நான் யானையாக
பிறந்திருந்தால் ?
கோவில்களில்
தெய்வங்களை
சுமந்திருப்பேன்.
நான்
குதிரையாக பிறந்திருந்தால் ?
போர்களில்
மன்னர்களை சுமந்திருப்பேன்.
நான் காளையாக
பிறந்திருந்தால் ?
வயல்களில்
உணவுக்காக உழுதிருப்பேன்.
நான் பசுவாக
பிறந்திருந்தால் ?
தாயில்லா
குழந்தைகளுக்கு பால் கொடுத்திருப்பேன்.
நான் ஆடாக
பிறந்திருந்தால் ?
மனிதனுக்கு
திடஉணவாக இருந்திருப்பேன்.
நான் நாயாக
பிறந்திருந்தால் ?
மனிதனுக்கு
வேட்டையாட உதவியிருப்பேன்.
நான் ஒட்டகமாக
பிறந்திருந்தால் ?
மனிதன்
பாலைவனத்தை கடக்க உதவியிருப்பேன்.
நான் கழுதையாக
பிறந்திருந்தால் ?
ஒரு சமூகத்து
மனிதருக்கு உதவியிருப்பேன்.
நான் கோழியாக
பிறந்திருந்தால் ?
சத்துணவுக்கு
முட்டை கொடுத்திருப்பேன்.
நான் சேவலாக
பிறந்திருந்தால் ?
சத்துணவுக்கு
முட்டையை போட உதவியிருப்பேன்.
நான் மயிலாக
பிறந்திருந்தால் ?
குழந்தைகளுக்கு
அழகு காட்டியிருப்பேன்.
நான் குயிலாக
பிறந்திருந்தால் ?
மனிதன்
சந்தோஷமாய் கேட்க கூவியிருப்பேன்.
நான் புறாவாக
பிறந்திருந்தால் ?
மன்னர்களுக்கு
இ-மெயில் கொண்டு போயிருப்பேன்.
நான் காகமாக
பிறந்திருந்தால் ?
மனிதருக்கு
விரதநேரத்தில் உதவியிருப்பேன்.
நான் பூனையாக
பிறந்திருந்தால் ?
வீட்டில்
எலித் தொல்லையை ஒழித்திருப்பேன்.
நான் கிளியாக
பிறந்திருந்தால் ?
கிளி சோசியர்களுக்கு
வாழ்வு அளித்திருப்பேன்.
நான் பல்லியாக
பிறந்திருந்தால் ?
மனிதனுக்கு
சகுணம் சொல்லியிருப்பேன்.
நான் மீனாக
பிறந்திருந்தால் ?
மனிதனுக்கு
வைட்டமின்-சியை கொடுத்திருப்பேன்.
இதெல்லாம்
இல்லாமல்....
நான் சிங்கமாக
பிறந்திருந்தால்கூட
காட்டில்
ராஜாவாக வலம் வந்திருப்பேன்
ஆனால் என்னை
புழுவாக பிறக்க வைத்து, பாவங்களை செய்து முடித்த பாழப்போன மனிதனின் பாழும் உடம்பை
இரையாக தின்ன வைத்து விட்டாயடா இறைவா நான்
என்ன பாவம் செய்தேன் ? போன பிறவியில் மனிதனாக பிறந்தேனா ?
இது யானையின் பிரசவக்காட்சி இதை எல்லோரும் காண
விரும்புவதில்லை இதை தவறாக நினைக்க வேண்டாம் நமக்காக நமது தாய் எத்தனை
வேதனைப்பட்டிருப்பாள் என்பதை பலரும் உணர்வதில்லை உணர்ந்தால்... நாட்டில் முதியோர்
இல்லங்கள் பெருகி வராது என்பதே எமது கருத்து எனக்கு இந்தக் காட்சியை கண்டதால்தான்
இதை எழுத தோன்றிற்று ஆகவே நன்றிக்காக இதை வெளியிட்டேன், இதைக்காண விரும்பாதவர்கள்
கீழேயுள்ள அடுத்த காணொளிகளை காணலாம் நன்றி.
காணொளி 02
இந்த காணொளி நான் 2012 டில் தாய்லாந்து போகாதபோது எடுத்தது.
ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமை
பதிலளிநீக்குநாம் அனைவருமே காலத்திற்கு இரையாக வேண்டியவர்கள்தானே
நண்பரின் கருத்துரைக்கு நன்றி
நீக்கு// போன பிறவியில் மனிதனாக பிறந்தேனா ? // முடித்த விதம் அருமை ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குஎந்தக் காலத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள்???..
பதிலளிநீக்குநாட்டுக்கோழியாவது.. சேவலாவது?..
சத்துணவு முட்டைகள் எல்லாம் உயிரற்ற முட்டைகள் அல்லவா!..
