இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 20, 2017

கும்ப மரியாதை


Nita Ambani Abhishek Bachchan visit Kamakhya Temple in Guwahati
God bless you - Killergee

அந்த ஊருல ஒரு ரிக்ஷாக்காரர் பெயர் தர்மராஜன் நியாயமானவர், நேர்மையானவர், சவாரி வருபவர்களிடம் கூடுதலாக பணம் கேட்க மாட்டார், கொடுத்தாலும் வாங்க மாட்டார் ஒருமுறை ரிக்ஷாவில் தவற விட்ட பணம் ஒரு லட்சத்தை எடுத்துக் கொண்டு போய் தவற விட்டவர்கள் வீட்டில் பணத்தை தேடிக்கொண்டு போய் கொடுத்து வந்தவர் பொய் பேசமாட்டார் இறைபக்தி உள்ளவர் அவரைப் போலவே அவருடைய தர்மபத்தினியும் அடுத்த பெண்களைப் போல பொறணி பேசும் பழக்கம்கூட இல்லாதவர் வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் பூ கட்டி கடைகளுக்கு கொடுத்து விடுவார் அதையும் கணவரே கொண்டு போய் கொடுக்க வேண்டும் அவசியமில்லாமல் பிற ஆண்களிடம் பேசமாட்டார் பழக மாட்டார் தனது ஒரே பெண்ணையும் அவரைப் போலவே கௌரவமாக வளர்த்து எட்டாவது வரை படிக்க வைத்து கட்டிக் கொடுத்து விட்டார்கள் அந்த மகளும் கணவனுடனும் மகனுடனும் நல்ல விதமாக வாழ்கின்றார் இவர்களின் சரித்திரம் சிறுவயது முதலே முகுந்தனுக்கு தெரியும் வித்தியாசமானவன் அவனுக்கு வெகு நாட்களாக தர்மராஜனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது என்ன செய்யலாம் ? பணஉதவி செய்தாலும் வாங்க மாட்டார்.

ஊரில் பிரசித்தி பெற்ற தேவையறிந்த தேவதையம்மன் கோயில் இருக்கின்றது அதன் பூசாரி முகுந்தனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் அவரிடம் பணம் தருகிறேன் எனக்கு வேண்டியவரை அழைத்து வருகிறேன் கோயிலில் செய்யும் கும்ப மரியாதை செய்ய வேண்டும் என்றான் 2000 ரூபாய் பேசி 500 ரூபாய் அடிவான்ஸும் கொடுத்து விட்டான் வழக்கம்போல அம்மனுக்கு ஊஞ்சல்கட்டி திருவிழா வந்தது அந்த விழாவின் மண்டகப்படியன்று செய்யலாம் என்று பூசாரி சொல்ல அவனும் சம்மதித்தான். 

திருவிழா தொடங்கியது அவன் தர்மராஜன் அண்ணிடம் மண்டகப்படியன்று என்னுடன் வரவேண்டுமென்று ஏற்கனவே சொல்லி இருந்தான் அதேபோல சரியான நேரத்திற்கு கோயிலுக்கு போனார்கள் பூசாரி அவனை பார்த்தவர் சுற்றும் முற்றும் பார்த்தார் நீ சொன்ன ஆள் எங்கே ? இதோ தர்மராஜன் அண்ணனைக் காண்பித்தான் அதெல்லாம் முடியாது ஏன் ? இவன் ரிக்ஷாக்காரன் அதனாலென்ன ? எல்லோரும் மனுசன்தானே அதிலும் இவர் நல்லமனுசன் இது எல்லோருக்கும் தெரியுமே... இவருக்கு செய்தால் என்ன ? சில செல்வம் கொழித்த பெரிய மனிதர்கள் அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்றார்கள் அவன் சட்டென்று கீழே இருக்கும் புகைப்படத்தை காட்டி இவனுக்கெல்லாம் செய்யும் போது இவருக்கு செய்தால் என்ன ? அப்படினு கேட்டுப் பார்த்தான் யாரும் மசியவில்லை அப்புறமா ஒரேயொரு சின்னோண்டு கேள்விதாங்க கேட்டான் அதுக்கு எங்க தலைவனையும், தலைவியையும் எப்படிடா சொல்லுவே அப்படின்னு100 பேர் திரண்டுக்கிட்டு அவனை அடிக்க வந்துட்டாங்கே அவங்கிட்ட ஒரேயொரு கோடரி இருந்துச்சு அதைவச்சு அப்படி இப்படின்னு சமாளிச்சுட்டு தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடியாந்துட்டான் மறுநாள் விசாரித்தால்... பாவம் தர்மராஜன் அண்ணனுக்கு தர்மஅடி கொடுத்தாங்களாம் அந்தக் கேள்வி இதுதாங்க...

