Chennai Airport V.V.I.P Hall
வணக்கம் ஐயா நாத்திகம் பேசும் தங்களிடம் சில கேள்விகள்.
நல்லது கேட்கலாம்.
கடவுள் இருக்கின்றார் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா ?
உண்டு என்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை.
இது கண்ணதாசனின் பாடல் வரிகள் உங்களது பதில் ?
கண்டால் நம்பலாம் என்பது எமது கருத்து.
ஒருக்கால் கண்டால், என்ன கேட்பீர்கள் ?
கண்டவுடன் உண்டு என்ற நம்பிக்கை வந்து விடும் அதன் காரணமாய் ஒரேயொரு கோரிக்கை வைப்பேன்.
எப்படி ?
ஒரே நாளில் இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளையும் அழைத்துச்செல் என்று.
இதனால் தங்களுக்கு பலன் ?
இந்தியாவுக்கு புதிய மாற்றம் கிடைக்கும், இந்திய மக்களுக்கு வாழ்க்கை இனியாவது மாறும் காரணம் மாற்றும் சக்தி தனக்கு இருந்தும் அதன் மகிமை தெரியாதவர்கள் இந்தியாவில் அதிகம் ஆகவேதான் இந்த கோரிக்கை இதில் எனக்கும் பலன் உண்டு காரணம் நாளை எனது சந்ததிகள் நலமுடன் வாழும்.
தங்களுக்கென்று சுயமாக ஏதும் கேட்க மாட்டீர்களா ?
சுய ஆசைகள் எனக்கு கிடையாது காரணம் சொந்த வாழ்க்கையையே அனுபவிக்கத் தெரியாமல் காலத்தை கை விட்டவன் நான் இதுகூட ஒருவகை அறியாமையே....
கடவுளைக்கண்டு விட்டோம் இனிமேல் நினைத்ததை எல்லாம் அடையலாம் என்ற ஆசையில் ஏதாவது..... ?
வேண்டுமானால் ஒன்று கேட்பேன் எனக்கு இன்றோ என்றோ எப்பொழுதாக இருந்தாலும் சரி அழகிய மரணம் கொடு என்று கேட்பேன்.
அதென்ன, அழகிய மரணம் ?
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் மரணம் பல வகைகளில் கோரமாக, கொடூரமாக, இருக்கின்றது சிலருக்கு புதைப்பதற்கு சரீரம்கூட கிடைக்காமல் சிதறிச் சாகின்றார்கள் மரணத்தை இறைவன்தான் கொடுக்கின்றான் என்பது பொதுவான நம்பிக்கை ஆனால் இயற்கையின் சீற்றத்தால் ஆயிரக் கணக்கானோர் சாகும் பொழுது அது இறைவன் செயல் என்பது பொருந்தலாம் சில தீவிரவாதிகளால் பல ஆயிரக் கணக்கான மனிதர்கள் ஒரே நேரத்தில் சாகும் பொழுது இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை இந்த கொடூர மரணத்திற்க்கு காரணம் விஞ்ஞான வளர்ச்சியா ? இல்லை மனிதனின் இவ்வளவு கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் கொடுத்த இறைவன் செயலா ? இல்லை தீவிரவாத எண்ணங்களை மனதில் உதிக்க வைத்த இறைவன் செயலா ? என்பதில் எனக்கு நெடுநாள் குழப்பம் உண்டு எதுவாயினும் எனக்கு இயல்பான, இயற்கையான, துன்பம் தராத சட்டென உயிர் துறக்கும் அழகிய மரணம் கொடுத்து எனது சரீரத்தை இந்திய மண் உண்ண வேண்டும் இதுவே எமது சுயநல கோரிக்கை.
தீவிரவாத எண்ணங்களை இறைவன்தான் கொடுக்கின்றான் என்பது உங்கள் குற்றச்சாட்டா ?
மனிதனை படைத்தது இறைவன் என்றால் ? மனிதனுள் பலவகை மனங்களை கொடுத்தது இறைவன் என்றால் ? தீவிரவாதத்தை வளர்த்ததும் இறைவனே.