ஆனாலும், பதிவு அருமை.. வாழ்க நலம்!..
அன்பின் ஜி இது 300 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி வைத்தது பதிவிட தாமதமாகி விட்டது மன்னிக்கவும்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி தோழரே
நீக்குபோன பிறவியில் மனிதனாக பிறந்து அரசியல் வியாதியாகிப் போனதால் இப்படி புழுவாக பிறந்திருப்பார்களோ என்னவோ
பதிலளிநீக்குஇருக்கலாம் தமிழரே...
நீக்குஇவ்வளவு அறிவான காரியங்களை செய்யும் யானைகளை, நம்ம ஊரிலே பிச்சை எடுக்க வைக்கிறார்களே:)
பதிலளிநீக்குநம் நாட்டில் மட்டுமே இந்த கொடுமை ஜி
நீக்குநீங்கள் போகாதபோது எடுத்த காணொளியை ரசித்தேன். யானையின் உருவத்துடன் தங்கள் முகம். ரசித்தேன்.
பதிலளிநீக்குமுனைவரின் ரசிப்புக்கு நன்றி
நீக்குஜி ஏன் இந்தக் கழிவிரக்கம்!! புழுவும் உதவும்தான் ஜி! மண்புழு!!! கூட்டுப் புழு!! இவ்வுலகின் எல்லா உயிரினங்களிலும், குறிப்பாக மனிதன் மற்றும் நாலுகால் எல்லாவற்றிலும் புழுக்கள் தினமுமே உடலுள் தங்கள் உணவை நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டு குடைந்துகொண்டுதானே இருக்கின்றன ஜி! அவையும் நல்லவையே!! எனவே புழுவாய் பிறந்துவிட்டோம் என்றெல்லாம் வேண்டாம்...எந்த உயிரினமாகப் பிறந்தாலும் இவ்வுலகிற்கு அதனிடமிருந்து நன்மையே! ஏனென்றால் இயற்கையின் படைப்புகள் எல்லாமே அப்படித்தான். ஜி! ஆனால் உங்கள் வரிகள் நன்றாக இருக்கின்றன!!
பதிலளிநீக்குவருக அதாவது புழு மனிதனை வெறுக்கின்றது இதுதான் விடயம்.
நீக்குஎன்னங்க.. எழுதினது எனக்கு வம்பாத் தெரியுது. எதுவாகப் பிறந்தாலும், பிறருக்கு உதவும் எண்ணமில்லாமல் எதுவும் நடக்காதே. 'புழுவாய்ப்பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தரவேண்டும்' என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குஅது சரி...சேவல வச்சு வர்ர முட்டையா சத்துணவுக்குப் போகுது. கோழியா ஆசை ஆசையா சத்துணவுக்கு முட்டை போடுது? முட்டையை produce பண்ணற இடமா முட்டைப் பண்ணைகள் ஆகி ரொம்ப காலமாகிடுச்சே.. இன்னும் வெகுளியா இருக்கீங்களே. அதுக்கும் காசாகுதுன்னு (அதாவது, 6 மாதத்துக்கு தினமும் 1 முட்டை வீதம் கோழி போடவேண்டும். அதுக்குத்தான் அதீத உணவு, கெமிக்கல் எல்லாம். 6 மாதத்துல கோழி தொஞ்சுபோய் எதுக்கும், உணவுக்குக்கூட, லாயக்கில்லாமல் போயிடும். அந்தக் கோழியை உணவாக உண்பவர்கள் வியாதியை விரைவாக வரவழைத்துக்கொள்பவர்கள்), சைனாக் காரன் போலி முட்டைகளை பாதி காசுல உற்பத்திபண்ணறான். இதுக்குக் கோழி தேவையில்லை.
நண்பருக்கு... துரை ஜி அவர்களுக்கு சொன்னதை படிக்கவும் ஹி..ஹி..
நீக்குஉடம்பை எரித்து விட்டால் புழுவுக்கு இரையாக முடியுமா
பதிலளிநீக்குவாங்க ஐயா இப்படியும் இருக்கோ ?
நீக்குசிறப்பான பதிவு தோழர்
பதிலளிநீக்குதோழரின் வருகைக்கு நன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி கவிஞரே
நீக்குபதிவு அருமை சகோ.
பதிலளிநீக்குநன்றி சகோ வருகைக்கு
நீக்குஆஹா... அருமை அண்ணா...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்கு‘என் கேள்விக்கென்ன பதில்’ என்று கேட்டு இறைவனையே திணற வைத்துவிட்டீர்கள். பதிவை இரசித்தேன்.
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கு நன்றி
நீக்குமனிதனின் வாழ்க்கை இதுதான் என புரிய வைத்து விட்டீர்கள்
பதிலளிநீக்கு