ விடிந்து விடு
இல்லையேல் நான் மடிந்திடுவேன்.
காமுகியின் களிப்பு
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் நிலையை கலையாதே.
பறவையின் பதற்றம்
இரவே நீ விடிந்து விடு
குஞ்சுக்கு பசிக்குது புரிந்துகொடு.
ஆந்தையின் அலறல்
இரவே நீ விடியாதே
பகலில் உணவு கிடைக்காதே.
நாய்களின் நாதம்
இரவே இரவே விடிந்து விடு
ஊளையிட ஜீவனில்லை புரிந்துவிடு.
பேய்களின் பேற்றல்
இரவே இரவே விடியாதே
பகலில் நடமாட முடியாதே.
காவலாளியின் கவலை
இரவே சீக்கிரம் விடிந்து விடு
ATM வரிசையில் நிற்கணும் புரிந்துகொடு.
முதலாளியின் முனங்கள்
இரவே சீக்கிரம் விடியாதே
காவலுக்கு ஆட்களுண்டு கலையாதே.
எமனின் ஏக்கம்
இரவே சீக்கிரம் விடிந்து விடு
05.48 க்கு கவிய தூக்கணும் புரிந்துகொடு.
கைதி கவியின் கலக்கம்
இரவே சீக்கிரம் விடியாதே
இனிமேல் இரவெனக்கு கிடைக்காதே.
பயணிகளின் பயம்
இரவே சீக்கிரம் விடிந்து விடு
வழிப்பறி கொள்ளையுண்டு புரிந்துவிடு.
திருடனின் திட்டம்
இரவே சீக்கிரம் விடியாதே
வந்த வேலை முடியலை மறவாதே.
சந்திரனின் சலிப்பு
இரவே நீ விடிந்து விடு
தூக்கம் வருது புரிந்துகொடு.
சூரியனின் சோம்பல்
இரவே நீ இப்ப விடியாதே,
Five Minutes Balance உண்டு மறவாதே.
சாம்பசிவம்-
மரமண்டைன்னு சொல்றாங்களே... இதுதானோ ?
ஒரு நிலை, இருவேறு பார்வை!
பதிலளிநீக்குவருக நண்பரே சரியான புரிதலுக்கு நன்றி
நீக்குவிடியலில் இத்தனை உண்டா..?? அருமை ஐயா.இரசித்தேன்.
பதிலளிநீக்குவருக சகோ இன்னும் இருக்கின்றது வருகைக்கு நன்றி
நீக்குகாவலாளியின் கவலை தற்கால நிலைமயை எடுத்துக் காட்டுவதை இரசித்தேன்! அது சரி. எவ்வளோ பேர் கவலைப்படும்போது காமுகியின் கவலையை மட்டும் ஏன் தலைப்பாக வைத்தீர்கள்.
பதிலளிநீக்குவருக நண்பரே முதல் வரிசையில் வந்ததால் வைத்தேந் வருகைக்கு நன்றி
நீக்குஇரவும் வரும் பகலும்வரும் பாட்டு அவைகள் கேட்டிருக்க முடியாது ,அவர்களுக்குமா தெரியாது :)
பதிலளிநீக்குஅவர்கள் மயக்கதில் மறந்திருக்கலாம் ஜி வருகைக்கு நன்றி
நீக்குவிடியல்கள் தேவைதான்
பதிலளிநீக்குதம +
வருக தோழரே உண்மையே...
நீக்குஒரு சூழலில் இருவேறுபட்டவரின் மனநிலையை படம்பிடித்த பதிவு அருமை! நன்றி!
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குமாறுபட்டு நினைப்பவர்களின் மன நிலையைப் பகிர்ந்த விதம் அருமை.
பதிலளிநீக்குவருக முனைவரே தங்களது கருத்துரைக்கு நன்றி
நீக்குஆஹா..! அற்புதம்..!!
பதிலளிநீக்குத ம 6
வருக நண்பரே நன்றி
நீக்குஎல்லோருக்கும் நல்லதாக விடியட்டும்.
பதிலளிநீக்குவருக சகோ நன்றி தங்களது தளம் படிக்க முடியவில்லையே.... ஓடிக்கொண்டே இருக்கின்றது
நீக்குஒரு இரவு பலருக்கு விடியல் மீது விருப்பம் சிலருக்கு வேண்டாம்
பதிலளிநீக்குவருக சகோ இதுதான் இறைநியதி கருத்துரைக்கு நன்றி
நீக்குசூழல் ஒன்று...