இறைவன் எப்படி.... மனிதனுக்கு இடையூறுகள் கொடுப்பார் ?
இயற்கை அழிவில் மரணங்கள் நிகழும் பொழுது காரணவாதியாக மக்கள் யாரைச் சொல்வார்கள் ?
இறைவனை.
கஷ்டப்பட்டு உழைத்து சாதித்த மனிதன் தனது வெற்றிகளுக்கு காரணம் இறைவனே எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்கின்றான் இதன் அர்த்தமென்ன ?
இறைவன் நல்ல எண்ணங்களையும், அறிவையும் கொடுத்ததால் இந்நிலைக்கு வந்தேன் என்று தன்னடக்கமாக சொல்கின்றான்.
அப்படியானால் தீவிரவாதிகளுக்கு இந்த எண்ணங்களை மனதில் உதிக்க வைத்தது யார் ?
? ? ? ஜி நீங்க குழப்பாமல் சொல்லுங்கள் தீவிரவாதத்துக்கு காரணம் இறைவன் என்று சொல்கின்றீர்களா ?
நான் சொல்லவில்லை உங்கள் கணக்குப்படி நல்ல எண்ணங்களை கொடுத்தது இறைவன் என்றால் கெட்ட எண்ணங்களை கொடுத்ததும் இறைவனாகத்தான் இருக்க முடியும்.
அதெப்படி இரண்டு சிந்தனைகளை கொடுத்து இறைவன் நல்லதை தேர்ந்து எடுத்துக்கொள் என்று சொல்கின்றான் இதில் குற்றவாளி இறைவனா ?
ஆகவே அதனால்தான் தேர்ந்தெடுத்து கொல்கிறான்.
இதற்கு ஏதும் மாற்று வழிகள் ?
சில கூட்டத்தினரிடம் போய்க் கேளுங்கள் கொசுவுக்கு திருமணம் செய்து வைத்து பரிகாரம் செய்தால் மாற்றம் வரும் என்றும் சொல்வார்கள் நல்லது உகாண்டா நாட்டிற்கு செல்லும் விமானம் தயாராகி விட்டது பேட்டியை இத்துடன் முடித்துக் கொள்வோம்.
நல்லது நன்றி ஐயா தங்களது பயணம் சிறக்க எங்கள் சங்கொலி பத்திரிக்கையின் சார்பாக வாழ்த்துகள்.
நன்றி வணக்கம்.
Chivas Regal சிவசம்போ-
நல்லசாவு வேணுமுன்னா, மருந்தை வாங்கி குவாட்டர்ல கலந்து குடிச்சிட்டு நீட்டி நிமிந்திடலாமே...
சாம்பசிவம்-
கந்தன் புத்தி கவட்டுள்ளேதானே போகும்.
சிவாதாமஸ்அலி-
விமானத்துல பறக்கப் போறவருக்கு சங்கொலியா ? விளங்கிடும்.
ஆழமான விளக்கம் நண்பரே,
பதிலளிநீக்குத ம 2
வருக நண்பரே அடடே முதல் வருகை மிக்க நன்றி
நீக்குபேட்டி ஒருபக்கம் ரசனையாக இருந்தாலும் போய்ச் சேர்ந்த தீவிரவாதிகள் எல்லாம் இப்படி எழுந்து விட்டால் என்ன ஆகும்???..
பதிலளிநீக்குவாங்க ஜி நாடு அழியும் அதன் தொடக்கம்தானே... தற்போது உலகெங்கும்
நீக்குவேலை வந்து விட்டது.நாளைக்கு வருவேன்.
பதிலளிநீக்குநாளைக்கு வருவீங்களா ? ? ? வந்து என்ன சொல்லப் போறீங்களோ ?
