இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 23, 2017

நேர்------மை


நாம் செய்யும் தொழிலில் நேர்----மையானவர்கள்.

இந்தத் தவறுக்கு யார் காரணம் வெள்ளை அடித்துக் கொண்டு போன தொழிலாளியா ? அல்லது இவரது மேஸ்திரியா ? அல்லது இவருக்கும் மேலேயுள்ள மேலதிகாரியா ? இல்லை இவர்களுக்கு சாலை போட அனுமதி கொடுத்த நிறுவனமா ? அல்லது இந்த ஊரின் நகராட்சித் தலைவரா ? அல்லது இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரா ? யார் காரணம் ?
ஒரு சிறியபணி அந்தக் கட்டையைத் தூக்கி போட்டு விட்டு செய்திருக்கலாம் பிற நாட்டார் இதைப் பார்த்தால் ? என்ன நினைப்பார்கள் நம்மைப்பற்றி ?  
தொழில் பக்தி என்பது யாருக்குமே கிடையாது.
செய்யும் தொழிலே தெய்வம் அதன் திறமைதான் நமது செல்வம்.
என்று படிப்பதை எல்லாம் நாம், பள்ளியின் வாசலிலேயே களைந்து விடுகிறோம். இந்த வகையான தவறுகளை நாம் தடுக்க முடியும்.
 யார் ?
யார் மக்கள்தான்.
ஆனால் முடியவில்லையே, அந்த தொழிலாளியை சாதாரண மக்கள் கேட்டால் என்ன நடக்கும் ? அவர் அந்த மேஸ்திரியிடம் சொல்லி அவர் அவரின் மேலிடத்தில் சொல்லி கடைசியில் எங்கு போகும் ?
POLICE STATION
அங்கு போனால் என்ன ஆகும் ?
கேட்ட சாதாரண ஆளை நொங்கு எடுப்பார்கள்.
நொங்கு உபயம் : தொகுதி M.L.A

நான்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ‘’ஐந்தாம்படை’’ ஆறுமுகம் என்ற ஏழுமலை.

42 கருத்துகள்:

  1. தங்கள் ஊசிக் கண்ணால
    தெருவோரப் பணியாளர்களின் தவறை
    சுட்டிக் காட்டிய நேர்மைக்கு
    எனது பாராட்டுகள்!
    இதெல்லாம்
    படைப்பாளிகளின் பணி தானே!

    பதிலளிநீக்கு
  2. மெரினாவில்ஆளும் தரப்புக்கு எதிராக பேசிய பெண் நேற்று கொலை செய்யப் பட்டுள்ளதாக செய்தி வைரலாக பரவி வரும் வேளையில் இந்த நீங்க வேற பயமுறுத்துறீங்களே :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஆனால் ஒன்று படணுமே...ஜி

      நீக்கு
  3. போட்டோ அருமை (சாலையின் படம்). அந்த 'உசிதமணி' யாரோ. வேலையில் அக்கறை இல்லாதவர்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஒரு கதை நினைவிருக்கிறதா ஜி? ஒருத்தர் சாலையில் பள்ளம் வெட்டிக்கொண்டே செல்கிரார். அடுத்தவர் அதை மூடிக்கொண்டே செல்வார். ஏன் என்று கேட்டபோது நடுவில் அதில் கேபிள் பதிப்பவர் லீவு என்றும், அதைச் சொன்னபோதும் உயர் அதிகாரிகள் நீங்கள் உங்கள் வேலைகளை செய்யுங்கள் என்று உத்தரவிட்டதால் இப்படி என்றும் சொல்வார்கள்!! அது போலத்தான்.

    பதிலளிநீக்கு
  5. இன்னா தலைவரே இது கூடத் தெரியாம கும்பிடு போடறீங்க!!! நம்மாளுங்களுக்குக் கோடு போடச் சொன்னா அது மட்டும்தான் தெரியும்...வழில கட்டை கிடந்தா அதை அப்பால வைச்சுட்டுக் கோடு போடணும் அப்படினு எல்லாம் தெரியாது....நீங்க ஒரு வேளை அங்க நின்னு இப்படிக் கும்பிடு போட்டிருந்தீங்கனா உங்க செருப்பு அளவு கிடைச்சுருக்கும்..ஹிஹிஹி...உக்காந்துரிருர்ந்திருந்தீங்கனா சேர் அளவு கிடைச்சுருக்கும்.....

