இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், டிசம்பர் 26, 2016

வாழ்க்கை ஒரு முறையே...

எல்லா மனிதர்களுக்குமே விரிவான சிந்தனை உணர்வுகள் இருப்பதில்லை இது அனைவரும் அறிந்த விடயமே.. சிலர் 1000 வருடங்கள் வாழப்போவது போல நினைத்துப் பேசுகின்றனர் குறிப்பாக அரசியல்வாதிகள்.

சிலர் மனைவியை அடிப்பதும், எட்டி உதைப்பதுமாக இருப்பதை பார்த்து இருப்பீர்கள் இவர்கள் தனது மனதில் நம்மை யாருமே ஒன்றும் செய்ய முடியாது என்ற மடத்தனமான கர்வம் உள்ளவர்கள் நாளையே ஏதோவொரு வகையில் விபத்து நடக்கலாம் நமது கை, கால், மற்ற இதர உறுப்புகளை இழக்கலாம் ஏன் ? ஏதோவொரு வியாதி வந்துகூட கோமா நிலைக்கு ஆளாகலாம் இதுதான் வாழ்க்கையின் சூட்சுமம் இதை உணர்ந்து பார்க்காதவர்கள் நிறையப்பேர் இந்த சமூகத்தில் உண்டு அவர்களைப் போன்றவர்கள்தான் நான் மேலே சொன்ன மனைவியை அடிப்பவர்கள் நாளை நாம் திடீரென விழுந்து விட்டால் நாம் நினைவிழந்து பிறந்த மேனியாய் கிடந்தாலும் நம்மை பார்க்க வேண்டியவர்கள், பார்க்க கூடியவர்கள் மனைவியைத் தவிர இவ்வுலகில் வேறு யாருமில்லை இது கணவன் மனைவியைப் பார்ப்பதற்கும் பொருந்தும் நான் எனது மனைவிக்கு 90 வது வயதில் செய்ய வேண்டியதை அவளது 30 வது வயதில் கொஞ்சமும் முகம் சுழிக்காமல் அனைத்தும் செய்து முடித்து விட்டேன் இதற்கு சாட்சி மூன்று நபர்கள் உண்டு அதில் தற்போது இருவரே உண்டு மேலும், என் மனசாட்சி, இறைவன் இருப்பின் அவனும் சாட்சியே... இருப்பினும் இதை பின்னாளில் மறந்து பேசி என் மனதை காயப்படுத்திய மனிதர்களை எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது பொதுவாக நான் எதையும் மறப்பவன் அல்ல !

சிலருக்கு சிலரை பிடித்து விடும் அதற்கு காரணம் சொல்லத் தெரியாது சிலரை பிடிக்காமல் போய் விடும் இதற்கு காரணம் சொல்ல முடியாது தன்னை படாதபாடு படுத்திய கணவன் வயதான காலத்தில் விழுந்தவுடன் பழி வாங்கும் நோக்கில்லாமல் முழுமனதுடன் பணிவிடை செய்த மனைவியர்களை நான் பார்த்து இருக்கின்றேன் அப்பொழுது அந்த கணவர்களின் மனம் எவ்வளவு வெட்கப்பட்டு இருக்கும் இதுதான் அந்த கணவர்களுக்கு மனைவியர் கொடுக்கும் தண்டனை அன்றைய காலங்களில் குடிகாரர்கள் குறைவு, நல்ல எண்ணங்களுடன் வளர்க்கப்பட்ட பெண்டிரும் அதிகம் இன்று குடிகாரர்கள் அதிகம் நீ அடிப்பதற்கு கையை ஓங்கினாலே கராத்தே அடி கொடுத்து உனது கையை ஒடிக்கும் பெண்டிர் இன்று அதிகமாகி விட்டனர் வாழும் காலம் கொஞ்சமே அதிலும் வாழவேண்டிய அந்த கட்டம் மிகவும் கொஞ்சமே அதை கவனமாக கையாளுங்கள் போகும் தூரமோ திரும்பாதது முடிவு அறியாதது இறப்புக்கு பின் நம்நிலை யாரறிவார் ? 

கணவனோ, மனைவியோ எதைக் கொடுக்கின்றீர்களோ அதுவே தங்களுக்கு திரும்ப கிடைக்கும் அன்பைக் கொடுங்கள் அன்பைப் பெறுங்கள் நண்பா இதை உமக்கு சொல்ல எமக்கு தகுதி உண்டு காரணம் நான் இழந்து இழந்தவன் மட்டும் அல்ல ! இருந்தும் இழந்தவனும்கூட... எமது அனுபவம் எம்மை எதிரியாக நினைப்பவருக்கும்கூட வரவேண்டாம்.

வாழ்க்கை ஒருமுறையே அதை வாழ்ந்து பெறுவீர் முறையே...
- தேவகோட்டை கில்லர்ஜி -

51 கருத்துகள்:

  1. அற்புதமான பதிவு
    இன்றைய நிலையில் அவசியமான
    பதிவும் கூட
    மனம் திறந்த மனம் திறக்கும்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மனதைத் தொடும் பதிவு. கெட்ட கணவர்கள் இருக்கலாம்; கெட்ட மனைவிகள் குறைவே. - இராய செல்லப்பா (நியு ஜெர்சியில் இருந்து).

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான். முறையாகப் பெறுவோம்.

    பதிலளிநீக்கு
  4. முகத்தை வருடுவதும் காற்றுதான் .. அது தென்றல்..
    முதுகெலும்பை முறிப்பதும் காற்றுதான்.. அது புயல்!..