நீக்கு(அவ்வ்வ்வ்வ்)
எனக்கும் சேர்த்து இந்த பதிவிற்கான கருத்தை இணைய போராளி திருமதி. நிஷா அவர்கள் ஒரு பதிவாக போட்டுவிடுவார்கள் ஹீஹீஹி
நீக்குவருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குஹாஹா@ இந்த மதுரைத்தமிழன் நம்மள புதுசா போராளி சூறாவளி என்கின்றாரே அப்படின்னால் என்னன்னு கொஞ்சம் தெளிவாச்சொல்லுங்களேன்பா சாமிகளா? மீ மேல ரெம்ப கண்ணு வைக்காதிங்க சார்.இவரு பிச்சிப்பிச்சி பத்து பதிவா போடுவதை நிஷா ஒரே பதிவா போடுறான்னு ரெம்ப பொறாமை அவ்வ்வ்வ்வ்
நீக்குஇந்த மாதம் முடிந்தால் நிஷா மீண்டும் வலைப்பூவுக்கு ஒ கோவிந்தா கோவிந்தா தான். யாரு சொன்னாலும் நீ சொல்வதை தெளிவா சொல்லீடு நிஷான்ன்ன்ன்ன்ன்னு என் காதில் சத்தம் கேட்பதால் நிஷாவின் பதிவுப்பின்னூட்டம் தொடரும்,
அருமையான கேள்வி பதில்கள். அழகிய மரணம், பலரின் வேண்டுகோள்களும் இதுவாகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது நீண்ட கால இடைவெளிப்பிறகு வருகை கண்டு மகிழ்ச்சி
நீக்குGood.
பதிலளிநீக்குமுனைவர் ஐயாவுக்கு நன்றி
நீக்குஅழகிய மரணம் அனைவரின் வேண்டுகோளாகவும் இருக்கும்! உச்ச நீதிமன்றம் ஒருநாள் தனது அறிக்கையில் "இந்த நாட்டிலுள்ள அத்தனை அரசியல்வாதிகளும் இன்றிரவு 12 மணியிலிருந்து அரசியல்வாதிகள் அல்ல" என்று அறிவித்து விட்டால் தீர்ந்தது பிரச்னை!
பதிலளிநீக்குவருக நண்பரே 12 மணிக்கா ? நமது அரசியல்வாதிகள் குடியரசு தலைவருக்கு நெருக்கடி கொடுத்து 11 மணிக்கே நீதி மன்றத்தையே கலைத்து விடுவார்களே...
நீக்குதாங்கள் சொல்வது காந்திஜி வழி
நான் சொல்வது நேதாஜி வழி
அன்பால் மாற்ற இப்பொழுது மனிதம் வாழவில்லை நண்பரே இயந்திரங்கள் நட'மாடு'கின்றன வருகைக்கு நன்றி
அழகிய மரணம்
பதிலளிநீக்குஅனைவரின் எதிர்பார்ப்பும் இதுதானே நண்பரே
தம +1
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றி
நீக்குகொசுவுக்கு திருமணம் செய்து.... ஹா.... ஹா....
பதிலளிநீக்குஆமாம் ஜி மூடநம்பிக்கையை மூடாவிட்டால் இனிமேல் இப்படியும் நடக்கும்.
நீக்குசீரழிவுக்கு, ஒட்டு மொத்த அரசியல்வாதிகள் மட்டுமே காரணமல்ல ,மக்களின் அறியாமையே காரணம் !தனி மனிதன் திருந்தாமல் நாட்டைத் திருத்த முடியாது என்பது இந்த நாத்திகவாதியின் கருத்து :)
பதிலளிநீக்குவாங்க ஜி இதில் நாத்திகவாதி மட்டுமல்ல ஆத்திகவாதிகளும் ஏற்ககூடிய கருத்தே.... நன்றி ஜி
நீக்குSindhikka vaikkum vina vidai. Thanks
பதிலளிநீக்குதிருமிகு. மிடில் க்ளாஸ் மாதவி அவர்களின் முதல் வரவுக்கு வந்தனம்
நீக்குகில்லர்ஜி.. உங்களிடமிருந்து எங்களின் "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதிக்கு ஒரு கதை எதிர் பார்க்கிறேன். என் மெயில் முகவரி sri.esi89@gmail.com
பதிலளிநீக்குஎன்னையும் கதை எழுதுபவராக மதித்து கேட்டமைக்கு நன்றி நண்பரே
நீக்குஅழகிய மரணம் எல்லோருக்கும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! எல்லோரும் விரும்புவது அதுவே.
