இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், டிசம்பர் 22, 2016

மனிதம் காப்போம்



 நண்பர்களே... மேற்கண்ட செய்தியை படித்தீர்களா ? நெஞ்சு வெடிப்பது போல் இருக்குமே... இந்த பாவத்துக்கு அரசியல்வாதிகளே காரணம் என்று சொல்லி விடமுடியாது அவர்களை தேர்ந்தெடுத்த நாமே குற்றவாளி.

  என்றுமே குற்றம் செய்தவனைவிட அதை செய்யத் தூண்டியவனே முதல் குற்றவாளி இல்லையா ? ஆகவே இந்தப் பாவத்துக்கு நாமும் காரணவாதிகள் என்னைப் பொருத்தவரை இவர்களை கருணைக் கொலை செய்வதே நல்லது என்பேன் காரணம் மறுபிறவி உண்டு என்ற நம்பிக்கை பரவலாக இருக்கின்றது ஆகவே மறுபிறவி எடுத்தாவது இவர்கள் நல்ல வாழ்க்கை வாழட்டுமே.... இந்த இழிவாழ்க்கை எதற்கு ? அதாவது நான் சொல்வது இந்தியாவுக்கு மட்டுமே... ஏர்வாடியில் மனநல காப்பகத்தில் தீப்பிடித்து எத்தனை நோயாளிகள் கட்டிப்போட்ட காரணத்தால் உயிர் இழந்தார்கள் U.A.E நாட்டில் எவ்வளவு முரடான மனநல நோயாளியாக இருந்தாலும் கட்டிப்போடுவதில்லை அங்குள்ளவர்களுக்கு நோயாளி எந்த நாட்டுக்காரராயினும்.... நல்ல உணவு, மாத்திரை, குளித்து உடைமாற்ற செவிலியர்கள், படுத்து உறங்க கட்டில் மெத்தை வாரம் ஒருமுறை மருத்துவர் பரிசோதனை மாதம் ஒருமுறை முடி வெட்டுதல், உழைப்பவனுக்கு கிடைக்காத வசதிகள்கூட இவர்களுக்கு கிடைக்கின்றது அதிலும் இவர்களில் விஐபி மட்டுமல்ல விவிஐபி நோயாளிகளும் உண்டு அவர்களது கவனிப்புகள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை இவர்களைக்குறித்து விரிவாக பல சுவையான நிகழ்வுகள் மட்டுமல்ல அதிசயமான நிகழ்வுகளும் உண்டு விரைவில் எழுதுகிறேன் காரணம் நானும் அங்கு இருந்தவனே நட்பூக்களே அவசரப்பட்டு தவறாக நினைத்து விடாதீர்கள் U.A.E-யில் ஆரம்ப காலத்தில் சுமார் மூன்று வருடங்கள் நான் அங்கு வேலை செய்தேன் என்பதே... நான் அரபு மொழி பேச பயின்றதும் இங்குதான் இவர்களிடம்தான் சுலபமாக மொழி கற்க, ஐயங்கள் தீர்த்துக் கொள்ளமுடியும் காரணம் பேச்சுக்கு இவர்களிடம் எல்கை இல்லை என்பதும் எமது கருத்து.