முடிசவித்த சிறுக்கிய கட்டிய மொள்ளமாறிப்பயலுக்கு மரியாதை கொடுக்கும் பொழுது உத்தமியை கட்டின தர்மராஜன் அண்ணனுக்கு கொடுத்தால் என்ன ? அப்படின்னு கேட்ருக்கான் அப்பாவி முகுந்தன் அதற்குத்தான் பாவம் அவனை அடிக்க விரட்டி இருக்காங்கே.... 100 பேரும்...

சிவாதாமஸ்அலி-
கேள்வி நியாயமாகத்தான் ஆனால் அம்மணத்தான் ஊருல கோவணம் கட்டியவனை விரட்டித்தான் அடிப்பாங்கே...
Chivas Regal சிவசம்போ-
நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்.
சாம்பசிவம்-
சிரங்கு சொறியிற விரலும், மீசை முறுக்குற விரலும் சும்மா இருந்தால் நகச்சுத்தி வருமாம்.

28 கருத்துகள்:

  1. யாரைக் குறித்து என்று தெரியவில்லையே... யாராவது ஒருவர் இருந்தால் அவர் என்று யூகிக்கலாம்.. இவ்வளவு பேர்களில் எவர் என்று தெரியவில்லை!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மேலே புகைப்படத்தில் காணவும்

      நீக்கு
  2. அம்மணத்தான் ஊரில் கோவணம் மட்டுமல்ல
    அரைஞாண் கயிறு வாங்க வேண்டும் என்று எண்ணுவதே பாவம்தான்
    தம +1

    பதிலளிநீக்கு
  3. காசுக்கு ---த்தின்கிற இடத்தில் போய் பூரண கும்ப மரியாதையை எதிர்பார்க்கலாமா :)

    பதிலளிநீக்கு
  4. நல்ல கேள்வி தான். பதில் சொல்லத் தான் ஆள் இல்லை! :(

    பதிலளிநீக்கு
  5. கில்லர்ஜி 90% உலகமே இப்படித்தான் இருக்குது! யாரைத் தேடுவது! படத்துல உள்ளவர் மட்டுமா என்ன ஜி!!???

    பதிலளிநீக்கு
  6. அநியாயம் சாயம் பூசிக் கொண்டு ஆடுது.. நீல நரி மாதிரி ஒரு நாளைக்கு நியாயம் கிடைக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயம் நம்மில்தான் இருக்கின்றது ஜி

      நீக்கு
  7. வணக்கம்
    ஜி
    காசிஇருந்தால் எல்லாம் செய்யலாம் இன்றைய சமூகம் இதில்தான் வாழ்கிறது...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. இங்கே காசு மட்டுமே முக்கியம்... :(

    பதிலளிநீக்கு
  9. கும்ப மரியாதையா
    நல்ல எண்ணங்களை வெளிக்கொணர்ந்த பதிவு

    பதிலளிநீக்கு
  10. நடைமுறை வாழ்வை வெகு நயமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ‘சிவதாமஸ்அலி’...புதுமையான பெயர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே இவர் வெகுகாலமாக இருக்கின்றாரே...

      நீக்கு
  11. உண்மையை சொன்னால்.பொறுக்கிகளுக்கு கோபம் வரத்தானே செய்யும் தலைவரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தெரியாமல்தான் சிலர் உளறி விடுகின்றனர் நண்பரே

      நீக்கு