பதிலளிநீக்குநல்ல கேள்வி, நல்ல பதில்.
வருக சகோ உண்மைதான் யார் விரும்பமாட்டாகள் வருகைக்கு நன்றி
நீக்குஅருமையான நேர்காணல். அந்த பதில்களில் தங்களின் கருத்தைக் கண்டேன். பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குவருக நண்பரே கேள்வி கேட்டவர் ரொம்பவே மோசம் குண்டக்க, மண்டக்க கேட்டுப்புட்டாரு.....
நீக்குஓகோ..சென்னை வந்தாச்சா...
பதிலளிநீக்குவருக முனைவரே இன்னும் இரண்டு தினங்களில்...
நீக்குதங்கள் வரவு நல்வரவாகட்டும்.
பதிலளிநீக்குஅன்பே சிவமாய் வரவேற்றமைக்கு நன்றி
நீக்குவாழ்க்கை முழுதும் நிம்மதியைத் தொலைத்தவர்கள், சாகும்போதேனும் அது கைகூட வேண்டும் என்று நினைப்பதில் தவறே இல்லை.
பதிலளிநீக்குநல்ல சிந்தனை.
வருக நண்பரே உண்மையே பலரும் வாழ்வில் நிம்மதி இழந்தவர்களாகத்தான் வாழ்கின்றனர்.
நீக்குஇறப்பு என்பது ஏதோ நானோ செகண்டில் நடை பெறுவது தான் இறக்கப் போகிறோம் என்பது அறியாமல் நிகழும் எல்லாமே அழகிய மரணம்தான். ஒருவன் இறப்பதால் பாதிப்பு இருப்பவருக்குத்தானே
பதிலளிநீக்குவருக ஐயா இறக்கப் போகின்றோம் என்பதை அறிந்து வாழ்பவர்கள் அபாக்கியசாலிகள்தான்.
நீக்குஎனக்கும்
பதிலளிநீக்குஅழாமல், அழுந்தாமல்
நொடியில முடிந்ததாக இருக்கக்கூடிய
அழகிய மரணம் தான் வேண்டும்!
வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குசாவு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாகவுல்ல இருக்கு...!!!!!!!!!
பதிலளிநீக்குஎல்லாம் விஞ்ஞான வளர்ச்சிதான் நண்பரே
நீக்குஏழை பால்டாயிலை வாங்கி குடிக்கிறான்
பணக்காரன் வைரத்தை நுணுக்கி குடிக்கிறான்
ரெண்டு பேருமே கீழே போயி பிறகு மேலே போறான் நண்பரே
அருமை அண்ணா...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅழுகிய மரணம் என படிச்சிட்டேன் சார். நாமல்லாம் மரணமான பின் அழுகித்தான் போகின்றோம் என இப்படி சிம்பாலிக்கா சொல்கின்றீர்களோ என கண்ணை நல்லா கசக்கி விட்டு படித்து பார்த்தேன்! அழகியே மரணமா. ஒருவேளை பார்த்திபனில் அழகி பட நாயகி தன மரணமோ என நினைத்து நுணுக்குக்காட்டியை காதில் மாட்டிகிட்டு படித்தேன், அது அழகிய மரணம்..! பல கலரில் கட்டமிட்டு ஜில் ஜில் நு தான் பதிந்து இருக்கிங்க! நல்ல கருத்தும் நியாயமான் கருத்தும் தான்.
பதிலளிநீக்குவாங்க இப்ப நானே அழகிய மரணமா ? அழுகிய மரணமா ? அழகியின் மரணமா ? அப்படினு குசம்பி ஸாரி குழும்பி.... குழம்பிட்டேன்.