  உலகிலேயே சந்தோஷமானவர்கள் குழந்தையும், மனநலம் குன்றியவர்கள் மட்டுமே என்ற சொல்வழக்கு நம்மில் உண்டு ஆனால் இதில் இந்திய மனநல நோயாளிகளை சேர்க்க முடியாது என்பது எமது ஆணித்தரமான கருத்து அவர்கள் படும்பாட்டை வீதிகளில் நாம் பார்த்துக்கொண்டுதான் வாழ்கிறோம் இதில் பலரும் அரை நிர்வாணமாக நடந்து கொண்டுதான் திரிகின்றார்கள் இது நம்மில் பலருக்கும் சங்கடத்தை உண்டு செய்யத்தான் செய்கின்றது இதை மட்டுமா ? நாம் கடந்து செல்கின்றோம் ஆறறிவு (?) உள்ள மனிதனே பொது இடத்தில் அருவெறுப்பான ஆபாச வார்த்தைகளை பேசுகின்றான், பலரும் காணும் பொழுது பொது இடத்தில், பேருந்து நிலையங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கின்றனர் அதைக்கூட நம்மால் மனித நாகரீகப்படியோ.. இல்லை சட்டப்படியோ தட்டிக்கேட்க முடியாத சூழலில்தான் வாழ்கின்றோம், காரணம் நாம் நடுத்தர வர்க்கம். கீழ்மட்டத்தினருக்கு இது பெரிய விடயமே இல்லை, அரசியல்வாதியோ, திரைப்பட நடிகரோ கருப்புக் கண்ணாடியை ஏற்றிவிட்டு ஏசி காருக்குள் கடந்து செல்கின்றார்கள் அவர்களுக்கு தெரியவும், கேட்கவும் வாய்ப்பில்லை.  பசிக்காக கடைகளோரம் வந்து நிற்ககும் இவர்கள்மீது சுடுநீரை வீசி, விரட்டுபவர்களும் உண்டு அந்த நேரங்களில் நான் கடையில் எட்டிப்பார்ப்பேன் வரிசையாக தெய்வங்களை புகைப்படங்களாக நிறுத்தி வைத்து பூமாலை சூட்டி இருப்பார்கள் இறைவனை வணங்கும் இறை நம்பிக்கையற்ற, அரை நம்பிக்கை மனிதர்கள். நான் உண்மையிலேயே நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தி இருக்கின்றேன். இவர்களை அரசும் நினைத்துப் பார்ப்பதில்லை மேலும் மனநலம் குன்றியவர்களை சிறுவர்கள் கல்லை எடுத்து எறிகின்றார்கள் இதை நமக்கு சொல்லிக் கொடுத்தது நமது முன்னோர்கள்தானே... என்னைப் பொருத்தவரை உலகிலேயே மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா ? மனநலம் குன்றியவர்களை துன்புறுத்துவதுதான். கற்பழிப்பு குற்றத்தைக்கூட அடுத்த நிலைக்கு கொண்டு செல்லலாம் காரணம் அவளால் காமுகனை எதிர்க்கும், தடுக்கும் சிந்தனையும், பலமும் உண்டு இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இதையே நான் ஏற்கனவே எனது நூலிலும் வலியுருத்தி எழுதியிருக்கின்றேன்.

  நான் பல நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு நமக்கு மட்டும் அதிகார பலம் இருந்தால் முதல் வேலையாக இவர்களை பராமரிப்பதுதான் காரணம் நல்ல மனிதன் தனக்கு வேண்டியவைகளை தானே தேடிக்கொள்வான், அல்லது பிறரிடம் கேட்டு வாங்கிக்கொள்வான். போதாக்குறைக்கு அரசியல்வாதிகள், மக்களிடம் சிறிய பணத்தை லஞ்சமாக கொடுத்து ஓட்டு வாங்கி பெரிய அளவில் கோடீஸ்வரர் ஆவது போலவே அதே பாணியில் இவனும் கோயில் உண்டியலில் 10 ரூபாய் லஞ்சம் போட்டு விட்டு இறைவனிடம் என்னை கோடீஸ்வரன் ஆக்கு என்ற கோரிக்கையை வைக்கிறான் ஆனால் இவர்கள் யாரிடம் என்ன கேட்க முடியும் ? ஆகவே மனநலம் பாதித்தவர்களை கண்டால் அவர்களுக்கு உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை அவர்களை இழிவாக பார்க்காதீர்கள், இழிவாக நினைக்காதீர்கள் கண்டிப்பாக துன்புறுத்தாதீர்கள் இதைப்படிக்கும் யாராவது இதன் பிறகு யாரையாவது காண நேரிட்டால் எனது நினைவு தங்களுக்கு வரவேண்டும் அந்த நினைவுகள் அவர்களுக்கு உதவி செய்ய உதவும் என்று ஆத்மார்த்தமாக நம்புகின்றேன்.


மனிதனாக பிறந்தோம்...
புனிதனாக வேண்டாம்...
மனிதனாகவே வாழ்வோமே...
தேவகோட்டை கில்லர்ஜி

37 கருத்துகள்:

  1. மனித நேயத்துடன் கூடிய பதிவு..

    மனிதம் மலரட்டும்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. அருமையான கருத்துகளை
    அள்ளித் தெளித்துள்ளீர்கள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். என் சகோதரி மகனும் குழந்தைப்பருவத்திலிருந்து ம்னநலம் பாதிக்கப்பட்டவர்தான். [ இப்போது வயது 40] அவரிடம் நாங்கள் எல்லோருமே பிரியமாக பேசுவோம். மனசில் ஒன்று வெளியில் ஒன்று என்று பேசத்தெரியாத அவர் பேசும் பேச்சு மனதை எப்போதுமே கனமாக்கும்.

    பதிலளிநீக்கு
  4. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவன்கூட எட்டு கோடியே பத்து லட்சம் பேரில் அடங்குவான்தானே:)

    பதிலளிநீக்கு
  5. மனித நேயமிக்கப் பதிவு நண்பரே
    தன் வீட்டில் தங்களுக்குப் பிறந்தவர்களை மன நலம் குன்றியவர்கள் என்று அறிந்ததும் வீதியில் விடுகிறார்களே
    இவர்களை என்னென்று சொல்வது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நண்பரே நானும் கண்டு மனம் கனத்து இருக்கின்றேன்

      நீக்கு
  6. மனம் கசிய வைக்கும் பதிவு. எனக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் அவர்களுக்குப் பின் பார்த்துக்கொள்ள யார் இருக்கிறார்கள் என்னும் கவலையில் .......

    வேதனைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நண்பரே பல இடங்களிலும் இப்படி நிலை உண்டு

      நீக்கு
  7. அருமையான் விபரங்கள்....மனிதனாக வாழ்வோம்...

    பதிலளிநீக்கு
  8. மனம் தொட்ட பதிவு. மனிதம் மலரட்டும்....

    பதிலளிநீக்கு
  9. நல்ல பதிவு.
    நீங்கள் நன்றாக சொன்னீர்கள்.இவர்களை போன்றவர்களைப் பார்க்கும் போது மனம் கனத்து போகும். ஆதரவில்லாமல் இருப்பவர்களை சமூகம் அவர்களை படுத்தும் பாட்டை பார்க்கும் போது கோபம் வரும்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பார்வையில் நடக்கும் நிகழ்வுகளுக்கெல்லாம் அரசியல் வாதிகளே காரணமாகின்றனர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை இருப்பினும் மூல காரணம் நாம்தானே ஐயா

      நீக்கு
  11. மனதை நெகிழ வைக்கும் பதிவு நன்று

    பதிலளிநீக்கு
  12. மன நோயாளிகளை பைத்தியம் என்று சொல்வது இப்போது குறைந்திருக்கிறது. ஆனால் பரிவோடு பார்க்கும் நிலை இன்னும் வரவில்லை. காலம் மாறும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  13. மன நோயாளிகளில் பல ரகங்கள் உண்டு. முழுவதுமே பாதிப்படைந்தவர்களிலிருந்து குறைவான அளவு மனநலம் குன்றியவர்கள் வரை உண்டு. அதிலும் பல வேறுபாடுகள் உண்டு. முந்தைய காலகட்டம் போல் இல்லாமல் அதனைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும், இன்னும் அவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும், நடத்துவதும் இருக்கத்தான் செய்கிறது. மனநலம் முழுவதும் இழக்காமல், மருத்துவ கவனிப்பில் இருந்து தொழில் செய்து வந்தாலும் கூட அவர்களுக்கும் பல சமயங்களில் மதிப்பு கிடைப்பதில்லைதான்...

    குடும்பங்களிலேயே பரிவும், புரிதலும் இல்லாதபோது சமூகத்தில் எப்படி எதிர்பார்க்க முடியும் சொல்லுங்கள் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அழகாக சொன்னீகள் குடும்பத்திலேயே இல்லாத போது....

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    மனித நேயம் மிக்க அருமையான பதிவு. அழகாக மனதை நெகிழ செய்யும்படி சொல்லியிருக்கிறீர்கள். இவர்களை காணும் போது மனம் கனத்து விடுவது உண்மை.மனித நேயங்கள் மலர வேண்டுமென நானும் பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. ஹூம், மனிதம் என்பது இன்னமும் கொஞ்சமானும் மிச்சம் இருக்கானு யோசிக்க வைத்த பதிவு. :(

    பதிலளிநீக்கு
  16. ரொம்பவும் பிடித்த மனதைத் தொட்ட பதிவு. நம்ம ஊருல சக மனுசங்களையே போலீஸும் அதிகார வர்க்கமும் மனுசப் பயலாப் பார்க்கறதில்லையே.. மத்தியக் கிழக்கு நாடுகளில் காவல் துறை எப்படி உண்மையாகவே மக்கள் நண்பனாக இருக்கிறது என்பதை எழுதுங்கள். இங்கு குற்றவாளிகளுக்கும் சித்திரவதைகள் கிடையாது என்பதும் எல்லோருக்கும் தெரியட்டும். அராபியர்கள் பொதுவாக, எப்படி பெண்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள் என்பதையும் எழுதுங்கள். உங்கள் அனுபவத்தையும் (மன'நலக் காப்பகத்தில் பார்த்த) எழுதுங்கள். அப்போதுதான், 'சாமியைக் கும்பிடுவது மட்டும் முக்கியமல்ல, சக மனிதர்களிடம் அன்பு பாராட்டுவதும் முக்கியம்' என்பது தெரியும். (இதைக் கடைபிடிப்பது கடினம்தான்.. ஆனாலும் முயற்சிப்பதில் தவறில்லையே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவாக எழுதி இருக்கிறீர்கள் நிச்சயம் எழுதுவேன்
      தற்பொழுது கணினியில் இணையம்நன்ன்றி

      வருகை தந்து அனைத்துக்கும் கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
    2. இணையம் இல்லை என்று படிக்கவும்

      நீக்கு