பதிலளிநீக்குமனமோ இரண்டு...
மாறுபட்ட சிந்தனை...
அருமை அண்ணா...
த.ம. +1.... :)
தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே
நீக்கு‘பசி’பரமசிவத்தின் பரிதவிப்பு:
பதிலளிநீக்குஇரவே சீக்கிரம் விடிந்துவிடு
இனிக்க இனிக்கக் கில்லர்ஜியை எழுதவிடு
ஹாஹாஹா வருக நண்பரே எனக்கு எழுதுவதற்கு நேரம்-காலம் கிடையாது நினைத்தவுடன் எழுதி விடுவேன் இருப்பினும் நான் இரவைவிட பகலை நேசிப்பவனே...
நீக்குநல்லா யோசிச்சுருக்கீங்க சகோ..
பதிலளிநீக்குவருக சகோ வாழ்க்கை முழுவதுமே வாசிப்பும், யோசிப்பும்தான் எனது பொழுதுபோக்கு வருகைக்கு நன்றி
நீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குஒரே நிலையின்
வெவ்வேறு பார்வைகள்
அருமை நண்பரே
வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி
நீக்குகுடிகாரனின்(!) புலம்பல்:
பதிலளிநீக்குகலகலப்பான பஞ்சணை.. மதுவின் மயக்கம் கலையாமல் கிடக்க வேண்டும்.. இரவே.. இரவே.. சீக்கிரம் விடிந்து விடாதே!..
குடிமகனின் புலம்பல்:
பேருந்து நிறுத்தத்தில் சாக்கடைச் சகதியில் விழுந்து கிடக்கிறான்..
சுள்ளென்ற வெயிலில் போதை கலைந்து தொலைய வேண்டும்..
இரவே சீக்கிரம் விடிந்து விடு!..
ஆஹா அற்புதம் ஜி இவர்களை நான் நினைக்கவில்லைதான் வருகைக்கு நன்றி
நீக்குஇரண்டு வரிகளில்
பதிலளிநீக்குதிரண்ட சிந்தனை
மரமண்டை எனக்கு
தரமானதெனப் பட்டதோ
நெடு நேரம் கழித்தே!
ஹாஹாஹா வருக நண்பரே நன்றி
நீக்குசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
பதிலளிநீக்குhttps://plus.google.com/u/0/communities/110989462720435185590
நல்லது நண்பரே இதோ இணைத்து விடுகிறேன் நன்றி
நீக்கு'நல்லாருக்கு. ஒருவனின் உணவு அடுத்தவனின் விஷம் (One man's food is another man's poison) என்பதை நினைவுபடுத்தியது.
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி சில பதிவுகளை விட்டு விட்டீர்களே..
நீக்குஇதற்குத்தான் இரண்டு கண்களோ...??????????
பதிலளிநீக்குஇருக்கலாம் நண்பரே இதுவும் உண்மைதானோ ?
நீக்குபலருக்கும் இரவு என்றால் பயம்தான் ஆனால் பலரும் வெளிச்சமிருந்தும் காண்பதில்லையே நல்ல விடியலுக்காகக் காத்திருப்பவருள் நானும் ஒருவன்
பதிலளிநீக்குவாங்க ஐயா நல்லதொரு கருத்தை முன் வைத்தீர்கள் நன்றி
நீக்குவித்தியாசமான பதிவு, நன்றாக உள்ளது நண்பரே!
பதிலளிநீக்குஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே!
வருக நண்பரே கருத்துரைக்கு நன்றி
நீக்குமனதைத் தொட்டது கைதி கவியின் எண்ணம்! :(
பதிலளிநீக்குவருக சகோ நன்றி
நீக்குசிலருக்கு இரவுதான் வேலையே.....சிலருக்கு விடியல்தான் வேலையே.
பதிலளிநீக்குசிலருக்கு நிச்சயமாக விடியல் மிகவும் அவசியமாகிப் போகிறது! பூமியின் இரு துருவங்களும் என்ன சொல்லும்?!!!!! நமக்கும்தான் விடியல் தேவை...மனத் தெளிவு அதனால் ஏற்படும் இருட்டு விலகலும் விடியலும் நல்ல சிந்தனை..
வருக உண்மையை அழகாய் விளக்கியமைக்கு நன்றி.
நீக்கு