நீக்குஅட அவரு தன் சொல் பேச்சு கேட்கும் அடிமையாய் படைக்காமல் சுயமாய் சிந்தித்து முடிவெடுக்கும் படி படைத்ததால் தான் கில்லர்ஜி சார் போல் அறிவு கூடி இப்படி கேள்வியெல்லாம் கேட்கும் நிலைக்கு ஆளாகி விட்டான்,
பதிலளிநீக்குபாவம் அவன், அன்னிக்கு இப்படியெல்லாம் கேள்வி கேட்பீர்கள் என தெரிந்திருந்தால் படைத்தே இருக்க மாட்டான். பாழாய்ப்போன கடவுளுக்கு இந்த நிஷாகிட்ட ஆலோசனை கேட்கணும் எனவும் தோணலை, கேட்டிருந்தால் இந்த மீசைக்கார அண்ணாவை நம்பாதே கடவுளே என புத்தி சொல்லி இருப்பேன், டூ லேட்...
ஆஹா இந்த விசயம் இப்பத்தானே தெளி'யுது.
நீக்கு
பதிலளிநீக்குபதிவின் மொத்த சாராம்சமே நன்மையை அனுமதித்த இறைவன் தீமையையும் ஏன் அனுமதித்தான்?
எங்கள் நம்பிக்கைப்படி தீமைகளை அனுபவிக்கும் படி கடவுள் மனிதனை படைக்கவில்லை. சுயமாக சிந்திக்கும் படி படைக்கப்பட்ட மனிதன் தன் சுயத்தினால் அனைத்தினையும் உருவாக்கிக்கொண்டான் . அதே போல்சிலருக்கு அவர் அனுமதியுடன் சோதனை கஷ்டம் வருவதும் உண்டு.
ஆல்ப்ஸ் தென்றல் நிஷாவை போல...
அவர் அப்படி சோதிக்க அனுமதிக்காமல் விட்டால் இன்றைக்கு உங்களுக்கு நிஷாவையும் யாரென தெரிந்திருக்காது. நிஷா கில்லாரிக்கு போட்டியா எலேக்சனில் நின்று ஜெயிச்சிருப்பேன். மதுரைத்தமிழனின் ஆத்து மாமிக்கு பூரிக்கட்டை பார்சலும் அனுப்பி இருப்பேன், அவரு ரெம்ப நல்லது செய்திருப்பதனால் தப்பிச்சிட்டார். அடுத்த ஜென்மத்தில் பார்த்துக்கலாம்,ஹாஹா.
ஏன் கடவுள் என்னை சோதித்தார் என இப்போது புரிகின்றதோ? இப்படித்தான் எல்லோரையும் சோதிக்கின்றார், ஆனால் அவர்கள் தொபூக்கடீர்னு கடவுளை திட்டுவதால் கை விட்டும் விடுகின்றார்.
சோதனையைச்சகிக்கிற மனிதன் பாக்கியவான், அவன் உத்தமனென்று விளங்கின பின்பு கர்த்தர் தம்மிடத்தில் கூறுகின்றவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கீவ கீரிடத்தைப்பெறுவான்.
நம்ம ஊரில் சொல்வார்கள்.ஒரு கெட்டது நடந்தால் நல்லதும் நடக்கும் என, அதே போல் கெட்டது நடந்தால் நல்லதுக்கு என எடுத்துக்கோ என ஆறுதல் சொல்வதெல்லாம் இதனால் தான்.
இதை இன்னும் தெளிவா சொல்லலாம் எனில் சிறு வயதில் கஷ்டப்படும் நாம் வளர்ந்த பின் ஓரளவுக்கு வசதியாக இருப்போம், நாம் கஷ்டப்படும் போது வசதியாய் செருக்காய் திரிந்தவர்கள் நம்மிடம் வந்து உதவி பெறும்படி தாழ்ந்திருப்பார்கள். இது தான் நான் சொன்ன சோதனையை சகிப்பவனுக்கான கீரிடம்,
தீவிரவாதிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகின்றார்கள், தீமையும் நாம் பிறக்கும் போதே நம்முடன் பிறப்பதில்லை, நம் செயல்களின் எதிர்வினையாய் பரிசளிக்கப்படுகின்றது.