    வேற ஏதாவது பொணம் கிடந்துருச்சுனா பெட்டி அளவு கிடைச்சுருக்கும்...ஹிஹி பாவம் கோடு போடறவன்.அவனுக்கு என்ன ரோடு விதி தெரியுமா என்னா...அவனுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் ஜி...ஹிஹிஹி..

    பதிலளிநீக்கு
  6. மக்கி மண்ணில் கலக்கும்வரை கட்டை அங்கேயே கிடக்கும்!!!

    பதிலளிநீக்கு
  7. அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை சாலை ஓரத்தில் வெள்ளைக் கோடு போடுவதுதான். அதை ஒழுங்காக(?) செய்திருக்கிறார். அதை பாராட்டுங்களேன்!!!

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்குக் கிடைக்கிறதே இம்மாதிரிப் படங்கள் பதிவெழுதத்தோதுவாய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எனது பதிவுகள் பெரும்பாலும் இப்படித்தானே...

      நீக்கு
  9. நல்ல பதிவு. இனியேனும் மாறுதல்கள் வருதானு பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் இதனை சற்று மாற்றி யோசிக்க வேண்டும். ஏற்கனவே அங்கு நடப்பட்ட சாலையோர மரக்கன்று பட்டு போயிருக்கலாம். அது மீண்டும் துளிர்க்கலாம் என்ற நம்பிக்கையில் அதனை அந்த சாலைப் பணியாளார் எதுவும் செய்யாமல், அதனை மற்றவர்கள் ஏதும் செய்து விடக் கூடாது என்று, வெள்ளைக்கோட்டை அரை வட்டமாக வரைந்து காட்டி இருக்கலாம். நம்பிக்கைதானே வாழ்க்கை. பட்ட மரமும் தளிர்க்கும்.

    பதிலளிநீக்கு
  11. ஆகா..சகோ உங்க கண்ல படலாமா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கண்ணில் பட்டதால் கணினியில் பகிர்ந்தேன்

      நீக்கு
  12. இந்தக் கட்டையை எடுத்து அந்தப் பக்கம் போடுவதற்கு டெண்டர் விட்டிருந்தார்களாம்.. பேரம் படியவில்லை.. அதனால் கறையான் திங்கட்டும் ..ன்னு விட்டுட்டாங்க!..

    நாளைக்கு கறையான் ஒழிப்புத் திட்டம்..ன்னு ஆரம்பிச்சு ஆட்டைய போடலாம்!.. கல்லா கட்டலாம்..லே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மையிலேயே... எல்லா துறைகளும் இப்படித்தான்.
      அருமையாக சொன்னீர்கள்

      நீக்கு
  13. உங்கள் புகைப்படத்தையும் உங்களின் நேர்மையான சிந்தனைகளையும் எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை!!

    பதிலளிநீக்கு
  14. படத்தைப் பார்த்தவுடனே..நேர்மை புரிந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எல்லா மக்களுக்கும் தேர்தல் நேரத்தில் புரிந்தால் நல்லது

      நீக்கு
  15. சூப்பர் பதிவு தலைவா.........இதெல்லாம் நம் நாட்டில் சகஜம் என்று மக்கள் வாளாவிருப்பதுதான் பிரச்சினை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே நம்நாட்டில் எல்லாமே சகஜம்

      நீக்கு
  16. பெயரில்லா1/24/2017 11:22 PM

    செய்வன திருந்தச் செய்.
    நானென்றால் எடுத்து தூரப்போட்டு நல்ல கோடுஅடித்திருப்பேன்.
    அருமையான கேள்விகள்.

    பதிலளிநீக்கு
  17. சொன்னதைச்செய்யும் மந்தைகள் கூட்டம் தானே அரச பணியில் இருக்கும் உத்தமர்கள்.

    பதிலளிநீக்கு