    இரண்டுமே அன்புக்குப் பொருந்தும் -
    இருந்தாலும் பெண்மைக்கு மிகவும் பொருந்தும்!..

    மகத்தான பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி அழகிய கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  5. அபுதாபியிலிருந்து திரும்பிய பின் - தத்துவ மழைதான்!..

    அருளானந்தா ஆஸ்ரமம்!.. - என்று ஆரம்பிக்க உத்தேசமா!?....

    பதிலளிநீக்கு
  6. மனம் தொட்டப் பதிவு நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. உங்களின் அனுபவம் - அனைவருக்கும் பாடம் ஜி...

    பதிலளிநீக்கு
  8. புரிந்து வாழ்ந்தால் கோடி நன்மை.

    பதிலளிநீக்கு
  9. தத்துவங்களின் தேரோட்டம் உங்கள் பதிவு. வாழ்க்கை எனும் ஓடம்; வழங்குகின்ற பாடம்; மானிடரின் மனதினிலே மறக்கவொன்னா வேதம்.

    பதிலளிநீக்கு
  10. காரணம் தெரியா பிடித்தம் ,,
    வெறுத்தல்,,
    சகோ அருமையான பதிவு,, பார்த்தீர்களா,, நம் மண் எவ்வளவு தத்துவங்களை வழங்குகிறது,,,
    தொடருங்கள்,,

    பதிலளிநீக்கு
  11. அன்பைக் கொடுத்து அன்பை பெறவேண்டும் என்பது உண்மை ஜி நன்றாக சொன்னீர்கள்.நல்ல துணையை கைநழவவிட்டபின் வருத்தபடுவதுமட்டுமே மிச்சம். இதை உணர்ந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே ! எங்களை போன்ற பெரியவர்கள் வருந்துவது மட்டுமே செய்யமுடியும் செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி சகோ

      நீக்கு
  12. நல்லதொரு மனைவி ,நல்ல பிள்ளை அமைந்தவர் வாழ்வில் இன்பம் தொல்லை :)

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா12/26/2016 6:02 PM

    வரவேற்கும் கருத்தகள் சகோதரா.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    நல்ல சிந்தனையுடன் கூடிய பதிவு. கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்பு செலுத்தி விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்,அங்கு பிரச்சனை என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் வாழ்க்கை சுகமான வாசம் வீசும் பூங்காவனமாக மாறி விடுமே. நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி சகோ

      நீக்கு
  15. வாழ்க்கை ஒரு முறையே...

    சிறப்பான பகிர்வு கில்லர்ஜி!. இது புரியாமல் தான் பலரும் இருக்கிறார்கள் என்பது தான் சோகம்.

    பதிலளிநீக்கு
  16. வாழும் அந்த ஒரு முறை வாழ்க்கையிலே.. எத்தன பேரு குடிய கெடுத்து...என்னவிதமான ஆட்டம்... எனக்கு இறந்து போன முதல்வர்ர்ருதான் நினைவுக்கு வருகிறது.......

    பதிலளிநீக்கு
  17. பதிவுமனதை தொட்டது.. பதிவின் இறுதியில் தந்துள்ளவை முத்தாய்ப்பான வரிகள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  18. உங்கள் எழுத்துக்களைப் படிக்கும்போது உங்கள் சிந்தனையின் போக்கு ஏதோ ஏமாற்றத்தின் விளைவோ என்று நினைக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் உண்மை எனலாம் ஐயா
      நான் வெளி நபர்களை ஏமாற்றியதும் இல்லை, ஏமாந்ததும் இல்லை ஆனால் குடும்பத்திற்குள் சதிக்கப்பட்டுக் கொண்டேன் வந்து இருக்கின்றேன்.

      சூரிய நமஸ்காரம் தேடுகின்றேன் ஆனால் விழிகளை இழந்து விட்டேன்.

      நீக்கு
  19. ஒளிவு மறைவில்லாத வெள்ளை உள்ளம் உங்களுக்கு. நல்லதே நடக்கும்.

    பதிலளிநீக்கு
  20. வாழ்க்கை அதன் பாதையில் நகரட்டும் அண்ணா....
    தூற்றுவாரை எல்லாம் அதன் படிக்கல்லாக ஆக்கி பயணியுங்கள்...
    வருத்தம் விடுங்கள்... வாழ்க்கை வாழ்ந்து பார்க்கத்தான்...
    அதன் போக்கில் பயணியுங்கள் வாழ்க்கை வசப்படும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்றுமே போராளிதான் ஆனால் முதுகில் குத்துபவரை அடையாளம் காண அறியேன்.

      நீக்கு
  21. நல்லதொரு மனைவி ஒரு வரப் பிரசாதம். எல்லோருக்கும் இது அமைவதில்லை! :(

    பதிலளிநீக்கு
  22. ஆமாம், பரிவை அவர்கள் சொல்வது போல் ஆழமான உள்மனக்காயம் உள்ளது. விரைவில் அது சரியாகப்பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  23. தங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  24. என் மனதைத் தொட்ட பதிவு. நல்லா எழுதியிருக்கீங்க. அதுவும் உண்மையை உரத்துச் சொல்லியிருக்கீங்க. ஒருவருக்கு மற்றவர் துணைபோல் வேறு எதுவும் வராது.

    உங்களுடைய அனுபவத்தையும் கனத்த இதயத்தோடுதான் வாசித்தேன். பிறருக்குச் செய்வது தனக்குச் செய்துகொள்ளும் உதவி, சேமிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் கருத்துரை என் மனதையும் கனக்க வைத்து விட்டது.

      நீக்கு
  25. மிக மிக அருமையான பதிவு சகோதரா!

    பதிலளிநீக்கு