நாம் நல்லதை விதைத்தால் நன்மையை மட்டும் தான் அறுப்போம், எத்தனை சோதனை வந்தாலும் முடிவில் ஜீவ கிரீடம் போல் தான் ஜொலிப்போம்,
அதற்கு சாட்சியாக நானே இருக்கின்றேன்ல. என் நேர்காணல் படித்த பின்னும் உங்களுக்கு இந்த கேள்வி,சந்தேகம் வரலாமோ சார்.
கடவுள் உயிரோடு இருக்கின்றார் சார். என்னில் உங்களில் நாம் பார்க்கும் அனைவரினுள்ளும் அவர் உறங்கிக்கொண்டே இருக்கின்றார். நாம் தான் தட்டி எழுப்பி நல்லதை மட்டும் கொடு என கேட்க வேண்டும். கேட்டால் இல்லை என சொல்ல அவர் என்ன நம்மைப்போல மனிதனா?
நான் இதை பதிவாக போட்டிருக்கலாம் ஒரு பதிவு தேறி இருக்கும், ஆனால் இந்த கடவுள் நேக்கு அந்த நல்ல புத்தியை தரவில்லையே!
கொடுத்த காசுக்கு காமெண்டை பெரிசாவே எழுதி அனுப்பிச்சிட்டேன்.அடுத்த தடவை இன்னும் பெரிய்ய்ய்ய பின்னூட்டம் தேவை எனில் இரண்டந்தனை கட்டணம் அறவிடப்ஆஊ.
அடேங்கப்பா.... இதை வெளியிடுவதற்காக எனக்குதான் நீங்க கட்டணம் செலுத்தணும் எனது ஸ்விஸ் அக்கவுண்ட நம்பர் அனுப்புறேன் போட்டு வைங்க...
நீக்குமிகவும் இரசித்துப் படித்தேன்
நீக்குவாழ்த்துக்களுடன்..
நன்றி ஐயா! கில்லர்ஜி சார் ஊருக்கு போவதால் வந்த மொத்தக்காசையும் என் பேரில் அனுப்பி இப்படி எழுதி தர சொன்னாரா.. நானும் எழுதிட்டேன்.
நீக்குஎனக்குள் நிரம்ப கடவ்ள் நம்பிக்கை உண்டு ஐயா.
அசத்தல் பேட்டி, வழக்கமான் பாணியில் சிந்தனைத் துளிகளைத் தூவியுள்ளீர்கள். அரசியல்வாதிகளை மட்டும் கூட்டிச் சென்றால் முறையாகாது, அவர்களுக்கு ஒத்து ஊதும் முதுகெலும்பில்லா மூடர்களையும் உடன் கூட்டிச் செல்ல வேண்டும். உங்களைப் போன்றவர்கள் மோடிக்கு அருகிலிருந்தால் இன்னும் பல சரிஜிக்கல் ஸ்ரைக் வரும் என எதிர்பார்க்கலாம் :)
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி என்னை மோ(ச)டியுடன் இணைக்காதீர்கள் எனக்கும் அவருக்கும் தூரம் அதிகம் மனதின் தரம்.
நீக்குநிறைய யோசிக்க வைத்தது
பதிலளிநீக்கு( மிகப் பெரும் பிரச்சனையை
மிகச் சாதாரணமாக தொட்டுச்
சென்றவிதம் ... )
வாழ்த்துக்களுடன்...
கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி
நீக்குஅருமையான கேள்விகள், அசத்தலான பதில்கள்!
பதிலளிநீக்குவருக சகோ வருகைக்கு நன்றி முடிந்தால் சார்ஜா வருகிறேன் நன்றி
நீக்குஆததிகர் நாத்திகர் அனைவருக்குமே உள்ள சந்தேகத்தின் வெளிப்பாடாக உள்ளது தங்களின் பதிவு. ஓஷோ அவர்களின் கூற்றுப்படி "பிறரின் சத்தியத்தை நம்புகிறவரை நாம் அடிமைப்பட்டுத்தான் கிடப்போம்". ஒரு தெளிவு பிறந்தால் நல்லதே. யாருங்க ஜி அது கடைசியில் 3 COMMENT கொடுத்திருக்கிறது? ஹா ஹா ஹா ஹா..... அருமை.
பதிலளிநீக்குநண்பர் திரு. சோமேஸ்வரன் அவர்களின் முதல் வருகையை அழகிய சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றேன். ஓஷோ அவர்களின் தத்துவம் என்றுமே அழகு
நீக்குஅந்த மும்மூர்த்திகளும் நமது சகலைதான் என்னை நக்கலடித்துக் கொண்டே வருகின்றார்கள் கொஞ்சம் கண்டித்து வைங்க நண்பா...
அழகிய மரணம் அனைவரின் எதிர்பார்ப்பும் கூட! உண்மையில் தீவிரவாதிகளின் செயலால் அப்பாவி மக்கள் கொல்லப்படுகையில் உங்களின் இந்த சந்தேகம் எனக்கும் வருவதுண்டு! :(
பதிலளிநீக்குவருக சகோ நலமா ? எனது சந்தேகமே இப்பதிவு வருகைக்கு நன்றி
நீக்குஅருமையான கேள்விகள்...பதில்களும் தான். நம் அனைவரது உள்ளத்திலும் கேட்கப்பட்டு, அதற்கு நாமே ஒரு விடை நமது அறிவிற்கு எட்டியபடி கூறிக் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டு என்று பல சமயங்களில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்.
பதிலளிநீக்குஏனென்றால் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அப்பாவிகளின் கொலைகள் அதுவும் டுமீல் டுமீல் என்று பச்சிளம் குழந்தைகளும்....பூமியில் பிறந்து இந்த உலகத்தைக் காண கண்ணைத் திறக்கும் முன்னரே கூட இறந்த குழந்தைகள் அதாவது தீவிரவாதிகளால் சுடப்பட்டு, உண்டு. உடனே நம் மக்கள் சொல்லுவார்கள்...ஒரு தத்துவம்....பரிகாரம் என்று. ...முதலில் 500, 1000 செல்லாது என்று சொல்லுவதற்கு பதில், நமது மூட நம்பிக்கைகள் செல்லாது என்று சட்டம் அறிவித்திருக்க வேண்டும்.
இதற்குக் கருத்து என்றால் பதிவு அளவிற்குனீண்டு விடும் அபாயம்..ஹிஹிஹி எனவே இங்கு இத்தோடு...ஸ்பா இன்னும் எத்தனைப் பதிவுகள் இருக்குப்பா...வாசிக்க
ஹும் இதுக்குத்தான் பள்ளிக் கூடத்துக்கு ஒரு நாள் கூட லீவு போடக் கூடாதுன்றது...
அழகிய மரணத்தை அழகாய் விவரித்தமைக்கு பாராட்டுகள்
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குதலைப்புதான் கண்ணைக் கவர்ந்தது. உங்கள் கேள்வி பதில்கள் யோசிக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குநாம் (இந்தியர்கள்), முன் ஜென்மம், பாவம் புண்ணியம் இவைகளை நம்பறோம். அப்படி நம்பலைனா, சிறு குழந்தைகள் இறப்பதையும், அப்பாவிகள் துர் மரணம் அடைவதையும், நல்லவர்கள் காலம் பூராவும் கஷ்டப்படுவதையும் அர்த்தத்தோட புரிந்துகொள்ளமுடியாது.
பொதுவா நான் நினைக்கறது. நம்ம மக்களுக்குத்தான் நல்ல புத்தி வரணும். அவங்களாலதான் மோசமான அரசியல்வாதிகள் உருவாகிறார்கள்.
வருக நண்பரே வருகை தந்து உணர்ந்து படித்து அழகிய கருத்துரை வழங்கியமைக்கு நன்றி
நீக்கு